இராட்சதன் 27
அத்தியாயம் : 27
அவன் சென்றதும் அவளை பார்த்த சாரதா ,"அவன் அப்படி தான் மா நீ ஒன்னும் கவலை படாதே.. கொஞ்சம் கோபக்காரன் என் மேல இருக்கிற பாசத்தினால அவன் பேசுறான் மற்றபடி அவன் நல்லவன் தான்.." என்று அவர் அவளை சமாதானம் செய்ய அது எல்லாம் எங்கே அவளுடைய காதில் விழுந்தது அவளுக்கோ அதிர்ச்சி தாளவில்லை...
என்ன இவன் அவளை வாழவே விடக்கூடாது என்ற முடிவில் இருக்கிறானா ஒரு வயதான பெண்மணி அவளின் நிலை கருதி அவளுக்கு ஒரு வேலை போட்டு தங்க இடம் கொடுத்து அவளுக்கென்று ஒரு வாழ்க்கையை கொடுத்தால் அதைக் கெடுக்க இவன் நினைக்கிறானோ என்று கோபம் அவளுக்கு வந்தது..
ஏன் இவன் தான் செல்லும் இடமெல்லாம் சுற்றி வந்து தன்னை தொல்லை செய்கிறான் அவள் வாழவே கூடாது என நினைத்து விட்டானா தவறு செய்தது அவளுடைய அப்பாவும் அண்ணனும் தான் அவள் என்ன தவறு செய்தாள் என்று நினைக்கும் பொழுது அவளுக்கு கோபமாக வந்தது..
அவன் மீது அவ்வளவு ஆத்திரமாக வந்தது இவன் முன்னிலையில் இப்படி இருக்கக் கூடாது வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வெறி அவளுக்கு வந்தது அதுவரை அவள் என்ன நினைத்தாலோ தெரியவில்லை ஆனால் இவன் பேசிய பேச்சுக்கு இங்கே தான் இருக்க வேண்டும் என முடிவு செய்தாள்..
இவன் உரிமையாக சாரதா அம்மாவிடம் பேசுவதை பார்த்தால் இவன் அடிக்கடி இங்கு வருபவன் போல தான் அவளுக்கு தோன்றியது..அதனால் அவனிடம் இதை பற்றி பேசியே ஆக வேண்டும் என்று கருதிய அவள் அவ்விடம் விட்டு நகர்ந்து சென்றாள்...
அவளுக்கு மன அமைதிக்கு வேண்டி வீட்டுக்கு பின் பக்கமாக இருக்கும் தோட்டத்திற்கு சென்றாள்..
முன்பக்கம் சென்றால் அங்கு அந்த நாய் இருக்கும் அதை கண்டாலே அவளுக்கு பயம் அதனால் பின் பக்கமாகவும் நின்று கொள்ள அதற்கும் நிம்மதி இல்லை என்பது போல அவன் வந்து நின்றான்..
கம்பீரமாக அவன் மார்பில் கையை கட்டிக் கொண்டு அவளுக்கு எதிரே வந்து நிற்க அவளோ அதிர்ந்தாள்..
அவன் வந்து அருகே நிற்கவும் அவளோ ஒரு நொடியில் அவன் பார்வையில் பயந்து ஒரு அடி விலகி நிற்க," என்ன பழி வாங்க வந்து இருக்கியா??? "என கேட்டான் அவன்.. அதைக் கேட்டதும் அவளுக்கு கோபம் வந்தது..
"அது என்னோட பழக்கம் இல்லை.. பழிவாங்கறவங்களுக்கு தான் அந்த புத்தி இருக்கும் எனக்கு கிடையாது" என அவளும் சூடாக தான் பதில் கொடுத்தாள்..அவளுக்கு அவ்வளவு கோபம் இருந்தது..
அப்படி இருக்க அவளின் பதில் தன்னை குத்துவது போல இருக்க அவனோ கடுப்பாக ,"அப்போ எதுக்கு இங்கே வந்து இருக்க??"
"அது உங்களுக்கு தெரிய தேவை இல்லை???" என்றாள் ..
"எனக்கு தெரியாம வேற யாருக்கு தெரியணும்"என அவன் கடுப்பாக கேட்டான்..
பிறகு அவளுடைய சமநிலை போனது.." ஏங்க ஏன் நான் உயிர் வாழவே கூடாதுன்னு நினைச்சிட்டு இருக்கீங்களா நான் இங்கே வேலை தேடி வந்தேன்..இந்த வீட்டு எஜமானி வேலை போட்டு கொடுத்து இருக்காங்க அது உங்களுக்கு பிடிக்கலையா???
ஏன் இப்படி என்னை தொல்லை பண்ணவே நீங்க வந்து இருக்கீங்களா??? எனக்கும் உயிர் வாழனும்ங்க என்னை ஏமாத்திட்டு போயிட்டாங்கன்னு என்னை சாக சொல்றீங்களா ??? வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன்..போக்கிடம் இல்லை...வாழ இடம் இல்லாமல் தான் இங்கே வந்தேன்.. தயவு செஞ்சு என்னை வாழ விடுங்க..
அவங்க பெரிய மனசு பண்ணி இங்கே வேலை போட்டு கொடுத்து இங்கேயே தங்கிக்க சொல்லி இருக்காங்க அது உங்களுக்கு பிடிக்கலையா??? ஏன் இப்படி அவர்களை தூண்டி விடுறீங்க நான் என்ன உங்க வீட்லயா வேலைக்கு வந்து இருக்கேன் யாரோ ஒருத்தவங்க வீட்டுல தானே வேலைக்கு வந்து இருக்கேன் அது கூட உங்களுக்கு பிடிக்கலையா??? ஏன் இப்படி பழி வெறில இருக்கீங்க??
அது தான் எல்லாம் முடிஞ்சதுன்னு சொல்லி கிளம்பிட்டீங்களே அப்புறம் என்ன நானாவது எங்கேயாவது வாழ்ந்துட்டு போறேன் இது நீங்க வந்துட்டு போற இடம்னு எனக்கு தெரியாது தெரிஞ்சிருந்தா திரும்பி கூட பார்த்திருக்க மாட்டேன்..
நீங்கதான் பழி வாங்கறேன்னு சொல்லி என்னோட வாழ்க்கையை அழித்துவிட்டீர்கள் தயவு செய்து அதே பழி வாங்குற புத்தியை இங்கேயும் காட்டிடாதீங்க உங்களுக்கு அப்படி பிடிக்கலைன்னா நான் எங்கேயாவது போய்க்கிறேன் தயவு செஞ்சு சொல்றேன் இந்த வேலையும் கெடுத்து என்னை நடுத்தெருவில நிறுத்திடாதீங்க" என்று கையெடுத்து கும்பிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள்..
அவள் பேசியதை வைத்து கேட்ட அவனுக்கு தெளிவாக புரிந்தது..அவள் வீட்டை விட்டு வந்து விட்டாள் என்று அதை உறுதி செய்து கொள்ள ரத்தினம் அவரை அழைக்க அவரும் காதும் காதும் வைத்தது போல விசாரித்ததில் அவள் வீட்டில் இல்லை என்பது புரிய அவனோ இது என்ன??? என்பது போல தலையை நீவினான்...
இவர்கள் வாழ்க்கை முடிந்து விட்டது இனி இவர்கள் இருவரும் சந்திக்க மாட்டார்கள் என இருவரும் நினைத்து இருக்கும் வேலையில் மீண்டும் மீண்டும் கடவுள் அவர்களை இணைப்பதின் அர்த்தம் என்ன??
அவனிடம் என்னவோ வீரவசனம் பேசிவிட்டு வந்து விட்டாள் பிறகுதான் அவளுக்கு ஒரு உண்மையே தெரியவந்தது..ஆம் அவன் வந்திருக்கிறான் என தடபுடல் விருந்து தயாராகிக் கொண்டிருக்க,
அடுக்களையில் வேலை செய்யும் பெண்ணோ அவளைப் பார்த்து ,"சூர்யா சாருக்கு மீன் இல்லாமல் சாப்பிட மாட்டார் அப்புறம் பாட்டிமா சத்தம் போடுவாங்க" என பரபரப்பாக பேசி கொண்டு இருக்க இவ்ளோ அவனிடம் சத்தம் போட்டு விட்டு கோபத்தோடு அடுக்கலைக்குள் வர அவளை கண்டதும் வேலை செய்யும் பெண் ஒருத்தி ,"சூர்யா சாருக்கு இந்த ஜூசை கொண்டு போய் கொடுத்துடுங்க.. அவர் டீ குடிக்கலைன்னு பாட்டி அம்மா இப்பதான் சொல்லிட்டு போனாங்க ஜூஸ் கொடுக்க சொன்னாங்க" என்று கூற அவளோ இவனுக்கு எதுக்கு இந்த மரியாதை என்பது போல யோசித்தாள்..
அந்த பெண்ணோ ,"போங்க சீக்கிரம் சாருக்கு கோபம் வந்திட போகுது" என்று கூற
"எதுக்கு இப்படி அவருக்கு பயப்படுறீங்க??" என்று கேட்க
"சம்பளம் குடுக்குற முதலாளியை பார்த்தா பயப்பட வேண்டாமா???" என்று கேட்கவும் அவளோ அதிர்ந்தாள்
"என்ன சொல்றீங்க.??"என அவள் அதிர்ந்து கேட்டாள்..
"பாட்டிமாவோட பேரன் அவரு.. என்னதான் பாட்டிமா நம்மளை எல்லாம் வேலைக்கு வைத்திருந்தாலும் அவருதான் நமக்கு முதலாளி மாதிரி.. அவர்தான் இங்கே எல்லா விஷயத்தையும் பார்த்துக்கிறார் வாரத்துல நாலு நாளாவது இங்கே இருப்பார் மத்த மூணு நாள் வெளியூர்ல இருப்பார்" என்று கூறவும் அவளுக்கு மயக்கம் வராத குறை தான் ஏற்பட்டது ஐயோ கடவுளே இது வேறயா அவனிடம் பேரு வீர வசனம் எல்லாம் பேசி வந்து விட்டோமே. இப்போ என்ன செய்வது இது அவனுடைய வீடா அவன் வீட்டில் வந்து சிக்கிவிட்டோம் என்று அவளோ முழித்தாள்..
