இராட்சதன் 28
அத்தியாயம் : 28
இனி இந்த வீட்டில் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை பேசாமல் நேராக சென்று சாரதா அம்மாவிடம் விஷயத்தை கூறிவிட்டு இந்த வீட்டை விட்டு வெளியேறுவது தான் நல்லது அவனுடைய வீட்டில் நான் இருப்பது எந்த வகையிலும் ஒரு அர்த்தமில்லாத ஒன்று என்று அவள் நினைத்தாள்.. மேலும் இது அவனுடைய வீடாக இருக்கும் பட்சத்தில் இங்கு இருந்தால் பிரச்சனைக்கும் மேல் பிரச்சினை தான் வரும் அதைவிட அவள் வயிற்றில் வளரும் கரு அதற்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அதனால் இந்த சூழல் அதற்கு ஏற்புடையதாக இல்லை என்பது அவளுடைய அனுமானமாக இருந்தது...
அந்த வேலைக்கார பெண்ணோ அவள் கையில் ஜூசை கொடுத்து மீண்டும் அவனிடமே கொடுக்கச் சொல்ல வேறு வழியில்லாமல் அவள் ஜூஸ் டம்ளரை எடுத்துக் கொண்டு அவனிடம் சென்று நீட்டியவள் கம்பீரத்தையும் அவன் மீது உள்ளான தன் கோபத்தையும் தன் முகத்தில் வரவழைத்து சற்று திமிராக," இனி நான் இங்கே இருக்க விரும்பல நான் கிளம்பறேன்..நீங்க இருக்கிற இடத்தில எனக்கு இருக்க விருப்பமில்லை.. உங்கள இந்த இடத்துல வச்சு நான் பார்ப்பேன்னு நினைக்கல ஆனால் இது உங்க வீடுதான்னு இப்பதான் எனக்கு தெரிய வந்துச்சு உங்களுக்கு சம்பந்தப்பட்ட எந்த இடத்திலையுமே நான் இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன் அதனால நான் இந்த வீட்டை விட்டு போறேன்" என்று அவள் கூற அதைக் கேட்டு அவனுக்கு கடுப்பாகியது அந்த அளவுக்கு இவளுக்கு என்ன திமிரா என யோசித்தான்..
அவனை இன்சல்ட் செய்வது போல அவளுடைய பேச்சு இருக்க அதை அவனால் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை..
இவளுடைய தந்தையும், அண்ணனும் செய்த தவறுக்கு இவள் பலியாடு ஆகிவிட்டாள் என்பது அவனுக்குமே சற்று நெருடலான விஷயம்தான் இவள் மீது தவறே இல்லை என்பது அவனுக்கும் தெரியும் அதனால் மட்டும்தான் அவளை அவனுக்கு எதிராக நிற்க வைத்து பேசிக்கொண்டு இருக்கிறான் இல்லையேல் இவளுக்கும் ஏதாவது கட்டம் கட்டி இருப்பான்..
ஏற்கனவே கோபக்காரனான அவனுக்கு அவளுடைய பேச்சால் அவனுடைய ஈகோ இதனால் தட்டி எழுப்பப்பட்டது.. ஏனெனில் அவன் என்னதான் பழிவாங்க அவள் பின்னால் இரண்டு வருடம் சுற்றி இருந்தாலும் அந்த இரண்டு வருடத்தில் அவள் எத்தகைய குணத்தைக் கொண்டவள் அவளுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பது வரை எல்லாம் தெள்ளத் தெளிவாக அவனுக்கு தெரியும் அப்படி இருக்க ஒரு சாந்தமான ஒருவள் அவன் முன்னால் திமிராக பேசுவதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அதைவிட இவள் அவனிடம் எதிர்த்து பேசுவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தான் இந்த இடத்தில் கூறி ஆக வேண்டும்..
அப்படி இருக்க, இனி அவள் இந்த வீட்டை விட்டுப் போகவே கூடாது எப்படி போகிறாள் என்பதை பார்த்துவிட வேண்டியதுதான் என எண்ணியவன்," என்ன சொன்ன உனக்கு இந்த வீட்டை விட்டு போகனுமா முடிஞ்சா போய் பார் அது உன் கனவிலும் நடக்காது.. நீ இந்த சூரிய பிரகாஷ் முன்னாடி பேசிட்டு இருக்க அதை மறந்துடாத நான் ஒன்னும் உன் பின்னாடி ஒரு காலத்தில் சுத்திட்டு இருந்தேனே அந்த மாறன் கிடையாது" என்று அவளிடம் சவால் விட்டான்.
அவனுடைய வார்த்தையின் அர்த்தம் அவளுக்கு அந்த நேரம் புரிபடவில்லை. அவளுக்கு தெரிந்தது எல்லாம் மிகவும் சாந்தமான மாறனை தானே இதோ இவளுக்கு எதிரே இருப்பவன் சொந்த பெயர் முதல் குணம் வரை அவளிடம் மாற்றி பேசி அவளை பழி வாங்கிய ஒருவன் தானே!!
அவனின் குணம் எத்தகையது என அவளுக்கு தெரியாது தானே அப்படி இருக்க, அவன் பேசிய பேச்சு சற்று பயத்தை வரவழைத்தாலும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவள் அவனிடம் ஜூசை கொடுத்துவிட்டு நேராக பாட்டியை தேடி அவன் சென்றாள் அவள்..
அவளுக்கு அவளுடைய பாதுகாப்பு முக்கியம் இவன் இருக்கும் இடத்தில் அவளுக்கு பாதுகாப்பு கிடைக்காது.. இது எல்லாம் விட அவளுக்கு அவளுக்கென்று இருக்கும் அவள் வயிற்றில் வளரும் குழந்தை ரொம்ப ரொம்ப முக்கியம் அதை பாதுகாக்க வேண்டிய கடமை அவளுக்கு இருக்கிறது..
மேலும் அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்ற இந்த விஷயத்தை இவனுக்கு தெரியாமல் மறைக்க வேண்டியதும் அவளுடைய முக்கியமான விஷயமாக அவளுக்கு தோன்றியது ஏனெனில் விஷயம் தெரிந்தால் அவன் அதை கொல்லக்கூட தயங்க மாட்டான் என்ற ஐயமும் அவளுக்கு உண்டு எல்லாம் கலந்து ஆலோசித்து தான் அவள் இந்த முடிவை எடுத்திருக்கிறாள்..
அப்படி இருக்க பாட்டி அவருடைய அறையில் ஓய்வு எடுத்து கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து அவருடைய அறைக்குள் நுழைந்த அவள்,"பாட்டி" என்க அவரோ," சொல்லு மா" என்றார் கரிசனமாக
"பாட்டி நான் இந்த வீட்டை விட்டு போறேன் நான் இங்கே இருந்தா சரியா இருக்காது. அது யாருக்கும் பிடிக்காது" என்று அவள் அவரிடம் என்ன காரணம் சொல்வது என தெரியாமல் அவருக்கு உதவி செய்த அந்த நல்ல மனுஷியிடம் தயங்கி தயங்கி விஷயத்தை கூற
அதைக் கேட்ட அவரோ ,"ஏன் மா திடீர்னு இந்த முடிவு?? என் பேரன் உன்னை அப்படி பேசினதுக்காகவா நீ இத சொல்ற" என்று கேட்க அவளோ தலை குனிந்தாள்.. அது மட்டும் காரணமாக இருந்தால் அவள் ஆமாம் என்று கூறியிருப்பாளே அது அல்லவே காரணம்..
அப்படி இருக்க அவளோ அமைதியாக இருக்கவும் ,"இதை பாருமா எனக்கு என்னனு தெரியல உன்னுடைய முகத்தை பார்த்ததும் உன்னை எங்கேயும் விடக்கூடாது பாதுகாப்பா வச்சுக்கணும்னு தோணுது நீயும் யாரும் இல்லை அப்படின்னு சொல்ற?? இங்கே விட்டு நீ எங்கே போவ நான் என்னுடைய பேரன் சொல்ற மாதிரி தீர விசாரிக்காம எல்லாம் வேலை கொடுத்திட மாட்டேன் ஆனால் உன்னை பார்த்ததும் அப்படி எல்லாம் விசாரிக்க தோணல உடனடியாக வேலை கொடுத்துட்டேன் நீ அவன் பேசுனது எல்லாம் மனசுக்குள்ள வச்சுக்காத அவன் அப்படித்தான் உன்னை பற்றி அவனுக்கு புரியும் போது அவன் அவனுடைய எண்ணத்தை மாற்றிப்பான் புரியுதா" என்றார் அவர்..
அவர் பேசி கொண்டு இருக்கும் போதே அந்த அறைக்குள் நுழைந்தான் சூர்ய பிரகாஷ்..அவனை கண்டதும் அவளோ சற்று விலகி நிற்க பாட்டியோ அவனை பார்த்து ,"நீ பேசியதால் வீட்டை விட்டு போறேன்னு சொல்றா பாவம் கண்ணா" என கூற
அதைக் கேட்ட அவனும் ,"அப்படி வீட்டை விட்டு வெளியே போனா எப்படி??? இவ எதுக்கு வீட்டுக்கு வந்திருக்கான்னு நமக்கு தெரிய வேண்டாமா? திடீர்னு நேத்து வந்தா திடீர்னு இன்னைக்கு போறேன்னு சொல்றா என்ன அர்த்தம் எனக்கு இவ மேல நம்பிக்கை இல்லை அப்படியெல்லாம் இவ்வளவு வீட்டை விட்டு அனுப்பிட முடியாது இவ இந்த வீட்லதான் இருக்கணும்.. எனக்கு இவ எந்த நோக்கத்தோட இந்த வீட்டுக்குள்ள வந்திருக்கான்னு தெரிஞ்சு ஆகணும்" என்று அவன் கூற அதைக் கேட்டதும் பாட்டி அதிர்ந்து," என்னப்பா இப்படி பேசுற அந்த பொண்ணு பார்த்தா அப்படி எல்லாம் தெரியல" என்று கூற,
"பாட்டி நேத்து வந்தது உங்களுக்கு முக்கியமா போய்ட்டாளா நான் சொல்ற வார்த்தைக்கு இங்கே விலை இல்லையா அப்படின்னா சொல்லுங்க நான் கிளம்புறேன்" என அவன் கூற
அதை கேட்டதும் பாட்டி அடங்கிவிட்டார்
