Share:
Notifications
Clear all

இராட்சதன் 25

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 531
Thread starter  

அத்தியாயம் : 25

சாரதாவோ அந்த பெண்ணின் முகத்தை பார்க்கும் பொழுது நிர்மலமான சாந்தமான குணமுடைய பெண்ணாக கண்மணி முகம் தோன்றினாலும் இவர்களால் தானே விபத்து ஏற்பட்டது அவள் ஓடி வந்தது என்னவோ உண்மைதான் அவளாகத்தான் காரின் மீது மோதினாள் என்றாலும் அவளை துரத்தி வந்தது என்னமோ அவர்களின் வீட்டு நாய் தானே எப்படி பார்த்தாலும் அவளை பாதுகாக்க வேண்டியது தற்பொழுது அவருடைய கடமையாக அவருக்குப் பட்டது.. மேலும் அவளை அப்படியே அம்போ என விட்டு விட்டு செல்ல அவருக்கு மனம் இல்லை அதனால் அழைத்துச் சென்றார்...

அந்த இரு எஸ்ட்டேடின் நடுவே மிக பிரமாண்டமான ஒரு பளிங்கு நிறத்தில் ஒரு அரண்மனை போன்ற ஒரு வீடு இருந்தது..அந்த வீட்டுக்குள் கார் நுழைந்தது...

பிறகு அவளை தூக்கி கொண்டு அந்த வீட்டின் ஒரு அறையில் அவளை படுக்க வைத்தான் விக்னேஷ்..அவர் அவர்கள் புதிதாக ஊட்டியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்று கட்டப் போகிறார்கள் அதனுடைய இன்ஜினியர் தான் விக்னேஷ்.. சாரதாவின் குடும்பம் ஒரு தொழில் குடும்பம் பல்வேறு தொழில்களில் முதலீடுகள் செய்து அந்த ஊட்டியிலேயே அவர்களுக்கு என்று ஒரு பெயர் இருக்கிறது..

அப்படி இருக்க சாரதா அம்மா அவனிடம்," நம்ம டாக்டரை வரச்சொல்லு" என்க

அவனும் அழைக்க அவரும் வந்து அவளை பரிசோதனை செய்து விட்டு ,"ஒன்றும் இல்லை இலேசான அதிர்ச்சி தான் தூங்கி எழுந்தா சரியாகிடும்" என அவளின் தலையில் இருக்கும் காயத்திற்கு மருந்து போட்டுவிட்டு சென்றார்..

பிறகு சாரதா ,"அந்த பொண்ணு ரெஸ்ட் எடுக்கட்டும்" என கூறி வெளியே வந்து விட விக்னேஷும் சாரதா அம்மாவிடம் கூறி விட்டு விடை பெற்று  சென்று விட்டான்..

கிட்டத்தட்ட இரு மணி நேரத்திற்கு பிறகு கண் விழித்த கண்மணி எங்கிருக்கிறாள் என தெரியாமல் தடுமாறி கொண்டே எழுந்தவள் பதட்டப்பட்டு எழுந்து கொள்ள அவளின் அறையில் அரவம் கேட்டதும் ஒரு பெண் ஓடி வந்து," எழுந்துட்டிங்களா வாங்க உங்களை பாட்டி அம்மா வர சொல்றாங்க " என கூற, அவளோ குழம்பி கொண்டு அந்த பெண் பின்னால் செல்ல அந்த வீட்டின் தோட்டத்தில் இயற்கையின் அழகை ரசித்து கொண்டு வெண்ணிற புடவை உடுத்தி கம்பீரமாக அமர்ந்து இருந்தார் சாரதா ..

அவளை கண்டதும் ,"வா மா உட்கார்" என அன்பாக கூற அவளும் தயக்கத்தோடு அமர்ந்து கொள்ள ,"உன் பேர் என்ன???" என கேட்க

"கண்மணி" என்றாள்..

"இங்கே யார் வீட்டுக்கு வந்து இருக்க?? இப்போ எப்படி இருக்கு???" அவளோ குழம்பியபடி  பார்க்க," நீ என் கார் மேல தான் குதிச்ச" என கூற அவளை கண்டதும் அங்கு தூரத்தில் கட்டி வைக்கப்பட்டு நாய் இவளை கண்டதும் குரைக்க அந்த சத்தத்தை கேட்டதும் அவள் மிரண்டு திரும்பிப் பார்க்க, கூண்டுக்குள் அடைப்பட்ட சிங்கம் போல அந்த நாய் அதே நாய் தான் அவளை துரத்திக் கொண்டு வந்த நாய் அதை கண்டதும் அவள் மேலும் மிரண்டு போய் பதட்டத்தோடு எழுந்து நிற்க," பயப்படாதம்மா அது உன்ன ஒன்னும் பண்ணாது. உன்னை துரத்திட்டு வந்த நாய் என்னோட நாய் தான் நீ ஓடி வந்து என்னோட கார் மேல தான் மோதிட்ட அதனால உனக்கு லேசான தலைல காயமும் மயக்கமும் அடைஞ்சிட்ட நான் தான் மயக்கம் தெளியுற வரையும் என் வீட்ல ரெஸ்ட் எடுக்க வச்சேன் டாக்டர் வந்து செக் பண்ணிட்டு போயிட்டாங்க உனக்கு ஒன்னும் இல்ல சரியா "

"இப்ப சொல்லு உனக்கு எங்க போகணும்" என்று கேட்டார்

அவளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை எங்கு என்று சொல்வாள் ஊட்டி என்ற பெயரை தவிர வேறு எதுவும் அவளுக்கு இங்கு தெரியாதது அல்லவா அவளோ முழிக்க பெரியவர் அவளின் பதட்டத்தை பார்த்து ,"என்னம்மா சொல்லு" என்க

அவளோ ,"நான் இங்கே வேலை தேடி வந்து இருக்கேன்.." என்க

"சரி எங்கே வேலைக்கு போக போற??? எங்கிருந்து வர???" என அவர் கேள்விகள் கேட்க

அவளோ என்ன சொல்வாள் ஒருவன் ஏமாற்றியதால் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன் என்று கூறுவாளா??? அவளோ முழித்து ,"எனக்கு யாருமில்லை ... நான் இப்போதைக்கு அனாதை எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா என்று தேடி பார்க்க வந்தேன் நான் போறேன் உங்க உதவிக்கு நன்றி மா"  என அவள் கூற

அதை கேட்டவர் அவள் முகத்தை ஆராய அதில் ஒரு பதட்டம் இருப்பதை உணர்ந்தவர்," என்ன படிச்சு இருக்க" என்க

அவளோ," பி.காம்" என கூற அவரோ ,என்ன வேலை உனக்கு தெரியும்" என கேட்டார்

அவளுக்கோ எந்த வேலையும் தெரியாது இருந்தாலும் அவளோ," நான் வெளியே போய் எங்கேயாவது தேடிக்கிறேன் மா" என கூற அதை கேட்ட அவரோ," எங்கே போனாலும் நீ வேலை செஞ்சு தானே ஆகணும் அதுக்கு இங்கேயே வேலை செய் நான் இங்கே தனியா தான் இருக்கேன்.. இங்கே இருக்கிறவங்க எல்லாம் என்னோட வேலைக்காரங்க என் பசங்க பேர பசங்க எல்லாம் இருக்காங்க... அவங்க ஆளுக்கொரு தொழில் பார்த்துட்டு இருக்காங்க வருவாங்க இடையிடையே வருவாங்க மத்தபடி நான் மட்டும்தான் இங்கே இருக்கேன் எனக்கு இந்த இடத்தை விட்டு வேற எங்கேயும் போக பிடிக்கல..

இங்க கணக்கு வழக்கு பார்க்க ஒரு பொண்ணு வேணும்னு நானே நெனச்சிட்டு இருந்தேன் தேடிட்டு இருந்தேன் நல்லபடியா நீயும் வந்துட்ட நீ தான் பிகாம் படிச்சிருக்கியே அப்புறம் என்ன இந்த வேலை எல்லாம் செய்யலாம் தானே" என்று கேட்க

அவ்ளோ அதிர்ந்தாள்..அதிசயமாக இருந்தது... இவ்வளவு ஈசியாக வேலை கிடைக்கும் என அவள் எதிர்பார்க்கவில்லை. அவருக்கும் அவளுடைய முகத்தை பார்த்து அவருடைய அனுபவத்தை வைத்து அவள் முகத்தை அலசி ஆராய்ந்து பார்த்ததில் பாவமாகத்தான் அவருக்கும் தோன்றியதோ என்னவோ வேலை கொடுத்து விட்டார்...

"நீ இந்த வீட்டு கணக்கு வழக்கு பார்க்கிறேன் என்று சொல்லிட்டு வேறு எந்த வேலையும் செய்யாம இருந்தா எல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன் நான் சொல்ற வேலையெல்லாம் செய்யணும் புரியுதா" என்று கூற அவளோ தலையாட்ட," சரி இங்கே வேலை செய்றவங்க எல்லாரும் தங்கி இருக்காங்க அங்கே நீயும் தங்கிக்கோ" என்று கூற அதை கேட்ட அவளோ அவரை பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்..

எப்படியோ தப்பித்து விட்டோம் என அவள் எண்ணினால் அது அவளுடைய முட்டாள் தனமாக இருக்கும் ஆம் அவள் வந்து சேர்ந்து இருக்கும் இடம் சூர்யா எஸ்டேட் என்று இருக்கும் பட்சத்தில் அந்த எஸ்டேட்டின் பெயரை அவள் கவனிக்கவில்லை என்றாலும், அந்த சூர்யா எஸ்டேட் சாரதா பாட்டியின் பேர மகன் சூரிய பிரகாஷ் ஆக தானே இருக்க வேண்டும்???? பாவம் அவளுக்கு அதைப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான் நாளை காலையில் அவன் வந்து இறங்குவான் என்பதும் பாவம் அவளுக்கு தெரியாது நல்ல வேலையாக ஒரு பாதுகாப்பான இடத்தில் வந்து சேர்ந்து விட்டோம் என்ற மன நிம்மதியில் அவள் இருக்க ஆனால் அவளின் நிம்மதி இன்று இரவு மட்டும் தான் இருக்க போகிறது என அவளுக்கு அந்நேரம் தெரியவில்லை..

என்னதான் இருவரும் ஆளுக்கு ஒரு திசையில் பிரிய வேண்டும் என எண்ணினாலும் எல்லாம் முடிந்து விட்டது என எண்ணினாலும் கடவுள் அவர்களை மீண்டும் இணைக்க அவளை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறானோ என்னவோ தெரியவில்லை!!!



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top