Share:
Notifications
Clear all

இராட்சதன் 31

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 531
Thread starter  

அத்தியாயம் : 31

இனி உள்ளே சென்று தான் விவரிக்க வேண்டும் என்ற நிலையில் அவள் உள்ளே சென்று ரிப்போர்ட்டை பிரித்து அவனிடம் காட்ட அவனும் ,"ஏன் ஜூஸ் வேண்டாமென்று சொன்ன??" என்று கேட்டான்

அதை கேட்டதும் அவள் திடுக்கிட அவனோ ,"உன்னை தான் கேட்கிறேன்.."நாங்க ஒன்னும் உன் அப்பன் அண்ணன் மாதிரி கிடையாது விஷம் எல்லாம் கலந்து கொள்ள மாட்டோம்" என்க

அவளோ பதில் சொல்லாமல் உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் அதை அடக்கி கொள்ள ,"நான் சாப்பிட்டா என்ன சாப்பிடாட்டி உங்களுக்கு என்ன???" என கேட்டாள்..

அவளுக்கு அவளுடைய அப்பா மற்றும் தமையனை பேசியது பிடிக்கவில்லை இவன் மட்டும் ஒழுக்கமா பெரிதாக அவர்களைப் பேச வந்து விட்டான் என அவள் நினைத்தாள்..

அவனோ,"உனக்கு தான் பிடிக்குமே அப்புறம் ஏன் பிடிக்காதுன்னு பொய் சொன்ன??? என் கூட சுத்தும் போதெல்லாம் பைனாப்பிள் ஜூஸ் இல்லாம இருக்கவே மாட்டியே இப்ப மட்டும் என்ன பிடிக்கல?? என்ன உண்ணாவிரதமா??" என்று அவன் கேட்டான் ..

"ஆமாம் அப்போ உங்களையும் பிடிச்சது இப்போ உங்களை சுத்தமா பிடிக்கல அந்த மாதிரி தான் இதுவும்.. சும்மா பேசாதீங்க தேவையில்லாமல் என்கிட்ட அது இதுன்னு கேள்வி கேட்டுட்டு இருக்காதீங்க.. உங்களுக்கு என்ன தேவையில்லாமல் என் மேல அக்கறை நான் குடிக்கலைன்னா உங்களுக்கு என்ன வந்தது? உங்க வேலை என்னவோ அதை பாருங்க சார் என்னை பார்த்து எனக்கு தெரியும் நான் சாப்பிடாமல் செத்துப் போனா கூட நீங்க திரும்பி பார்த்துடாதீங்க அதுக்கு கூட அருகதை இல்லாத ஆள் நீங்க என் வாழ்க்கையிலேயே வெறுக்கிற ஒரே ஆள் நீங்க மட்டும் தான்" என்று அவள் கூற அவனுக்கு அவளுடைய பேச்சு எரிச்சலை கொடுத்தது பற்களை கடித்தபடி ,"நீ ஓவரா பண்ற!!" என்று கூற

அவளோ ,"ரிப்போர்ட்டை மட்டும் பார்த்துட்டு பதில் சொல்லுங்க நான் கிளம்பனும்" என்று கூற அவளின் பேச்சு அவனின் ஈகோவை தட்டி எழுப்பியது அவள் பதில் கூறியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது..

"நான் கேட்ட கேள்விக்கு பதில் வேணும்.. இல்லேன்னா நீ எங்க இருந்து போக முடியாது என்னை பத்தி உனக்கு சுத்தமா தெரியாது பாவமா நீ என்ன சொன்னாலும் சிரிச்சு சிரிச்சு கேட்டுட்டு இருந்த மாறன்னு நினைச்சுட்டு இருக்காத நான் சூரிய பிரகாஷ்.. எனக்கு ஒன்னு வேணும்னா வேணும் வேண்டாம்னா வேண்டாம் இப்போ எனக்கு பதில் தெரிஞ்சே ஆகணும் இல்லனா இந்த இடத்தை விட்டு நீ எங்கேயும் போக முடியாது" என அவன் கூற அவளுக்கு கோபம் வந்து விட்டது..

அது எப்படி செய்வது எல்லாம் செய்துவிட்டு என்ன இவன் அடக்கலாம் என்ற எண்ணம் வந்தது யார் இவன் எனக்கும் எவனுக்கும் என்ன சம்பந்தம் பழிவாங்கி விட்டு போய்விட்டான் அல்லவா அதோடு நின்று கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அவளுக்கு வந்தது..

"உங்களுக்கு என்ன தெரியணும்??? நல்லா சொல்றேன் கேட்டுக் கோங்க உங்க பழி வாங்கிற எண்ணத்துக்கு இறையாகி இப்போ நான் கர்ப்பமா இருக்கேன் போதுமா எனக்குனு ஒரு உறவு கிடைச்சு இருக்கு அந்த உறவால தான் நான் உயிர் வாழ வேணும்னு இருக்கேன் அதை கெடுத்துக்க சொல்றீங்களா???.. அந்த ஜூஸ் ,ஃப்ரூட் இப்போ சாப்பிட்டா எனக்கு ஒத்துக்காது அதனால தான் நான் சாப்பிடல.. இப்போ உண்மை தெரிஞ்சிடுச்சு இல்ல உங்க வேலை என்னவோ அது முடிஞ்சதுல.. எங்க குடும்பத்தை அசிங்கப்படுத்திட்டீங்க என்னை நாசம் செய்துவிட்டீர்கள் நீங்க என்ன நினைச்சீங்களோ அதெல்லாம் நடந்துருச்சு இல்ல அப்புறம் எதுக்கு என் பின்னாடி சுத்திட்டு இருக்கீங்க?? நான் என்ன சாப்பிட்டா உங்களுக்கு என்ன?? என்ன சாப்பிடாட்டி உங்களுக்கு என்ன??" என வெகுண்டு எழுந்தாள்..

அதை கேட்ட அவனோ நெற்றியை நீவி விட்டபடி அவளை அழுத்தத்துடன் பார்த்து நக்கலாக,"நீ கர்ப்பமா இருக்கன்னு யார் சொன்னா?? " என கேட்க

அவளோ என்ன மடத்தனமான கேள்வி இவன் கேட்கிறான் ,"யார் சொல்லணும் அது எனக்கே தெரியும்" என்று கேட்க

"நீ  கர்ப்பம் எல்லாம் இல்ல வேணும்னா சொல்லு குழந்தை தரேன் இப்போதைக்கு உன் வயித்துல எதுவும் கிடையாது" என்று கூற அவளோ அதிர்ந்தாள்..

"என்ன சொல்றீங்க" என அதிர்ச்சியுடன் கேட்க,

"ஆமாம் அன்றைக்கு எதுவுமே நடக்கல.. ரொம்ப ஆசையா இருந்தா சொல்லு அடுத்த ஒரு மாசத்துல குழந்தை வந்துடும்" என்று அவன் கூற

அவளோ அதிர்ச்சி மாறாமல் ,"இல்லையே அன்னிக்கு நடந்துச்சுல" என்று கூற அவனும் ,"அப்படி நீ நெனச்சுக்கிட்டா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்??? மயக்க மருந்து கடந்த ஜூசை குடிச்சிட்டு படுத்து தூங்கி காலைல எந்திரிச்சு டிரஸ் எல்லாம் விலகி இருக்கிறத பார்த்து கற்பனை பண்ணினா அதுக்கு நானா பொறுப்பு???" என்று அவன் கூறினான்.. அவன் கூறியதைக் கேட்டு பேரதிர்ச்சி அவள் முகத்தில் உண்டானது..

ஆம் அவன் சொல்வது உண்மைதான் அன்று எதுவுமே நடக்கவில்லை அறைக்குள் இருவரும் போனது உண்மை அவன் மஞ்சத்தில் படுக்க வைத்தது உண்மை அவளை பயம் காட்ட வேண்டும் என்று அவள் மீது சரிந்தான் அதற்குள் அவள் மயக்கம் அடைந்து இருந்தாள்..இது தான் நடந்தது..அவள் நடந்து விட்டது என்று எண்ணியது எல்லாம் அவளின் அதீத கற்பனை ஆகும்..

ஆம் அவர்கள் இருவரும் ஹோட்டலுக்கு வரும் முன்னரே அவன் கட்டாயப்படுத்தி அவளை ஒரு ஜூஸ் குடிக்க வைத்திருந்தான் அதில் மயக்கம் இருந்து கலந்திருக்க அவள் மிகச் சரியாக அவன் எதிர்பார்த்தது போலவே மயங்கியும் விட்டாள் மயங்கியவளின் ஆடைகளை எல்லாம் அலங்கோலமாக்கியவன் அவளின் உடல்களிலும் நக கீறல்களை போட்டான் கிட்டதட்ட ஒரு பலாத்காரம் நடந்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்குமோ அதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் செய்திருந்தான்..அவனின் விரல் நகத்தை தவிர வேறு எதுவும் அவன் செய்யவில்லை..

பிறகு அவனும் ஆடைகளை எல்லாம் கலைந்து அவளோடு படுத்து விட்டான் என்பது மட்டும்தான் உண்மை..

அதாவது அவளின் ஆள் மனதுக்குள் அவள் மிகச் சரியாக மயக்கம் போடும் தருணத்தில் அவள் மீது அவன் படருவதை தான் அவள் கண்டிருந்தாள் அதற்கு பிறகு அவள் மயக்கத்திற்கு சென்ற பின் இது போல எல்லாம் நடந்து விட்டது என்ற அவளின் எண்ணம் தான் அவளை அப்படி நம்ப வைக்க காரணம்...

ஏற்கனவே அவளுக்கு ஒரு விசயம் நடக்க போகிறது என்றால் மனதிலேயே இப்படி நடந்து இருக்கும் அப்படி நடந்து இருக்கும் என அவளே கற்பனை செய்து கொள்வாள்..அது அவனுக்கு தெளிவாக தெரியும் அதற்காக தான் சாந்தி மூகூர்த்தம் நடக்க போகிறது என எடுத்து விட்டு இருந்தான்..

அவள் மனதில் பயத்தை விதைத்து கொண்டே அவன் வர அவளோ இதெல்லாம் நடக்கப் போகிறது அவன் என்னை இப்படி எல்லாம் கொடுமைப்படுத்தப் போகிறான் என்றெல்லாம் அவள் எண்ணிக் கொண்டே வர, அதே போல அவள் கண் விழித்து காலையில் பார்க்கும் பொழுது அனைத்து சம்பவங்களும் அவள் நினைத்தது போலவே நடந்திருக்க அவளின் மனக்கண்ணிலும் இப்படித்தான் நடந்திருக்கும் என்ற ஒரு பிரம்மை அவள் மனதில் அவன் எண்ணியது போல உண்டாக, அவனும் அதை சிறப்பாக அவள் மனதில் பதிய வைக்க அவளின் கற்பனைக்கு வித்திட்டான் சூர்ய பிரகாஷ் என்று தான் கூற வேண்டும்..

ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு வேண்டி போராட அல்லது பழி  வாங்க வந்து இருக்கும் அவன் இப்படி ஒரு காரியத்தை செய்ய அவன் மனம் ஒப்பு கொள்ளவில்லை அவனின் வளர்ப்பு அப்படி செய்யவும் செய்ய வைக்காது என்று தான் கூற வேண்டும்..மேலும் அவளின் ஆடைகளை அலங்கோலம் செய்ததும் அவளின் தேகங்களில் அவனின் நக கீறல்களை பதிய வைத்தது மட்டும்தான் அவனுடைய வேலையாக இருந்தது..

மேலும் இப்படி ஒரு காரியம் நடந்து விட்டது என்பதை அவன் அவள் மனதில் ஆழமாக பதிய வைத்தான் அவளும் அதை தெளிவாக நம்பி விட்டாள் ஏற்கனவே அவளுக்கு இருந்த பயத்தில் இப்படித்தான் நடந்திருக்கும் அப்படித்தான் நடந்திருக்கும் என்ற எண்ணத்தின் அதீத வெளிப்பாடில் அவளும் தனக்கு இப்படி ஒரு காரியம் நடந்து விட்டது என்பதை உண்மை என நம்பி விட்டாள்..

மேலும் அன்றைய நாள் அவளின் வீட்டில் அவள் காலையில் உண்ட உணவு சரியில்லாமல் போக வாந்தி எடுக்கவும் மேலும் அதன் அசதியில் தலை சுற்றுவது போல இருக்க இது போதாது என்று அவளின் நாட்களும் தள்ளி போயிருந்தது அவளுக்கு ஏற்கனவே ரெகுலரான பீரியட்ஸ் இல்லை அதையெல்லாம் அவள் மறந்து விட்டாள்..

இதுதான் காரணம் என நம்பியும் விட்டாள்.. ஆனால் அவள் ஒன்றை மறந்து விட்டாள் அன்றைய நாள் மட்டும்தான் அவள் வாந்தி எடுத்திருந்தாள் அவளுக்கு தலை சுற்றி இருந்தது மற்றபடி அவளுக்கு ஒரு உடல் அசௌகரியமும் ஏற்படவில்லை.. அவளாக அவள் வயிற்றில் ஒரு கரு வளர்ந்து இருப்பதாக கற்பனை தான் செய்து கொண்டு வாழ்ந்து இருக்கிறாள் என்பதுதான் உண்மை...

அவன் கூறியதை கேட்ட அவளின் அதிர்ச்சி மாறாமல் இருக்க," அப்போ அன்னிக்கு எதுவும் நடக்கலையா???" என அவள் கேட்க

"ஏன் ஏதாவது நடக்கணுமா?? வேணும்னா சொல்லு நடத்தி காட்டிடுறேன்" என அவன் பதிலுக்கு கேட்க

அவள் முகத்தில் ஏமாற்றம் மிஞ்சியது.. ஒரு பக்கம் தனக்கு எதுவும் நடக்கவில்லை என்று சந்தோஷப்படுவதா இல்லை குழந்தை இருக்கும் என கருதி வாழ்ந்து கொண்டு இருந்த அவளுக்கு குழந்தை இல்லை என்று வருத்தப்படுவதாக என அவளுக்கு தெரியவில்லை..

தன்னை இப்படி பைத்தியக்காரி நிலைக்கு ஆளாக்கிய இவன் மீது கோபம் தான் வந்தது.. ஆனால் அவனோ சொல்வதெல்லாம் சொல்லிவிட்டு ஒரு சிகரெட்டை எடுத்துக்கொண்டு பால்கனிக்கு சென்று ஊத துவங்கி விட்டான்.. இனியும் அவளின் கற்பனைக்கு அவன் தீனி போட விரும்பவில்லை அதனால் விசயத்தை போட்டு உடைத்து விட்டான் சூர்ய பிரகாஷ்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top