Share:
Notifications
Clear all

இராட்சதன் 19

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 531
Thread starter  

அத்தியாயம் : 19

   காவேரியின் மனம் வெதும்பி போயிருந்தது.. அன்று அவர் செய்திருந்த தவறு இன்று அவருடைய மகளுக்கு நேரும்போது பெற்ற வயிறு பத்திக்கொண்டு எரிகிறது.. அன்று இப்படித்தானே அவருடைய தந்தையும் அழுது கரைந்து இருப்பார் என்று யோசிக்கும் போதே காவேரி உடைந்து போனார்..அன்று தவறு என்று தெரியாத விஷயம் இன்று அவருக்கு தவறு என்று விளங்கியது..

கணவன் செய்வது தவறு தான் என நன்றாக தெரியும்.. கால போக்கில் அவருடைய வயது ஏற ஏற கற்று கொண்டார்.. ஆனால் அவரை அடக்கி வைக்க காவேரியால் முடியவில்லை.. ஆனால் இன்றுவரை காவிரி மீது அவர் பாசமாக இருக்கிறார் அந்த ஒரு காரணத்துக்காகவே அவரோடு அவர் வாழ்ந்து வருகிறார்..அன்றைய காலத்திலேயே உலக நாதனை அவரால் விட்டுக் கொடுக்க முடியவில்லை இப்போது விட்டுக் கொடுக்கவா போகிறார்????

அப்படி இருக்க தன் அண்ணன் மகனை தன் மகன் சீண்டவும் அதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஊரார் மத்தியில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டாலும் அந்த பெண் அருகே செல்லக்கூட அவருக்கு கூச்சமாக இருந்தது... ஒரு பெண்ணின் வாழ்க்கை மகன் சிதைத்து விட்டானே என்று அவர் வருத்தம் கொண்டார்...அவரால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை...அந்த சமயத்திலும் தன் அண்ணனின் சொத்துகளை கைப்பற்றியதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அப்பொழுது அவர் வெளியே காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் மனதளவில் மிகவும் பாதிப்படைந்திருந்தார்...ஆனால் அந்த வருத்தம் இப்பொழுது அவருடைய பெற்ற வயிறு எரிந்து கொண்டிருக்கும்போது அவரால் தாங்கிக் கொள்ள முடியாமல் போனது..

மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என அவர் மட்டும் தான் அந்த வீட்டில் துடித்துக் கொண்டிருந்தார்.. சூரிய பிரகாஷ் அடித்த அடியில் தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்..

உலகநாதன் என்ன யோசிக்கிறார் என எதுவுமே விளங்கவில்லை வீட்டிலேயே முடங்கி இருந்தார்.. அவரால் அந்த அதிர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. அந்த ஊரில் அவர் வைத்தது தான் சட்டம் அவர் வைத்தது தான் விதி என இத்தனை நாட்கள் வாழ்ந்து விட்டார்..அது அவருக்கு பிடித்தும் இருந்தது... ஊரே மரியாதை செலுத்துவது அவருக்கு பிடித்து இருந்தது..ஆனால் அவர் வீட்டில் அவர் செய்த ஈனச் செயல் போல அவர் வீட்டிலேயே நடக்கும் பொழுது அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது வேறு விஷயம்..

இவ்வளவு நாள் சேர்த்து வைத்த சொத்தை எல்லாம் எவனோ ஒருவனுக்கு கொடுக்க முடியுமா??? ஊர் பேர் தெரியாத ஒருவனுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுக்க முடியுமா??  முடியாதே!!  இதற்கு மகள் ஓடி போய் இருந்தால் கூட கவலைப்பட்டு இருந்திருக்க மாட்டார்..

ஆனால் வந்தவன் எந்த துப்பும் இல்லாமல் அவரை சாய்த்து விட்டுப் போய் விட்டான்..அவரை அடிக்கவில்லை மிதிக்கவில்லை பக்கம் பக்கமாக வார்த்தைகளை விட வில்லை ஆனால் வந்தான்.. அவரை சாய்த்தான்..இதுவரை அவருக்கு என்று இருந்த மானம் மரியாதை அனைத்தையும் கெடுத்து விட்டு சென்றான் என்பது போல அவன் சென்று விட்டான் அடுத்தது என்ன??

சொத்துக்கு பயப்பட்டு மகளை திருமணம் செய்து வைக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்..சபையினர் முன்னிலையில் தான் இதை கூறினார் இனி ஊர் அவரை எப்படி நம்பும்???

இனி அவளுடைய நிலை என்ன என யோசிக்கும்போது தலை சுற்றினாலும் வீட்டிலேயே அடங்கிக் கிடக்கட்டும் கழுதை எத்தனை காசு செலவு பண்ணி படிக்க வைத்தேன் ஆனால் கண்டவன் கூட ஊர் சுற்றி என் பெயரை அசிங்கப்படுத்தி விட்டு இப்பொழுது மூலையில் கிடந்து அழுதால் எல்லாம் சரியாகிவிடுமா இவளை சும்மா விடக்கூடாது இவளால்தான் எனக்கு இவ்வளவு அவமானமும் என்று பாசமாக வளர்த்த மகள் மீது பகையை கொண்டார் உலகநாதன்..

வீட்டிலேயே முடங்கிப் போனாள் கண்மணி.. கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகி விட்டது..எதற்கும் வெளியே வர வில்லை..வெளியே என்ன நடக்கிறது என அவளுக்கு தெரியவில்லை...தெரிந்து கொள்ளவும் அவள் விரும்பவில்லை..ஊரார் மத்தியில் பெரிய அறிவுரை எல்லாம் கூறிவிட்டு சென்ற அந்த அதிமேதாவி தனக்கு என்ன செய்தான் தன்னையும் அது போல ஆக்கிவிட்டு தானே சென்றான் என்ற எண்ணமே அவளை வாட்டி எடுத்தது
என்று தான் கூற வேண்டும்..

காதல் என்ற பொய்யை கூறி அவளை இரு வருடமாக ஏமாற்றியது மட்டுமல்லாமல் அவசரமாக தாலி கட்டி அவளோடு சல்லாபித்து அந்த தாலியை அவிழ்த்து உன்னை பழி வாங்கத்தான் இதை செய்தேன். என்று ஊரார் முன்னிலையில் அவளை தோலுரித்து விட்டு சென்ற அவனை என்னவென்று சொல்வது???

அடுத்தது என்ன என அவளால் யோசிக்க முடியவில்லை இதே போன்ற ஒரு நிலையில் தான் அன்று நித்யா இருந்தார்.. அன்று அவளால் அவளுடைய உணர்வுகளை கிரகித்துக் கொள்ள முடியவில்லை இன்று நித்யா என்ன வதைப்பட்டு இருப்பாள் என்பதை தெள்ளத் தெளிவாக கண்மணியால் புரிந்துகொள்ள முடிந்தது..

அதேநேரம் ரத்தினத்தின் முன்னிலையில் இருந்த சூரிய பிரகாஷ் அவரைப் பார்த்து ,"நீங்க மட்டும் தனியா இங்கே என்ன பண்ண போறீங்க பேசாம என்கூட வந்துடுங்க" என்று அவனுடைய வேலை முடிந்து விட்டது இனி இங்கு இருக்க வேண்டாம் என கருதி அவன் கூற,

அவரோ கையெடுத்துக் கும்பிட்டு," இது என்னோட மண்ணு மாப்பிள்ளை.. இங்கேதான் என்னோட அப்பா அம்மா என் தம்பி என் தம்பி மக அப்படி என்னுடைய எல்லா உறவுகளும் இங்கே தான் இருக்காங்க அவங்களை விட்டுட்டு என்னால எங்கேயும் வர முடியாது என்னை மன்னிச்சிடுங்க.. உங்க அன்பு எனக்கு புரியுது ஆனால் அதை மீறி நடக்கிறேன் மட்டும் தப்பா நினைச்சுக்காதீங்க நீங்க எனக்கு செஞ்ச உதவி பேருதவி அதை என்னுடைய வாழ்க்கையில் நான் மறக்கவே மாட்டேன்.. என்னோட நண்பனின் மகனாக நீங்க இருந்தாலும் எங்க பிரச்சினைக்கு துணையாக இருந்து இருக்கீங்க..

இவங்களோட முகத்திரையை கிழிக்க நினைச்சேன்.. அது உங்க மூலமா நடந்துடுச்சு அதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி தான் இனி இவன் பஞ்சாயத்து பண்றேன்னு சொல்லி ஊர் மக்களை ஏமாத்திட்டு இருக்க மாட்டானே.." என்று கூறினான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top