இராட்சதன் 7
அத்தியாயம் : 7
கால்களில் இரத்தம் கொட்ட ஆரம்பித்தது...காலை ஊன்ற கூட அவளால் முடியவில்லை.. கால்களை விட்டவன் அப்படியே கையை பிடிக்க ஆரம்பித்தான்...அதுவும் அழுத்தமாகத்தான் பிடித்தான்...
அவளின் கை வலித்தது...அவனின் முகமோ மிக சாதாரணமாக இயல்பாக அவளின் கையை பிடிப்பது போல வெளி தோற்றத்திற்கு தெரிந்தாலும் அவனின் பிடி இரும்பு பிடி ஆகி அவளின் கையை வலிக்க செய்ய அவளோ வலியால் துடித்து அவளின் கண்களில் கண்ணீர் வர அது எதுவும் தனக்கு பாதகம் இல்லை என்பது போல வாயில் இருக்கும் சிகரட்டை இழுத்து விட்டவன் அவளை பார்த்து முறைத்து கொண்டு அவளை குனிந்து தூக்கியபடி நடக்க துவங்க அவனின் எதிர் பாராத செயலை கண்டு அவளோ திமிர துவங்க அவனின் பிடி இறுகியதே ஒழிய குறையவில்லை என்று தான் கூற வேண்டும்..
இனி இந்த நான்கு அடி ஓட்டம் கூட அவளிடம் இருந்து வரக்கூடாது என்று தான் இந்த முடிவு என்னவோ இவன் புரியாத புதிராக இருக்கிறான் அது மட்டும் நிதர்சனம்!!!
அவள் அவனிடம்,"தயவு செய்து என்னை விடுங்க" என ஆயிரம் முறை கெஞ்ச அது ஒன்றும் அவனின் காதுகளை சென்றடையவில்லை...
அவனோ அவனின் இலக்கை நோக்கி சென்றவன் நேராக அந்த ஹோட்டலுக்குள் நுழைய அவனை கண்டதும் காவலாளிகள் தடுத்து நிறுத்தினர்..கூடவே அந்த மேனேஜரும் ஓடி வந்தார்...
அவன் இருக்கும் ஆத்திரத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்து இருப்பான் அந்த அளவுக்கு கோபத்தோடு அவன் இருந்தான் அப்படி இருக்க காவலாளிகள் தடுத்து நிறுத்தவும் அவனோ அவர்களை முறைத்துப் பார்க்க ,"சார் இது ஸ்மோக்கிங் ஃப்ரீ ஹோட்டல் இங்கே ஸ்மோக் பண்ண கூடாது" என்று கூற,
அவன் கைகளிலோ அவள் அவளுக்கோ மற்றவர்கள் முன்னிலையில் தன்னை இப்படி தூக்கிக் கொண்டு நிற்கிறானே அவளுடைய தேகம் எல்லாம் தகிக்க துவங்கியது... அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை நெளிந்து கொண்டே இருந்தாள் அவனுக்கு அது எல்லாம் பொருட்டே இல்லை...
அந்த சமயம் பார்த்து அவர்கள் தடுத்து நிறுத்தவும் அவனும்," ஸ்மோக் பண்ணுனா என்ன பண்ணுவீங்க??" என்று அவன் கேட்டான் .. ஏனெனில் அவனுடைய இயல்பான குணத்தை வைத்து அவனிடம் கேள்வி எழுப்புவது அவனுக்கு பிடிக்காத காரியம் அப்படி இருக்க இவர்கள் தடுத்து நிறுத்தவும் அவனுக்கு கோபம் வந்துவிட்டது...
"சார் ஃபைன் போடுவோம் சார்" என்று கூற ,"எவ்வளவு பைன்??" என்று அவன் கேட்க
"சார் 5000 சார்" என்று கூற அதைக் கேட்ட அவனும் அவளை இறக்கிவிட்டு அவனுடைய ஒரு கைகளிலேயே அவளை அணைத்த படி இல்லை பிடித்து வைத்த படி நின்றவன் அவனுடைய மறு கையால் ஐயாயிரத்தை எடுத்து அந்த ஹோட்டல் மேனேஜர் கையில் திணித்தான்..
"இப்போ நான் ஸ்மோக் பண்ணலாம் இல்ல" என்று கூற அவர்களுக்கு பதிலே இல்லை என்ன சொல்வது என்று தெரியவில்லை...
பிறகு அவர்களை எல்லாம் பார்த்து ,"லுக் என்னை பற்றி தெரியாமல் பேசிட்டு இருக்க நான் என்ன பண்ணனும் என்ன பண்ண கூடாதுன்னு நான் தான் டிசைட் பண்ணுவேன் புரியுதா??? இதே இடத்துல 24 மணி நேரம் நான் புகை பிடிக்கலாம் அதுக்கு உங்க பர்மிஷன் இனி தேவை இல்லை புரியுதா???" என்றான் அவர்களோ ,"சாரி சார்" என்றனர்..
அவனோ அதை கண்டு கொள்ளாமல் இருக்க அவர்களோ முழிக்க அவனோ ,"இங்கே ரூம் போன வாரமே புக் பண்ணிட்டேன் இல்லாட்டின்னா அவ்ளோ தான்.. ராபர்ட் தன இந்த ஹோட்டல் ஓட ஓனர் என்னைப்பற்றி தெரியணும்னா அவன் கிட்ட கேட்டு பாருங்க.. என்னை தடுத்ததுக்கே உங்களை ஏதாவது பண்ணி இருப்பேன் போனா போகுதுன்னு விடுறேன்"என கூறியவன் அந்த ஹோட்டல் மேனேஜரை பார்த்து," நான் ஸ்மோக் பண்ணனும் ஸ்மோக் பண்ண கூடாது அப்படின்னு நீ சொல்லக்கூடாது புரியுதா???" என்று கூறியவன் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு தூக்கி கொண்டு சென்றான்...
அவனோ புக் செய்திருந்தது விஐபி சூட் அப்படி இருக்க அவர்களால் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமல் போனது... அதைவிட ஹோட்டல் உரிமையாளரின் பெயரை எல்லாம் அவன் மிகச் சரியாக உச்சரிக்கிறான் ஒருவேளை முதலாளிக்கு பழக்கமான ஒருவனாக இருப்பானோ என்னவோ என்று பயமும் அந்த மேனேஜருக்கு வந்தது...அவனோ அவளை அழைத்து கொண்டு செல்ல அவளோ திமிறி கொண்டு இருக்க அவனோ ஒரு முறை முறைத்தான்..
அவளோ அமைதியாக இருக்க நடக்க முடியாமல் தத்தி தத்தி அவள் நடக்க அப்படியே அவர்கள் இருவரும் அறையை அடைந்து விட்டனர்...
உள்ளே சென்றதும் கதவை அடைத்தவன் அவளை பார்த்து ஒவ்வொரு அடியாக நடந்து அவளுள் பய பந்து உருண்டோடியது அவளுக்கு அவன் என்ன செய்யப் போகிறான் ஏது செய்யப் போகிறானோ என எதுவுமே தெரியவில்லை என்றாலும் அவன் அருகே இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவளுக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது என்பதுதான் உண்மை..
ஒரு காலத்தில் அவன் மீது அவள் உயிரையே வைத்து இருந்தாள் ஆனால் அவனோடு இப்போது இருக்கும் ஒவ்வொரு நொடியும் நரகமாக அவளுக்கு தோன்றியது..
"நீ எல்லாம் ஒரு மனுஷனே இல்ல ஏன் மாறன் இப்படி பண்றீங்க தயவு செஞ்சு என்னை விடுங்க" என்று அவள் கூற
அவனோ கூலாக வேறொரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவன்,"என் பேரு மாறன் கிடையாது சூரிய பிரகாஷ்" என்று கூறியவன் அவளை பார்த்து ,"உன்னை விடவா உன்னை இப்படி தூக்கிட்டு வந்தேன்" என்று கூறினான்..
அவளுக்கோ காலில் வலி அவன் மிதித்ததால் ரத்தம் கசிந்து கொண்டு இருந்தது அவளால் காலை ஊன்றி நிற்கக் கூட முடியவில்லை வலி உயிர் போனது...
அந்த வலி வேறு இருக்க, அந்த வலியை விட அவன் செய்த துரோகம் அவளை தாக்கிக் கொண்டு இருந்தது என்று தான் கூற வேண்டும்..
"நான் உங்களுக்கு ஏதாவது துரோகம் பண்ணினேனா சொல்லுங்க ஏன் இப்படி என்னை போட்டு பாடா படுத்துறீங்க ???"
"நீ எதுவும் எனக்கு செஞ்சேனு நான் சொல்லலையே" என்று அவன் பதிலுக்கு பதில் கூறினான்...
அவளால் அதற்கு மேல் முடியவில்லை அவளின் பொறுமை காற்றில் பறந்தது...,"உங்கள மாதிரி கேவலமான ஒரு மனுஷனை நான் பார்த்ததே இல்லை இப்படி எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியல என்னென்னமோ சொல்றீங்க எதுவும் எனக்கு புரியல..
என்னால நீங்க மாறன் இல்லை சூரிய பிரகாஷ் அப்படிங்கறதை கூட நம்ப முடியாமல் தவிச்சிட்டு இருக்கேன்... நீங்க ஒரு நம்பிக்கை துரோகி, நீங்க ஒரு பிராட், நீங்க பண்றது ஒரு க்ரைம் ஒரு பொண்ணோட மனசு உங்களுக்கு புரியுமா புரியாதா??? உங்களுக்கெல்லாம் பழி வாங்க நாங்க தான் கெடச்சோமா ஒரு பெண்ணை தான் இப்படி பண்ணுவீங்களா??? என்னோட அண்ணா அப்பா மேல உங்களுக்கு கோபம் இருந்தா அதுக்கு நான் என்ன பண்றது??? உங்களுக்கும் அவங்களுக்கும் இடையே என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது ஆனால் நான் உங்களை காதலிச்சது நிஜம் நான் ஏதாவது உங்களுக்கு தப்பு செஞ்சேனா ஆனால் நீங்க அப்படி இல்ல எல்லாமே நாடகம் எதுவுமே உண்மை இல்லைன்னு சொல்றீங்க எதையும் நம்ப முடியாமல் தவிச்சிட்டு இருக்கேன் மேலும் மேலும் எனக்கு அதிர்ச்சி கொடுக்காதீங்க "என்று அவள் கூறினாள்..
அவளுடைய வார்த்தைகள் அவனை சுட்டதோ என்னவோ அவனோ அவள் அருகே வந்து நின்றவன் அவளுடைய கழுத்தை பிடித்து ஒரே அழுத்தமாக பிடித்தவன் ,"ஆமாம் நான் இப்ப சொல்றது எல்லாம் நிஜம் நீ சொல்ற மாதிரி நான் நல்லவன் எல்லாம் கிடையாது ஃபிராடு தான் நம்பிக்கை துரோகி தான் என்ன வேணாலும் சொல்லிக்கோ ஆனால் இதையெல்லாம் சொல்ற தகுதி உனக்கு இருக்கா உன்னோட குடும்பத்துக்கு இருக்கா அப்படின்னு நீ யோசிச்சிட்டு பேசு" என்று கூறியவன் ஒரே அழுத்தாக அழுத்தினான்..
அவளுக்கு அவன் கூறியதன் அர்த்தம் விளங்கவில்லை ..
ஏற்கனவே காலில் ரத்தம் சொட்டிக் கொண்டிருக்க அது போதாது என்று அவன் அவளுடைய கழுத்தைப் பிடித்து அழுத்தவும் அவளால் வலி தாங்கிக் கொள்ள முடியவில்லை அதோடு அவன் நிற்கவில்லை..
"என்கிட்ட வராத பேசாம அதுக்கு கொன்னுடு" என்று அவள் மெல்ல கூற
அவனோ அதை பார்த்து," கண்டிப்பா செய்வேன்..இப்போ இல்லை எனக்கு தோணும் போது கண்டிப்பா உன்னை போட்டு தள்ளுவேன்.. என்ன நான் தொடும் போது கூசுதா" என்று அவன் கேட்டான்..
அவளுடைய முகம் அவன் அருகே வரும்போது அஷ்ட கோணலாகி இருந்தது... அவள் ஆமாம் என்பது போல தலையாட்டினாள்... அப்படித்தான் அவளுக்கு தோன்றியது இவன் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவளை தொல்லை செய்வதை காட்டிலும் ஒரேடியாக கொன்று விடலாம் என்று கருதி அவளோ ,"இப்படி கொஞ்சம் கொஞ்சமா என்னை டார்ச்சர் பண்றதுக்கு ஒரு ஐடியா கொன்னுடுங்க தயவு செஞ்சு என்கிட்ட வராத நீங்க என்ன தொடறது எனக்கு அருவருப்பா இருக்கு" என்று அவள் கூற அதைக் கேட்ட அவனும் ,"நான் தொடுவதே உனக்கு அருவருப்பாக இருக்கு அப்படின்னா கண்டிப்பா தொட்டு தான் ஆகணும்.. அதுக்குத்தானே உன்னை இவ்வளவு பெரிய சூட் புக் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கேன்" என்றான் நக்கலாக..
அதை கேட்டு அவளோ அதிர்ந்தாள்..அவனோ ஒரே அடியாக அவளை படுக்கையில் சரித்தான்..
