இராட்சதன் 17
அத்தியாயம் : 17
அத்தோடு நிற்கவில்லை அடுத்து பஞ்சாயத்து தலைவர் பதவி வேண்டும் என கேட்டார்...அதற்கு காவேரியிடம்," என்னதான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் இன்னும் மாடு மேய்க்கிறவனாகத்தான் என்னை எல்லாரும் பார்க்கிறாங்க.. உன் புருஷனை அசிங்கமா பார்க்கிறது உனக்கு கஷ்டமா இருக்கும்னு எனக்கு தெரியும் உன்னோட அப்பா கிட்ட இத பத்தி பேசு அப்பத்தான் நமக்கு ஊருக்குள்ள நல்ல கௌரவம் கிடைக்கும்" என்க,
மகளும் அதைக் கேட்டு தந்தையிடம் வந்து காலையில் விழுந்து கெஞ்சினாள்... மகளின் கண்ணீர் ஆறு சாமியை அசைத்து விடும் என்று நன்றாக உலகநாதனுக்கு தெரியும்..
அதை வைத்து அவர் விளையாட மகளுக்காக அதையும் ஆறுச்சாமி விட்டுக் கொடுத்தார்.. ஊரார் முன்னிலையில் தன்னுடைய மருமகனுக்கு பஞ்சாயத்து தலைவர் பதவியை கொடுப்பதாக கூற அனைவருமே அதைக் கேட்டது அதிர்ந்தனர்...இருந்தும் பாவம் அவர் மகளுக்காக செய்தார்... இல்லையெனில் மகள் கண்ணீர் விட்டு கதறுவாள்...உலக நாதன் போட்டு அவரை எல்லோர் முன்னிலையில் அடிப்பார்..அதையெல்லாம் அவரால் பார்த்து கொண்டு இருக்க முடியாது...
பிறகு என்ன பதவி கிடைத்ததும் அவரை கையிலேயே பிடிக்க முடியவில்லை... உலகநாதன் இவர்களை எல்லாம் மதிக்காமல் தனியாக இருந்தார்... தன்னுடைய ஆண் மக்கள் எல்லாம் வேண்டாம் என கூறும் போதும் ஆறுச்சாமி கேட்கவில்லை...அதற்கு காரணம் அவருடைய மகள் காவேரி கருவுற்றிவிருக்க அக்குழந்தை வயிற்றில் குத்தி அப்பா நீங்க இதை மட்டும் செய்யல நான் அப்புறம் என் குழந்தை செத்துடுவோம் அவரை யாருமே மதிக்க மாட்டேங்கிறாங்க.. மாடு மேய்க்க வந்தவன் தானேனு அசிங்கமா பேசுறாங்க உங்களுக்கு புண்ணியமா போகும் இது ஒரு பதவியை மட்டும் எனக்காக கொடுத்திருங்க நான் இனி எதை தேடியும் இந்த வீட்டு வாசப்படியை மிதிக்க மாட்டேன்" என்று கூறி அழ தன் மகளின் வாழ்க்கை கருதி அவளின் தேவையை மகன்கள் எவ்வளவு தடுத்தும் கேளாமல் செய்தவர் மகள் மீது வேதனை கொண்ட ஆறுச்சாமி உயிரை மாய்த்து கொண்டார்...
தந்தை இறந்ததும் அண்ணன்கள், தங்கை இடையே உறவு அற்று போனது..உலகநாதன் மீதுள்ள அன்பில் அதெல்லாம் அவருக்கு பெரிதாக இல்லாமல் போனது தந்தை இறந்தது மட்டும் மிகவும் வருத்தமாக இருந்தது என்னவோ உண்மைதான்..
பஞ்சாயத்து தலைவர் பதவி கிடைத்ததும் கணவனின் குணம் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது அதற்கிடையில் தந்தையின் இறந்துவிட குழந்தையும் பிறந்து காவேரி வீட்டுக்குள்ளேயே முடங்கி போனார்...
கணவரின் குணம் சில பல நேரங்களில் அவளுக்கு பிடிக்காமல் போகும் அந்த தருணத்தில் எல்லாம் அவர் செய்தது தவறோ என நினைக்க தோன்றும் ஆனால் உலக நாதன் அருகே வந்தால் அதெல்லாம் மறந்து போகும்..
இதற்கு இடையில் தினகரனும் உலகநாதன் போல வேறொரு உருவமாக வளர்ந்து நின்றான்.. ஆம் ஊரில் இருக்கும் அனைத்து ரவுடித்தனத்தையும் தன் கைகளில் வைத்து இருந்தான்.. தந்தை நரித்தனமாக செய்த விசயத்தை இவன் ஓபனாக செய்ய ஆரம்பித்தான்...
ஆறுச்சாமி இருந்தது வரை அமைதி பூங்காவாக அந்த ஊர் இருக்க எப்பொழுது உலகநாதன் அந்த ஊரை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாரோ அன்றிலிருந்து அவரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது... தேவை இல்லாத பல சட்டங்களை கொண்டு வந்தார்...இதெல்லாம் அண்ணன் தம்பி இருவருக்கும் பிடிக்காமல் போக அந்த ஊரே வேண்டாம் என அந்த ஊரை முத்தமாக ஒதுக்கி வைத்துவிட்டு அவர்கள் இருவரும் தனியாக அந்த ஊரில் வாழ்ந்து வந்தார்கள்..
அந்த சமயத்தில் தான் தினகரன் நித்யாவை சந்தித்தான் அவளின் அழகில் அவன் சொக்கி போக, அவளை அடைய வேண்டும் என தீர்மானித்தான்.. அவன் பல பெண்களிடம் பழக்கம் வைத்திருந்தாலும் நித்யாவை அடைய வேண்டும் என்று முடிவு செய்தான்..
தந்தை ஆறு சாமி தன் மகன்களிடம் சத்தியமாகிக் கொண்டு காவேரி வாழ்க்கை தான் நமக்கு முக்கியம் இனி எந்த விதத்திலும் உலகநாதனிடம் பிரச்சனை வைத்துக் கொள்ள கூடாது நமது பரம்பரை தான் இந்த ஊரை ஆண்ட பரம்பரை அப்படி இருக்க யார் பஞ்சாயத்து தலைவராக இருந்தாலும் அவர்கள் சொல்படி கேட்டு தான் ஆக வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு இறந்து விட்டார்.. அதனாலேயே என்னமோ அந்த ஊரில் எந்த விசேஷத்திலும் பங்கு கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார்கள் அண்ணன் தம்பி இருவரும்...
அப்படி இருக்க அண்ணன் தம்பி ஒற்றுமையாக இருந்தார்கள்.. தந்தை குடும்பத்தை பற்றியோ இல்லை உலகநாதன் பற்றி கவலை இல்லாமல் அவர்களுக்கு இன்று இருக்கும் ஒரே ஒரு வாரிசான நித்யாவை வெளியூரில் படிக்க வைத்தார்கள்.. பிறகு அங்கேயே ஏதோ ஒரு கம்பெனியில் அவள் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் அவளை அதிகம் ஊர் பக்கம் அவர்கள் அனுமதிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.. அந்த ஊரின் கோட்பாடு அவர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை அதிலும் தங்கையும் தங்கை கணவரும் செய்யும் அழிச்சாட்டியும் சுத்தமாக பிடிக்கவில்லை மேலும் அவர்களுக்கு என்று இருக்கும் ஒரே மகளை எல்லா விதத்திலும் முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என அவர்கள் பாமர சட்ட திட்டங்களை பின்பற்றும் இந்த ஊரில் இருந்தால் மகளின் வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்று கருதியே மகளை பெரிதாக இந்த ஊர் பக்கமே வரவிடாமல் வெளியூரிலேயே படிக்க வைத்து அங்கேயே வேலையும் வாங்கிக் கொடுத்து விட்டார்கள்..
இனி என்ன அவளுக்கு திருமணம் தான் திருமணத்திற்கு மாப்பிள்ளை வரனும் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்...
ரத்தினம் மற்றும் சிதம்பரம் இருவருக்குமே ஒரே ஒரு வாரிசு அது சிதம்பரத்தின் மகளான நித்யா மட்டும்தான் அதனால் இருவருமே அக்குழந்தை மீது உயிரை வைத்து வளர்த்தி இருந்தார்கள் அவர்களுடைய உலகமே நித்யா என்று ஆகிப்போனது நித்யாவும் அவளின் இரு அப்பாக்கள் தான் அவளுடைய உலகமாக இருந்தது..
அப்படி இருக்க ஒரு நாள் நித்யா ஊருக்கு வந்த சமயம் பார்த்து தினகரன் அவள் பின்னாலேயே சென்று அவளிடம் ,"ஏய் என்ன வெளியூர்ல படிக்கிறேன்னா பெரிய இவளா ஆற அடில ஒரு ஆம்பள எதிர்க்க வரான் நீ பார்க்க மாட்டியா" என்று லந்தை கொடுத்தான்..
அதற்கு அவளோ எதுவும் பேசாமல் அவனைப் பார்த்த முறைத்துக் கொண்டு செல்ல அவள் முறைத்தது அவனுக்கு பிடிக்கவில்லை அதனால் ,"என்னடி முறைக்கிற நான் உன்னோட முறை பையன் தானே ஏன் உன்கிட்ட பேச கூடாதா பேசினா பதில் பேச மாட்டியா அவ்வளவு பெரிய திமிரா உனக்கு?? எப்படி இருந்தாலும் நான்தான் உன்னை கட்டிக்கணும்" என்று வேண்டுமென்று வம்பு செய்தவன் அவளுடைய கையை பிடிக்க அதற்கு மேல் நித்யாவுக்கு பொறுமை இல்லை..
ஓங்கி அவள் அவனை அடித்து இருந்தாள்...அதை சுற்றி இருக்கும் நபர்கள் வேடிக்கை பார்க்க அவனுக்கு மிகவும் அவமானம் ஆகி போனது.. அதை மனதுக்குள் வைத்து கொண்டான் தினகரன்...
என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டே இருந்தவன் கண்ணில் ஒரு நாள் நித்யா மற்றும் கண்மணி பேசிக்கொண்டு செல்வது தெரிந்தது...
கண்மணியை வைத்து நித்யாவை தூக்கி விட வேண்டியதுதான் என்று முடிவு கட்டினான் யாரிடமும் விஷயத்தை கூறவில்லை அந்த சமயம் பார்த்து தான் கண்மணி நித்யாவுடன் பேசி கொண்டு இருப்பதை பார்த்தான்..
அவர்கள் குடும்பத்தார் யாரும் பேசி கொள்ளவில்லை என்றாலும் கண்மணி நித்யாவுடன் பேசி கொண்டு இருக்க நித்யாவும் அவளோடு உரையாடுவாள்..
அப்படி இருக்க ஓர் நாள் அவர்கள் ஊரில் ஊர் திருவிழா ஒன்று நடந்தது..
அந்த சமயம் தன் தங்கையிடம் அவன் கண்மணி ,"இந்த தடவை வான வேடிக்கை பரமசிவம் தோட்டத்தில் தான் வைக்கிறாங்க நீ நேரமா அங்கே போய் இடம் பிடிச்சு நின்னுக்கோ இல்லை கூட்டம் அதிகம் ஆகிடும்" என கூற அதை கேட்ட அவளோ ,"சரி அண்ணா அப்படியே பண்றேன்.. நித்யா அக்காவும் வரேன்னு சொல்லிட்டு இருந்தாங்க அவங்களையும் கூட்டிட்டு போறேன்" என கூறினாள்... இந்த வார்த்தை தான் தினகரனுக்கு வேண்டப்பட்ட வார்த்தையாக இருந்தது...
ஏனெனில் திருவிழா தொடங்கியது முதல் அவள் நித்யா உடன் சுத்துவதை கவனித்து அவள் கூற அதையும் நம்பிய கண்மணி சரி என்று கூறி விட்டாள்..
அப்படி நித்யாவை அழைத்து கொண்டு அவள் பரமசிவம் தோட்டத்துக்கு செல்லும் வழியில் ஒரு பையன் வந்து," அக்கா உங்களை உங்க அம்மா வர சொல்றாங்க" என கூற அதை கேட்ட அவளோ போக ,"தயங்க பரவாயில்லை நீ போ நான் அங்கே வெயிட் பண்றேன் அது தான் ஆளுங்க எல்லாம் போயிட்டு இருக்காங்களே நான் அவங்க கூட
போறேன்" என நித்யா கூற கண்மணியும் சென்று விட்டாள்...
பிறகு என்ன பரமசிவம் தோட்டத்துக்குள் கால் வைத்தது மட்டும்தான் நித்யாவிற்கு ஞாபகம் இருக்கிறது..பிறகு எதுவும் நியாபகம் இல்லை அவளை கசக்கி எறிந்து விட்டான் தினகரன்...
