இராட்சதன் 24
அத்தியாயம் : 24
பஸ் எங்கு செல்கிறது என தெரியாது இரவோடு இரவாக தன்னந்தனியாக எந்த தைரியத்தில் அவள் வீட்டை விட்டு வெளியே வந்தால் என்ன தெரியவில்லை.. எங்கு செல்ல போகிறாள் என தெரியவில்லை..
தாய்க்கு செய்து கொடுத்த சத்தியம் அவளை முன்னேறி செல்ல தூண்டுகிறது...ஆம் அவளுடைய அம்மா அப்படி தான் அவளிடம் சத்தியம் வாங்கினார்... "கண்மணி உன்னை இங்கு இருந்து அனுப்ப எனக்கு மனசு இல்ல ஆனால் நீயும் சரி உன் வயிற்றில் வளர குழந்தையும் சரி உயிரோடு இருக்கணும்னா நீ இங்கே இருந்து போறது தவிர வேறு வழி இல்லை சாவி எதுக்கும் தீர்வு கிடையாது நித்யா செஞ்ச தப்ப நீ செய்ய மாட்டேன்னு நான் நினைக்கிறேன் இங்கே என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்குறேன்.. ஒரு நல்ல இடத்துக்கு போனதும் நீ அம்மாவுக்கு கூப்பிட்டு சொல்லு .." என்று கூறி அவளிடம் சத்தியம் வாங்க அவளும் தயங்கி தயங்கி சத்தியம் செய்தவளுக்கு அந்த இடத்திலிருந்து போக மனம் இல்லை என்றாலும் அவளுடைய வயிற்றில் வளரும் குழந்தை நலனை நினைத்துப் பார்த்து அங்கிருந்து கிளம்பினாள்...
யாருக்காக இல்லை என்றாலும் அவளுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்காக அவள் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்..
குழந்தை என்ற ஒன்று இல்லை என்றால் அவள் அவளுடைய அண்ணன் மற்றும் தகப்பனார் கையிலே இறந்து போயிருப்பாலோ என்னவோ ஆனால் அவளுடைய உதிரம் அவள் வயிற்றில் இருக்கும் பொழுது எப்படி அவளால் அக்குழந்தையை அவளோடு சேர்த்து அந்த குழந்தையின் உயிரை கூட மாய்த்துக்கொள்ள முடிவு செய்ய முடியும் அதனால் அவள் தன் தாய் கூறியதும் அவள் வந்து விட்டாள்..
மனமே இல்லாமல் தான் அவள் வந்தாள்...அவளுடைய உடல் அவ்வளவு வலித்தது...மனமும் தான்...
அந்த பஸ் வேகமாக செல்ல ஏதேதோ எண்ணங்கள் வந்து போனாலும் அவளின் உடலின் அயர்வு காரணமாக அவளும் கண்ணை மூடி படுத்து கொண்டாள் கண்மணி...
அழகாக அந்த பஸ் காலையில் ஊட்டியில் போய் நின்றது.. பஸ் நின்றதும் தான் அவள் கண் விழிக்க எங்கே வந்து இருக்கிறோம் என பார்க்க உதகை அன்புடன் வரவேற்கிறது என்ற பெயர் பலகை வைக்கப்பட்டு இருக்க அப்போதுதான் அவள் ஊட்டிக்கா வந்திருக்கோம் என்று நினைத்தாள்...
உதகையின் குளுமை அவளுடைய முகத்தில் பட்டு அவளை முகத்தை இலேசாக உனக்கு நான் இருக்கிறேன் என்பது போல வருடியது..அதுமட்டுமின்றி அவளுக்கு என்று ஒரு ஜீவன் அவள் வயிற்றுக்குள் இருக்கிறது அவளுக்காக இருக்கிறது என்ற தைரியமே அவளை மேற்கொண்டு வாழ வேண்டும் என்ற உந்துதலை கொடுத்தது...
அவள் செய்வது சரியா தவறா என தெரியவில்லை..அவள் எந்த தைரியத்தில் இங்கு வந்தாள் என அவளுக்கு தெரியாது ஆனாலும் வந்து விட்டாள் பஸ் நிற்கவும் பஸ்ஸில் இருந்து இறங்கிய அவள் இங்கு செல்வது என தெரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தாள்..
அனைவரும் அவளை ஒரு மாதிரி பார்ப்பது போல இருக்க கால் போன திக்கில் நடக்க ஆரம்பித்தாள்.. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலாக அவள் நடந்து விட்டாள்..
அவள் மனம் முழுவதும் அவளுடைய அம்மாவை பற்றி தான் பாவம் வீட்டை விட்டு எங்கேயும் வெளியே போனதில்லை அப்பா சொல்வது தான் வேதவாக்கு என்பது போல வாழ்ந்து விட்டார் ஆனால் என்ன தைரியத்தில் தன்னை வீட்டை விட்டு அனுப்பி வைத்தார் என அவளுக்கே தெரியவில்லை..
அதே நேரம் விடியற்காலையில் அவளை காணவில்லை என்ற செய்தி கேட்டதும் உலகநாதன் தன் மனைவி காவிரியை அடி வெளுத்து விட்டார்.. "பொட்ட புள்ள வீட்டை விட்டு வெளியே போனதும் கூட தெரியாமல் இருக்கியா எங்கடி போய் இருக்கா உனக்கு தெரியாம அவ எங்கேயும் போயிருக்க மாட்டா" என்று அவர் கூற,
அவரோ அவர் அடுத்த அடியில் லேசாக பதட்டம் கொண்டாலும் மகள் எங்கேயாவது நன்றாக இருக்கட்டும் என்ற எண்ணத்தில்," அவ எங்கே போய் இருக்கான்னு எனக்கு தெரியாது" என்க
தினகரனும்," அப்பா இது எல்லாம் பார்த்தா எனக்கு ஒன்னும் சரியா வரல இதுக்கெல்லாம் காரணம் அவனாக இருக்க கூட வாய்ப்பு இருக்கு.. சனியன் போனது தான் போச்சு இனி வீட்டுக்குள்ள விடக்கூடாது" என்க
"மடையா இனிதான் அவ இங்கே இருக்கணும் ஒரு தடவை காணாமல் போனதுக்கே இவ்வளவு அசிங்கப்பட்டு இருக்கேன் இப்போ மறுபடிம் அவ காணாமல் போன விஷயம் தெரிஞ்சது அவ்வளவுதான் அவ எங்கே இருந்தாலும் சரி அவளைத் தேடி கண்டுபிடித்துக் கொல்லாமல் நான் விடமாட்டேன்.. அவளைக் கொன்னாத்தான் இந்த ஊர்ல எனக்கு மரியாதை கிடைக்கும்"என்றவர் தன் மனைவி ஒரு பார்வை பார்த்து ,"அவ வர வரைக்கும் உன்னை நான் சும்மா விட மாட்டேன்"என்று கொந்தளித்து பேசிவிட்டு சென்றார் உலகநாதன்..
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை அவளுடைய போட்டோவை கொடுத்து தேடச் சொல்லுமாறு தினகரனிடம் உத்தரவிட்டார் உலகநாதன்...
அதே சமயம் கண்மணி நடந்து கொண்டிருந்த ரோட்டில் இரு பக்கமும் ரோடு பிரிய அவளுக்கு எங்கு செல்வது என தெரியவில்லை என்றாலும் நேராக அவள் நடந்தால் அது ஏதோ மலை முகட்டில் நடப்பது போல மலை மீது ஏறுவது போல ஒரு உணர்வை அவளுக்கு கொடுத்தது சுற்றிப் பார்க்க, இரு பக்கமும் பச்சை கம்பளத்தை போர்த்தியது போல தேயிலை எஸ்டேட் நிறைந்து இருந்தது..
அந்த எஸ்டேட்டின் நடுவே தெரியும் குறுகலான ரோட்டில் நடந்து கொண்டு இருந்தாள் மலை போல தான் அவளுக்கும் தோன்றியது மலை மீது ஏறும் உணர்வை அவளுக்கு அந்த குறுகலான ரோடு கொடுக்க , அந்த சமயம் பார்த்து தூரத்திலிருந்து வெறித்தனமாக ஒரு நாய் ஓடி வந்தது அந்த நாயின் உயரமே அவளுடைய உயரத்தை விட அதிகமாக இருக்கும்...
அந்த நாய் ஓடி வர இவள் எதிரே வரவும் நாய் இவளை நோக்கி பாய்ந்து வர இவளோ அரண்டு விட்டாள்..வேகமாக தன்னை அந்த நாயிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள அந்த இடத்தை விட்டு அவள் பின்னோக்கி ஓடினாள்.. நாயோ வெகு வேகமாக ஓடி வர இவளோ உயிர் பயத்தில் ஓடி வர எதிரே என்ன வருகிறது ஏது வருகிறது என எதுவுமே அவளுக்கு தெரியவில்லை.. நாயோ இவள் ஓடுவதைப் பார்த்ததும் பின்னாலேயே பாய்ந்து வந்தது...
நேராக அவள் பயத்தில் எதிரே வந்த காரின் மீது மோத மோதிய வேகத்தில் காரின் முன் பக்கத்தில் அவள் விழ தூக்கி அடிக்கபட்டாள்...விழுந்து அந்த அதிர்ச்சியில் அவள் மயங்கிவிட்டாள்..
தீடிர் என்று கார் மீது ஒரு பெண் மோதவும் கார் ஓட்டிக் கொண்டிருந்த விக்னேஷ் அதிர்ந்தான்..
அவன் அருகே அமர்ந்து கொண்டிருந்த அந்த இரு பக்க எஸ்டேட்டின் உரிமையாளரான திருமதி சாரதாவும் அதிர்ந்து," என்னப்பா சீக்கிரம் போய் பாரு அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு அது நம்ம ஜாக்கி தானே" என்று ஓடி வந்து கொண்டிருந்த நாயை பார்த்து கேட்க ,ஆமாம் பாட்டி ம்மா" என்று விக்னேஷ் கூறினான்..
உடனே படபடப்பாக விக்னேஷ் காரில் இருந்து இறங்க கூடவே சாரதாவும் இருங்க சாரதாவை கண்டதும் அவ்வளவு ஆவேசத்தில் ஓடி வந்த நாய் அப்படியே சடன் பிரேக் போட்டது போல நின்றது..
"உனக்கு இங்க என்னடா வேலை? வீட்ல இருக்காம இங்க என்ன பண்ற?? ஓடிப்போ" என்று சாரதா அந்த நாயை பார்த்து கண்டிக்க நாயோ வந்த வழியே குடுகுடுவென ஓட துவங்கி விட்டது..
விக்னேஷோ கீழே விழுந்த கண்மணி அருகே போய் பார்க்க," என்னப்பா என்ன ஆச்சு"
" அம்மா மூச்சு இருக்கு லேசான அடி தலையில தான் பட்டு இருக்கு யார் என்னன்னு தெரியலையே" என்று அவன் கூறவும்," யாரா இருந்தா என்ன நம்ம வீடு இங்க தான் இருக்கு அந்த பொண்ண தூக்கி வண்டியில படுக்க வைங்க வீட்டுக்கு போய் பேசிக்கலாம்" என்று கம்பீரமாக கூறினார் சாரதா...
