Share:
Notifications
Clear all

இராட்சதன் 18

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 531
Thread starter  

 

அத்தியாயம் : 18

பிறகு ஊரே கூட உலகநாதனுக்கு அதிர்ச்சி தான் என்றாலும் சிதம்பரம் மீது உள்ள பழி வெறி அதிகமாகி விட அவரோ இது தான் சமயம் என கருதி பஞ்சாயத்தை கூட்டினார்... ஏனெனில் ஊரில் எந்த பஞ்சாயத்து நடந்தாலும் ஊரே தன்னை மதித்தாலும் இந்த இருவர் மட்டும் மதிக்காமல் இன்னும் அந்த வீட்டில் மாடு மேய்க்கும் ஒருவனாகத்தான் அவரை பார்த்துக் கொண்டு இருப்பது போல ஒரு பாவம் உலகநாதனுக்கு எப்போதும் உண்டு அது அவர்களை தாழ்வு மனப்பான்மை என அவருக்கு புரியவில்லை..

இருந்தாலும் அண்ணனும் தம்பியும் அவரை ஒரு துச்சமாகத்தான் மதித்திருந்தார்கள் என்று தான் கூற வேண்டும் காலில் கிடக்கும் செருப்பு கிடைக்கும் மரியாதை கூட அவர்கள் உலகநாதன் மற்றும் காவிரிக்கு கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை..

அப்படி இருக்க இந்த விஷயம் எல்லாம் அவருடைய மனதுக்குள் வந்து போனது..

எப்போதும் போல பஞ்சாயத்து கூட அப்பனும், மகனும் சேர்ந்து ஒரு பெண்ணின் மானத்தை விற்றனர்..அவளுக்கு தன் மீது ஆசை என்று தினகரன் கூறி விட பஞ்சாயத்து தலைவர் தன் மகனை ஊரார் முன் திட்டுவது போல திட்டி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்ற முடிவை எடுக்க அந்த கிராமத்தில் இருக்கும் படிக்காத மக்கள் எல்லாம் இதுதான் சரியான முடிவு என்று கூற சிதம்பரம் மற்றும் ரத்தினம் தான்," தங்கள் மகளுக்கு திருமணம் எல்லாம் தேவையில்லை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என கோபத்தோடு கூறினார்கள்.. ஆனால் அதை ஊரார் எதிர்க்க, "ஏன் உன்னோட அப்பா உன் தங்கச்சியை உலகநாதனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கலையா இது உன்னோட அப்பா போட்ட சட்டம் தானே.. இது வேறு யாரும் இல்லையே உன்னோட தங்கச்சி மகன்தான அவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கிறது இல்ல என்ன ஆகிட போகுது" என்று கூற அப்பாவின் பெயரை கூற குடும்ப மானமும் அதில் கிடக்க அவர்களுக்கு வேறு வழி இல்லாமல் போய் விட்டது.. ஊராரே திருமணம் செய்து வைத்தே ஆக வேண்டும் என்று முடிவு கட்டிவிட்டார்கள்..

பாவம் நித்யா அவளுக்கு எதுவுமே விளங்கவில்லை என்ன நடந்தது ஏது நடந்தது என எதுவுமே புரிப்படவில்லை அந்த அதிர்ச்சியில் இருந்து அவள் வெளியே வரவே இல்லை அவளுக்கு என்ன நடக்கிறது என்று கூட குறிப்பிடவில்லை அவளுடைய அப்பாவும் பெரியப்பாவும் அவளுடைய காலில் விழுந்து கெஞ்சி கதறுவதை கூட அவளால் உணர முடியவில்லை..அவள் மனம் எப்போதே செத்து இருந்தது..

ஊராரின் முடிவை மாற்ற முடியாமல் திருமணம் எளிமையாக நடத்தலாம் என முடிவு செய்த உலகநாதன் பஞ்சாயத்து கூடிய அன்றே தாலி கட்ட முடிவு செய்ய தந்தை பிறந்த மகன் என தினகரன் சபையில் தாலி கட்ட வேண்டும் எனில் சிதம்பரத்தின் சொத்துக்கள் எல்லாம் தன் பெயரில் மாற்ற வேண்டும் என்று தினகரன் கொடி பிடித்தான்..அதுவும் பெண்ணுக்காக அதுவும் கொடுக்க முன் வந்தார் சிதம்பரம்...கொடுக்க அனைவரும் வைத்தனர் என்று தான் கூற வேண்டும்..

ஆனால் நித்யா எல்லா விஷயத்துக்கும் அமைதியாக இருந்தாள்..எப்போது அவன் அவளை தொட்டாலோ அப்போதே செத்து விட்டாள் என்று தான் கூற வேண்டும்..

திருமணம் நடந்தது..தினமும் அவன் அவளை படுக்கையில் தொல்லை செய்தான்.. அதற்கு அவள் சம்மதிக்கவில்லை அவனும் அடித்தான் அதற்கும் அவளிடம் பதில் இல்லை அவள் மனதில் என்ன இருக்கிறது என அவளாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை...

அவளால் அவளுடைய அப்பாவையும் பெரியப்பாவையும் வெறுக்க முடியவில்லை அவர்கள் என்ன செய்வார்கள்??பாவம்? இந்த கும்பல் அவர்களை சூழ்நிலை கைதியாக்கி இந்த திருமணத்தை நடத்தி வைத்து விட்டார்கள் ஆனால் அவளால் எதையுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை...அவளால் அந்த வாழ்க்கையை சகித்து கொள்ள முடியவில்லை...மரம் போல ஆகி விட்டாள் திருமணம் நடந்த ஒரு வாரத்திற்கு மேல் அவளால் எதையும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை...

ஒரு நாள் மரணம் தான் தனக்கு உகந்தது என மரணத்தை தழுவினாள்..ஒரு பெண்ணை என்ன  எல்லாம் செய்ய கூடாதோ அது எல்லாம் செய்ய அந்த பெண் பொறுத்தது போதும் என திருமணம் ஆன ஒரு வாரத்தில் தன் இறுதி முடிவை எடுத்து கொண்டாள்...

இப்படி அவளுடைய வாழ்க்கையையும் தன் மகள் இறந்த சோகம் தாழாமல் அடுத்த ஒரு மாதத்தில் தன் உயிரையும் மாய்த்துக் கொண்ட சிதம்பரத்தின் உயிரையும் காவு வாங்கிய கயவர்கள் தான் இந்த உலகநாதன் மற்றும் தினகரன்... அப்படி இருக்கையில் அவர்கள் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் பொழுது அவர்களுடைய மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்தவே சூர்ய பிரகாஷ் இப்படி செய்தான்..அவனுக்கு அது தவறாகவே தெரியவில்லை.. உலகநாதன் என்ற ஒருவனை தாழ்வு மனப்பான்மை ஒரு குடும்பத்தையே சின்னாபின்னமாகிவிட்டது...

அவன் யார் என்று இங்கு அவன் தெரிவிக்க வரவில்லை ஆனால் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் அது மட்டும் தான் அவனுக்கு இருந்தது மரணம் என்பது அவர்களுக்கு தகுந்த தண்டனையாக இருக்கும் என அவன் கருதவில்லை அவர்கள் செய்தது ஒவ்வொன்றும் தவறு தான் என்பதை நாள்தோறும் அவர்கள் உணர வேண்டும் என்பதே அவனுடைய நோக்கமாக இருந்தது.

அப்படி திருமணம் என்ற பேச்சை மீண்டும் அந்த பஞ்சாயத்து குழுவில் எடுக்க அப்படி என்றால் ,"அவர்களுடைய முழு சொத்தையும் என்னுடைய பெயரில் எழுதி வையுங்க நான் அவரோட மகள கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று திமிராக கூறினான்.. அன்று உலகநாதன் முதல் தினகரன் வரை கூறிய அதே வார்த்தையை மீண்டும் திரும்பிப் படித்தான் சூரிய பிரகாஷ்...

அதை ஏற்க யாரும் தயாராக இல்லை குறிப்பாக உலகநாதன் அடுத்தவர் சொத்தை எல்லாம் சிறுக சிறுக ஆட்டையை போட்டு வைத்திருக்கும் அவர் மொத்தமாக மகளுக்காக தூக்கி கொடுத்து விடுவாரா என்ன அவரோ," எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை என் பொண்ணு வாழாவெட்டியா என் வீட்டுல இருந்தாலும் இருக்கட்டும் நான் இவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க மாட்டேன்" என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு சென்று விட்டார்...

அதை பார்த்து நக்கலாக சிரித்த சூரிய பிரகாஷ்,"இதே வாய் உன்னோட பொண்டாட்டியை கல்யாணம் பண்ணும் போதும் உன்னோட மகனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கும் போதும் எங்கே போச்சு அப்போ இந்த ஊர் சட்டத்திட்டத்தை எல்லாம் பத்தி பேசின இப்ப மட்டும் உன்னோட பொண்ணுக்கு ஒன்னுனதும் நீ துடிக்கிறியா??? உன்னோட பொண்ணை விட உனக்கு சொத்து தான் பெருசா போச்சு பார்த்துக்கோங்க மக்களே இவன் தான் உங்க ஊர் பஞ்சாயத்து தலைவர்.. இனியாவது இவனை மாதிரி ஆளுங்க சொல்றத கேளு அப்படியே ஆடு மாதிரி நடக்காமல் சுய புத்தியுடன் நடக்க பாருங்க இனி ஒரு சாவு இந்த ஊருக்கு வேண்டாம்" என்று கூறினான்..

சுற்றி நின்ற அனைவரையும் பார்க்க அங்கு தன் மானத்தை கூறு போட்டு விற்று கொண்டிருக்கும் யாரையும் பார்க்க மனம் இன்றி தலை குனிந்து நின்று கொண்டிருக்கும் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு தான் வந்த வேலை முடிந்து விட்டது என்பது போல ரத்தினத்திடம் மட்டும் சொல்லிவிட்டு அவன் அவ்விடத்தை விட்டு சென்று விட்டான் அந்த மாயவன்??? யார் இவன்??? எதற்காக அவன் இதையெல்லாம் செய்தான் ரத்தினத்துக்கும் அவனுக்கும் என்ன உறவு????

ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு விதி கூறுகிறேன் என்று கூறி மறு பெண்ணின் வாழ்க்கையை அழித்துவிட்டு செல்லும் இவனும் அத்தகைய மனம் உடையவன் தானே இவனுக்கும் தினகரனுக்கும் என்ன வித்தியாசம் பெண்ணின் உடலை புசித்து தான் பழிக்கு பழி வாங்க வேண்டுமா என்ன அல்லாமல் இவர்களால் இருக்க முடியாதா????

நித்யாவிற்காக பழிவாங்க வந்தவன் தன் உடலை புசித்து தன்னை அவமானப்படுத்தி துளியும் சம்பந்தமில்லாத தன்னிடம் அவனுடைய வீரத்தை காட்டி தன்னை வைத்து ஊரார் முன்னிலையில் தன் மானத்தை விற்று தன் உடலையும் புசித்து நல்லவன் போல பேசிவிட்டு செல்லும் இவன் எத்தகைய கயவன் என்றுதான் அவளுடைய மனம் கூறிக் கொண்டிருக்கிறது!!

இவர்களின் ஆட்டத்திற்கு பலியாடு கண்மணி தானா????



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top