Share:
Notifications
Clear all

நெஞ்சமெல்லாம் 10

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் - 10

"அப்பா என்ன வார்த்தை சொல்லிட்டீங்க… அவர் உங்க மாப்பிள்ளை அது நினைவு இருக்கட்டும்" என்றாள் காவ்யா.
"மாமா... நீங்க அவர் சொல்றதை எல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க மாமா" என்று அவனை சமாதானம் செய்தவளுக்கு தன் மாமனை அவளது அப்பா பேசியது சுத்தமாக பிடிக்காமல் போக…

மறுமுனையில் இதை கேட்ட அவனோ, "என்ன டி நடிக்கறியா? என்னை மொத்தமா அசிங்கப்படுத்த நினைச்சு இருக்க. நீங்க எல்லோரும் சேர்ந்து செய்யுங்க. இதோ பாருங்க அப்போ எல்லோர்க்கும் எல்லாம் தெரிஞ்சு போச்சு. எனக்கு இதை பத்தி பேச ஒரு கவலையும் இல்லை. ஆமாம் நீங்க சொன்ன மாதிரி உங்க பொண்ணு கூட இருந்துட்டு வந்து இருக்கேன் இன்னும் பச்சையா சொல்லணும்னா படுத்துட்டு தான் வந்து இருக்கேன்" என்று கூற

அதை கேட்ட தாமரையோ, "துருவ் என்ன பேச்சு பேசிட்டு இருக்க??"

"அம்மா கேள்வி கேட்ட அவருக்கு வெட்கம் இல்லனா பதில் சொல்ல எனக்கு என்ன வெட்கம்? பதில் சொல்லாமல் இருந்தா தானே அம்மா தப்பு. என்னமோ இவங்க பெரிய யோக்கியனுங்க மாதிரி பேசிட்டு இருக்காங்க. ஒரு கேனச்சியை என் தலையில கட்டிட்டு பேசிட்டு இருக்காங்க.

பெத்த பொண்ணுனு கூட பார்க்காமல் அவளை ஒதுக்கி வெச்சா தான் பணக்காரன் ஆக முடியும் போனவர்... இப்போ வந்து அந்த பொண்ணை என் தலையில கட்டிட்டு நியாயம் பேசிட்டு இருக்கார்.

இதோ பாருங்க நீங்க எங்கே வேணாலும் கேஸ் கொடுங்க. உங்க பொண்ணு கூட என்னால வாழ முடியாது. அப்புறம் என்ன டேஷ்க்கு அவ கூட இருந்த இல்லை இல்லை ஏன் படுத்தேன்னு கேட்டீங்க அப்படினா இத்தனை பெரிய வேலையை பண்ணின உங்க பொண்ணுக்கு நான் கொடுத்த ஒரு சின்ன கிஃப்ட் தான் இது" என்று கூற அதை கேட்டு அனைவரும் வாயடைத்தனர்.

"இதோ பாருங்க எனக்கு ஃப்ளைட்டுக்கு டயம் ஆச்சு. இனி ஏதாவது பேசணும்னா அப்புறமா பேசுங்க" என்று கூறி போனை அணைக்க,
என்ன இதெல்லாம் என்பது போல பெண்களால் காதை பொத்திக் கொள்ள தான் முடிந்தது.

சாரங்கபாணி வணங்காமுடியிடம், "என்னப்பா இதெல்லாம் இப்படி பேசறான். நீ பார்த்திட்டு சும்மா இருக்க? பிடிக்கலன்னு சொல்றான். இனி இவ வாழ்க்கைக்கு யார் பொறுப்பு? என் பொண்ணு வாழ்க்கை அவ்ளோ தானா? உன்னை நம்பி தானே யா சம்பந்தம் பண்ணினேன். என் பையன் நான் சொல்றதை கேட்பான்னு சொன்ன இப்ப என்ன ஆச்சு?” என்று கேட்டார்.சாரங்கபாணி

அதை கேட்டு வணங்காமுடி பேச்சற்று நிற்க, தாமரை தான் வந்து, "அண்ணே.. அவரை மட்டும் குறை சொல்லிட்டு இருக்காதீங்க அண்ணே" என்றார்.

"என்னம்மா சொல்லிட்டு இருக்க? கட்டின பொண்டாட்டியை விட்டுட்டு போய் இருக்கான் மா" என்று அவர் பேச இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவளோ,

"அப்பா எதுக்கு இப்படி குதிச்சிட்டு இருக்கீங்க?? என் மாமா என்னை தானே விட்டுட்டு போனார். நானே எதுவும் சொல்லல உங்களுக்கு எல்லாம் என்ன வந்தது?? என் மாமா உங்க பொண்ணை தான் வேணாம்னு சொல்லிட்டு போய் இருக்காரே ஒழிய அவரோட பொண்டாட்டியை வேண்டாம்னு சொல்லல" என்றாள்

என்ன சொல்கிறாள் இவள் என அனைவரும் முழித்தனர்.

"அப்போ அவன் செய்தது எல்லாம் சரியா" என அவர் வினவ

"என் மாமா என்ன செஞ்சாலும் எனக்கு கவலை இல்லை. அவருக்கு பிடிச்சது எல்லாம் செய்வார். நீங்க யாரும் கேள்வி கேட்க கூடாது. இல்ல நான் தெரியாமல் தான் கேட்கிறேன். உனக்கு எல்லாம் அறிவே இல்லையா நானும் உன் மாப்பிள்ளையும் பேசிட்டு இருக்கோம் தானே ஒட்டு கேட்கிற? கேட்டதும் இல்லாமல் அவர்கிட்ட சண்டைக்கு போற??

இப்போ என் மாமன் என்ன பண்ணிட்டார்ன்னு இந்த குதி குதிச்சிட்டு இருக்கீங்க? நானே என் மாமன் பேசினதுக்கு சும்மா தானே இருக்கேன். உங்களுக்கு என்ன வந்தது? என் மாமன் அப்படி என்ன தப்பா சொல்லிட்டார்? அவருக்கு எப்படி நான் பொருந்தி போவேன்? எல்லோரும் சேர்ந்து ஒரு இக்கட்டில் இந்த கல்யாணத்தை நடத்திட்டீங்க. அப்போ என் மாமா கோபமும் நியாயம் தானே" என்று அப்படியே அவனுக்கு வரிந்து கட்டிக் கொண்டு நின்றாள்.

இவளுக்காக தானே சண்டை போட்டோம் இவள் என்ன அவனை இம்மி அளவு கூட விட்டு கொடுக்க மாட்டேன் என்கிறாள்? என சாரங்கபாணி நினைக்க... வணங்காமுடி மட்டும் மகன் பேசியதில் அதிர்ந்து இருந்தவருக்கு எங்கேயோ காவ்யா மூலம் நம்பிக்கை வருவது போல தோன்ற, "அம்மா உன்னை அவன் புரிஞ்சுக்கலையே மா" என்றார்.

"மாமா... நாமளும் தானே மாமா துருவன் மாமாவை புரிஞ்சுக்கலை. எல்லா தப்பும் அவங்க தலையில போட்டா எப்படி??" என்றாள்.

"அவன் உன்னை வேணாம்னு சொல்றானே மா"

"எனக்கு மாமா வேணும் மாமா" என்றாள் காவ்யா.

"இது போதும் மா.. அவன் மாறிடுவான் நீ அவனை மாத்திடுவ.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு" என்றார்.

"மாமா நீங்க எனக்கு உதவி செய்யணும்னு நினைச்சா... நீங்க என்னை என் மாமாகிட்ட சேர்ந்துடுங்க மாமா. வர மாட்டார் எனக்கு தெரியும். எனக்கு என் மாமா கூட இருக்கணும் அது போதும்" என்றாள்.

"நான் செய்யறேன் மா" என்று சந்தோசமாக அவள் கூறியதை கேட்டவர் பதில் உரைக்க கிட்டத்தட்ட இரண்டு வாரத்தில் அவர் ஆளை வைத்து எல்லாமே முடித்து, இதோ அவளை லண்டன் மாநகரில் இருக்கும் அந்த ராட்சத குடியிருப்பு வாயில் முன்னே நிறுத்தி விட்டார் வணங்காமுடி.

கிட்டத்தட்ட காலை ஆறு மணி அயர்ந்த உறக்கத்தில் இருந்தவனின் வீட்டு காலிங்பெல் அழைக்க கிட்டத்தட்ட நேற்று அவன் சென்ற பார்ட்டியின் போதையில் இன்னும் தெளியாமல் இருந்தவனின் செவிக்குள் எங்கேயோ காலிங்பெல் சத்தம் கேட்க அது அவனது வீட்டு ஒலி என்று அவனது மூளை அவனுக்கு அறிவுரை கூற.. அப்போதும் எழாமல் இருந்தான்.

அவனது தோழன் கே.கே தான் எழுந்தான். “யாரு டா அது இந்த நேரத்தில்?” என புலம்பிக் கொண்டே கதவை திறக்க...

"மாமா" என்ற குரல் வரவும் அரை தூக்கத்தில் இருந்தவன் அவளை பார்த்து முழிக்க.. அவளும் கே.கேவை முழித்து பார்க்க அவளோ "மாமா எங்கே??" என்று கேட்டாள்.

“மாமாவா!” என கே.கே முழிக்க, "டேய் கண்ணா நம்ம துருவனோட பொண்டாட்டி டா" என்றார்.

"என்ன பொண்டாட்டி ஆஹ்!" என அவன் வாயை பிளந்தான்.

"என்கிட்ட இதை அவன் சொல்லவே இல்லையே" என அவன் முழிக்க,

"உள்ளே போ மா அவன் உள்ளே தான் இருப்பான்" என்று கூற, அவள் துள்ளியோட அதை கண்ட கே.கே டூட் பண்ற பந்தாவுக்கு இப்படிப்பட்ட பொண்ணா என்பது போல அவளை நோட்டம் விட்டு அவன் அதிர…

அவனது அறை எது என்று கேட்க கே.கே கையை காட்ட அங்கு சென்ற அவளோ “மாமா” எனவும் அத்தனை சத்தத்தில் எழாதவன், அவளது மாமா என்றழைப்பில் கண்களை சட்டென்று திறந்து பார்க்க அவளை அங்கு கண்டவனுக்கு அவனது கண்களையே நம்ப முடியாமல் அவன் திணற, "என்ன மாமா அப்படி பார்க்கறீங்க நான் தான் மாமா காவ்யா" எனவும் அவனோ கனவு அல்ல நினைவு தான் என அதிர்ந்தான்.

அவனை பார்த்து குளோசப் விளம்பரத்தில் வருவது போல ஈ என இளித்தாள் காவ்யா...

மந்தாரம் தெளியும்…



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

🥰🥰🥰🥰



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top