Share:
Notifications
Clear all

இராட்சதன் 29

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 531
Thread starter  

அத்தியாயம் : 29

"அப்படி நான் சொல்லல கண்ணா" என்று கூற பாட்டி ,"இங்கே யார் இருக்கணும் யார் இருக்க கூடாதுன்னு எனக்கு நல்லா தெரியும் எனக்கு இவ மேல சந்தேகமா இருக்கு அதனால இவ இங்கே இருந்து போகக்கூடாது இங்கே தான் இருக்கணும் புரியுதா இப்ப என்ன வேலை கொடுத்து இருக்கீங்களோ அந்த வேலை அவ செய்யட்டும் மத்ததை நான் பார்த்துக்குறேன்" என்று அவன் கூற அதை கேட்ட பாட்டியோ," சரி ப்பா" என்றவர் அவளை பார்த்து," என் பேரன் சொன்னது போல செய்மா" என்று கூறினார்..

பிறகு அங்கு அதிர்ந்த முகத்தோடு நிற்கும் அவளை பார்த்து அழுத்தமாக பார்த்தவன் ,"உன்னோட சர்டிபிகேட்ஸ் எல்லாம் எடுத்துட்டு என்னோட ரூமுக்கு வா" என்று கூறிவிட்டு அவன் சென்று விட்டான்...

அவளுக்கு மேலும் அதிர்ச்சி தான் ஆனது இவன் என்ன என்னை நினைத்துக் கொண்டிருக்கிறான் என்ன வார்த்தை பேசுகிறான் நான் என்ன இவன் வீட்டில் வந்து திருட வந்திருக்கிறேனா அதுபோல பேசுகிறான் என்று நினைத்தவள் நேராக அவனுடைய அறை நோக்கி சென்றாள்...

அங்கு அவன் பாயும் புலி போல அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்க அவளும் கோபத்தோடு அவனுடைய அறை நோக்கி சென்றவள்," உங்க மனசுக்குள்ள என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க விலகி போறேன்னு சொன்னாலும் விடாம இருக்கீங்க நான் என்ன திருடியா உங்க வீட்ல திருட வந்திருக்கேனா ரொம்ப சந்தேகமா இருக்குன்னு சொல்றீங்க??" என்று அவள் கேட்க அவனும் அவள் நுழைந்ததுமே படப்படவென புரிய அவன் எதுவும் பேசாமல் கதவை பட்டென அடைக்கவும் அவளுடைய வாய் தானாக மூடி கொண்டது..

பிறகு அவளோ சுற்றி பார்க்க அங்கு யாரும் இல்லை அவனும் அவளும் மட்டும் தான் இருக்க அவளுக்கு ஏதேதோ ஞாபகங்கள் வந்து போனது.. அது அவளுக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும் வெட்கம் கெட்ட மனது கண்டதை எண்ணி வேகமாக அவளுடைய முகம் முதல் உடல் வரை சூடானது..

அவளோ இதற்கு மேல் இங்கு இருந்தால் சரி வராது என்று எண்ணி பயந்து ,"நான் போறேன்" என்று கூற ,"என்னமோ பேசுன திரும்ப சொல்லு" என்று அவன் தெனாவட்டாக கேட்டான்... அவளின் பயத்தை பார்த்த அவனுக்கு அப்போதுதான் திருப்தியே வந்ததோ என்னவோ!!

அவளோ அமைதியாக இருக்க அவனோ அவளை நோக்கி ஒரு அடி நகர அவளோ பின்னோக்கி நகர்ந்தாள்..அதை கண்டவன் இளக்காரமாக அவளை பார்க்க ,"என்னை விடுங்க நான் போறேன்" என்க

அவனோ ,"உன்னை விட்டு இருப்பேன் நீ இங்கே வராமல் இருந்திருந்தால் இனி உன்னை விடற எண்ணம் எனக்கு இல்ல" என்று அவன் கூற,

அவளோ முழிக்க அவனோ மேலும் அவள் அருகே வந்து நின்றவன் ,"உன்னை விட்டு இருப்பேன் நீ என்கிட்ட வந்து பக்கம் பக்கமா பேசாம இருந்திருந்தா இதோ என் முன்னாடி வந்து நின்னு திமிரா பேசாம இருந்திருந்தா உன்னை விட்டிருப்பேன் இனி உன்னை விட மாட்டேன் போய் வேலையை பார் இங்கே ஏன் தான் வந்தோம்னு நாளுக்கு நாள் நீ யோசிப்ப நான் இருக்க இடத்தில் உன்னால் இருக்க முடியாது தானே சொன்னேன் இனி நான் இருக்கிற இடத்தில் மட்டும் தான் நீ இருப்ப பார்க்கலாமா" என்றான்

அதற்கு அவளோ ,"நான் உங்க வார்த்தையை மீறி இந்த வீட்டை விட்டு வெளியே போனா என்ன செய்வீங்க என்ன மிரட்டி பார்க்குறீங்களா??" என்க

"முடிஞ்சா போய் பார்" என்று கூறியவன் அவளிடம் இருந்து விலகி லேசாக ஜன்னல் கதவை திறக்க அப்போது அவன் வளர்க்கும் ஜாக்கி நாய் அலரும் சத்தம் கேட்டது.. அதை கேட்டு அவள் பயந்து காதை பொத்த அவனோ நக்கல் பார்வையோடு," கேள்விப்பட்டேன் நாய் துரத்திட்டு வந்துச்சாமே நான் தலையை மட்டும் அசைச்சா போதும் உன் தல உன்னுடைய உடம்பில் இருக்காது புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன் இந்த வீட்டு ஆளுங்க இல்லாமல் தனியா நீ வீட்டை விட்டு கால் வெளியே வச்சா போதும் அதுக்கப்புறம் அடுத்த அடி வைக்கிறதுக்கு நீ உயிரோட இருக்க மாட்ட" என்று மிரட்ட அவளுக்கு மேலும் பீதியாகியது..

அவன் முன்னால் தைரியமாக இருக்க வேண்டும் என்று கருதி அதை இது என பேசுகிறாள் என்றாலும் அவள் அப்படி ஒன்றும் தைரியசாலி இல்லை தைரியத்தை வரவழைத்துக் கொண்டிருக்கிறாள் என்று தான் கூற வேண்டும் அப்படி இருக்க இவன் நாயை வைத்து கடிக்க வைப்பேன் என்று கூறுகிறானே என அதிர்ச்சி தான் அவளுக்கு வந்தது.. எதற்கும் பொறுமையாக தான் இவனை கையாள வேண்டும் இவன் எப்படிப்பட்டவன் தெரிந்தும் இவ்விடம் போய் கோபமாக பேசி விட்டோமே என்று அவள் நினைக்காமலும் இல்லை..

அவளின் அமைதியை கண்ட அவனும் ,"இனி வீட்டை விட்டு வெளியே போக மாட்டேன் என்று நினைக்கிறேன் சரி ரெடியாகு போலாம்" என்று கேட்க கூற அவளோ எங்கே என்றாள்

அழுத்தமாக அவளைப் பார்த்து ,"எங்கே என்று சொன்னாதான் வருவியா கிளம்பு" என்று கூறியவன் அடுத்த பத்தாவது நிமிடம் அவளை அழைத்துக் கொண்டு அவன் கட்டிக் கொண்டிருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் கட்டுமான பணி நடக்கும் இடத்திற்கு சென்றான்.. பயணத்தின் போதெல்லாம் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை இருவரும் ஆளுக்கு ஒரு எண்ணத்தில் பயணம் செய்தனர்..

அங்கு விக்னேஷ் போனில் பேசிக் கொண்டிருக்க இவனுடைய கார் சத்தத்தை கேட்டதும் வேகமாக ஃபோனை அணைத்து விட்டான்..

அவனும் நேற்று ஒரு பெண்ணை சந்தித்தான் அந்த பெண்ணிடம் தான் கதை பேசி கொண்டு இருந்தான்..இன்று காலையில் கூட அவளை பார்க்க தான் சென்று இருந்தான்..ஆனால் அவன் வர லேட்டாகி விட்டது..

இன்று இவன் வருவான் என தெரியாது அதனால் கொஞ்சம் அசால்ட்டாக இருந்து விட்டான் சைட்டுக்கு வந்த பிறகு வேலையாட்கள் சூரிய பிரகாஷ் வந்துவிட்டு சென்றான் என்ற கதையை கேட்டது முதல் சற்று கலக்கமாகத்தான் இருந்தான்..

" இதோ வந்து விட்டானே இனி வாயில வந்ததையெல்லாம் பேசுவானே அதை வேற கேட்டே ஆகணுமே" என எண்ணி போனை அணைத்துக் கொண்டு வேகமாக சூரிய பிரகாஷ் அருகே ஓட சூரிய பிரகாஷ் அவளை," இறங்கு அதுக்கு வேற ஒரு ஆள் சொல்லனுமா" என்று கூற அவளோ எங்கு வந்து இருக்கிறோம் என தெரியாததால் முழித்து கொண்டு இறங்கினாள்..

"வா மச்சான்" என்று விக்னேஷ் கூற அவனைப் பார்த்து முறைத்த சூரிய பிரகாஷ் ,"இதுதான் நீ வேலை செய்ற லட்சணமா??" என்று கேட்க விக்னேஷ் ,"இல்ல மச்சான் அது வந்து" என்று கூற ,"வாயை மூடு இனி என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது என்னை மூணு மாசத்துக்குள்ள இங்க பில்டிங் முடிஞ்சிருக்கணும்" என்று கூறியவன் அவனுக்கு பின்னால் நிற்கும் அவளை பார்த்து ,"இது கண்மணி" என்று கூற விக்னேஷ் அவளைப் பார்த்து தன்னுடைய மொத்த பல்லும் வெளியே தெரியும்படி சிரித்து,"எனக்கு தான் நேத்தே தெரியுமே" என்று அவன் கூறினான்..

அதைக் கேட்டவன் மேலும் கடுப்பாகி ,"இங்கே என்ன வேலை தினமும் நடக்குது என்ன வேலை நடக்கல அப்படின்னு எனக்கு இனி கண்மணி தான் அப்டேட் பண்ண போறாங்க" என கூற அதை கேட்ட அவனோ ,"அப்போ இவங்க தினமும் இங்கே வருவாங்களா?? அப்போ நான் 24 ஹவர்ஸ் இங்கேயே இருப்பேன் மச்சான்" என ஆசையாக கேட்க

அவனோ," ஏன்" என முறைக்க

"இல்லை சும்மா பேசிட்டு இருக்கலாமேன்னு கேட்டேன்" என விக்னேஷ் கூற

சூரிய பிரகாஷ் அவனைப் பார்த்து ,"அவ கூட நானும் வருவேன்" என்று கூற அதைக் கேட்ட அவனும் ,"அதுக்கு நீ அவங்கள அனுப்பாமலே இருக்கலாம்" என்று முனகிக்கொண்டே கூறினான்..

அது யாருக்கு கேட்டதோ இல்லையோ தெளிவாக கண்மணிக்கு கேட்க ஏனோ இறுக்கமாக இருந்த மனநிலை விக்னேஷ் இப்படி பேசவும் தளர்வது போல இருந்தது.. அதனால் அவள் லேசாக புன்னகைக்க அது சூரிய பிரகாஷ் காதில் புகையை வர வைத்தது என்று தான் கூற வேண்டும்..

தன்னிடம் பேசும்போது அவ்வளவு திமிராக பேசியவள் இதோ இப்போது சிரிக்கிறாளே இவள் சிரித்து அவன் பார்த்து எவ்வளவோ நாளாகியது போல அவனுக்கு தோன்றியது..

அவன் அவளை காதலித்தது நடிப்புதான் என்றாலும் ஏனோ அவளின் சிரிப்பை அவன் மறக்கவில்லை என்று தான் கூற வேண்டும் அப்படி இருக்க விக்னேஷ் ஏதோ பேசியதும் அவள் சிரித்தது அவனுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை..

அதனால் விக்னேஷ் அந்த பக்கம் சென்றதும் ,"அடுத்த ஆள் கிடைத்துவிட்டான் போல இந்த வேலையெல்லாம் இங்க நடக்கக்கூடாது புரியுதா இந்த கண்ணை காட்டி மயக்கிறது சிரிச்சு மயக்குற வேலையெல்லாம் இங்கே கூடாது உனக்கு என்ன வேலையோ அதை மட்டும்தான் நீ செய்யற புரியுதா தேவையில்லாத ஏதாவது இங்கே நடந்துச்சு அவ்வளவுதான்" என்று அவளை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றான்..

அவனுடைய பார்வையும் அவனுடைய வார்த்தையும் அவளுக்கு மேலும் வலியை தான் கொடுத்தது..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top