இராட்சதன் 32
அத்தியாயம் : 32
அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை அவன் கூறியதை நடந்த சம்பவங்களிலிருந்து கூட அவள் வெளியே வந்து விட்டாள் ஆனால் இந்த அதிர்ச்சி அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.???? ஏன் உண்மையில் அவள் சந்தோஷம் தான் கொள்ள வேண்டும் ஆனால் அவளால் சந்தோஷிக்க முடியவில்லை!!
அவளின் அதிர்ச்சியை எல்லாம் காண அவனுக்கு சமயம் இல்லை..விசயத்தை கூறியதும் தன் வேலை முடிந்து விட்டது என்று என்னை பால்கனியில் நின்று புகை பிடித்துக் கொண்டிருக்கும் அவனை பார்த்து அவளுக்கு ஆத்திரம் வந்தது இவன் தன்னை என்ன என நினைத்து கொண்டு இருக்கிறான் என்னை எதற்காக இப்படி பாடாக படுத்துகிறான் தன் உணர்வுகளில் விளையாடுவதே இவனுக்கு வேலையாகி போய்விட்டதா என்று கருதிய அவளுக்கு ஆத்திரம் தாளாமல் நேராக அவனை நோக்கி சென்றவள் அவனுடைய மேலாடை இல்லாத அவனின் தேகத்தை தொட்டு திருப்பினாள் எந்த உணர்வும் அவளுக்கு அந்த நேரத்தில் எழவில்லை..
ஆம் ஆத்திரத்தின் உச்சியில் அவள் இருந்தாள்..அதனால் எந்த உணர்வும் இல்லாமல் அவனை திருப்பியவள் அப்போ ,"எதுவும் நடக்கல ரைட்" என அவளோ கேட்க
அவனோ,"ஆமாம்" என்க
அவ்வளவு தான் அவள் கண்ணில் கண்ணீர் வேகமாக சுரந்து," என்னை ஏன் இப்படி பண்ற?? அப்படி என்ன பண்ணிட்டேன் உனக்கு?? என்னோட அப்பா அண்ணா செஞ்சதுக்கு நான் என்ன பண்ணுவேன்?? ஏன் என்னை சாகவும் விட மாட்டேங்கிற, பிழைக்கவும் விட மாட்டேங்கிற?? இன்னும் என்னை என்ன செய்ய காத்துகிட்டு இருக்க??? உன்னால அவங்ககிட்ட அடி வாங்கி மிதி வாங்கி தப்பிச்சு வந்தா இங்கே நீ இருக்க?? இது எல்லாம் குழந்தைக்காக தான் நான் பண்ணினேன் இப்போ அந்த குழந்தையும் இல்லைன்னு சொல்ற???" என கூறியவள் தன்னை பைத்தியக்காரி ஆக்கி விட்டான் என்ற ஆத்திரத்தில் அவனுடைய மார்பிலேயே அழுது கொண்டே ஓங்கி அடிக்க துவங்கினாள்..
அவள் விடாமல் அடித்துக் கொண்டே இருக்கவும் அவனும் அப்படியே சிலை போல இருக்க அவளின் மன வலியை அவனை அடித்து அவள் அவளுடைய ஆத்திரத்தை தீர்த்து கொண்டாள்..அவனோ அவள் ஆவேஷபடுவதை பார்த்து அமைதியாக இருந்தான்..
என்ன இருந்தும் அந்த ஏமாற்றத்தை ஏற்று கொள்ள முடியவில்லை..அவள் பாட்டுக்கு ஆத்திரத்தில் நகத்தால் அவனின் மார்பை கீறி,"உன்னை மனசார காதலிச்சேன் நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை என்று நினைத்தேன் என் உயிர் கூட உனக்காகத்தான் போகணும்னு நினைச்சேன் நீ என்னை பழி வாங்கத்தான் இதை எல்லாம் செஞ்சேன்னு என்னால நினைச்சு கூட பார்க்க முடியல.. இதுக்கு காதல் அப்படிங்கிற பெயரை சொல்லாம நீ என்னை கொலை கூட பண்ணி இருக்கலாம்" என தேம்பி தேம்பி அவனை அவள் அடிக்க அவள் கீறியதால் அவளின் நககீரல்கள் அவனின் மார்பில் பதிய அது சிவந்து எரிச்சலை கொடுத்தாலும் அவளின் நகம் அவனின் மார்பில் பதிந்தாலும் அவன் அமைதியாக இருந்தான்..ஏனெனில் அவளின் கண்ணீர் அவனை தாக்கியதோ என்னவோ??? அவளின் வார்த்தைகளும் அவனை சுட்டதோ என்னவோ??? அவள் கூறுவது அனைத்தும் உண்மை தானே???
அவனால் அவளுடைய கேள்விகளுக்கு அப்படி என்ன பதில் கொடுத்து விட முடியும் கொடுக்க முடியாதே??? அண்ணன், அப்பா செய்த தவறுக்கு அவள் தானே பலி ஆகி இருக்கிறாள்??? என்பதை அவன் அறிவான்..
அன்று அவன் குடும்பத்துக்கு தண்டனை கொடுப்பதாக எண்ணி விட்டு அவன் அவளின் கற்பை மையப்படுத்தியே அவளின் குடும்பத்தை அசிங்கப்படுத்தி விட்டான்..அது தானே நித்தியாவிற்கு நடந்தது..அதை தானே திருப்பி அவளுடைய குடும்பத்துக்கு கொடுக்க வேண்டும் அதற்கான காட்சிகளையும் அவனே உருவாக்கி விட்டவனுக்கு அப்போது அது தவறென்று புரியவில்லை..
அவனுக்கு தேவை நித்தியாவுக்கு நியாயம் ஆனால் இப்போது அவளின் அழுகையை அவனால் பார்க்க முடியவில்லை என்று தான் கூற வேண்டும்..
அன்று ஒரு பெண்ணுக்காக இவளை கூறு போட்ட சூர்ய பிரகாஷ் இன்று அவளின் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் சிலை போல நின்று கொண்டிருந்தான்..
ஒரு பெண்ணின் கோபத்துக்கும் கண்ணீருக்கும் பதில் அளிக்க முடியாமல் தடுமாறி நின்றான்..ஆம் அவள் புலம்பி கொண்டே இருந்தாள் பார்க்கவே பாவமாக இருந்தது.. அவனுடைய மனமும் அந்த சிறு பெண்ணின் முன்னால் தோற்று கொண்டு இருந்தது அவன் செய்ததும் செய்ய நினைத்ததும் தவறு என்று அவனுக்கு நன்றாகவே தெரியும் ஆனால் அன்று இருந்த கோபம் இப்பொழுது இல்லை..
அதுதான் அவன் அவர்களை பழி வாங்கி விட்டானே அவன் கோபம் தணிந்து இருக்கத்தானே வேண்டும் என உள் மனம் குத்தினாலும் அவனால் அவன் செய்ததை எடுத்து அவள் ஒவ்வொன்றாக கத்தி போல அவன் மனதை கீரும் போது தாங்கி கொள்ள முடியவில்லை..
அவளின் குணமறிந்து அடுத்து அவள் என்ன செய்ய போகிறாள் என்பதையும் அவன் நேரமாக கணக்கிட்டு வைத்திருந்தான் இது எல்லாம் தான் அவள் அவனை அடித்து துன்புறுத்தும் போது யோசித்துக் கொண்டிருந்தான்.. அதுதான் அவள் அடிக்கும் பொழுதும் அவன் அமைதியாக இருக்க காரணமாக அமைந்தது..
ஒரு கட்டத்தில் அவளே அழுது அழுது அவனை அடித்து அடித்து கோபத்தை வடிய வைத்தவள் அவனுடைய மார்பிலேயே துவண்டு போக அவளிடம் அசைவில்லை..அவனுக்கோ அதிர்ச்சி.. அவள் மயங்கி இருந்தாள் அவளின் முழு உடலும் அவன் மீது சரிய அப்போது தான் நிலை பெற்றவனின் கரங்கள் அவள் இடையை தாங்கி அவளின் கன்னத்தை தட்டி பார்க்க அவளிடம் அசைவில்லை...உடனே பதறி அவளை தூக்கி கொண்டு போய் அவனின் படுக்கையில் படுக்க வைத்தான்..
பிறகு அருகே இருந்த ஜக்கில் இருந்த நீரை அவள் முகத்தில் தெளிக்க அவளோ மயக்கம் தெளிந்து கண்ணை திறந்து பார்க்க அவள் முகத்துக்கு நேரே அவளை கூர்ந்து ஆராய்ந்த படி அவன் இருக்க அவனை கண்டதும் அவளோ படபடப்போடு வேகமாக எழுந்தவள் அதிர்ந்து நிலை தடுமாற அவனோ," கவனம் " என்க
அவளோ,"என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்.. நீங்க பழிவாங்க தானே வந்திருக்கீங்க அந்த வேலை முடிஞ்சுச்சில்ல இனி நான் கிளம்பலாம்னு நினைக்கிறேன்..இப்போ உங்களுக்கும் எனக்கும் இடையில் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை..உங்க கை தொடாமலே என் ஊரார் மத்தியில் நான் உங்ககிட்ட கெட்டு போன பொண்ணு அப்படியே இருந்துட்டு போறேன்..இனி ஒரு நிமிஷம் கூட இந்த இடத்தில் நான் இருக்க மாட்டேன்.. நீங்க எனக்கு இதுவரை செய்ததே போதும்" என்று அவள் கூற அவனின் முகம் இறுகியது.. அவளை விட கூடாது என அவன் முடிவு செய்தான்..
அவளின் கோபத்தை கண்ட அவன் ,"உன்னால என்னை மீறி எங்கேயும் போக முடியாது.. உண்மையை சொன்னது தப்பா போயிடுச்சு போல வேணும்னா சொல்லு சொன்ன பொய்யை உண்மையாகிடுறேன் இல்ல சும்மாதான் கேட்கிறேன் நான் உன்னை தொட்டேன்னு சொல்லும்போது வந்த கோபத்தை விட நான் உன்னை தொடவே இல்லை என சொல்லும்போது கோபம் பொத்துக்கிட்டு வருது என்ன விஷயம் நான் தொடலேன்னு ரொம்ப ஏக்கமா இருக்கா சொல்லு எல்லாத்தையும் இப்பவே பண்ணிடலாம் எண்ணி மூணு மாசத்துல பிரக்னன்ட் ஆயிடுவ அப்போ இந்த கோபம் இருக்காது தானே" என்று அவன் அவள் விழிகளை பார்த்துக் கொண்டே சற்றும் அதிராமல் வார்த்தைகளை விட அதைக் கேட்டவள் திகைத்தாள்..
Currently viewing this thread 1 guest.
