Share:
Notifications
Clear all

இராட்சதன் 26

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 531
Thread starter  

அத்தியாயம் : 26

   சூர்ய பிரகாஷ் கடும் கோபத்தோடு வீட்டுக்குள் நுழைந்தான்..அவன் முகத்தில் அவ்வளவு ஆத்திரம் இருந்தது..அந்த விக்னேஷ் மட்டும் நேரில் இருந்திருந்தால் முகத்திலேயே ஓங்கி குத்து விட்டிருப்பான்..ஆனால் அவனோ இல்லை என்ற ஆத்திரம் அவனுக்கு இருந்தது..

ஆம் அவன் எதிர்பார்த்த அளவுக்கு அவனுடைய ஹோட்டல் வேலை இன்னும் நடக்கவில்லை என்று தான் கூற வேண்டும் விக்னேஷ் அவன் தான் சூரிய பிரகாஷ் ஊட்டியில் கட்டும் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் இன்ஜினியர்.. அவனுடைய நண்பனும் தான் அப்படி இருக்க அவனிடம் ஒப்படைத்து விட்டு ஒரு சில காரியங்களுக்கெல்லாம் சென்று விட்டு வரும்பொழுது மீண்டும் அதே நிலையில் கட்டிடம் நிற்பதை பார்த்து கடும் கோபத்தோடு அவன் வீட்டுக்குள் நுழைந்தான்..

அவனுடைய பாட்டி அவனை கண்டதும் ,"வா கண்ணா" என்று ஆசையோடு அழைக்க அவனும் சட்டையை மடக்கிவிட்டு படியே, பாட்டி அருகே போய் அமர்ந்தான்..

"என்ன கண்ணா கோபமாக இருக்கியா இந்த ஊட்டி குளிரிலும் கூட எப்படி இப்படி விரைப்பாய் இருக்க??? வந்ததும் வராதுமா என்ன ஆச்சு???என்ன ஆச்சு சூடா ஒரு டீ கொண்டு வர சொல்லவா???" என பாட்டி கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றார்...

"ஒன்னும் இல்ல பாட்டி நான் நெனச்சது ஒன்னும் நடந்தது ஒன்னு பில்டிங் எந்த அளவுக்கு ஆகி இருக்கணும் அப்படின்னு சொல்லிட்டு போனேன் ஆனால் இந்த விக்னேஷ் என்ன பண்றான்னு தெரியல அதுதான் கடுப்பா இருக்கு.. எங்கே போனான் அவன் சைட்ல வேலை எல்லாம் அப்படியே இருக்கு" என்று கூற

"நான் நேத்து கூட போய் பார்த்துட்டு வந்தேன் கண்ணா விக்னேஷ் நல்லாத்தான் பண்றான் அவனை குறை சொல்லாதே இங்கே இருக்கிற கால நிலைமையும் நீ யோசிக்கணும் இல்ல??" என்று கூற

அது எல்லாம் எங்கே அவன் தலையில் ஏறுகிறது அவன் நினைத்தது நடக்க வேண்டும் அவ்வளவுதான் அப்படி இருக்க அவனோ அப்படியே கடுப்பின் உச்சியில் பாட்டி சொல்வது எதையும் காது கொடுத்து கேட்காமல் ,"நாளைக்கு நான் தம்பியை வர சொல்றேன் கார்த்திக் இருந்து கவனிச்சுக்கட்டும் எனக்கு தெரியாது மூணு மாசத்துக்குள்ள அந்த ஹோட்டல் வேலை முடிந்து இருக்கணும் ஒரு ஆள் இருந்து கவனிச்சாத்தான் சரி வரும்" என்று கூற,

அந்த சமயம் பார்த்து பாட்டி அவனின் கோபத்தை தணிக்க,"கண்மணி ஒரு கப் டீ கொண்டு வா" என உரக்க பாட்டி அழைக்க கண்மணி என்ற அந்த பெயரை கேட்டதும் அவன் உள்ளே ஏதோ ஒரு என்ன அதிர்வலைகள் வந்து போனது.. சடுதியில் அவனுடைய கோபம் போய் அவள் இந்த நேரம் என்ன செய்து கொண்டிருப்பாள் அவளுடைய அண்ணன் மற்றும் அப்பா அவளை உயிரோடு விட்டு வைத்திருக்கிறார்களா இல்லையா?? என்றெல்லாம் யோசித்துப் போனான்..

ஏனோ ஒரு நொடியில் அவளுடைய ஞாபகம் வந்து போனது ஆனால் தன் தலையை உலுக்கி சமநிலைப்படுத்திய அவன் அது முடிந்து போன அத்தியாயம் என நினைத்துக் கொண்டான்.. இது யார் புதிதாக கண்மணி என அதே யோசிக்கவும் அவன் தவறவில்லை..

அவளோ காலையிலிருந்து சாரதா பாட்டியின் வீட்டிற்கு வருபவர்களுக்கெல்லாம் காபி கொடுக்கவும் டீ கொடுக்கவும் அவர்களை இவளுக்கு அறிமுகப்படுத்தி வைக்கவுமாக அவர் இருந்தார்..

ஏனெனில் இந்த வீட்டின் கணக்கு வழக்குகளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறி இருந்ததால் யாரெல்லாம் வருகிறார்களோ அவர்களிடம் எல்லாம் அவளை அறிமுகம் செய்து வைத்து கொண்டு இருக்க அவளோ அப்படி ஒரு ஆள் வந்து இருக்கிறார்கள் போல என கருதி சூடான டீ கப்பை எடுத்து கொண்டு ஹாலுக்கு வர அங்கு பாட்டிக்கு அருகே அவன்...

யாரை தன் வாழ்க்கையில் பார்க்க கூடாது என நினைத்திருந்தாலோ அவன் பாட்டியின் அருகே அமர்ந்து இருந்தான்..

அவனை கண்டதும் அவள் அதிர, பாட்டியோ அவளை பார்த்து," வா மா டீ கொடு" என கூற அவனுடைய பார்வையும் இம்மி அளவு கூட மாறாமல் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தது..

அவனுக்கும் அதிர்ச்சி தான் இவள் எங்கே இங்கு வந்து சேர்ந்தாள் என அவன் நினைக்க, அவளோ மறுபடியும் இவனா என்பது போல திகைத்து நின்றாள்..

யாரை வாழ்க்கையில் பார்க்கவே கூடாது என நினைத்து இருந்தாலோ அவன் கண் முன் வந்து நிற்கும் பொழுது அவளால் அதை அவ்வளவு எளிமையாக எடுத்துக் கொள்ள முடியவில்லை தன்னுடைய வாழ்க்கையையே சிதைத்த ஒருவன் முன்னால் நிற்கிறோம் என்பதே அவளுக்கு அதிர்ச்சியை தான் கொடுத்தது..

அவனும் அதே அதிர்ச்சியில் இருந்ததாலோ என்னவோ தன் நெற்றி லேசாக நீவிக் கொள்ள அதற்குள் அவள் தயங்கி தயங்கி பாட்டி கூறி விட்டார்களே என்பதற்காக அவனைக் கண்ட அதிர்ச்சியிலும் அவன் முன்னே துவண்டு விடக்கூடாது என்ற எண்ணத்திலும் அவனை தனக்கு இதற்கு முன்பே தெரியும் என்பது போல காட்டிக் கொள்ளாமலும் அவள் கையில் இருக்கும் டீ கப் விழுந்து விடக்கூடாது என்ற எண்ணமும் சேர்ந்து முன்னோக்கி அவளை செல்ல வைக்க, பாட்டியோ அவனிடம் அவளை காட்டி,"இது தான் கண்மணி புதுசா வேலைக்கு சேர்த்து இருக்கிறேன் கண்ணா" என்க

அவனோ எதுவும் பேசாமல் அவளை அழுத்தத்தோடு பார்த்தவன் விழிகளை அவள் பக்கம் இருந்து மாற்றாமல்," போன வாரம் வரும் போது இல்லையே" என்றான் பாட்டியிடம்

"இல்லை நேத்து தான் சேர்த்தேன்.. இந்த பொண்ணுக்கு யாரும் இல்லைன்னு சொன்னா அனாதைன்னு சொன்னா அதனாலதான் இங்கே வேலை போட்டுக் கொடுக்கலாம் என்று வேலை போட்டுக் கொடுத்தேன்" என்று பாட்டி கூற அவனும் இறுகிய முகத்தோடு அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவளோ நடுங்கிய கைகளோடு மனதுக்குள் அவ்வளவு போராட்டத்தோடு அவன் அருகே இருக்கும் டேபிளில் டீ கப்பை வைக்க வந்தவள் அவன் அருகே வர அவனுடைய பார்வை இன்னும் தீவிரமானது...

என்னவோ அவன் முறைப்பதை பார்த்தால் நான் தவறு செய்து விட்டு இவனிடம் பயந்து இருப்பது போல் அல்லவா பார்க்கிறான் என அவள் நினைத்தாள்..அது அவளுக்கு இலேசான கோபத்தை கொடுத்தது..அவனும் தன் பாட்டி முன் இவளை தனக்கு முன்பே தெரியும் என காட்டிக் கொள்ள வில்லை..

பாட்டி கூறுவதை கேட்ட அவன் இவள் எதற்காக வந்து இருக்கிறாள் என அவனுக்கு தெரியாது அப்படி இருக்க இவள் இங்கு தேவையில்லாத ஒருத்தி ..பாட்டி கூறுவது போல இவள் ஒன்றும் அனாதை இல்லையே பிறகு ஏன் பொய் கூறி இங்கு இருக்க வேண்டும்..

ஒருவேளை குடும்பமே சேர்ந்து பழி வாங்க இவளை அனுப்பி இருக்கிறார்களா என எண்ணியவன் அவளை பார்த்து முறைத்து கொண்டே பாட்டியிடம்," யார் வந்து வேலை கேட்டாலும் வேலை கொடுத்துடுவீங்களா??? தீர விசாரிக்க மாட்டீங்களா அப்படி என்ன அவசரம் நான் தான் வருவேன்ல்ல??? என்றான் ..

அதை கேட்ட அவர்,"அது வந்து கண்ணா" என்க அதற்குள் அவனோ ,"என்னமோ செய்ங்க நான் சொன்னா நீங்க என்ன கேட்கவா போறீங்க.. திரும்ப ஏதாவது பிரச்சனை அது இதுன்னு என் முன்னாடி வந்து நின்னுடாதீங்க.." என்று கூறி விட்டு ஃபோனில் யாரையோ அழைக்க வெளியே சென்று விட்டான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top