இராட்சதன் 15
அத்தியாயம் : 15
வலியால் அவனால் எழுந்திருக்க கூட முடியவில்லை எதிர்பார்க்க முடியாத தருணத்தில் அவன் அடிக்கவும் தினகரனால் திருப்பி கொடுக்கவும் முடியவில்லை.. அதோடு அவன் நிற்கவில்லை இரண்டு வருடங்களுக்கு முன்பு பூப்போன்று சிரித்த அந்தப் பெண்ணின் முகம் அவனுடைய மனதை விட்டு அகலாமல் அவனை தொல்லை செய்ய அந்தப் பெண் இப்பொழுது உயிரோடு இல்லையே என்று கருதி அந்த வெறி அவனை போட்டு அடிக்க செய்தது இதற்கு மேல் பொறுமை இல்லை என்று கருதி தினகரனை வெளுத்தான்.. யாரும் அவனை தடுக்கவில்லை என்பது வேறு விஷயம்...எல்லோர்க்கும் தினகரனை பிடிக்கவில்லையோ என்னவோ??? இல்லை அவன் கடைசியாக பேசிய திமிர் பேச்சு பிடிக்கவில்லையோ என்னவோ??
அதை பார்த்து கொண்டு உலகநாதனால் இருக்க முடியவில்லை வேகமாக ஓடி வந்த ,"என் மகனை விடு நாயை போட்டு அடிக்கிற மாதிரி அடிக்கிற??" என்று கேட்க அதற்குள் அவனுக்கு இருந்த ஆத்திரமிகுதியில் அவனுடைய பேண்ட் பாக்கெட்டில் அவனுக்கு இருந்த ஆத்திரமிகுதியில் அவனுடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்த அவனுக்கு இருந்த ஆத்திரம் பகுதியில் அவனுடைய இடுப்பில் சொருகி வைத்திருந்த பிரிஸ்டலை எடுத்தவன் நேராக உலகநாதன் நெற்றிப்போட்டில் வைத்தான்..
அவனுள்ளம் அப்படி தான் கொதித்து கொண்டு இருந்தது.. பேசாமல் இருவரையும் ஒரே போடாக போட்டுவிட்டு சென்று விடலாமா என்று கூட தான் எண்ணினான்..
ஆனால் அவன் செய்த சத்தியம் அவனை தடுத்து நிறுத்தியது...
"யாருடா இவன் என்னவெல்லாம் பண்றான் என்று அந்த ஊரே அதிர்ந்து யோவ் விடுயா செத்துட போறான் என்னய்யா உன் பிரச்சனை இரு யா பேசி முடிவு பண்ணுவோம்" என்க
"யாராவது ஒரு அடி எடுத்து வச்சீங்க இந்த ஊருல இருக்குற மானங்கெட்ட இந்த பஞ்சாயத்து தலைவர் செத்துடுவான் புரியுதா???" என்றான்..
அனைவரும் துப்பாக்கியை பார்த்து பயப்பட, அவனோ ,"நீ எல்லாம் ஒரு மனுஷனா??? உன்னோட குடும்பத்துல மட்டும் இப்படி ஆனதுக்கு குதிக்கிற மத்தவங்க பொண்ணுனா கசக்குதா இனி உன்னோட பொண்ணு எங்கேயும் வாழ மாட்டா நீயே பூட்டி வச்சுக்கோ இதோ உன்னோட மகன் நான் அடிச்ச அடியில இப்படியே தான் கிடப்பான் இனி அவனால் எந்த பொண்ணுக்கும் எந்த பாதிப்பும் கிடையாது" என்று தன் கையில் பிரிஸ்டலை நெற்றி பொட்டில் வைத்துக் கொண்டே அவன் பேசினான்...
உலகநாதன் இப்படி எல்லாம் நடக்கும் என்பது தெரியாததால் அவர் முகத்தில் இருந்து அதிர்ச்சி மாறவே இல்லை அவன் கொன்று விடுவான் என்ற பயம் லேசாக அவருக்கு இருந்தது என்னவோ உண்மைதான்..
வாழ்க்கையில் முதல் முறையாக துப்பாக்கி எல்லாம் பார்க்கிறார் அதனால் லேசாக அவர் பயந்து இருக்க சத்தம் போட்டுக் கொண்டிருந்த அந்த ஊர் காரர்களையே அவனது துப்பாக்கியால் அடக்கி வைத்திருக்க, அவனும் ,"ஒரே அழுத்து அழுத்தத்தினேன் வை நீயும் உயிரோட இருக்க மாட்ட உன்னோட மகனும் உயிரோடு இருக்க மாட்டான் நான் யாருன்னு இப்ப வரைக்கும் தெரியல இல்ல யோசிச்சிட்டு இரு உன்னால கண்டே பிடிக்க முடியாது.. "என்றான்...
"உன்ன உன் குடும்பத்தை பழிவாங்கத்தான் நான் வந்தேன்.. எதையும் முகத்துக்கு முன்னாடி செய்யறது தான் என்னோட பழக்கம்... அப்புறம் எதுக்குடா என் பொண்ண இப்படி பண்ணினேன் நீ கேட்கலாம் ஆனால் முள்ளை முள்ளால தான் எடுக்கணும்னு சொல்லுவாங்க அது தான் இது... பழிவாங்குவதோடு அர்த்தம் கொலை பண்றது கிடையாது அவங்க உயிரோடு இருக்கும்போதே நாம ஏன் தான் செஞ்சோமோ அப்படின்னு தவிக்கணும் கஷ்டப்படணும்..இனி நீ கஷ்டப்படுவ..
குறுக்கு வழியில சம்பாதிச்ச பெயரை அதே குறுக்கு வழியில் நான் கெடுத்துட்டேன் இது போதும் எனக்கு...உன்னால என்னோட தலை முடியை கூட தொட முடியாது புரியுதா உனக்கு நான் வைக்க நினைத்த ஆப்பு இதுதான்.. உன்னோட பொண்ணு என்னால கெட்டுப் போனவ உன்னோட மகன் இனி எந்த பொண்ணுகிட்டயும் வாலாட்ட மாட்டான்.. அப்புறம் நீ உன்ன பத்தி சொல்லவே வேண்டாம் உன்னோட ஊர் மக்களே உன் மேல காரி துப்புறாங்க அதுக்கு காரணம் நான் பதவி ஆசை இருந்தா மட்டும் பத்தாது அதை எப்படி தக்க வச்சுக்கணும்னு தெரியணும் இனி உன்னால எதுவும் பண்ண முடியாது" என்று அவன் அழுத்தமாக கூறினான்..
அதைக் கேட்டு அவரோ," டேய்" என சட்டையை பிடிக்க ,"என்ன உயிரோடு இருக்க வேண்டாமா நான் என்ன செய்வேன் ஏது செய்வேன் எனக்கு தெரியவே தெரியாது ரொம்ப பொறுமையா இந்த ரெண்டு வருஷம் இருந்தேன் அவ்வளவு பொறுமையா இருக்கிறவன் எல்லாம் நான் கிடையாது போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன் ஆனா என்ன உங்களை கொல்ல கூடாதுன்னு சொல்லி அமைதியா இருக்கேன் இனி இந்த கெட்ட பேரோட வாழுங்க ஒன்னும் பிரச்சனை இல்ல நல்லா தான் இருக்கும்.." என்று அவன் கூறினான்..
பிறகு ஊர் மக்களை பார்த்து," நீங்களே முடிவு பண்ணிக்குங்க இந்த மாதிரி ஆளு வேணுமா வேண்டாமா அன்னைக்கு ரத்தின மாமா வீட்டில் நடந்தது நாளைக்கு உங்க வீட்டிலும் நடக்கலாம் இதே மாதிரி தினகரன் உருவாகலாம் ஒரு பொண்ண ஒருத்தன் இப்படி மானபங்கம் படுத்தினா அந்த பொண்ணுக்கு கல்யாணம் இல்ல பண்ணி வைக்க வேண்டியது இப்படி போட்டு மிதிக்கணும் அப்பதான் எவனும் எந்த பொண்ணையும் தொட மாட்டான்.."
"இவ்ளோ பேசுறியே அப்ப நீ யோக்கியமா ???"
"நான் யோக்கியமா இல்லையான்னு உன்னோட பொண்ணை கேளு" என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு செல்ல நினைக்க அவளோ நிமிர்ந்து யாரையும் பார்க்கவே இல்லை அவ்வளவு அவமானமாக இருந்தது..
அதே நேரம் அவன் ஏன் இதை செய்கிறான் என தெள்ளத் தெளிவாக விளங்கியும் விட்டது இதற்கு பின்னாடி ரத்தினம் தான் கூட்டு இருக்கிறான் என்பதையும் உணர்ந்தவளுக்கு என்ன செய்தி என தெரியாமல் இருக்காதே..
ஆனால் அதற்கு முன் ஊரார் ,"அப்போ அந்த பொண்ணோட நிலைமை???"
அதற்குள் அவளோ," நான் செத்தாலும் சாவேனே தவிர இவனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் தயவு செஞ்சு என்னை பத்தி பேசாதீங்க தெளிவா பழிவாங்கத்தான் இதை செய்தேன்னு சொல்ற ஆள் கிட்ட போய் என்னுடைய வாழ்க்கையை ஒப்படைக்க நான் ஒன்னும் முட்டாள் கிடையாது இவன்கிட்ட ஏமாந்தேன் தான் இனி மறுபடியும் நான் ஏமாற தயாரா இல்லை" என்று முதன்முறையாக யார் முகத்தையும் பார்க்காமல் அவள் கூறினாள்..
அவளுடைய மனம் அவ்வளவு உடைந்து போயிருந்தது.
" இப்போதான் நான் சொன்னேன் எனக்கு அவளை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் கிடையாது அவளுக்கும் விருப்பம் இல்லை இதை அவளே சொல்லிட்டா சோ வரட்டா" என்று அவன் கூறினான்...
"டேய் என் பொண்ணையும் என் மகனையும் இப்படி செஞ்ச உன்னை சும்மா விட மாட்டேன் டா" என உலகநாதன் கொதிக்க,
"உன்னால முடிஞ்சா செஞ்சு பார்" என கூற
"என்ன பேசிட்டு இருக்கேன் அதை வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க யாராவது ஏதாவது சொல்லுங்க" என காவேரி கதற
அதைப் பார்த்து ஒரு பெரியவர் ,"தம்பி இப்படி சொன்னா எப்படி அவர்கள் தப்புதான் இருக்கட்டும் ஆனால் இது எங்க ஊர் முடிவு நாங்கள் எல்லோரும் அதற்கு கட்டுப்படுவோம் பாரம்பரியமா இப்படித்தான் நடந்துட்டு வந்துட்டு இருக்கு அதனால நீயும் அந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்கோ பா !! இவன் நயமானவன் தான் எனக்கு அப்பவே தெரியும் ஆனால் எங்கய்யா சொன்ன வார்த்தைக்காக உலக நாதனை நாங்க இந்த ஊர் தலைவரா ஏத்து இருக்கோம்.." என அவர் கூற,
"என்னால முடியாது.. இதோ இப்ப சொன்னீங்களே அதை செய்யுங்க இந்த ஆளை மாத்திட்டு வேற யாரையாவது இந்த ஊர் தலைவரா போடுங்க எப்பவோ யாரோ சொன்னாங்கன்னு சொல்லிட்டு அதை இப்ப வரைக்கும் கடைபிடிச்சிட்டு இருக்கீங்க இனி வருங்கால பிள்ளைகளுக்கு வழி விட்டா உங்களுக்கு கொஞ்சம் புண்ணியமா போகும்" என்று அவருக்கும் ஒரு கொட்டு கொடுத்தான்..
"இப்படி சொன்னா எப்படி என்ன செஞ்சா இவங்க பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கோ" என மீண்டும் அவர் கேட்க அவர்கள் பழமையில் ஊறி திளைத்து இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு அவனும்,
இவர்களை திருத்த முடியாது என எண்ணி,"கல்யாணம் பண்ணிக்கணுமா ??
அப்போ உங்க பஞ்சாயத்து தலைவர் சொத்தை எல்லாம் என் பெயரில் எழுதி வைக்க சொல்லுங்க நான் தாலி கட்டுறேன்.. கூடவே இந்த ஆளு பஞ்சாயத்து தலைவரா இருக்கக் கூடாது இந்த ஊருக்கு புது தலைமை வரணும்" என்ற நக்கலாக கூறினான்..
அதைக் கேட்டதும் அனைவருமே அதிர்ந்தனர்... ஒரு வார்த்தை மாறாமல் ஒரு செய்கை மாறாமல் அன்று என்ன நடந்ததோ அதுவெல்லாம் வரி வரியாக நடந்து கொண்டிருக்கிறது...ஆம் அன்று நடந்ததும் அது தானே!! கர்மா என்பது இது தானோ????...
