இராட்சதன் 8
அத்தியாயம் : 8
அதே நேரம் கண்மணியின் கிராமத்திலே அரசியல் புரசலாக கிராமம் முழுவதும் விஷயம் தெரிந்து விட்டது.. கண்மணியை காணவில்லை கண்மணியை யாரோ கடத்தி சென்று விட்டார்கள்..
ஊரே உலகநாதன் வீட்டு முன் திரண்டு இருக்க உலகநாதனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை மகளை காணவில்லை என்பது ஒரு பக்கம் ஊராருக்கு தெரிந்து விட்டது என்று ஒரு பக்கம் மகளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பது வேறொரு பக்கம் என அவர் முழித்து கொண்டு இருந்தார்...
அவர் காலையில் எந்த இருக்கையில் அமர்ந்து இருந்தாரோ அதே இருக்கையில் தான் மாலை வரை அமர்ந்திருக்க காவேரி ஒரு மூலையில் அழுது புரண்டு கொண்டிருக்க தினகரனோ அவனுக்குத் தெரிந்தவரையில் விசாரிக்க வெளியே சென்று இருந்தான்..
அந்த நேரம் பார்த்து கண்ணாயிரம்," ஐயா இப்படியே ஒரே இடத்தில உட்கார்ந்திருந்தால் நமக்கு எந்த விஷயமும் தெரியாது தினகரன் வெளியே போயிருக்காரு அவர் வர்றதுக்குள்ள வேணும்னா நாம ஒரு எட்டு ரத்தினம் வீடு வரைக்கும் போயிட்டு விசாரிச்சுட்டு வந்துடலாமா???" என்க
உலகநாதனும் கண்ணாயிரத்தை பார்த்து ,"என்னை என்ன அவன் வீட்டு வாசப்படியை மிதிக்க சொல்றியா??? உனக்கே தெரியும் எனக்கும் அவனுக்கும் ஆகாதுன்னு" என்று கேட்டார்
"நமக்கு காரியம் ஆகணும்னா எங்க வேணாலும் மிதிக்கலாம் ஐயா யோசிச்சு பாருங்க நமக்கு முக்கியம் நம்ம பாப்பா தான் இன்னும் கொஞ்ச நேரத்துல பொழுது சாய்ந்துடும் ராத்திரி ஆகிடும்... இன்னும் எந்த தகவலும் நமக்கு சரியா வரல அப்படிங்கும் போது இப்பவே எல்லாரும் ஒன்னு கூடிட்டாங்க இந்த ராத்திரியும் நம்ம பாப்பா கிடைக்கலைன்னா ஊர் எப்படி பேசணும்னு நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை... நமக்கு இருக்கிற ஒரே சந்தேகம் ரத்தினம் கூட இருந்த அந்த பையன் தான்... எதுக்கும் ஒரு எட்டு போய் விசாரிச்சுட்டு வந்துடலாம் அதுக்காகத்தான் உங்களை கூப்பிடுறேன்.. என்றார்..
அதற்குள் உலகநாதனின் சொந்தக்கார நபர்கள் சிலர் ,"என்ன மச்சான் பொண்ணை காணோம்னு சொல்றாங்க பிள்ளையை இதுக்குத்தான் சொல்றது படிக்க வெளியூர்க்கெல்லாம் அனுப்பக்கூடாது என்று இப்ப பாருங்க எவ்வளவு சிரமம்" என்று அவர் கூறிய அதே டயலாக்கை திருப்பி கொடுக்க வந்திருந்தார்கள் அதைக் கேட்டவருக்கு முகம் எல்லாம் அவமானத்தால் கருத்தது..
அவருடைய வீட்டுக்குள்ளேயே அவரால் ஒரு ஐந்து நொடி இருக்க முடியாதபடி அனைவரும் மொய்த்துக்கொள்ள ஆரம்பித்து விட்டனர்... அவருக்கு மூச்சு முட்டியது.. சாதாரண சமயம் என்றால் அவர் இவர்களையெல்லாம் சமாளித்திருக்கும் விதமே வேறு ஆனால் அவரை நிலை குலைய வைக்கும் காரியம் நடந்திருப்பதால் அவரால் எதுவுமே பேச முடியவில்லை அவருடைய மூளையை மழுங்கி போனது போல அவருக்கு இருந்தது என்று தான் கூற வேண்டும்...
அதற்குள் காவேரி வந்து," நல்லா கேளு நாக்கை புடிங்கிக்கிற மாதிரி இந்த மனுஷன் கிட்ட கேளு பெத்த புள்ளையை காணோம்னு காலையிலிருந்து நான் தவியா தவிச்சுக்கிட்டு கிடக்கிறேன் இந்த ஆளு இங்கேயே இருக்காரு என்னோட புள்ள எங்க போனாலோ என்ன ஆனாலோ தெரியலையே"என்று அவர் வெடித்தார்... அதைக் கேட்டு மேலும் உலகநாதனின் சமநிலை குறைந்தது...
அவரும் ஒரு கட்டத்தில் ரத்தினத்தின் வீட்டு தன்னுடைய ஆட்களை எல்லாம் கூட்டி சென்று விட்டார்... எல்லோரும் கூறும்போது அந்த சந்தேகத்தையும் தீர்த்து விடலாம் என்று எண்ணினார் ஏனெனில் ரத்தினத்திற்கும் உலகநாதனுக்கும் ஏற்கனவே பகை இருந்தது அனைவரும் அறிவர்..
அது போதாது என்று அந்த சூரிய பிரகாஷ் உலகநாதன் மற்றும் தினகரனுடன் பிரச்சனை செய்து இருக்கிறான் அந்த வகையில் பார்க்கும்பொழுது ரத்தினத்திடம் விசாரிப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்பது போலத்தான் உலகநாதனுக்கும் தோன்றியது...
ரத்தினம் அனைவரும் வருவார்கள் என்று காத்திருந்தாரோ என்னவோ வீட்டின் முற்றத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்து இருந்தார் அனைவரும் கூடி வரும் போது கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டே ,"என்னையா எல்லாரும் என்னுடைய வீடு தேடி வந்திருக்கீங்க???" என்று கேட்க
"நம்ம உலகநாதன் அய்யாவோட புள்ள கண்மணியை காணோம்" என்று கூட்டத்தில் ஒருவர் கூற
அவரோ எகத்தாளமாக," அதுக்கு இங்க வந்து சொன்னா நான் என்ன பண்றது??? நான் என்ன போலீஸ் ஸ்டேஷன் வச்சு நடத்துறேன் ஆளாளுக்கு வந்து நிக்க" என்று கேட்க
அதைக் கேட்டதும் உலகநாதனின் முகம் இருந்தாலும்,"உங்க வீட்ல இருக்கிற உங்க சொந்தக்கார பையன் தான் கடத்தி இருப்பானோனு உலகநாதன் ஐயாவுக்கு சந்தேகமா இருக்கு" என்று கூற
ரத்தினமோ உலக நாதனை நக்கலாக பார்த்தபடி கண்ணாயிரத்திடம் ,"இது என்ன நீ கொடுத்த ஐடியாவா???" என கேட்டார்...
அவரோ அமைதியாக இருக்க, "நீ கூட இருக்கிற வரைக்கும் உன்னோட முதலாளி குடும்பம் உருப்படாது....உன்னோட முதலாளி பிள்ளைய காணும்னா அதுக்கு நாங்க என்ன பண்றது போய் போலீஸ்ல கேஸ குடு போ... இங்க வந்துட்டு கத்திட்டு இருக்க கூடாது ஊரை கூட்டிட்டு வந்தா நாங்க பயந்துடுவோமா என்ன நினைச்சிட்டு இருக்க??? என்னை அவமானப்படுத்த என்னோட மருமகன் மேல குறை சொல்றீங்களா?? இந்த ஆளு மக காணாம போனா அதுக்கு என் மருமகன் தான் காரணமா அந்த புள்ளையை என் மருமகன் நேர்ல பார்த்திருப்பானானே சந்தேகம் தான் இதுல அவன் தான் கடத்தினான்னு நீங்க எப்படி முடிவு பண்ணுவீங்க???" என்றார்...
"யோவ் தேவையில்லாமல் பேசாத அந்த பையன் எங்கே அதை மட்டும் சொல்லு" என்று உலகநாதன் கூற
"மரியாதை... மரி...யாதை கொடுத்து மரியாதை வாங்கணும் புரியுதா அவ என்னோட மருமகன் மரியாதை சரியா குடுக்கலேன்னா ஒருத்தன் தலையும் இங்கே இருக்காது" என்றவர் ,"உன்னோட மக கண்டவன் கூட போனதுக்கு என்னோட மருமகன் காரணம் ஆக முடியுமா??? எங்கே காணாமல் போனாலோ அங்க போய் தேடு போ. அஞ்சு நிமிஷம் தருவேன் ஒத்த பைய என் வீட்டு வாசல் முன்னாடி நிக்க கூடாது வந்துட்டானுங்க இந்த ஊர்காரங்களே வேண்டாம் என்று தான் எல்லாத்துலயும் ஒதுங்கி இருக்கேன் என்கிட்டயே உங்க சவடால காட்ட வந்துட்டீங்களா உங்க ஊர் பொண்ணை காணோம்னா நீங்க போய் தேடுங்கடா என் வீட்டு வாசல் முன்னாடி வராதீங்க.. யாராவது கடத்திட்டு போனாங்களா இல்ல அந்த புள்ளையே ஓடிப்போச்சான்னு சரியா விசாரிச்சுக்கோங்க" என்று கொதித்து எழுந்து கூறினார்..
பழைய பகை அவர் முகத்தில் தாண்டவம் ஆடியது..
