Share:
Notifications
Clear all

இராட்சதன் 14

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 523
Thread starter  

அத்தியாயம் : 14

     "என்னப்பா அவன் பாட்டுக்கு பேசிட்டு இருக்கான் நக்கலா நீங்க கேட்டுட்டு இருக்கீங்க அருவா எடுத்து ஒரே சீவா சீவுங்க மத்தத்தை அப்புறம் பாத்துக்கலாம்" என்றான் தினகரன்... அவனுக்கு கொதித்தது...

"வாடா நல்லவனே இத்தனை நாள் எங்கிருந்த இதே மாதிரி ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, நீயும் இதே மாதிரி தான் பேசினா தான் ஒரு ஞாபகம்" என்று ரத்தினம் கூற,

தினகரன் முகம் இருண்டு போய் ,"அத பத்தி பேசுற வேலை வெச்சுக்காதிங்க இப்போ என்ன நடக்குதோ அதை மட்டும் பேசுங்க" என்று கூறினான்..

"அது எப்படி பேசாம இருக்க முடியும் செத்துப் போனது என் பொண்ணு இல்ல நான் தான் பேசுவேன் என் பொண்ண கெடுத்து நாசம் பண்ணி இதே மாதிரி ஊர கூட்டி பஞ்சாயத்து வச்சு அவளை உனக்கு தானே கட்டிக் கொடுத்தேன்..இதே ஆளுங்க கட்டிக் கொடுக்க வச்சாங்க இல்ல..நீயும் உன் அப்பனும் எல்லா சொத்தையும் எங்ககிட்ட இருந்து வாங்குனீங்க இல்ல கடைசியில என் பொண்ணும் இல்ல என் சொத்தும் இல்லை அனாதையா இருக்கேன்ல அப்ப நான் கேட்பேன் இல்ல சொல்லுடா எழவெடுத்தவனே நான் கேட்பேன் இல்ல" என்று அவர் முகத்தில் அவ்வளவு ஆத்திரத்தோட அவர் கொந்தளிக்க அதை பார்த்த சூரிய பிரகாஷ் ,"மாமா அமைதியா இருங்க நான் பாத்துக்குறேன் இனி நீங்க பேச வேண்டாம்" என்று கூறினான்..

ஆனால் அதற்குள் அவருடைய கண்கள் எல்லாம் ஈரமாகி அவர் நடந்ததை எண்ணி அழ துவங்கி விட்டார்.. அவருடைய வருத்தத்தை பார்த்த சூரிய பிரகாஷின் கைகள் இறுகி அவரை லேசாக அணைத்த படி அவருக்கு ஆறுதல் கூறிய அவன் முகம் மேலும் அழுத்தம் ஆகியது...

பழிக்கு பழி இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்த விஷயத்திற்கு இப்பொழுது ரத்தினமும் சூர்ய பிரகாஷூம் பழி வாங்குகிறார்கள்.. ரத்தினம் பழி வாங்குவதில் கூட ஒரு அர்த்தம் இருக்கிறது என்றாலும் ஆனால் இந்த சூரிய பிரகாஷ் யார் என்று தான் தெரியவில்லை இருந்தாலும்.. மாமா, மருமகன் என்று உறவுமுறை வைத்து இருவரும் பேசிக் கொண்டாலும் அது அல்லவே.. உண்மையில் ரத்தினத்திற்கு இப்படி ஒரு மருமகன் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும் அப்படி இருந்தாலும் யார் இவன்??? இப்பொழுது கண்மணி விசயம் தன் முக்கியமான விஷயம் என்று ஊர் மக்கள் எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க உலக நாதனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை..

குடும்ப மானம் இப்படி காற்றில் பறக்கும் என அவர் எதிர்பார்க்கவில்லை.. ரத்தினம் கூறிய அனைத்துமே அவரும் அவருடைய மகனும் செய்தார்கள் தான் அதோடு நிற்கவில்லை பல விஷயங்களை செய்தார்கள் தான் ஆனால் அவன் தான் நடந்ததை எல்லாம் எண்ணி எண்ணி காட்டுகிறானே... இரண்டு வருடம் ஆக அவனும் அவருடைய மகளும் சேர்ந்து இருந்த போட்டோக்களை காட்டுகிறானே இரண்டு வருடமாக பழகி இருக்கிறான் என்பது இதிலிருந்து தெளிவாக புரிந்தாலும் எப்படி இதிலிருந்து வெளியேறுவது என தெரியவில்லை..இவன் கூறுவதை பார்த்தால் இவனின் பிடியில் மகளும் விழுந்து இருக்கிறாள் என்று தானே அர்த்தம்!!

சாதாரண சமயமாக இருந்தால் காதும் காதும் வைத்தது போல விஷயத்தை முடித்து இருப்பார் ஆனால் ஊரார் மத்தியில் என்ன செய்வது என தெரியவில்லை? ஏனெனில் இதே ஒரு வேலையை தான் மகனுக்கு அவர் செய்தார் அப்படி இருக்கையில் இன்று அவருடைய மகளுக்கு மாற்றி செய்ய முடியாது அல்லவா அதே கருத்தை தானே முன்வைக்க வேண்டும் என்றெல்லாம் அவருடைய மனம் அலசி ஆராய்ந்தது..

அதற்குள் அந்த ஊரிலேயே வயதான மனிதர் ஒருவர் ,"அட ஆமாப்பா உலகநாதா உன் மகனுக்கு கல்யாணம் பண்ணி வச்சது மாதிரியே உன்னுடைய மகளுக்கும் கல்யாணம் பண்ணி வை இதுல என்ன இருக்கு காசா பணமா ஏதோ சின்னஞ்சிறுசுங்க ஏமாந்துடுச்சுங்க கல்யாணம் பண்ணி வெச்சு முடிச்சிடு நம்ம ஊர் மானம் என்ன ஆகிறது???? அதுதான் அந்தப் பையன் உண்மையை உடைத்து சொல்கிறானே" என்று அவர் இழுக்க, ஊர்ல உள்ள அனைவரும் அரசல் புரசலாக உலகநாதன் இறுகிய முகத்தோடு இருந்தார்..

"என்னப்பா பதில் சொல்லாமல் இருக்க, ஒரு முடிவை சொல்லு இப்படி ஏமாந்துட்டு வந்த பொண்ண யாரு இனி கட்டிக்குவா இவனை விட்டால் வேறு யாரும் அந்த பொண்ணை கட்டிக்க மாட்டாங்க" என்ற அதி உயர் தரமான முடிவை அந்த பெரியவர் கூற இவரோ அமைதியாக இருந்தார்..

அந்த சமயம் பார்த்து ஊர் பொதுமக்கள் எல்லாம் ,"அடுத்தவங்க பொண்ணுன்னா இந்நேரம் இவர் பேசி இருக்கிற பேச்சே வேற ஆனால் அவனவன் பொண்ணுன்னு சொன்னதும் எப்படி திரு என்று முழிக்கிறத பாரு" என்று கூறினார்கள்...

"அந்த ஆள் இப்படி பேசுவாரு அந்த ஆள் பேச மாட்டார் நான் தான் பேசணும் ஆமாம் தப்பு பண்ணினேன் இந்த ஆள் புள்ளைக்கு ஒன்னு ஆனதும் அப்படியே குடும்பமே துடிக்குது பதறுது இதே மாதிரி தானே ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்திருக்கும் அப்ப யாரும் பேசல..ஏன் இந்த குடும்பம் முழுசும் ஒரு தப்பை நியாயம் செய்து தானே பேசிச்சு அதுக்கு இந்த ஊர் மக்களும் உடந்தை!! அப்படி தானே!! இப்ப இந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் எப்படி இதிலிருந்து வெளியே வரலாம்னு யோசிச்சிட்டு இருப்பார் போல " என்று கூறிய சூரிய பிரகாஷ் முகத்தில் எதிர் பார விதமாக தினகரன்," என்னுடைய அப்பாவோட எதிர்த்து பேசுற நானும் பார்த்துட்டு இருக்கேன் ஓவரா பண்ணிட்டு இருக்க?? ஏய் ஆமாண்டா அவளை கெடுத்து தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் எனக்கு அவளை பிடிச்சிருந்துச்சு அப்படி பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன் இப்ப என்ன??? அந்த மூதேவி தூக்கு போட்டு சாவான்னு கனவா கண்ட செத்துப் போயிட்டா கூட வாழனும்னு தான் இருந்தேன்?? அப்புறம் சொத்து வாழ்க்கை முழுசும் ஓசிலேயே சோறு போட முடியுமா??? முடியாது இல்ல எப்படி இருந்தாலும் அவளோட அப்பன் செத்தா சொத்து அவளுக்கு தானே அதைத்தான் எழுதி வாங்கினேன் இதுல என்ன தப்பு??? அதுமட்டுமில்லாம அந்த சொத்து எனக்கும் அருகதை பட்டது தானே என்னோட தாத்தா சொத்து தானே அவ என்னோட மாமா பொண்ணு தானே அப்புறம் என்ன???" என்று கேட்டான்..

திமிராக பேசிய தினகரனை பார்த்து அனைவருக்கும் இலேசான நெருடல் வந்தது என்னவோ உண்மை தான்..

அதை கேட்ட அவனுக்கு ஆத்திரம் இத்தனை விசயத்தை செய்து விட்டு எவ்வளவு கூலாக திமிராக பதில் அளிக்கிறான் என எண்ணிய சூர்ய பிரகாஷ் பொறுமை காற்றில் பறந்தது..

தன் மீது கை வைத்தவனை சும்மா விடும் அளவுக்கு சூர்ய பிரகாஷ்  நல்லவன் இல்லை..தன் முகத்தில் குத்து விட்டவன் முகத்தில் சரமாரியாக தாக்கினான் சூர்ய பிரகாஷ்.. அதில் நிலை குலைந்து கீழே விழுந்தான் அவன்..

தினகரன் அருகே நிற்கும் பொழுது எட்டி ஒரு மிதி மிதித்து அவனைக் கீழே தள்ளி  அவனை எழ விடாமல் உதைத்தவன் அனைவரையும் பார்த்து," இந்த பொறுக்கி நாய்  ஒரு பொண்ணை தூக்கிட்டு போய் கற்பழித்து விட்டுட்டு போனான்.

அந்த பொண்ணுக்கு ஒரு நீதிதராம தாலி தான் முக்கியம் அப்படின்னு பேசுனது இதே பஞ்சாயத்து தானே இப்ப மட்டும் திருத்திருன்னு முழிக்குது" என்று அவன் நக்கலாக கேட்கவும் அந்த ஊரே அமைதியாக இருந்தது..

அவர்களை எல்லாம் பார்த்து ,"அன்னைக்கு அந்த பொண்ணுக்கு நடந்த மாதிரி இதோ இன்னைக்கு இவளுக்கு நடந்த மாதிரி நாளைக்கு உங்க வீட்ல நடக்காதுன்னு என்ன நிச்சயம் அதுக்கு இதுதான் தீர்வு என்று நினைக்கிறீர்களா???" என்று சூரிய பிரகாஷ் கேட்டான் அந்த இடத்தில் அவன் தவறு செய்திருந்தவன் தான் ஆனால் அவன் அனைவரையும் பார்த்த இந்த கேள்வியை கேட்கவும் அனைவரும் அங்கு அமைதியாக இருந்தாலும் ,"அப்ப நீ பண்ணினது சரின்னு சொல்ல வர்றியா??" என்று உலகநாதன் கேட்க

"நான் பண்ணினது சரின்னு சொல்லவே இல்லையே நீங்க என்ன பண்ணுனீங்க எதுக்காக இதையெல்லாம் பண்ணுனீங்க என்ன காரணத்துக்காக பண்ணுனீங்க அப்படின்னு உங்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும் திருப்பி நாங்க அதை பண்ணும் போது வலிக்குதா வலிக்கட்டுமே அதுக்கு முன்னாடி நான் இந்த ஊருக்கு வந்த ஒரே காரணம் இதோ இதுதான்..

இந்த ஊர் கூடி இருக்கும் நேரத்தில் ஒரு விஷயம் பண்ணனும் அப்படின்னு தான் வந்தேன் அதை செஞ்சுட்டு நான் கிளம்புறேன்..அப்புறம் உன் பொண்ணு நீ செய்ததுக்கு  பதிலுக்கு பதில்" என்று கூறிய அவன் ,"அதுக்கு முன்னாடி ஒரு சின்ன வேலை இருக்கு" என்று கூறி தினகரனின் உயிர் நாடியில் அடித்து துவைத்து துவம்சம் செய்தான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top