Share:
Notifications
Clear all

இராட்சதன் 22

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 523
Thread starter  

அத்தியாயம் : 22

அவரின் பலமே அவருடைய நரித்தனம் தான்.. ஆனால் இவர்கள் எல்லாரும் ஒன்று கூடி நிற்கும்பொழுது அவரின் நரித்தனம் வேலை செய்யவில்லை என்றுதான் கூற வேண்டும்...

கிட்டத்தட்ட மக்கள் ஒன்று கூடி அவரை ஒதுக்கியது போல அவருக்கு தோன்றியது இதற்கெல்லாம் காரணம் அவன் மற்றும் அவருடைய ஆருயிர் மகள் இவர்களால் தான் அவருடைய மானம் மரியாதை எல்லாம் போனது என்று அவர் மனம் வெதும்பி இருக்கும் நேரம் பார்த்த தினகரன் கொந்தளிக்க, இதை எல்லாம் கேட்டு கொண்டு அவள் அவளுடைய அறையில் முடங்கி இருந்தாள்..

ஆம் வாழ்கையில் அவள் முதன் முறையாக செய்த தவறு அவளை இந்த நிலைக்கு ஆளாக்கும் என அவள் உணரவே இல்லை.. மனதளவிலும் சரி உடல் அளவிலும் சரி மிகவும் அடிபட்டு போயிருந்தாள் கண்மணி.. நித்தம் கேட்கும் வசைவுகள் அவளுடைய செவிக்கு எட்டாமலேயே போனது ஏனெனில் அதைவிட அவளுடைய மனம் பாதித்து இருந்தது என்று கூறலாம்...

அந்த நேரம் பார்த்து அவளுக்கு தலை சுற்றுவது போலவும், காலையில் அவளுடைய அம்மா நிர்பந்தித்து சாப்பிட வைத்த உணவு செரிக்காதது போலவும் வாந்தி வருவது போலவும் தோன்ற அவளோ குழம்பினாள்..

பிறகு தேதியை பார்க்க நாட்கள் தள்ளி போய் இருக்க ஒரு வேளை தான் கர்பமாக இருக்கிறோமோ என நெனைத்தவளுக்கு பயம் தொற்றியது..

ஐயோ தான் கருவுற்று விட்டோமோ என்று நினைத்தாள் இந்த ஒரு மாதத்தில் அவள் இந்த நான்கு சுவற்றை தாண்டி வெளியே வரவில்லை என்றாலும் பல குத்து பேச்சுகளும் பல கேட்க அருகதை இல்லாத வார்த்தைகளும் கேட்டுவிட்டாள் அவள் அண்ணன் அவளை வசைப்பாடியது கொஞ்ச நஞ்சம் இல்லை..

அவனுக்கு கோபம் வந்தால் போதும் நேராக வந்து அவளைத்தான் வசைப்பாடுவான்.. அடிப்பான்...அப்போதெல்லாம் அவளுடைய அம்மாதான் வந்து அவளை காப்பாற்றுகிறார்..

ஏன் என்று தெரியவில்லை இந்த சம்பவத்துக்கு பிறகு அவளுடைய அம்மா மட்டும்தான் அவளுக்கு துணையாக இருக்கிறார் அது மட்டும் தான் அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது...

அப்படி இருக்க கோபமாக வீட்டுக்கு வந்த தினகரன் ,"எங்கே அந்த ஓடுகாலி எங்கே இருக்கா??" என கத்தி கொண்டே வந்தான்..

"எதுக்கு டா இப்போ கத்திட்டு இருக்க??" என காவேரி கேட்க

"அவ எங்கே?? அதை முதலில் சொல்லு" என்றான் அவன்..

"உள்ளே தான் இருக்கா இப்போ என்ன??"

"என்ன வளர்த்து வெச்சிருக்க புள்ளைய அடக்கம் ஒடுக்கமா வழக்க தெரியாம இப்படி ஊர் மேய விட்டு இருக்க உன்னால எங்களால அது வெளியே தலை காட்ட முடியல"

அதைக் கேட்டதும் காவிரிக்கு கோபம் வந்தது, "உன்னையும் தான் நான் வளர்த்தேன் நீயும் அதே மாதிரி தான் இருக்க அப்புறம் என்ன?? அவளை மட்டும் குறை சொல்ற?? உன்னோட அப்பாவும் அப்படித்தான் மொத்தத்துல குடும்பமே அப்படித்தான் இதை சொல்லி விளக்க முடியாது" என்று கேட்கவும் அவன் முகம் இறுகி ,"தேவையில்லாம பேசிட்டு இருக்காத நான் ஆம்பள நான் என்ன வேணாலும் பண்ணுவேன் அதுக்குன்னு ஒரு பொம்பள இப்படியெல்லாம் பண்ணனுமா" என்று கேட்க

"வாய ஒடச்சிடுவேன் ஆம்பள பொம்பளைன்னு தப்பு யாரு பண்ணினாலும் தப்பு தப்பு தான் அந்த தப்புக்கு நியாயம் சொல்லுவியா நீ உன்னை எல்லாம் அன்னைக்கே செருப்பால் அடிச்சு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊரை விட்டு அனுப்பி இருக்கணும் விட்டது தப்பா போச்சு.. உன்னால ஒரு உசுரு போயிருக்கு அது உனக்கு பெருசா தெரியல அப்படித்தானே உன்னால தான் இப்ப என் பொண்ணு சீரழியிறா" என்க

"ஏய் வாய மூடு நானும் பார்த்துட்டு இருக்கேன் ஓவரா பேசிட்டு இருக்க நான் என்னோட மாமா பொண்ணு கிட்ட தானே தப்பா நடந்துகிட்டேன் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் இல்ல அவ செத்து போனதுக்கு நான் என்ன பண்ண முடியும்??.. அவன் என் கையில் சிக்காமலா போயிடுவான் உயிர் பயம் என்னென்ன நான் காட்டுறேன்"

"நீ கிழிச்ச நம்ம ஊரிலேயே வந்து உன்னை அடிச்சிட்டு போயிருக்கான் உன்னால ஒன்னும் பண்ண முடியாது...இப்பவும் நீ பண்ணது தப்புன்னு ஒத்துக்க மாட்ட அப்படித்தானே உன்னை திருத்த முடியாது நீ எல்லாம் இன்னும் பட இருக்கு.? அதுக்கும் அவன் தான் வருவான்னு நினைக்கிறேன்" என்று காவேரி கூறினார்..

அந்த சமயம் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த உலகநாதனை பார்த்து கொண்டு ,"உன்னை சொல்லி தப்பில்லை அப்பன மாதிரி தானே புள்ளையும் இருப்பாங்க" என்று கூற, அவரோ காவேரியை பார்த்து முறைத்தார்.. அவருடைய சமநிலை மாறியது..

"அப்பா, அம்மா என்ன பேசுறாங்கன்னு கேட்டீங்களா இப்படி எதிர்த்து பேசுறாங்கன்னு பாருங்க" என்று கூற ,"இதுக்கெல்லாம் காரணம் அவதான் அவளை சும்மா விட மாட்டேன்" என்று கூறி நேராக அந்த அறைக்குள் செல்ல அவளோ கர்ப்பமாக இருக்கிறோமோ என்ற பயத்தில் அமர்ந்து கொண்டிருந்தாள்.. வாந்தியோ இப்போ வந்து விடுவேன் என்ற நிலையில் அவள் இருந்தாள்...

"ஏண்டி இங்கே அவனவன் மானம் போய் மரியாதை போய் இருக்கும் நீ பாட்டுக்கு ஜாலியா உக்காந்துட்டு இருக்கியா" என்று கேட்ட தினகரன் வேகமாக அவளுடைய தலை முடியை கொத்தாக பிடிக்க கண்மணி வேதனை தாளாமல் அழுதாள்.. அதற்குள் அவளுக்கு வாந்தி வந்து விட அவளோ வாந்தி எடுக்க அதை பார்த்த அவனுக்கு மேலும் ஆத்திரம் பொங்க," ஏன் டி வயித்தை நிரப்பிட்டு வந்துட்டியா???" என கேட்டான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top