இராட்சதன் 23
அத்தியாயம் : 23
அதற்குள் அவளோ துவண்டு போக அதை பார்த்ததும் இளகாத
அவன் நொடி பொழுதும் யோசிக்காமல் அவள் கன்னத்தில் ஓங்கி அறைய அதற்குள் காவேரி சத்தம் கேட்டு ஓடி வர முயல அதற்குள் உலகநாதன் அந்த இடத்திற்கு வந்தார்..
அங்கு மகளின் முகமும் அவளின் செய்கையுமே அவள் கருவுற்று இருக்கிறாள் என்பதை அவருக்கு உணர்த்த அது வேறு அவருக்கு கோபத்தை கொடுக்க அதற்குள் ஓடிவந்த காவேரி," டேய் விடுடா.. பாவம்டா அவ இந்த நிலைமையில அவளை ஒன்னும் செஞ்சுடாத" என்று மகளின் நிலையை கண்டு பதறி ஓட ,எங்கே இந்த பக்கம் உலகநாதன் விட்டால் தானே உலகநாதன் கையில் தான் காவிரியின் தலைமுடி இருந்தது..
இத்தனை நாள் அடக்கி வைத்த கோபத்தை அவர் இன்று கொட்டலாம் என்று முடிவு செய்துவிட்டாரோ என்னவோ மகளின் நிலையை கண்டு ஆத்திரம் கொண்டு ," என்னடி உன்னோட மகள் என்னை மேற்கொண்டு அசிங்கப்படுத்த பார்க்கிறாளா???" என்க
அவரோ ,"என்னை விடுங்க நான் அவ கிட்ட போகணும்" என்று காவேரி கடுப்பாக கூற
"என்னடி நானும் பார்த்துட்டு இருக்கேன் ஓவரா பேசிட்டு இருக்க.. என்ன கோபம் வருதா எரிச்சல் வருதா பொட்டச்சிக்கு அதெல்லாம் வரக்கூடாது.. பொம்பளைன்னா அடங்கி வீட்டுக்குள்ள இருந்து தான் ஆகணும்.. இதோ இந்த கேடுகெட்டவளை வெளியே அனுப்பி படிக்க வச்சதுக்கு என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கான்னு பார்த்தல்ல??? இன்னும் அவளுக்கு பத்தல என்னைய அசிங்கப்படுத்த இதோ அவன் கூட படுத்து வயிற்றை நிறைச்சிருக்கா.. நீ என்ன அவளை கொஞ்ச போறியா??
என்ன நெனச்சிட்டு இருக்க?? தொலைச்சுடுவேன் தொலைச்சு நான் யாருன்னு தெரியும்ல!!
எங்கிருந்து வந்துச்சு இந்த தைரியம் எல்லாம் வந்து பேசிட்டு போனானே ஊர் பேர் தெரியாத ஒரு பொறுக்கி நாய் அவன் கொடுத்த தைரியமா??? பஞ்சாயத்து தலைவர் பதவி இருந்த வரைக்கும் தான் அடக்கி வாசிச்சேன்.. இனி எனக்கு அப்படி இருக்கணும்னு அவசியம் கிடையாது இதோ வந்த வேலை முடிஞ்சிடுச்சு அவன் போயிட்டான் இல்ல.. நீங்க இங்கதான் இருக்கீங்க என்னால எதுவும் பண்ண முடியாது நினைச்சுட்டு இருக்கீங்களா???
எனக்கு நான் நினைச்சது தான் நடக்கணும் நான் அதுக்காக என்ன வேணாலும் பண்ணுவேன் அப்படித்தான் உன்னையும் கட்டிக்கிட்டேன் இந்த சொத்தை எல்லாம் வாங்கினேன் புரியுதா என்னோட பழைய அடி என்னன்னு உனக்கு தெரியும்ல மறுபடியும் வாங்கிடாதே..
இந்த மரியாதை பணம் இந்த போதையிலேயே நான் வாழ்ந்துட்டேன். அந்த போதையை விட்டு என்னால வரவும் முடியாது வரவும் நான் விரும்பல என்ன திமிரு இருந்தா உன் பொண்ணு எவன் கூடயே போய் படுத்துட்டு புள்ளைய வாங்கிட்டு வருவா அவன் வந்து ஊருக்குள்ள என்னை அசிங்கமா பேசுவான் அதை பார்த்துட்டு கண்டவன் எல்லாம் என்னை பேசினால் நீயும் பேசுவியா???" என கேட்டவர் தன் மகனை கண்களாலேயே சைகை செய்து வரச் சொன்னார் அவனும் ஆத்திரத்தோடு மீண்டும் அவள் கன்னத்தில் ஒரு அறைந்தவன் அவள் சுருண்டு விழுந்து விட்டாள் என்பதை உறுதி செய்துவிட்டு தன் தந்தையின் பின்னால் கோபத்தோடு சென்றான்...
அவர்கள் இருவரின் முகமே ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதை காவிரிக்கு உணர்த்த மகளோ கீழே சுருண்டு விழுவதை பார்த்து வேகமாக மகளை எடுத்து தன் மடியில் படுக்க போட்டவர் கண்ணீர் விட்டு கதறினார்... பிறகு அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்து அவளுக்கு குடிக்க கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தினார்...
அந்த சமயம் அறைக்கு வெளியே பேச்சு சத்தம் கேட்டது..
"டேய் தினகரா இனி இவளை உயிரோடு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை கல்யாணம்தான் பண்ணி கொடுக்கல கொலை பண்ண கூடாதுன்னு இல்லையே இந்த உலகநாதன் பெத்த பொண்ணு வேற ஒருத்தன் கூட போய் இருந்துட்டு வந்தா அதுக்கு இந்த உலகநாதன் ஆத்திரத்தில கொன்னதா சரித்திரம் சொல்லட்டும்டா எனக்கு மானம் மரியாதை தான் முக்கியம் மானம் மரியாதைக்கு வேண்டி நான் என்ன வேணாலும் பண்ணுவேன்னு இந்த ஊர் உலகத்துக்கு நான் நிரூபிக்கணும் டா இவள இனி உயிரோடு வைத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது இவ கதையை முடிக்க வேண்டிய நேரத்துல நான் முடிச்சிடுவேன்.. இவளால என்னோட மானம், மரியாதை எல்லாம் போயிடுச்சு இனி அதை எப்படி எடுக்கணும்னு நான் யோசிக்கணும் அதுக்கு இதோ இந்த கேடுகெட்டவ சாகனும் அவ சாவா கூடிய சீக்கிரத்துல" என்று கூற அந்த பேச்சு காவேரியின் காதில் விழ காவேரி பதட்டம் அடைந்தார்..
எங்கே தன் பெண்ணை கொன்று விடுவார்களோ என்ற பயம் அவருக்கு தொற்றிக் கொண்டது இங்கே இருந்தால் கண்டிப்பாக அப்படி ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என நினைத்த அவரோ தந்தையும் மகனும் வெளியே சென்று இருக்கும் சமயம் பார்த்து மகளிடம் வந்தவர் அழுது கொண்டிருக்கும் மகளை அணைத்து சமாதானம் செய்தார்..
"அழாத நடந்தது நடந்துடுச்சு இந்த பாவிக என்ன வேணாலும் பண்ணுவாங்க அம்மாவுக்கு ஒரு சத்தியம் பண்ணு. நீ சாக மட்டும் கூடாது எங்கயாவது போய் பிழைத்துக்கொள் இங்கே இருந்தால் இவனுக்கு கொன்னுடுவாங்க அரக்கனுங்க இவனுங்களை என்ன செய்ய பண்ணனும்னு எனக்கு தெரியும் நான் பாத்துக்குறேன் நீ எங்கேயாவது போய் பிழைத்துக்கொள் தயவு செய்து சாக மட்டும் செஞ்சிராதே இந்த பிறப்பு சாகறது கிடையாது... " என கணவன் மற்றும் மகன் ஏதாவது செய்து விடுவார்களோ என பயந்து மகளிடம் கூற மகளோ பயந்து போய்,"நான் தனியா எப்படி மா??? எனக்கு யாரை தெரியும்???அம்மா நீங்களும் வாங்க அம்மா" என்று கூறி அழுதாள்..
"நான் வந்தா இங்கே சரி வராது நான் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு நீ போ நான் வந்தா இங்கே சந்தேகம் வந்துடும் நீ தயவு செஞ்சு போ இங்கே இருக்காத இனியும் இருந்தா உனக்கு ஆபத்து தான்" என்று அவளிடம் பேசி அவளை ஊரை விட்டு இரவோடு இரவாக அனுப்பி வைத்தார் காவேரி..
அவளுக்கும் எங்கே போவது என்று தெரியாமல் அவளும் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள்..அவளுடைய அம்மா கொடுத்த பணம் கையில் இருக்க அதை வைத்து ரோட்டில் வரும் பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டாள்..
அந்த பஸ் எங்கு செல்கிறது என அவளுக்கே தெரியாது!! ஆனால் பஸ் செல்லுமிடம் அவளுக்கு கண்டிப்பாக ஒரு பாதுகாப்பான இடமாக தான் அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை!!
