இராட்சதன் 20
அத்தியாயம் : 20
அவர் கூறியதை கேட்ட அவனும் ,"இனி யாரும் அவனை நம்ப மாட்டாங்க... ஒரே துப்பாக்கில இவங்க கதையெல்லாம் முடிச்சுட்டு என்னால ஒரே நாள்ல போக முடியும் இந்த ரெண்டு வருஷம் நான் காத்திருந்ததுக்கு காரணம் செத்தா அந்த ஒரு நொடியிலேயே அவர்களுடைய வாழ்க்கை முடிஞ்சிடும் ஆனால் வாழ்க்கை முழுவதும் அவங்க கஷ்டத்தை அனுபவிக்கணும் அப்படின்னு தான் நான் அவங்களுக்கு இந்த ஒரு தண்டனையை கொடுத்துட்டு போறேன் இது என்னோட நித்யாவுக்கு நான் செய்யற ஒரு கைமாறாக இருக்கும்" என்று அவன் இறுகிய முகத்தோடு கூறினான்..
உண்மை தான் அவள் அவனுடைய நித்யா தான்.. எல்லாம் நல்ல விதமாக இருந்து இருந்தால் இன்று நித்யா அவனுடைய மனைவியாக இருந்து இருப்பாள்...அவனுக்கு குழந்தை கூட இருந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு..
ஆம்..அவன் வேறு யாரும் அல்ல நித்யாவுக்கு வரன் பார்த்திருந்த மாப்பிள்ளை தான் சூரிய பிரகாஷ்..ஆம் ரத்தினம் மற்றும் சூரிய பிரகாஷின் அப்பா இருவரும் நண்பர்கள்.. அப்படி சூரிய பிரகாஷுக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்க எப்போது ரத்தினம் சூரிய பிரகாஷின் வீட்டிற்கு வந்தாலும் தன்னுடைய தம்பி மகளான நித்யாவை பற்றி பேசாமல் இருக்க மாட்டார்..
நித்யாவை இதுவரை பார்த்ததில்லை என்றாலும் நித்யாவை பற்றிய அனைத்து விஷயங்களையும் பிரச்சனை மூலமாக சூரிய பிரகாஷுக்கு தெரிந்திருந்தது ஏனோ தெரியவில்லை நித்யா அவனுடைய மனதில் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாள்..
அப்படி இருக்க இரு வீட்டாரும் தங்களுடைய பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்ய இரு வீட்டாரும் போட்டோக்களை பகிர்ந்து கொண்டனர் இவர்கள் இருவரையும் இணைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தனர்..
சிறியவர்களுக்கு பிடித்திருந்தால் நிச்சயம் வைக்கலாம் என்று எல்லாம் பேசிக் கொண்டிருந்த தருணத்தில் தான் என்னென்னமோ நடந்து ஏதேதோ நடந்து விட்டது..
இரு வீட்டாரிலும் போட்டோக்களை பகிர்ந்த உடனேயே அவன் மனதை நிறைத்தவள் நித்யா.. ஏற்கனவே அவளைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் ரத்தினம் மூலமாக கேட்டறிந்தவன் மனதில் அவள் பதிந்து போயிருந்தாலும் முதன்முறையாக அவளை போட்டோவில் பார்க்கும் பொழுது அவன் மனதை முழுவதுமாக அவள் ஆக்கிரமித்து இருந்தாள் அவள் என்பதை அவன் உணர்ந்தான்...
அதேபோல நித்யாவுக்கும் அவனை பிடித்திருந்ததோ என்னவோ அவனுடைய போட்டோவை பார்த்துக் கொண்டிருந்தாள்...அவளுக்கு அவனை பிடித்து இருந்தது..ஆம் அவளுடைய அப்பா தான் அவளுக்கு அனுப்பி இருக்க, அவளுடைய பெரியப்பா வேறு சூரிய பிரகாஷ் பற்றி கூறியிருக்க அவளும் சம்மதம் தெரிவித்து இருந்தாள்..
ஏனோ இரு நாட்களுக்கு பின் அவள் வேலை செய்யும் அலுவலகத்தில் வேலை செய்யாமல் அவன் போட்டோவை எடுத்து அவள் பார்த்து கொண்டு இருக்க ஊட்டியில் உள்ள தனது எஸ்டேட்டில் சொந்தமாக பிசினஸ் செய்து வரும் சூரிய பிரகாஷ் நேராகவே அவளை காண வந்து விட்டான்..ஆம் அவளுடைய முகத்தை பார்த்த நொடியில் இருந்து அவனுடைய மனம் ஒரு நிலையில் இல்லாமல் அவளை பார்த்தே ஆக வேண்டும் என்று முடிவுக்கு வந்துவிட்டான்..
அவளைத் தேடி அவன் அவள் வேலை செய்யும் இடத்திற்கு வந்தவன் அவளை பார்க்க வேண்டும் என்று கூற தன்னைப் பார்க்க யார் வந்திருக்கிறார்கள் என நித்யா கெஸ்ட் ரூம் வர அங்கு சூரிய பிரகாஷ் பார்த்ததும் அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது..
ஆம் திடீரென அவன் வந்து நிற்பான் என அவள் எதிர்பார்க்கவில்லை அவள் முகம் செவ்வானமாய் ஏனோ சிவக்க ஆரம்பித்தது.. ஏனெனில் இப்பொழுதுதான் போட்டோவில் பார்த்துக் கொண்டிருந்தாள் நேரடியாக அவன் வந்து நிற்கவும் அவளுக்கு என்ன பேசுவது என தெரியவில்லை..
அவள் தயங்கி நிற்க அவனும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன்," உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு போட்டோ பார்த்ததிலிருந்து உங்களை பார்க்கணும்னு ஆசைப்பட்டேன் நேர்ல வந்து என்னைப்பற்றி சொல்லிட்டு போலாம்னு வந்தேன் உங்களுக்கு பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோங்க பிடிக்கலன்னாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு.. உங்கள நெஜமா விட்டு கொடுக்க கூடாதுன்னு தோணுது நீங்க வெட்கப்படுவதை பார்த்தால் வேறு யாரும் உங்க மனசுல இல்லைன்னு நினைக்கிறேன்" என்று அவன் கூற அதைக் கேட்டு அவளோ தலைக்கவிழ்ந்து வெட்கப்பட்டாள்.. அது அவனுக்கு பிடித்து இருந்தது.. அவளுடைய முகமே கூறியது அவனை அவளுக்கு பிடித்திருந்தது என்று.. அவன் மனதில் அது சந்தோஷமாக இருந்தது..
"நான் பிசினஸ் விஷயமா வெளிநாடு போக வேண்டி இருக்கு உங்க போட்டோ பார்த்ததிலிருந்து உங்கள பாக்காம போகக்கூடாது உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லையா என்று கேட்டுட்டு போயிடனும் அப்படின்னு இருந்தேன் உங்க வீட்டிலும் என் வீட்டிலும் பேசி இருப்பாங்க போல நம்ம சம்மதம் கிடைச்சா கல்யாணம் பண்ணிக்கலாம் அப்படின்னு சொல்லி இருக்காங்க எனக்கு சம்மதம் உங்களுக்கு சம்மதமா???" என அவன் கேட்க
அவளோ தலையை மட்டும் ஆட்டினாள்.. "இது நான் எப்படி எடுத்துக்கிறது பிடிச்சிருக்கா இல்லையா" என அவளிடம் இருந்து ஒரு வார்தையாவது வாயில் இருந்து வந்து விடாதா என்ற ஏக்கத்தில் அவன் கேட்டான்..
அவள்," உங்களை எனக்கு பிடித்து இருக்கு" என்று கூற அவன் முகத்திலும் சரி அவள் முகத்திலும் சரி அவ்வளவு மகிழ்ச்சி தென்பட்டது.. முதன் முறையாக பார்த்த இருவர் போல அவர்கள் இல்லை ஏதோ நெடுநாளாக பழகிய நபர்கள் போல இருந்தார்கள்.. ஆனால் இதுதான் இவர்கள் கடைசியாக பார்த்துக் கொள்ள போகிறார்கள் முதலும் கடைசியும் இந்த தருணம் தான் என இருவருக்கும் அந்நேரம் தெரியவில்லை..
இருவரின் மனதுக்குள்ளும் அவ்வளவு ஆசைகள் இருந்தது சூரிய பிரகாஷ் வெளிநாடு சென்றுவிட நித்யா ஊர் திருவிழாவிற்காக வந்தாள்.. வந்து ஒரு வாரத்தில் அவள் மரணத்தை தழுவி விட, மிக ஆசையோடு அவளுக்காக அவள் வீட்டில் பெண் பார்க்க செல்லும் போது அவளுக்கு கொடுக்க வேண்டும் என கருதி ஒரு வைர மோதிரத்தை வாங்கி கொண்டு வந்த அவனுக்கு அவள் இறந்துவிட்டாள் என்ற செய்தி மட்டும் தான் வந்தது.. கடைசியாக அவனுடைய முகத்தைக் கூட அவனால் பார்க்க முடியவில்லை...
அவனால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை அதிலும் அவளுக்கு நடந்த செயல்களை எல்லாம் கேட்டவனுக்கு உலகமே இருண்டது.. வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு பெண் மீது ஆசை வைத்தான். அவளை ஒரே ஒரு முறை தான் நேரில் பார்த்திருக்கிறான் அவளுடைய வெட்கமும் சிரிப்பும் அவன் மனதை விட்டு இன்னும் அகலவில்லை அப்படி இருக்கையில் அவளுக்கு இப்படி ஒரு மரணமா என அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ரத்தினம் மூலமாக விஷயத்தை அறிந்தவன் அதன் பிறகு தான் கண்மணியை பின்தொடர ஆரம்பித்தான்.. ஏன் இதையெல்லாம் செய்கிறான் என தெரியவில்லை ஆனால் செய்யத் தோன்றியது செய்தான்.
ஏன் நித்யாவிற்கு இந்த தண்டனை நித்யா அப்படி என்ன செய்து விட்டாள்!! குடும்பப் பகை எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டுமே அதற்கு இது ஒன்றுதான் தீர்வா என அவன் நினைத்தான்..
அவன் உள்ளே இருந்த வெறி கண்மணியை பின் தொடர செய்தது கண்மணியும், சூரிய பிரகாஷ் வலையில் விழுந்தாள்.. பிறகு அவன் நினைத்ததை நடத்தி விட்டு அவன் திரும்ப ஊட்டிக்கே சென்று விட்டான்..
அவனை பொறுத்தவரை அவன் வந்த வேலை முடிந்து விட்டது...அவ்வளவு தான்...ஒரே ஒரு மணி நேரம் பார்த்த பெண்ணுக்காக அவன் பழி வாங்குகிறானா என கேட்டால் ஆமாம் என்று தான் கூற வேண்டும்..
குழந்தை போன்ற இந்த பெண்ணை அவன் சிதைத்து விட்டானே என்ற கோபமும் அதை விட ரத்தினம் கூறிய விசயமும்," அவங்களை ஏதாவது செய்யணும் பா" என அவனிடம் கூறி கதறியதும் தான் இதற்கு எல்லாம் காரணம் நித்யா மற்றும் ரத்தினம் இருவருக்காக தான் அவன் இதை செய்தான்..
அதுமட்டுமின்றி அவன் ஆசைப்பட்ட பெண்ணை சிதைத்து விட்டானே என்ற கோபமும் இதில் கலந்து கொள்ள அவன் அவனுக்கு வேண்டியதை நடத்தி கொண்டான்..அவ்வளவு தான்!!
