இராட்சதன் 12
அத்தியாயம் : 12
ஒருத்தன் என்னடா வென்றால் தன்னுடைய இரண்டு வருட காதலை பழி வாங்கத்தான் உன்னை காதலித்தேன் என்று கூறி அவள் மனதை உடைத்து அவள் உடலை தாக்கி அவனுடைய பழி வெறியை பெண்ணின் உடலில் தீர்த்து அவளை நாசம் செய்து ஊரார் முன்னிலையில் நிறுத்தி வைத்திருக்கிறான்..
ஆனால் அவளுடைய குடும்பத்தாரோ ஒரு படி மேலே போய் அவளை அத்தனை பேரும் முன்னிலையில் துகில் உரித்துக் கொண்டு இருக்கிறார்கள் ஒரு பெண் எத்தகைய வலியை தாங்கிக் கொள்ள முடியாதோ, அத்தகைய வலியை அவளுக்கு வார்த்தைகளால் அந்த ஊரார் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்...
ஆனால் அது எல்லாம் அவளுடைய வீட்டாருக்கு புரிந்ததா என்பது கேள்வி குறியான விசயம் தான்...அதில் பஞ்சாயத்து தலைவராக பதவி மோகம் கொண்ட அவளுடைய தந்தையோ பெற்ற மகள் என்று கூட பாராமல் மகள் இந்த நிலையில் இருக்கிறாளே என்ற வருத்தம் இல்லாமல் மகளுக்கு இந்த நிலையில் பக்கபலமாக இருந்து யார் அந்த கயவன் என விசாரித்து அவனுக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுக்காமல் ஊரார் மத்தியில் மீண்டும் தன் மகள் என்று கூட பாராமல் அவளை தோலுரித்துக் கொண்டிருந்தார்...அதுவே அவளுக்கு அதிர்ச்சி தான்...
அவன் நாலு சுவற்றுக்குள் ஊரார் பார்க்காமல் செய்த காரியத்தை இன்று பலபேர் மத்தியில் அவளுடைய தந்தை செய்து கொண்டிருப்பதாக தான் அவளுக்கு தோன்றியது...மிகவும் அவமானமாக அவள் உணர்ந்தாள்..
ஒரு 21 வயது பெண் என்ன எல்லாம் தாங்கி கொள்ள கூடாதோ அது எல்லாம் பாவம் அவள் தாங்கிக் கொண்டிருந்தாள் அவள் மனது அங்கு யாருக்கும் பெரிதாக தோன்றவில்லை.. அவரவருக்கு அவரவர் கோபங்களே நியாயமாகப்பட்டது..அவளை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும்...
"நான் இங்கே கேள்வி கேட்டுட்டு இருக்கேன்" என்று மகள் கதறிக் கொண்டிருப்பதை பொருட்படுத்தாமல் தந்தை கேட்டார்...
அவளோ மேலும் முகத்தை புதைத்துக் கொண்டு அழ ,"என்ன இந்த பொண்ணு இப்படி இருக்கு வாயை திறந்து பதில் சொன்னா தானே ஆகும்!! அந்த பிள்ளையை பார்த்தால் கெட்டுப்போன மாதிரி தான் இருக்கு வாயை திறக்கிறாளான்னு பாரு வெளியூருக்கெல்லாம் படிக்க அனுப்ப வேண்டாம் என்று ஊருக்கே நியாயம் பேசுவார் இன்னைக்கு அவர் பிள்ளையே ஏமாந்து வந்து நிக்குது என்னத்த சொல்ல???" என்று ஊரார் மேலும் பேச உலகநாதன் குடும்பத்திற்கே மிகவும் அவமானமாக இருந்தது..
காவேரிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.. ஒரு பெண்ணின் மனது பெண்ணுக்குத்தான் தெரியும் என்பது போல மகள் துடித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்த தாயோ மகளை இப்படி கேள்வி மேல் கேட்கிறார்களே என்று வருந்தி இவர்களிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று கருதி தன் மகளிடம் ,"அவங்க கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லிடு இல்லை உன்னை சும்மா விட மாட்டாங்க" என அழுது கூறினார்...
அவளோ அப்போதும் அமைதியாக இருக்க ,"இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் பதில் சொன்னால் தானே எல்லாருக்கும் தெரியும்" என்று உலகநாதன் கூற அவளோ தேம்பித் தேம்பி அழுதாள்... அவன் செய்ததை விட இவர்கள் இவளை நடத்தும் விதம்தான் அவளுக்கு அதிகமாக வலித்தது..
அங்கு இருந்த யாரும் அவளைப் பார்த்து இரக்கப்படவில்லை.. இந்த பிரச்சனைக்கு எல்லாம் காரணமானவன் அவன் தான் அவளுக்கு பதிலாக அங்கே பேசினான்... இதற்கு அவளுக்கு துணை போகிறானோ என்னவோ???
ஆம்.. உலகநாதன் குடும்பம் அசிங்கப்பட வேண்டும் என்று அவன் செய்த காரியத்திற்கு அவனே முற்றுப்புள்ளி வைக்க கருதி," நான் தான் அவளை ஏமாத்தினது அப்படின்னு சொல்ல மாட்டேன்..ஏன்னா கண்மணி நேத்து முழுசும் என் கூட தான் இருந்தா நீங்க நினைச்ச மாதிரி எல்லாம் எங்களுக்குள்ள நடந்துடிச்சு.. என் கூட தான் இதுவரை வந்தா நான் தான் அவளை இறக்கி விட்டேன் இந்த பதில் போதுமா இல்லை வேற ஏதாவது வேணுமா???" என்று மீசையை முறுக்கிக் கொண்டு நெஞ்சை நிமிர்த்தி ஆமாம் நான்தான் தவறு செய்தேன் என்று அவன் கூறினான்..
அதை கேட்ட அனைவரும் அதிர தினகரன் கொதித்து எழுந்தான்," என்ன தைரியம் இருந்தால் என் தங்கச்சியை இப்படி பண்ணி இருப்ப?? உன்னை எல்லாம் இந்த ஊருக்குள் நீ காலை எடுத்து வைச்ச போதே வெட்டி இருக்கணும்"என்று ஒரு அண்ணனாக கொதித்து எழுந்து அவனுடைய சட்டையை பிடித்தான்...
பதிலுக்கு அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க சூரிய பிரகாஷ் ஒன்றும் இவனைப் போல தரம் கெட்டவன் அல்லவே!! அவன் தான் செய்தான் இதுக்கு எல்லாம் முழு காரணம் அவன் தான் இருந்தாலும் அந்த இடத்தில் அவன் பேசினான்..
அவன் அவ்வாறு கூறியதும் கூடி இருந்த அனைவரும் அதிர்ந்தனர்..அவனோ அழுத்தமாக திமிராக தான் இருந்தான்... எவன் வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்று தான் அவன் இருந்தான்..
இந்த ஊரில் ரத்தினம் தவிர வேறு யார் மீதும் அவனுக்கு நல்ல அபிப்பிராயம் அவனுக்கு கிடையாது அப்படி இருக்க இவர்கள் எல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை..
தன்னுடைய சட்டையை பிடித்தவன் முகத்துக்கு அருகே நின்றவன் ,"என்ன வலிக்குதா??? உன் தங்கச்சி மானம் போயிடுச்சுன்னு ரொம்ப வலிக்குதா??? வலிக்கட்டும்..சும்மா சொல்ல கூடாது உன்னோட தங்கச்சி நல்லா தான் இருந்தா நேத்து என்கூட உனக்கு வலிச்சது அவளுக்கு வலிச்ச மாதிரி தெரியல...சந்தோஷமா தான் இருந்தா" என்று கூறிய சூர்ய பிரகாஷ் ,"சும்மா சும்மா சட்டையை பிடிச்சா எனக்கு பிடிக்காது அதுனால மரியாதையா கையை எடுத்திடு இல்லையா இப்போவே உனக்கு கை இருக்காது" என்று கூற உலகநாதன் குடும்பத்துக்கே சூரிய பிரகாஷ் ஏன் இதை செய்தான் என விளங்கி விட்டது...
ஆனால் ஏன் அப்பா, மகன் என அனைவருக்கும் இரத்தம் சூடாகி தினகரன் ,"என் தங்கச்சியை என்ன டா பண்ணின?? தட்டி கேட்டா என்கிட்டயே திமிரா பேசுறியா???" என சூடாகி மீண்டும் அடிக்க பாய்ந்தான்...
அதற்குள் காவேரி மகளின் வாழ்க்கையை பறித்து விட்டானே என கருதி ,"அவனை விடாதே டா தினகரா அவன் உயிர் உடம்புல இருக்கக் கூடாது நம்ம குலத்தையே நாசம் பண்ணிட்டான்" என்று கூற,"நீ எல்லாம் குலத்தை பத்தி பேசுற??? பொம்பளைன்னு என்று பார்க்கிறேன் இல்லை அவ்ளோ தான் வாயை மூடிட்டு இருந்திடு" என காவேரிக்கு எதிராக பேசியவன் அவர் மீது உள்ள கோபத்தை தன் மேல் கை வைத்தவன் மீது காட்ட அடுத்த நொடி உயிரோடு இருக்க வேண்டுமா வேண்டாமா என தீர்மானிப்பது சூரிய பிரகாஷ் தான் என்றிருக்க அவன் உயிரோடு இருக்கத் தேவையில்லை என நினைத்து விட்டவனை என்னவோ அடுத்த நொடி அவன் விட்ட குத்தில் தினகரன் கீழே சரிந்தான்..
