இராட்சதன் 16
அத்தியாயம் : 16
சில வருடங்களுக்கு முன்பு...
நித்யா அந்த ஊரில் பேரழகி.. அமைதியான அழகான ஒரு பெண் யாராக இருந்தாலும் சற்று திரும்பிப் பார்க்கக் கூடிய அழகை கொண்ட பெண் அவளுடைய அப்பா சிதம்பரம் மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று இருப்பவர்...அதனால் வெளியூரில் படிக்க வைத்தார்... சிறுவயதிலேயே அம்மா அவளுக்கு இறந்துவிட தந்தையின் வளர்ப்பிலும் பெரிய அப்பா ரத்தினம் மற்றும் அவருடைய மனைவி ஆதரவிலும் அவள் வளர்ந்தாள்...
ஊரின் பல கோட்பாடுகள் சிதம்பரம் மற்றும் ரத்தினத்திற்கு பிடிக்கவில்லை...இது எல்லாம் வகுத்தர்வர்கள் அவர்களுடைய குடும்பத்தார் தான் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை..
அவர்கள் அந்த கிராமத்தில் மிகப்பெரிய செல்வந்தராக இருந்தவர்கள் தான்..இன்றும் அவர்களின் சொத்துக்கு ஒன்றும் குறைவில்லை... அவர்களின் தந்தை தான் அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் ...அப்படி இருக்க உலகநாதன் ரத்தினம் மற்றும் சிதம்பரம் வீட்டில் மாடு மேய்க்கும் வேலை செய்து கொண்டிருந்தார்... அவருடைய சொந்த ஊர் அது தான் என்றாலும் அம்மா அப்பா சிறு வயதிலேயே இறந்து விட்டதால் அந்த வீட்டிலேயே அவர்கள் தங்க வைத்து அங்கேயே வேலையும் செய்து வந்தார்.. உலகநாதன் என்பவர் அவர்களின் தூரத்து உறவினன் என்பதாலும் அந்த வீட்டில் அவருக்கு என்று இலேசான கரிசனைகள் எல்லாம் கொடுக்கப்பட்டு வந்தது என்னவோ உண்மை தான்..
அப்படி இருக்கையில் சிதம்பரம், ரத்தினம் மற்றும் அவர்களுடைய தங்கை காவேரி அவர்களெல்லாம் செல்வ செழிப்பாக இருப்பதை பார்க்கும் பொழுது உலகநாதனுக்கு எப்பொழுதும் உள்ளுக்குள் பொறாமை ஏற்படும்.. நான் மட்டும் இப்படி மாடு மேய்த்து கஷ்டப்பட்டு வேர்வையோடு இருக்கும்போது இவர்கள் மட்டும் படித்து உல்லாசமாக தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே என்ற ஏக்கம் அவருக்குள் எப்பொழுதும் இருக்கும்...
என்னதான் சிதம்பரத்தின் குடும்பம் அவரை நன்றாக பார்த்துக் கொண்டாலும் சிதம்பரம் ரத்தினம் மற்றும் காவிரி போல தன்னால் இருக்க முடியவில்லை என்ற புகைச்சல் அவருக்கு நாளுக்கு நாள் அதிகமானதே தவிர குறையவில்லை... அதிலும் தன் வயதை ஒத்த சிதம்பரம் மற்றும் ரத்தினம் இருவரும் உல்லாசமாக இருக்கும் பொழுது தான் மட்டும் ஏன் இந்த கஷ்டப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இல்லாமல் இல்லை..
இதற்கு என்ன வழி என அவருடைய குறுக்கு புத்தி யோசனை செய்தது.. அந்த சமயம் தான் காவேரி பத்தாம் வகுப்பு படித்து முடித்து இருந்தார்.. மெல்ல காவேரியை தன் பக்கம் இழுத்து தன் வலைக்குள் சிக்க வைத்து விட்டார்.. காவேரி உலகநாதன் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற நிலைக்கு ஆகிவிட்டார்.. சிறுவயதிலேயே தனக்கு நினைத்ததை சாதித்து பழக்கப்பட்ட காவிரிக்கு உலகநாதன் தான் உலகம் என்ற இப்போது உலகநாதன் வேண்டும் என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.. அந்த சமயத்தில் தான் உலகநாதன் தன் குறுக்கு புத்தியை உபயோகித்து காவேரியிடம் ,"உனக்கு என் கூட வாழனுமா வேண்டாமா?.. எத்தனை நாளைக்கு தான் நாம ரெண்டு பேரும் இப்படி யாருக்கும் தெரியாமல் பார்த்து பேசுறது எனக்கு வாழ்க்கை முழுவதும் நீ வேணும்னு தோணுது உனக்கு அப்படி ஏதாவது ஒரு எண்ணம் இருக்கா இல்லை இந்த மாடு மேய்கிறவன் எதுக்குன்னு நினைக்கிறியா நான் அனாதை தான் கஷ்டப்பட்டு உனக்கு கஞ்சி ஊத்துவேன் அதுல எந்த சந்தேகமும் உனக்கு வேண்டாம் எனக்கு அம்மா அப்பா யாரும் கிடையாது நான் உறவென நெனச்சி இருக்கிறது நீ மட்டும் தான்" என கேட்க
அவரும் பருவ வயதில் தாக்கத்திலும் அவர் மீதுள்ள அனுதாபத்திலும்," எனக்கு உங்க கூட வாழனும்" என்று கூறிவிட்டார்..
"அதுக்கு இதுதான் ஒரே வழி.. இல்லேன்னா உன்னோட அப்பாவும் அண்ணன்களும் நம்மளை பிரிச்சிடுவாங்க" என்று கூறிய அவர்கள் இருவரும் அத்துமீறி விட்டனர்.. காவிரிக்கோ ஒருமுறை தொடர்ந்த சுகம் அந்த வயதின் தாக்கத்தில் மீண்டும் வேண்டும் என்றதோ தெரியவில்லை உலகநாதன் மீது பைத்தியம் போல அவர் பின்னாலேயே சுற்றினார் உலகநாதனுக்கும் அதுதான் வேண்டும் என்று நிலைக்கு ஒருமுறை நடந்த அந்த விஷயம் பலமுறை யாருக்கும் தெரியாமல் நடந்தது...
ஒரு கட்டத்தில் விஷயம் உலகநாதன் எதிர்பார்த்தது போல பஞ்சாயத்து தலைவர் ஆன ஆறுச்சாமி மற்றும் காவேரி சிதம்பரம் ரத்தினம் அவர்களின் அப்பாவிற்கு காவேரி கர்ப்பமாகிவிட்டார் என்ற விஷயம் செல்ல அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.. உலகநாதன் மற்றும் காவிரியை அடித்து துவம்சம் செய்து விட்டார் ஆறுச்சாமி...
அவரோ அந்த காலத்து ஆள் வேறு காவிரி ,"இவரில்லாமல் வாழமாட்டேன்.. இவரை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கல அப்படின்னா நான் செத்துடுவேன் என்னை முதன் முதலில் தொட்டவரு இவர்தான் இவர் கூடத்தான் என்னுடைய இறுதி காலம்" என்று கூறி விட ஆறுச்சாமி திகைத்தார்..
அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.. அதற்குள் விஷயம் உலகநாதனால் வெளி உலகத்துக்கு பரப்பப்பட்டது விஷயமும் கசிந்தது..
"ஊராரும் சொந்தக்கார பையன் தானே கல்யாணம் பண்ணி வச்சிடுங்க" என்று கூற நரி போல உலகநாதன் கையை கட்டி சிலை போல நின்று விட்டார்..
விஷயம் வெளியே கசிந்ததும் ஆறுச்சாமி மிகவும் அவமானமாக உணர்ந்தார்.. பிறகு அவரே அந்த ஊருக்கு புதுவித சட்டத்தையும் தன் மானத்தை காக்கவும் கொண்டு வந்தார் என்று தான் கூற வேண்டும் தவறு செய்தவன் தான் அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் அப்படி எல்லாம் ஓடி தப்பித்துக் கொள்ள முடியாது என்ற சட்டத்தை கொண்டு வந்தார் அதை அந்த சமயத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஆமோதித்தனர்..
திருமணம் செய்து வைக்கலாம் என்று அவர் நினைக்க இந்த விஷயம் இரத்தினம் மற்றும் சிதம்பரத்துக்கு பிடிக்கவில்லை ஆனாலும் தந்தையை மீறி எதுவும் செய்ய முடியாத காரணத்தினால் அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.. ஆறுசாமியும் தன் மகன்களின் வாயை அடக்கினார் என்று தான் கூற வேண்டும்
அவர்களை பொறுத்தவரை உலகநாதன் மற்றும் காவேரி அத்து மீறி விட்டார்கள் என்பதை தவிர உலக நாதன் மீது அவர்களுக்கு குறை ஒன்றும் சொல்வற்கில்லை..அப்படி தான் அவர் நினைத்து கொண்டு இருந்தார்...
அப்படி இருக்க இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஊரார் கூற உலகநாதன் தாலி கட்டிய பின் தன் வேலையை கா என கூற வேண்டும்...ஆம் திருமணம் முடிந்த அடுத்த வாரமே தன் மனைவி காவேரியை துன்புறுத்த துவங்கி விட்டார்..
சொத்து வேண்டும் என்னால் அடிமை வாழ்க்கை வாழ முடியாது என கூறி காவேரியை அடிக்க காவேரி கணவனின் இயல்பான குணத்தை கண்டு அதிர்ந்து விட்டார்..
அதை தட்டிக்கேட்ட பெரியவரிடம் சொத்தை எழுதிக் கொடுக்க வேண்டும் இல்லையேல் இப்படி தான் நடக்கும் என்று கூற அவர்களும் மகள் கண்ணீரை கண்டு பொறுக்க முடியாமல் ஆறு சாமி எழுதிக் கொடுத்தார்..மகளும் அதற்கு கூட்டு நின்றார் என்று தான் கூற வேண்டும்..
ஆம் ஒரு பக்கம் காவேரியை அவர் அடித்தாலும் மறுபக்கம் காவேரியிடம் ,"இதெல்லாம் நம்ம வாழ்க்கைக்காகத்தான் செய்கிறேன் அதை மட்டும் புரிஞ்சுக்கோ என்னைக்கும் நீ மட்டும் தான் என்னுடைய பொண்டாட்டி அதுல எந்த மாற்று கருத்தும் இல்லை உன்னோட அண்ணனுங்க உன்னை ஏமாத்திடுவாங்க அதனால தான் இப்படி எல்லாம் செய்கிறேன்." என்று நன்றாக காவிரியை மூளை செலவு செய்து வைத்திருந்தார்...அதில் வீழ்ந்தும் போனார் காவேரி.. அந்த வயதில் கணவனை மட்டும் தான் அவர் மலை போல நம்பினார் என்று தான் கூற வேண்டும்..
