Share:
Notifications
Clear all

இராட்சதன் 9

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 523
Thread starter  

அத்தியாயம் : 9

ரத்தினம் பேசிய பேச்சு பிடிக்கவில்லை என்றாலும் உலகநாதனுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தார்..அதே நேரம் தினகரன் அழைத்து எங்கு விசாரித்தும் கண்மனியை பற்றி ஒரு துப்பும் கிடைக்கவில்லை என்று கூற விசயம் நாலா புறமும் கசிந்து விட்டது..

ஊர் பொதுமக்கள் எல்லாம் அரசல் புரசலாக பேச துவங்கி விட்டனர்.. பஞ்சாயத்து தலைவர் மகளையே காணோம்னா இவரு பஞ்சாயத்து பண்ணி என்ன கிடைக்கப் போகுது எத்தனை பிள்ளைகளை சொல்லி இருப்பார் பிள்ளையை ஒழுக்கமா வளர்க்க தெரிஞ்சு இருக்கணும் அப்படி இப்படின்னு இப்போ பாரு அவர் குடும்பத்திலேயே இப்படி எல்லாம் நடக்குது மகன் ஒரு தருதலை இப்போ புள்ளையும் அப்படித்தான் போல என்று பேசிக்கொள்ள இதற்கு மேல் முடியாது என கருதிய உலகநாதன் கண்ணாயிரத்தின் ஆலோசனைப்படி போலீசில் புகார் அளிக்க சென்றார்...

அவர்களும் கண்மணியின் தகவல் எல்லாம் பெற்றுக் கொண்டு விசாரிப்பதாக அவர்களை அனுப்பி வைத்துவிட்டனர்... ஊர்மக்கள் எதிர்பார்த்தது போல இரவும் ஆகிவிட்டது... இரவெல்லாம் யாருக்கும் உறக்கம் இல்லை எல்லோரும் மகள் எங்கு சென்று இருக்கிறாராளோ ஏதோ என தவித்துக் கொண்டு இருந்தார்கள் என்று தான் கூற வேண்டும்..ஊர் வாய்க்கு பஞ்சாயத்து தலைவர் உலகநாதனின் வீட்டு செய்தி நல்ல அவலாக மாறியது ...

அதே நேரம் இங்கு அவளை மஞ்சத்தில் சரித்தவன் அவளை ஆழ்ந்து பார்த்தான்..

அவளோ பதறி எழுந்து கொள்ள அவனோ மீண்டும் அவளை படுக்கையிலேயே தள்ளினான்... அவனோ அவளை பார்த்து கொண்டே இருந்தான் சூர்ய பிரகாஷ் ...அடுத்து அவன் செய்வது அவனை பொறுத்தவரை ஒப்பாத காரியமாக இருந்தாலும் அவன் செய்து தான் ஆக வேண்டும்..ஆம் கட்டாயம் தான் அவனை பொறுத்தவரை கட்டாயம் தான்...

சிலருக்கு வலிக்க வலிக்க கொலை  செய்வது எப்படி என கற்று கொடுக்க வேண்டி இருக்கிறது..அவன் இது நாள் வரை உழன்று கொண்டு இருக்கும் விஷயத்திற்காக தண்டனை அனுபவிக்க வேண்டியவர்கள் இவர்கள் அப்படி இருக்க அவனோ அவள் மீது சரிந்தான்..

அவளோ துடிக்க அவனோ அதை கண்டு கொள்ளாமல் இருந்தான்...அவளின் அழுகைக்கு  முன்னால் அவனின் வன்ம வெறி ஜெயித்தது..

ஒரு பெண்ணின் கதறல் அவனுடைய செவியை நிறைக்கவில்லை ஏற்கனவே அவனுடைய செவி அடைந்து தான் இருந்தது.. அவனுக்கு தேவை பழிவாங்க வேண்டும் உலகநாதன் குடும்பம் அந்த ஊர் மக்கள் மத்தியில் அசிங்கப்பட  வேண்டும் அவ்வளவுதான் அதற்காக எந்த எல்லைக்கும் அவன் செல்வான்....

அவளுக்கு அவனின் காரியத்தை எண்ணி பயமும், அழுகையும் வந்தது... காதலித்தவன் தான் மனதை பறி கொடுத்தவன் தான் ஆனால் ஒரு பெண் ஆன தன்னிடம் அவன் தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னிடம் அத்துமீறுவதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அவளின் உடைகளுக்கும் அவனின் உடைகளுக்கும் விலக்கு கொடுக்கப்பட்டது...

அவனுக்கோ அது எல்லாம் கவலையே இல்லை போலும் அவன் நினைத்தது நடக்க வேண்டும் அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல அவன் தயாராக இருந்தான் அவன் ஒன்றும் நல்லவன்  என்று மார் தட்டிக் கொள்ளவில்லை நல்லவன் வேஷம் போட அவன் இங்கே வரவும் இல்லை..

அவனுக்கு அவன் வேலை முக்கியம் இவர்களை பழி வாங்கியே ஆக வேண்டும் ..அவன் செய்யும் காரியம் சரியா தவறா என கேட்டால் அதை பற்றி அவனுக்கு தெரியாது அவனுக்கு தேவை இதை எல்லாம் செய்ய வேண்டும் அவ்வளவு தான்...

எல்லாம் முடிந்து விட்டது...இதோ காலையில் அவளின் கோலத்தை பார்த்து அவள் அழுது கொண்டு இருக்கிறாள் ஆனால் அவனோ இறுகிய முகத்தோடு அவனுடைய உடையை அணிந்து கொண்டே கிளம்பு என்றான்..

அவளோ கொதித்து எழுந்து விட்டாள்.. எவ்வளவு அலட்சியமாக இருக்கிறான் தன்னுடைய மனதையும் உடலையும் களங்கப்படுத்திவிட்டு இவ்வளவு கூலாக இவனால் எப்படி இருக்க முடிகிறது??? பெண்களின் மனதையும் உடலையும் இவன் என்னவென நினைத்துக் கொண்டிருக்கிறான்???? என கருதி அவனின் சட்டையை பிடித்து ,"ஏன் என்னை இப்படி பண்ணின??? அப்படி என்ன பண்ணிட்டேன் என்னோட உணர்வுகளை எல்லாம் கொன்னுட்டியே, ஏன் மாறன்???" என கேட்கும் பொழுதே அவள் துவண்டு விட்டாள் அவன் முன்னே ஒட்டு துணி கூட இல்லாமல் அவனோடு கூடி கழித்த அந்த போர்வையில் தன் உடலை சுருட்டிக் கொண்டு அவனிடம் அழுத விழிகளோடு அவள் கேள்வி கேட்க,

அவனோ அவள் பேச்சில் இறுகியவன் கையில் இருந்து சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து அவளை ஒரு பார்வை பார்த்து," நான் சூரிய பிரகாஷ்... உன்னை கூட்டிட்டு வந்தது இதுக்கு தான் வேற எதுக்கும் இல்லை எனக்கு என்னோட காரியம் முழுசா நடக்கணும் அது நடக்கிற வரை நீ எதிர்பார்க்காதது எல்லாம் நடக்கும்" என்க அவள் மேலும் நொந்து போனாள்..

"நீ யார வேணா இருந்துட்டு போ எனக்கு நீ மாறன் தான் நான் உன் மேல வச்ச காதல் உண்மை தான் அதை நீ கொன்னுட்டியே.. என் உடம்பை நீ நாசம் செய்ததுக்கும் மனசை நாசம் செய்ததுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை நீ நெனச்சிட்டு இருக்க என் உடலை ஜெயிச்சதா என்னை எதுக்கு பழி வாங்குறேன்னு தெரியல ஆனால் என்னால உன்னை அப்படி பார்க்க முடியல நீ என்னவோ என்னை ஜெயிச்சு தான் நினைச்சுட்டு இருக்க ஆனால் நான் செத்துப் பொணம் நேத்தே உன்னால செத்துட்டேன் அதனால நீ கொடுத்த அந்த வலியை விட இந்த வலி பெருசில்ல" என்றாள் ...

அதை கேட்ட அவனோ," ஓ டயலாக்லாம் நல்லா இருக்கு மெயின் பிக்சர் பார்க்க போகலாமா??" என்றான் .. அவன் கண்ணில் துளி ஈரம் இல்லை ஒரு பெண் வதைக்கப்பட்டு இருக்கிறாள் என்ற சங்கடம் துளியும் இல்லை மிகவும் தெனாவட்டாக மிகவும் திமிராக மிகவும் அகம்பாவத்தோடு அவன் இருந்தான் அவன் கண்களில் பழைய காதல் இல்லை மிகவும் வித்தியாசமாக ஒரு அரக்கன் போல அவள் கண்களுக்கு அவன் தெரிந்தான்...

இவ்வளவு சுயநலமாக தன் பேச்சைக் கூட கேட்க விருப்பம் இல்லாமல் அவன் இருப்பான் என அவள் எதிர்பார்க்கவில்லை அவனிடம் எல்லாம் இழந்து நிற்கதியாக நின்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணை பார்த்து அவன் இளகவில்லை..

அந்த அளவுக்கு கள்வனாக அவன் இருக்கிறான் என்று அவள் நினைக்க அது தான் உண்மை என்பது போல அவன் அவளின் உடைகளை தூக்கி முகத்தில் எறிந்து விட்டு ,"ஐந்து நிமிடத்தில் தயாராக இரு உன் குடும்பத்தில் உன்னை சேர்த்துடறேன்..." என்றான் நக்கலாக.. அதை கேட்டவள் திகைக்க அவனோ அழுத்தமாக அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்று விட்டான்...

அவளோ அவன் வீசி எறிந்து விட்டு சென்ற துணிகளை பார்த்து கொண்டு இருந்தாள் கண்மணி... ஏன், எதற்காக, என்ன காரணம் எதுவும் அவளுக்கு தெரியாது... அவளுக்கு தெரியாத காரியம் அவனுக்கு மட்டும் அவனுடைய மனதை ரணமாக்கும் விஷயமாக இருக்கும் பட்சத்தில் அவளுக்கு தெரியாத காரியமா இல்லை அவள் மறந்த காரியமாக இருக்குமா????.. அதற்குத்தான் அவன் அவளை இப்படி படுத்திய எடுக்கிறானோ என்னவோ????



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top