இராட்சதன் 30
அத்தியாயம் : 30
தோட்டத்தில் விளைந்த அன்னாசி பழம் மற்றும் பப்பாளி, மாம்பழம் என அனைத்துமே சாரதா அம்மாவின் வீட்டில் இருந்தது..
அவளுக்கோ இன்ன வேலை தான் அவளுடையது என யாரும் குறிப்பிடவில்லை என்றாலும் அவளுக்கு பல வேலைகள் அங்கு கொட்டி கிடந்தன..
அவளால் செய்ய முடியாமல் தான் போனதே தவிர வேறு ஒன்றும் இல்லை..எந்த பக்கம் திரும்பினாலும் வேலையாக தான் இருந்தது..
ஒரு பக்கம் அவனுடைய பில்டிங் வேலை என்றால் வீட்டுக்கு வந்தால் சமையலுக்கு உதவுவது முதல் கணக்கு வழக்கு பார்ப்பது வரை அவளுக்கு நிறைந்து இருக்கும்..
அப்படி இருக்க சூர்ய பிரகாஷை சந்தித்து ஒரு வாரத்துக்கு பிறகு வீட்டில் உள்ள பழங்களை எல்லாம் சாரதா அம்மா ஜுஸ் போட சொல்ல வேலைகாரர்களோ அன்னாசி பழத்தை ஜுஸ் போட்டனர்..
அவளும் வேலை விட்டு வந்த சமயம் அப்போது ஜுஸ் தயாராக இருந்தது..அவளோ வேலை விட்டு நேராக அடுக்களைக்குள் நுழைந்து ,"ஏதாவது உதவி செய்யணுமா???" என கேட்க,
அவள் கையில் ஜூஸ் டம்ளரை கொடுத்து," இதை மட்டும் நீங்க அவங்களுக்கு கொடுத்திடுங்க" என்று கூற அவளும் சரியென்று கொடுக்க போனாள்..
அங்கு விக்னேஷ் சூர்யா பிரகாஷ் பாட்டி சாரதா இருக்க அவர்களுக்கெல்லாம் அவள் ஜூஸ் கொண்டு போய் கொடுக்க சூரிய பிரகாஷ் மற்றும் விக்னேஷ் எடுத்துக் கொண்டார்கள்," சாரதா எனக்கு வேண்டா மா எனக்கு பதிலா நீ குடிச்சுக்கோ நம்ம தோட்டத்தில் விளைஞ்ச அன்னாசி பழம் தான்" என்று கூற
அவளோ அன்னாசி என கேட்டதும் ,"எனக்கு வேணாம் பாட்டி" என்றாள்
"ஏன்???" என பாட்டி கேட்க
அவளோ திருதிருவென விழித்து ஒரே ஒரு நொடி மட்டும் மின்னல் வெட்டுவது போல என்ன சொல்வது என தெரியாமல் சூர்ய பிரகாஷை பார்க்க அவனும் அந்த சமயம் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்..
அவள் முழிப்பதை பார்த்தவனுக்கு என்னவோ சரியில்லாதது போல தோன்ற எல்லாம் உன்னால தாண்டா உன்னால தான் இப்படி நான் மாட்டிட்டு முழிச்சிட்டு இருக்கேன் என்று மனசுக்குள் அவனை திட்டி விட்டு வெளியே பாட்டியிடம் ,"இல்ல பாட்டி எனக்கு இந்த ஜூஸ் பிடிக்காது" என்க
அவரோ ,"சரி மா அப்படின்னா வேற யாருக்காவது கொடுத்துடுமா" என்று அவர் கூறினார் அப்பொழுதுதான் அவளுக்கு மூச்சே வந்தது வெளியே சொல்லவா முடியும் கர்ப்பமாக இருப்பதால்தான் பைனாப்பிள் ஜூஸ் குடிக்கவில்லை என்று அப்பாடி தப்பித்தோம் என்று கருதி அவள் வேறொருவருக்கு அந்த ஜூசை கொடுத்து விட அடுத்து பப்பாளி ரூபத்தில் வந்தது வினை...
"இதோ இதையும் கொண்டு போய் கொடுத்துடுங்க" என வேலை செய்யும் பெண் ஒருவர் கூற அவளோ ,"இது என்ன எல்லாமே எனக்கு எதிரான பழங்களா இருக்கு இது எல்லாம் இவனோட வேலையா ஒருவேளை நான் கர்ப்பமா இருக்கேன்னு அவனுக்கு தெரிஞ்சுடுச்சா அதை கெடுக்கத்தான் இப்படி செய்கிறானோ என்னமோ??" என்று நினைத்தவள் அவர்களிடம் சொல்ல மனமின்றி வேகமாக அதையும் எடுத்துக்கொண்டு போய் சூரிய பிரகாஷ் விக்னேஷ் மற்றும் பாட்டி இருக்கும் இடத்திற்கு சென்று கொடுத்தாள்..
விக்னேஷ் அவளிடம் ,"நீங்களும் எடுத்துக்கோங்க கண்மணி" என்க
"இல்லை விக்கி வேணாம்" என்க
இங்கே ஒருவனுக்கு புகைந்தது ,"என்ன விக்கியா??? ஒரே வாரத்தில் விக்னேஷ் விக்கி ஆகி விட்டானா" என்ற கடுப்பு அவனுக்கு வந்தது..
தான் ஏன் கோபப்படுகிறோம் என அவனுக்கு தெரியவில்லை..ஆனால் கோபம் வந்தது..
"ஏன் மா வேணாம்னு சொல்ற??" என பாட்டி கேட்க
"இல்லை மா அது வந்து" என அவள் இழுக்க
"என்ன இதுவும் பிடிக்காதா என்ன நீ நல்ல பழங்களை எல்லாம் பிடிக்காதுன்னு சொல்லிட்டு இருக்க" என கடிவது போல பேச பாட்டியிடம் என்ன சொல்வது என தெரியாமல்," இல்ல பாட்டி எனக்கு அது பிடிக்காது அதனால தான்" என்று அவனை பார்த்து கொண்டே இழுக்க அவரோ ,"என்ன பிள்ளையோ என்னவோ இதோ பாருமா எங்க வேலை செய்ற யாரையுமே நாங்க வேலைக்காரர்களா பார்க்கறது கிடையாது இந்த வீட்ல ஒருத்தங்களா தான் பார்க்கிறோம்.. அதுனால என்ன இங்கே கொண்டு வந்தாலும் எல்லோருக்கும் சாப்பிட உரிமை இருக்கு ஒரு ஜூஸ் போட்டாலும் எல்லாரும் தான் சேர்ந்து குடிப்பாங்க ஒரு பழம் நறுக்கினாலும் எல்லாரும் சேர்ந்து தான் சாப்பிடுவாங்க நீ அதனால எல்லாம் கூச்சப்பட்டுட்டு சாப்பிடாம இருக்காத" என்று சாரதா கூறினார்..
"சரி பாட்டி" என அவள் கூற அவனோ அவளையே பார்த்து கொண்டு இருந்தான்...
அவளுக்கோ எல்லாம் இவனால் வந்தது இவன் செய்ததற்கு இப்போது நான் அனைவரிடமும் திட்டுவாங்க வேண்டி இருக்கிறது என்று நினைத்தாள்...
ஆனால் அவனும் அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தான்..ஆம் ஏனெனில் அன்னாசி ஜூஸும் பப்பாளி பழமும் அவளுடைய விருப்பமான பழங்கள் ஆகும்.. அவன் காதலிக்கும் பொழுது எங்கு பார்த்தாலும் அவள் பப்பாளி பழத்தை கண்டால் வாங்கி உண்டு விடுவாள் அதேபோல ஜூசும் அப்படித்தான் பைனாப்பிள் ஜூஸ் தான் எப்பொழுதும் ஆர்டர் செய்வாள் அப்படி இருக்க அவள் ஏன் மறுக்கிறாள் என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது...
அதை விட இந்த ஒரு வாரத்தில் அவன் கண்ட முக்கியமான விஷயம் அவள் எல்லா உணவையும் மறுத்துக்கொண்டே இருந்தாள் எதையோ யோசித்துக் கொண்டே இருப்பது போல அவனுக்கு தோன்றியது மிகவும் பாதுகாப்பாக பார்த்து பார்த்து உணவை உண்ணுவது போலவும் அவன் உணர்ந்தான் இது சரி இல்லையே என்பது போல அவனுக்கு தோன்றியது..
அவனோ அவளை கேள்வியாக பார்க்க அவளோ அவனின் பார்வையை தவிர்த்தாள் கண்மணி..
பிறகு விக்கி சிறிது நேரம் பேசிவிட்டு அவன் சென்று விட சாரதா தன் பேரனிடம்," நீ எப்பப்பா போற" என்று கேட்க
"இன்னும் ஒன் வீக் இங்கதான் பாட்டி இருப்பேன்" என்று கூற," ரொம்ப அதிசயம் நீ கிட்டத்தட்ட ஒரு வாரமா இங்கே தான் இருக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு இல்லனா வந்த ரெண்டாவது நாள் நீ ஓடி இருப்ப உனக்கு என்னதான் ஆச்சுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்" என்று கூற ,"அவனும் வேலை இருக்கு இல்ல பாட்டி நானும் இங்கே இல்லைன்னா கன்ஸ்ட்ரக்ஷன் வேலை அப்படியே பெண்டிங் ஆயிடுது" என்று கூற அதைக் கேட்ட பாட்டியும் ,"அதுவும் சரிதான்" என்று கூறினார்
ஆனால் பாட்டிக்கு தெரியாது அல்லவா கண்மணி கண்ட அதிர்ச்சியில் தான் தன் பேரன் இன்னும் இந்த இடத்தை விட்டு நகராமல் இருக்கிறான் என்று அப்படியே இரவும் ஆனது அனைவரும் உறங்க சென்ற சமயம் அந்த சமயம் தான் அவளுக்கு ஒரு ஞாபகம் வந்தது இன்றைய ரிப்போர்ட்டை அவனுக்கு சப்மிட் செய்யாமல் நினைத்து பார்த்தவள் வேகமாக ஓடி சென்று ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு அவனது அறை நோக்கி சென்றாள்..
அவளோ சமயம் பார்க்க 8:00 மணி தான் ஆகியிருந்தது அந்த வீட்டில் பாட்டி உறங்கும் சமயம் எட்டு மணி அதனால அனைவருமே 8 மணிக்கு அவர்களுடைய வேலை முடித்துக் கொண்டு உறங்கிக் கொள்ளலாம் என்று பாட்டி கூறியிருந்தார் அப்படி இருக்க அனைவருமே அவரவர் வேலையை முடித்ததும் சென்று இருக்க ரொம்ப சமயம் ஆகியிருந்தால் அவளோ போயிருக்க மாட்டாள் எட்டு மணி என்றதும் அவன் உறங்கி இருக்க வாய்ப்பில்லை என்று கருதி அவனுடைய அறையை தட்ட அவனும்," எஸ் கமிங்" என்று கூறியவன் கதவை திறந்தான்..
அங்கு அவளை கண்டதும் அவனோ என்ன என கேட்க அவளோ வாயை பிளந்தது போல நின்றாள் ஆம் அவன் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து ஏதோ மல்யுத்த வீரன் போல நின்று கொண்டு இருக்க ஒரே ஒரு நொடி அவளுக்கு மூச்சு அடைத்தது..
அவளின் பார்வையை பார்த்து,"என்ன" என்க
அவளோ தன் பார்வையை அவன் பக்கம் இருந்து மாற்றி,"உங்ககிட்ட ரிப்போர்ட் கொடுக்க மறந்துட்டேன்" என்று நீட்ட அவனும் மார்பில் கையை கட்டிக்கொண்டு அந்த ரிப்போட்டை வாங்காமலேயே இருந்தான் ,"இப்படித்தான் சப்மிட் பண்ணுவியா என்ன பண்ணி இருக்க ன்னு எக்ஸ்பிளைன் பண்ண மாட்டியா??" என்று கேட்க அவளோ," ஐயோ இது வேறயா" என்பது போல நிற்க அவனும் எதுவும் பேசாமல் போய் கட்டிலில் அமர்ந்து லேப்டாப்பை எடுத்து மடியில் வைத்து அமர்ந்து விட்டான்..
