இராட்சதன் 13
அத்தியாயம் : 13
அவன் தான் ரவுடி அவன் சொல்வதுதான் இந்த ஊரில் சித்தம் என்று இருந்த தினகரன் முதன்முறையாக இல்லை இரண்டாவது முறையாக கூடி இருந்த சபைதனில் சூரிய பிரகாஷ் கையில் அடி வாங்கி சுருண்டு இருந்தான்...
மீண்டும் எழுந்து அடிக்க அவன் பாய உலகநாதன் தான் அந்த இடத்தில் ,"கொஞ்சம் அமைதியா இருங்க நான் தான் விசாரிச்சுட்டு இருக்கேன் இல்ல உங்க சண்டையை எல்லாம் அப்புறம் வச்சுக்கோங்க" என்றார்..
அவர் முகத்தில் அவ்வளவு கோபம் ஆத்திரம் போட்டிருக்கும் வேஷம் களையக் கூடாது என அமைதியாக இருக்க காவேரியால் அப்படி இருக்க முடியவில்லை...
"என்னங்க சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க அவனை அடிச்சு கொல்லுங்க என் மகளை நாசம் செய்தவனை சும்மா விடாதீங்க" என்று கொந்தளித்துக் கூற
அந்த நொடி ரத்தினம் மற்றும் சூர்ய பிரகாஷ் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்...
"எதுக்கு கண்மணியை இப்படி நாசம் செய்த???" என்று அவர் கேட்க அவனோ தெனாவட்டாக ,"நாசம் செஞ்சேனா ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்துச்சு ஒன்னா இருந்தோம்" என்று கூற கண்மணி அவனை பார்த்து அதிர அவனும் அது எல்லாம் தனக்கு பொருட்டு இல்லை என்பது போல எல்லாரையும் பார்த்து," இதோ பாருங்க என்னைக் கேள்வி கேட்டுட்டு இருக்க வேலையெல்லாம் வேண்டாம் அவளுக்கு என்ன பிடிச்சிருந்துச்சு எனக்கு அவளை பிடிச்சிருந்துச்சு நாங்க ஒன்னா இருந்தோம் இப்போ இல்ல ரெண்டு வருஷமா அவளை எனக்கு தெரியும் அவளுக்கும் என்னை தெரியும் நாங்க ரெண்டு பேரும் காதலிச்சிட்டு இருந்தோம் ரெண்டு பேருக்கும் எல்லை மீறனும் தோணுச்சு மீறினோம்..அதில் என்ன விஷயம் இருக்கு பெருசா பேசிட்டு இருக்கீங்க" என்று கேட்க
இந்த விஷயத்தை கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சி குனிந்த தலை நிமிராமல் நடக்கும் கண்மணியா இந்த வேலையை செய்தது என அவர்கள் யோசிக்கும் போதே அவனும் அவனுடைய போனை எடுத்து அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட பல போட்டோக்களை எடுத்து அனைவரும் முன்னும் காட்டினான்..
அதை பார்த்தவர்கள் மேலும் அதிர்ந்து," என்ன உலகநாதன் உன்னோட புள்ள பண்ணியிருக்கிற விஷயத்தை பார்த்தியா??? எந்த புத்துக்குள்ள எந்த பாம்பு இருக்குன்னு யாருக்கு தெரியும் பார்த்தீங்களா இதனால தான் அந்த புள்ள அழுதுகிட்டே இருக்கு எந்த பதிலும் சொல்லாம தப்பு இங்க இருக்குங்க சும்மா அந்த பையன மட்டும் சும்மா கத்திட்டு இருக்கீங்க முதல்ல புள்ளையை ஒழுக்கமா நீங்க வளர்த்திருக்கணும் பார்த்தீங்களா சோடி போட்டு நிக்கிறத" என்று ஊரார் திருப்பி பேச உலகநாதன் மானம் காற்றில் பறந்தது..
"ஊர் பெயர் தெரியாத ஒருத்தன் வந்து எம்புள்ளைய தப்பா பேசிட்டு இருக்கான் நீங்க என்னடான்னா அவனுக்கு துணையா பேசுறீங்க" என காவேரி அழுதார்..
அதற்கு ரத்தினம் ,"வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்று கூற அந்த பொருளின் அர்த்தம் அங்கு இருப்பவர்களுக்கு விளங்காமல் இல்லை..
"அது எப்படிமா இதே மாதிரி உன்னோட மகன் ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்த வேலையை செஞ்சான் அப்போ இதே மனுஷங்க தான் இங்கே கூடி இருந்தாங்க அப்ப எல்லாரும் சேர்ந்து அந்த பொண்ணை உன்னோட மகன் தலையில கட்டுனாங்க நீயும் அதுக்கு சம்மதம் சொன்ன இப்ப மட்டும் என்னோட மருமகனை கொல்லனுமா?? இது என்ன அர்த்தமா இருக்கு இந்த ஊர் வழக்கப்படி இப்படி பொண்ணு ஏமாந்தா யார்கிட்ட ஏமாந்து போறாங்களோ அவன் கூட கல்யாணம் பண்ணி வைக்கிறது தானே இந்த ஊர் வழக்கம் அதை ஏன் மறந்துட்டீங்களா" என்று ரத்தினம் எடுத்துப் போட்டார்..
காவேரியை எங்கே அடிக்க வேண்டுமோ அங்கு அடிக்க காவேரியின் முகம் கறுத்தது..
அனைவருக்கும் விளங்கி விட்டது கண்மணி அடக்கம் இந்த பழிவாங்குதலின் நோக்கம் தெள்ளத் தெளிவாக விளங்கி விட்டது இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த காரியத்தை எண்ணித்தான் இவர்கள் இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக ரத்தினம் கொட்டி விட அனைவருமே அதிர்ந்தனர்.
எப்போதோ இதே போன்ற தருணம் தான் நிகழ்ந்து இருக்கிறதே!!! அதற்கு பழி வாங்க தான் இவன் வந்து இருக்கிறானா என்ன??? என கண்மணி அந்த நொடியும் அவனைப் பார்க்க அவனோ எறிகனல் போல அங்கு நின்று கொண்டிருந்தான்..
அப்போது தான் அவளுக்கு தெளிவாக ஒன்று விளங்கியது..இரண்டு வருடமாக அவளுடன் காதல் கொண்டவன் தான் இந்த சூர்ய பிரகாஷ்..ஆம் மிக சரியாக கூற வேண்டுமெனில் என யோசிக்கும் போது அவளுக்கே சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது...
"என்ன மாமா சொல்றீங்க கல்யாணம் பண்ணிக்கிறதா கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாது.. என்னோட தகுதிக்கும் என்னுடைய தராதரத்துக்கும் இந்த மாதிரி ஒரு லோ க்ளாஸ் பொண்ணையெல்லாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது உங்களுக்கே அது நல்லா தெரியும்" என்று சூரிய பிரகாஷ் வேண்டுமென்று அவர்களை அசிங்கப்படுத்தினான்...
"என்ன தம்பி இப்படி சொல்றீங்க??? அப்போ அந்த பிள்ளை வாழ்க்கை???"
"அதுக்கு நான் என்ன பண்ண முடியும்???" என்றான் அவனோ தெனாவெட்டாக,
"ஏய் என்ன எங்கிருந்து வந்து இங்கே பேசிட்டு இருக்க நானும் பாத்துட்டே இருக்கேன் ஓவரா லந்த குடுத்துட்டே இருக்க?? என்ன நீ பேசறது எல்லாம் கேட்டுட்டு வேடிக்கை பார்க்கிறோம் நினைச்சுட்டு இருக்கியா??? கொன்னு பொதச்சிடுவோம் இந்த ஊருக்குன்னு ஒரு மரியாதை இருக்கு அதை கெடுக்க நாங்க விட மாட்டோம் என்ன நீ பாட்டுக்கு வந்த அந்த பொண்ணு கூட நான் தான் இருந்தேன்னு சொல்ற கல்யாணம் பண்ணிக்க சொன்னா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்ற என்ன நினைச்சுட்டு இருக்க???" என்றார் உலகநாதன்...
அவர் முகத்தில் தெரியும் ஆத்திரத்தை பார்த்து அவனுக்கு அவரை இழுத்துப் போட்டு நாலு அடி அடிக்க வேண்டும் என்று தோன்றினாலும் அவன் தன் கையை அடக்கியவன்," கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னேன் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி நான் அவ கூட இருக்கல அவளும் என்கிட்ட கேக்கல அது நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு பண்ண வேண்டிய விஷயம் அதுல நீங்க தலையிடாதீங்க.. அவளுக்கு என்னை கட்டிக்க விருப்பம்மா கேளுங்க" என்றான் அதைப் பார்த்ததும் ஊரே கொந்தளிக்க,
"மருமகனே அப்படி சொல்லாதீங்க எதுக்கு பொம்பள புள்ள பாவம் கல்யாணம் பண்ணிக்கங்க" என்று நக்கலாக ரத்தினம் எடுத்துக் கொடுக்க
"ஓ அப்படி சொல்றீங்களா மாமா சரி நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் நான் அப்படி இவளை கல்யாணம் பண்ணிக்கணும்னா இவங்க என்ன செய்வாங்க அதை சொல்ல சொல்லுங்க அப்புறம் யோசிக்கிறேன்" என்று கூறினான் சூரிய பிரகாஷ் அதைக் கேட்டு உலகநாதன் முகம் கருத்தது...
எல்லாமே கணக்கு போட்டு செய்து இருக்கும் அவன் வார்த்தை மாறாமல் பேசுவதை பார்க்கும் பொழுது உலகநாதன் குடும்பத்திற்கு அதிர்ச்சியாக தான் இருந்தது…
