Share:
Notifications
Clear all

இராட்சதன் 11

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 523
Thread starter  

அத்தியாயம் : 11

இவன் பழி வாங்க வேண்டும் என்று தான் இதையெல்லாம் செய்கிறான் ஆனால் அதனுடைய பக்க விளைவுகள் எப்படி இருக்குமோ என அவள் பயந்து போய் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய அவனிடமே தஞ்சம் புகுந்து கொள்ள ஆனால் அவனும் இந்த நாளுக்காக தான் காத்திருப்பது போல கார்ல இருந்து இறங்கு என்று கூற அவளோ மீண்டும் அவனைப் பாவமாக பார்த்தாள்...

அவனோ இறங்கு என கூற அவளோ இறங்காமல் அவனுடைய பொறுமையை சோதித்தாள்..

அவ்வளவுதான் அவனுடைய பொறுமை காற்றில் பறந்தது.." அப்படி நீ செத்துப் போய் உன்னோட அப்பனோட மானத்தை நீ காப்பாற்ற வேண்டாம்" என்று கூறியவன்

  கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் அவள் காரில் அமர்ந்திருக்கும் போதே அவள் பக்கமாக கையை நீட்டி அவள் பக்க கார் கதவை திறந்தவன் காரில் இருந்து அவளை லேசாக தள்ளினான் அவள் கீழே விழுந்தாள் என்று தான் கூற வேண்டும்... அவள் கீழே விழ வேண்டும் என்று தான் அவன் இதை செய்தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை...

அவள் அதை எதிர்பார்க்கவில்லை கார் பறந்தது அனாதை போல கீழே கிடந்தாள்... கீழே விழுந்ததும் அவளுடைய கைகளில் லேசாக அடிபட்டது,. கீழே விழுந்த வேகத்தில் ஒரு கல்லில் பட்டு அவளின் நெற்றியில் லேசாக ரத்தம் கசிந்தது...அதுகூட வலிக்கவில்லை அவளின் தேகம் எங்கும் இருக்கும் வலிகளில் இந்த வலி அவளுக்கு பெரிதாக தெரியவில்லை... கண்களில் கண்ணீர் முட்டியது அவள் எதிர்பார்த்தது போலவே அடுத்த இரு நொடிகளில் அந்த இடம் ஆள் கூட்டங்களால் நிறைந்து இருந்தது...

அவளுடைய கோலமே கூறியது அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்று அவள் உடல் எங்கும் காயங்கள் இரவெல்லாம் ஒரு வயதுக்கு வந்த பெண் காணாமல் போய் மறுநாள் வந்து இருக்கிறாள் என்றால் அவளுக்கு என்ன ஆகி இருக்கும் என்று ஊகிக்கும் அளவுக்கு அந்த கிராம மக்கள் வளர்ந்து இருந்தார்கள் என்று தான் கூற வேண்டும்...

விஷயம் அறிந்த காவேரி உலகநாதன், தினகரன் என அனைவரும் அங்கு கூடி இருந்தார்கள் அனைவருக்குமே அதிர்ச்சி காவேரி தன் மகளை கட்டி அணைத்துக் கொண்டு அழுதவர் ,"அடிப்பாவி என்னடி ஆச்சு எங்கடி போன???" என கத்த உலகநாதன் தன் மகள் அருகே வர மகளோ தன் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தன் தந்தையை கண்டதும் ஓடிச்சென்று அவரை அணைத்துக் கொள்ள அண்ணன் தினகரனும் செய்வதறியாது தன் தங்கையின் அருகே சென்று ,"எங்கே  போன கண்மணி உனக்கு என்ன ஆச்சு" என்று கோபத்தோடு கேட்டு கொண்டிருக்க உலகநாதன் தன்னை அணைத்து கொண்டு இருந்த தன் மகளிடம் கேட்ட முதல் கேள்வி ,"நீ கெட்டுப் போய் இருக்கியா?? எவனாவது உன்னை தொட்டானா???" என்று தான் ...

ஒரு பெற்ற மகளிடம் தந்தை கேட்க கூடாத கேள்வி. ஆனால் அந்த கேள்விதான் அவருக்கு மிகப்பெரியதாக இருந்தது மகளின் மனமோ இல்லை அவள் திரும்பி வந்த சந்தோஷமோ அவள் கிடைத்து விட்டால் என்ற மகிழ்ச்சியோ அவர் முகத்தில் துளியும் இல்லை... அவளின் கோலத்தை பார்த்து அவர் அந்த கேள்வியை கேட்டார்..

அதை கேட்டதும் அவளோ ஒரு நொடி அதிர்ந்து பட்டென்று தன் தந்தையிடம் இருந்து விலக அவரோ அடக்கப்பட்ட குரலில் இறுகிய முகத்தோடு ,"நான் கேட்டதுக்கு பதில் சொல்லு" என்று கூறினார் .. அவர் முகத்தில் அப்பட்டமாக கோபம் தெரிந்தது தன் மானம் போகப் போகிறதோ என்று கோபத்தோடு அவர் கேட்டார்... அதில் மேலும் அடிபட்டு போனாள் கண்மணி...

காவேரி கூட சுற்று முற்றும் ஊராரை பார்த்து,"என்னங்க எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்" என்று கூற உலகநாதன் ஒரே ஒரு பார்வை தன் மனைவியை பார்த்து அடக்கியவர் தன் மகளிடம் பதில் சொல் என்பது போல பார்க்க மகளோ ஆமாம் என்பது போல தலையாட்டினாள் அவள் அந்த பதிலை கூறும் போது மிகவும் செத்துப் போனாள் என்று தான் கூற வேண்டும்..

அவளுடைய அப்பாவிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தையை அவள் கேட்பாள் என அவள் எதிர்பார்க்கவில்லை. என்னதான் அவர்கள் நான்கு பேரும் குசு குசுவென பேசிக்கொண்டு இருந்தாலும் அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதில் ஆர்வமாக அந்த கிராம மக்கள் இருந்தார்கள் என்று தான் கூற வேண்டும்...

அவளின் தோற்றமும் அவளின் கை கால்களில் தெரிந்த நகக்கிரல்களும் பார்த்து அவர்களுக்கு எல்லாம் சரி இல்லை என்பது போல தோன்றினாலும் கூட்டத்தில் இருக்கும் நபர்கள்," என்ன அண்ணே புள்ளைய பார்த்தா ஏமாந்துட்டு வந்தது மாதிரி இருக்கு" என்று வாய் திறந்து கேட்க உலகநாதன் அவமானத்தில் சுருங்கி நின்று கொண்டிருந்தார்..

அந்த சமயம் பார்த்து ரத்தினம் அந்த கூட்டத்திற்கு வந்தவர்," ஏமாந்தது மாதிரியா ஏமாந்து தானே வந்திருக்கு" என்று கூற அதை கேட்டதும் தினகரன் கொதித்து எழுந்து ," யோவ் வாய்க்கு வந்தது மாதிரி பேசின அவ்வளவுதான் சொல்லிட்டேன்" என கூற,

"என்னடா பண்ணிடுவ என்ன பண்ணிடுவ???" என ரத்தினம் மீசையை முறுக்கிக்கொண்டு கேட்கும் பொழுது பின்னால் இருந்து ,"மாமா அவனால ஒன்னும் புடுங்க முடியாது" என்று கூறிக்கொண்டு வந்தான் சூரிய பிரகாஷ்..

அவனைக் கண்டதும் அனைவரும் அதிர தினகரன் கொதித்து எழுந்து," என்னடா சொன்ன?? இது எங்க ஊரு இங்க வந்து யாரும் உன்கிட்ட அட்வைஸ் கேக்கல மூடிட்டு இரு" என கேட்கும் பொழுது கையை முறுக்கியபடி," அன்னைக்கு வாங்கினது மறந்துடுச்சா போ போய் உன்னோட தங்கச்சி யாரு கூட இருந்தான்னு பஞ்சாயத்து பண்ணுங்க அதை விட்டுட்டு சும்மா பொங்கிட்டு இருக்க கூடாது புரியுதா அன்னைக்கு வாங்கினது நல்லா இருந்துச்சா வேணும்னா சொல்லு ஒன்னு கூட தரேன்" என கையை முறுக்கி கொண்டே கூற

அவனை கண்டதும் அவளோ மேலும் அதிர அவனோ கூலாக பஞ்சாயத்தை வேடிக்கை பார்க்க வந்தவன் போல நின்று கொண்டு இருந்தான் சூர்ய பிரகாஷ்.. என்னதான் அவன் கூலாக இருப்பது போல தோன்றினாலும் அவன் உள்ளம் கொதித்துக் கொண்டிருப்பதை அவன் மட்டும்தான் அறிவான்...

"அட என்னம்மா அழுதுட்டு இருக்க ஏதாவது நடந்திருந்தால் சொல்லு யார் அதை செய்தது என்று சொல்லு நேத்து இருந்து உன்னை காணாம நாங்க தவிச்சு போயிட்டோம் என்ன நடந்துச்சுன்னு சொல்லு" என்று அவள் வாயிலிருந்து தவறு நடந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்த கேள்வி கேட்பவர்கள் எல்லாம் போராடியது போலத்தான் கண்மணிக்கு தோன்றியது...

அதாவது கூடி நின்று அவமானப்படுத்துவார்கள் என்று கூறுவார்களே அதுதான் அங்கு நடந்து கொண்டிருந்தது...

அனைவரும் கேள்வி கேட்கவும் அவள் பதறி அழவும் கைகளை மூடிக்கொண்டு ,"அய்யய்யோ என்னுடைய பிள்ளையை போட்டு பாடா படுத்துறாங்களே என் பிள்ளைக்கு ஒன்னும் ஆகியிருக்காது கொஞ்ச நேரம் அமைதியா இருங்க" என்று காவேரி தான் பாவம் மகளுக்காக பதறிக் கொண்டிருக்க மகளின் முகமே உலகநாதனுக்கு அவமானத்தை கொடுத்துக் கொண்டிருந்தது உலகநாதன் செய்வதறியாது நின்று கொண்டிருக்க,

"என்னையா பஞ்சாயத்து தலைவர் எதுவும் பேசாம இருக்காரு இது என்ன நமக்கு புதுசா என்ன ஏதாவது பிரச்சனைனா பஞ்சாயத்து தலைவர் ரொம்ப நல்லா விசாரிப்பார் இப்ப என்னடான்னா அமைதியா நின்னுட்டு இருக்கார்" என்று அரசல் புரசலாக பேச்சு வர, சூரிய பிரகாஷ் முகத்தில் நக்கல் புன்னகை வெளிப்பட்டது... அவனின் விழிகள் பழி வெறியால் துடித்துக் கொண்டிருந்தது...

"அது எல்லாம் அவரோட குடும்ப பிரச்சனை என்றால் ரோட்டுக்கு வருமா மத்தவங்க பிரச்சனைனா ரோட்டுக்கு வரும்" என்று வேறொருவர் கூற உலகநாதனுக்கு அந்த இடத்தில் பேசிய ஆக வேண்டும் அதற்காகத்தான் சூரிய பிரகாஷ் காத்திருப்பான் போல ரத்தினம் ,"டேய் இவனையெல்லாம் இன்னும் பஞ்சாயத்து தலைவர்ன்னு நம்பிட்டு இருக்கீங்க பாரு உங்களையெல்லாம் எதை சொல்லி திருத்துவது என்று எனக்கு தெரியல அவன் ஆம்பளையா இருந்தா அவன் பொண்ணுக்கு என்ன நடந்துச்சுன்னு விசாரிக்க சொல்லுங்க இல்லையென்றால் எல்லார் காலிலும் விழுந்துட்டு பஞ்சாயத்து தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா பண்ணிட்டு போக சொல்லுங்க யாரும் எதுவும் கேட்க மாட்டோம்" என்று கூற, தினகரன் வந்து ரத்தினத்திடம் ,"உயிர் முக்கியம்னா வாய் திறக்காமல் இரு என்னோட அப்பாவுக்கு என்ன பண்ணனும்னு தெரியும்" என்று கூற

"உங்கப்பனுக்கு என்ன தெரியும் என்னடா தெரியும்???" என்று சூரிய பிரகாஷ் கேட்டான் ..

தினகரன் அவனுடைய சட்டையை பிடிக்க போக இதுதான் சாக் என்று ஓங்கி அடித்தான் சூரிய பிரகாஷ் அவ்வளவு வெறி இருந்தது.. இப்படி சபையில் தான் அவனைத் தாக்க வேண்டும் என்ற முடிவில் தான் இருப்பான் போல அதனால் ஒரு அடி வைக்க நிலைமை மோசமாவதை உணர்ந்த உலகநாதன்," எல்லாரும் அமைதியா இருங்க என்னோட குடும்பம் அப்படிங்கறதால் நான் எதையும் விசாரிக்காமல் முடிவு செய்ய மாட்டேன் தீர விசாரிக்கத் தான் செய்வேன் முதலில் இந்த ஊர் அதுக்கப்புறம் தான் என்னுடைய குடும்பம் எல்லாரும் பொறுமையா இருங்க நான் விசாரிக்கிறேன்" என்று கூறி பஞ்சாயத்து திண்ணையில் அமர்ந்த மனிதர் குல மாணிக்கம் உலகநாதன் அங்கு கதறிக் கொண்டிருக்கும் தன் மகளை பார்த்து ,"நேத்து எங்க போன யார் கூட போன என்ன நடந்துச்சு" என்று கேட்டார்..

அதற்கு அவளோ,"அப்பா" என அழ

"இங்கே நான் பஞ்சாயத்து தலைவர் அதை மனசுல வச்சுட்டு பேசு மத்ததெல்லாம் வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் தான்" என்று உலகநாதன் கடுமையாக கூறினார்... மகள் என்ன சொல்லப் போகிறாள் என்ற விஷயம் மகளின் கண்களைக் கொண்டே கண்டுபிடித்த உலகநாதனுக்கு மிகவும் அவமானமாக இருந்தது ஆனால் தன்னை பேச வைத்த சூரிய பிரகாஷுக்கு உயிர் என்றால் எவ்வளவு முக்கியம் என்பதை காட்டியாக வேண்டும் என்ற வெறி அவர் மனதுக்குள் இருந்தது..

ஆனால் அவர் அறியாதது சூரிய பிரகாஷை பற்றி ஆம் அவனின் உயிரைப் பறிக்க நினைக்கும் முன்னே அவன் அவருடைய உயிரை பறித்து இருக்கிறான் என்பதை அறியாமல் அவனைப் பற்றி தெரியாமல் சூரிய பிரகாஷை பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தார் உலகநாதன்....



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top