Share:
Notifications
Clear all

இராட்சதன் 10

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 523
Thread starter  

அத்தியாயம் : 10

       சூர்ய பிரகாஷ் கார் கண்மணியின் ஊருக்கு சென்றது..அவள் கண்கள் அவளின் ஊருக்குள் நுழையும் போதே பயம் கொள்ள துவங்க அவனோ அழுத்தமாக இருந்தான்... பழி  வெறியின் உச்சத்தில் அவன் இருந்தான்...அவனோ  இந்த ஒரு தருணதிற்காக தான் காத்து இருந்தான்...இந்த ஒரு நாள் அவனுடைய வாழ்கையில் முக்கியமான நாள்...இவ்வளவு நாள் அவன் இவளை பின் தொடர்ந்ததற்கும், தினகரனை அடித்ததற்கும் உலக நாதனை எதிர்த்ததற்கும் அவர்களுக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்ததற்கும் எல்லாம் ஆணி  வேரானது இந்த நாள் அவனை பொறுத்தவரை அதி முக்கியமானது...அப்படி இருக்க அந்த கார் நேராக  பஞ்சாயத்து செய்யும் இடத்துக்கு சென்று நின்றது.....

அவளுக்கு அந்த ஊருக்குள் நுழைந்ததுமே படபடக்க துவங்கி விட்டது ஏனென்றால் தவறு அவன் பக்கம் முழுவதுமாக இருந்தாலும் அவளுக்குள் பயம் ஏனெனில் அவள் சூரிய பிரகாஷ் காதலித்திருக்கிறாளே அந்த தவறு அவளின் அடி நெஞ்சில் அவளுக்கு ஒரு பயத்தை கொடுத்தது..

இங்கு ஊரெல்லாம் தேடி கலைத்து போன உலகநாதனின் குடும்பம் விடிந்தும் ஒரு பொட்டு உறக்கம் இன்றி மகளை எங்கு தேடுவது என தெரியாமல் திணறிக் கொண்டு இருந்தார்கள்..ஊரில் உள்ள அனைவரும் தங்களை வேடிக்கை பார்ப்பது போல அவருக்கு தோன்றியது..

அவர்களுடைய வாழ்க்கையில் இதுதான் முதல் முறை இப்படியான அடியை அவர்கள் வாங்குகிறார்கள் இதை எப்படி கையாள்வது என அவர்களுக்கு தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும் பிறருக்கு கொடுத்தே பழக்கப்பட்ட குடும்பம் முதன் முறையாக அடிவாங்கி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்... உலகநாதன் திகைத்து நின்றார்..மகள் எந்த தவறும் செய்ய மாட்டாள் என கருதி தொலை தூரம் சென்று படிக்க வைத்தது தவறோ என கருதினார்..

இப்போதும் மகள் மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை ஆனால் கன்மணியை கடத்தும் அளவுக்கு யார் இருக்கிறார்கள் என்பது தான் புரியவில்லை..

கார் நின்றதும் அதுவரை தன்னிலையை எண்ணி வருந்தி கொண்டு இருந்தவள் அவளுடைய ஊர் எல்லையை அடைந்ததும் அவளுடைய குடும்பத்தை பார்க்க வேண்டுமே அவர்கள் தன் நிலையை பார்த்தால் என்ன நினைப்பார்களோ என்றெல்லாம் அவள் யோசித்தாள்..பாதுகாப்பாக அவளுடைய ஊருக்கு அவன் அழைத்து வந்தது பழி வாங்க தானோ என அவள் எண்ணினாள்..

அவன் தான் தெளிவாக கூறியிருந்தானே உன் குடும்பத்தை நாசம் செய்வதற்காகத் தான் உன்னை காதலிப்பது போல நாடகம் ஆடினேன் என்று கூறினானே!! நாடகம் மட்டுமா ஆடினான் அவளுடைய வாழ்க்கையிலேயே விளையாடிவிட்டானே!!! அதனால் அவளுக்கு அவளின் ஊர் எல்லையை மிதிக்க அவ்வளவு அவமானமாக இருந்தது.. அவளுக்கு அவ்வளவு பாதிப்பு  இருந்தாலும் அவளுடைய தற்போதைய மனநிலை அப்படித்தான் இருந்தது....

ஏனெனில் அவளுடைய அப்பாவின் கௌரவம் பாதிக்கப்படுமே என்ற எண்ணம் அவளுக்கு இல்லாமல் இல்லை இந்நேரம் அவரது ஊரில் என்ன கதை எல்லாம் கட்டி வைத்திருக்கிறார்களோ என்றெல்லாம் பதறி அவனிடம் அவளோ ,"தயவு செஞ்சு கெஞ்சி கேட்கிறேன் என்னை ஏதாவது கிணத்துலயாவது தள்ளிவிட்டு கொன்னுடு இல்ல எங்கேயாவது கொண்டு போய்விடு நான் ஏதாவது செஞ்சு பொழச்சிக்கிறேன் ஆனால் இங்கே மட்டும் வேண்டாம் என்னை எங்கேயாவது கொண்டு போய் விடு ப்ளீஸ்.. எப்படியும் நீ பழி வாங்கத்தான் இதெல்லாம் செஞ்சேன்னு சொல்லிட்டேன் இனி பேச எதுவும் இல்லை உன்கிட்ட எந்த நியாயத்தையும் நான் எதிர்பார்க்க முடியாது பழிவாங்குதலோட முடிவு சாவு அப்படின்னா என்னை இப்பவே கொன்னுடு ஆல்ரெடி வெறும் சடலம் போல தான் உன் கூட இருக்கேன் உண்மையாலுமே என்னை சடலம் ஆக்கிடு தயவு செஞ்சு என்னுடைய ஊர்ல மட்டும் என்னை கொண்டு போய் விடாதே" என்று அவள் கேட்டாள்...

அதைக் கேட்டு அவனோ அவளை ஒரு மாதிரி பார்த்து,"ஏன்" என கேட்க

"என்னால என்னோட குடும்பத்தை இந்த நிலையில் பேஸ் பண்ண முடியாது..." என மனம் வருந்தி அவள் கூறினாள்..

அதை கேட்டவன் முகம் மேலும் இறுகி, அவனுடைய தாடையை லேசாக நீவியப்படியே அவளை நக்கலாக பார்த்து,"வெரி சாரி.. என்னால நீ சொன்னதை செய்ய முடியாது... ஏன்னா உன் குடும்பம் அசிங்கப்படுறதுக்காகத்தான் உன்னை கூட்டிட்டு வந்து இருக்கேன் கூனிக்குறுகி உன்னுடைய குடும்பம் இந்த ஊர் முன்னாடி நிக்கணும் அதுதான் எனக்கு வேணும் அவ்வளவு தான் சிம்பில்" என்று கூறிய அவனும் அவளை பார்க்க காரில் வைத்து அவன் நேற்று கட்டிய தாலி அவள் கழுத்தில் இன்னும் இருந்தது..

அதைக் கண்டவன் என்ன எண்ணினானோ,"ஓகே உனக்கு தான் தெளிவா தெரிஞ்சுடுச்சு நான் உன்னை பழி வாங்கத்தான் இதெல்லாம் செய்தேன்னு..நேத்து கார்ல கட்டினேன் கார்லயே இதுடைய வேலையை முடிச்சுக்கிறேன்" என்று கூறியவன் அவன் அணிவித்த அந்த மஞ்சள் கயிறை அவனே அவிழ்த்தான்..

மிகச் சரியாக கூற வேண்டும் என்றால் அவள் கழுத்தில் இருந்து விடுக்கென்று பிடுங்கினான் என்று தான் கூற வேண்டும்...

அவளோ அதிர்ந்தாள்..அதுவரை இருந்த பலம்  போனது போன்ற உணர்வு.. அவனுக்கு பொய் என்றாலும் அவள் உண்மையாகத்தான் அந்த தாலியை ஏற்று இருந்தாள்..

அவசரமாக அவன் அணிவித்து இருந்தாலும் அவள் மனம் ஒத்து தான் அதை வாங்கி இருந்தாள்.. அவள் எவ்வளவு பெரிய முட்டாளாக இருக்கிறாள் அல்லவா???

அவளின் கண்களில் வேகமாக கண்ணீர் சுரக்க இனி அழக்கூட திராணியில்லாமல் அவள் அவனை பார்க்க அவனோ ,"இந்த கயிறு இனி உனக்கும் தேவைப்படாது எனக்கும் தேவைப்படாது" என்று மேலும் அவளுடைய மனதை நோகடிக்க அவள் மேலும் அடிபட்டு போக அதையெல்லாம் தனக்கு பொருட்டில்லை என்பது போல ,"காரில் இருந்து இறங்கு.. நம்ம டூர் முடிஞ்சுது.. இனி இந்த பயணம் தொடராது இங்கேயே முடிச்சுக்கலாம்..." என்று கூற அவள் வார்த்தைகள் அவளை சுட்டாலும் அவனிடம் கைகூப்பி," தயவு செஞ்சு என்னை எங்கேயாவது விட்டுடு" கெஞ்சினாள்..

அவளுக்கு மிகவும் அவமானமாக இருந்தது... அவனிடம் இப்படி ஒரு கேள்வியை கேட்க ஆனால் அவளுக்கு வேறு வழி இல்லை அவள் ஊர் ஒரு பட்டிக்காடு என்று கூறலாம்..

அவர்கள் இன்னும் பழைய பஞ்சாங்கத்திலேயே இருக்கும் ஆட்கள் அந்த ஊர்களில் இருக்கும் இன்றைய தலைமுறையினர் படித்திருந்தாலும் கடந்த தலைமுறையில் ஒரு சிலர் படித்திருந்தாலும் காரியம் இல்லை..ஏனெனில் ஒரு சில சட்ட திட்டங்கள் அவர்களாகவே அவர்களுக்குள் வகுத்து இருக்கிறார்கள்.. அந்த சட்ட திட்டத்தை மீறி அவர்கள் செயல்பட மாட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.. அப்படி இருக்கையில் ஊருக்கு களங்கம் விளைவிக்கும் எந்த காரியத்தையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அப்படி இருக்க அந்த ஊருக்கே பஞ்சாயத்து தலைவராக இருக்கும் அவளுடைய தந்தை இதை எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறார்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top