இராட்சதன் 6
அத்தியாயம் : 6
கண்ணீரோடு அவனோடு நீண்ட பயணம் செய்தாள்... எங்கு செல்கிறாள் என அவள் அறியாள்...எப்படி இருந்தாலும் தன்னை இவன் காரணமே இல்லாமல் தண்டிக்க போகிறான்...
அதற்கு இப்போதே இந்த கொடுமை எல்லாம் அனுபவிக்காமல் தன்னை கொன்று இருக்க வேண்டியது தானே என்று கூட அவள் நினைத்து பார்த்து விட்டாள்..
அவளுடைய மனம் குமைந்து கொண்டு இருந்தது.. எவ்வளவு போராடியும் அவளால் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை....அவள் கூறியது எல்லாம் பொய்யாக இருக்க கூடாதா என எண்ணினாள்...இவனோ நேராக அவளை அழைத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தான்..அந்த இடத்தை கண்டதும் அவளோ சுற்றி முற்றி பார்த்தாள்...அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை...
ஆம் அவன் ஒட்டிக் கொண்டிருந்த வாகனம் நேராக ஒரு மிகப்பெரிய ஹோட்டல் வளாகத்துக்குள் நுழைய அவளோ அதிர்ந்து பார்க்க அவனோ," தாலி கட்டிட்டேன் முதல் இரவு கொண்டாட வேண்டாமா?? அதுக்கு தான் இங்கே வந்து இருக்கோம்" என அவன் நக்கலாக அவளை பார்த்து கேட்க அவளுடைய கண்கள் மேலும் விரிந்தது...அதை கண்டதும் அவள் முகம் அதிர்ச்சியில் உறைந்து இருந்தது...
விட்டால் கதறி விடுவாள் போல அந்த அளவுக்கு அவன் சொன்ன வார்த்தைகளில் அவளுடைய மனம் வலிக்க, அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் பாண்ட் பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுத்தான்..அவளுடைய டென்சனை கண்டு ரசிக்கிறானோ என்னவோ????
வாயில் பற்ற வைத்து அவளை ஒரு பார்வை பார்த்து ,"சீ இப்போவும் சொல்றேன் என்னோட டார்கெட் நீ கிடையாது நீ வெறும் துருப்புச் சீட்டு மட்டும்தான் நான் சொல்றபடி நீ நடந்துகிட்டா உனக்கும் எனக்கும் பிரச்சினை வராமல் எனக்கும் பிரச்சனை வராமல் அமைதியாக எல்லாம் முடிஞ்சிடும் இல்லை அப்படின்னா பிரச்சனை வேறு விதமா வெடிக்கும் புரியுதா இப்போ உன்னுடைய கைக்கட்டை அவிழ்த்து விடப் போறேன் நாம் அந்த ஹோட்டலுக்கு போக போறோம் அங்கே போய் மிச்சத்தை சொல்றேன்" என்று கூறினான்..
அதாவது என்ன காரணம் எதற்காக இந்த நாடகம் என எதுவுமே அவளுக்கு தெரியாது...அதையெல்லாம் விட இந்த சூழலும் அவணுடய பேச்சும் தான் திகைக்க வைத்தது...ஒரு வேளை அவன் கூறியது போல முதல் இரவை கழிக்க தான் அவளை அழைத்து வந்து இருக்கிறானோ??? என எண்ணினாள்..அவளால் அந்த வார்த்தையை விட்டு வெளியே வர முடியவில்லை...
அவளோ அவனைப் பார்த்து அதிர்ச்சியோடு திகைத்தாள்.. அவனின் ஒவ்வொரு செய்கையை கண்டு அதிர்ச்சியில் இருந்தவள் கண்களில் அவனுடைய கைகளில் சிகரெட் எந்த தவறான பழக்கமும் இல்லை என்று கூறினான் அதுபோல தானே தன்னிடம் நடந்தும் கொண்டான்... இப்பொழுது இப்படி நடந்து கொள்கிறானே எல்லா கெட்ட பழக்கமும் அவனிடம் இருக்கிறதா என அவள் நினைத்தாலும், பெயர் முதல் அவன் கூறிய எந்த விஷயமும் உண்மையில்லை எனும் பொழுது இந்த தவறான பழக்கத்தை எல்லாம் அவன் வைத்திருக்கிறான் என வருத்தப்படவா முடியும் என அவளுடைய மனமே அவளை கேள்வி கேட்டது..
அவன் கூறிய படி சிறிது நேரத்தில் உன்னுடைய மானமே அவன் கையில் போக காத்து இருக்கிறது இதில் அவன் புகை பிடித்தால் என்ன??? பிடிக்காட்டி என்ன என்பது போல தான் அவள் இருந்தாள்..
அவனும் அவள் என்னவோ யோசிக்கட்டும் என்பது போல காரில் இருந்து இறங்கியவன் அவள் பக்கமாக திரும்பி அவள் பக்க கதவை திறந்து விட்டவன் அவள் அதிரும் முன்னே அவள் அருகே நெருங்கி நின்று அவளுடைய வாயில் ஒட்டப்பட்ட பிளாஸ்திரி மற்றும் கட்டுகளை எல்லாம் அவிழ்த்து விட,
அவளின் கட்டுகள் எல்லாம் பிரிக்கப்பட்டதும் அவன் நெருங்கி நின்று சுற்று மற்றும் பார்க்க யாரும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு அதே சிகரட்டின் நெடியுடன் மெல்லிய குரலில்," சொன்னது ஞாபகம் இருக்கட்டும் என்கிட்ட ஏதாவது வேலையை காட்டின அதுக்கு அப்புறம் என்ன நடக்கும்னு தெரியாது" என்று கூறவும் அவளோ எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்க இறங்கு என்று அவன் கூறினான்...
அவளோ கட்டுகள் பிரிக்கப்பட்டதுமே அப்பாடி தப்பித்தோம் என்று மனதுக்குள் நினைத்தாள்..அவளின் மனம் வேகமாக செயல்பட்டது..எப்படியாவது இவனிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என துடித்தது.. பிறகு யாரையாவது பார்த்தால் கண்டிப்பாக உதவி கேட்க வேண்டும் என்று எண்ணி காருக்குள் இறங்கியதும் சுற்றும் முற்றும் பார்க்க யாருமே அவள் கண்ணில் தட்டுப்படவில்லை..
உன்னை பழி வாங்கத்தான் அழைக்க செல்கிறேன் என கூறியவனிடம் இன்னும் அமைதியாக அவனுடன் செல்ல அவளுக்கு விருப்பமும் இல்லை...
அதை விட அவன் தன்னை என்ன செய்யப் போகிறான் என்று எதுவுமே தெரியாமல் அவன் கூறிய வார்த்தைகளில் இருக்கும் வீரியத்தை உணர்ந்து அவன் தன்னை ஏதாவது செய்து விடுவான் என்று பயந்து இதுதான் தக்க தருணம் தப்பித்துவிட வேண்டும் என கருதினாள்...
இதுதான் தக்க சமயம் என்று கருதிய அவள் காரில் இருந்து இறங்கியதுமே அவன் அவளுடைய கையை பிடிப்பதற்குள் ஒரே ஓட்டமாக ஓட துவங்கி விட்டாள் கண்மணி...யாராவது ஆளை பார்த்தால் கண்டிப்பாக உதவி கேட்க வேண்டும் என ஒரே ஓட்டமாக தன்னுடைய முழு பலத்தை கொடுத்து அவள் ஓடினாள்...அவனோ அவளின் இந்த செய்கை இதை எதிர்பார்த்து இருந்தான் போலும் ஆக முதல் முட்டாள்தனத்தை அவனிடம் அவள் செய்து விட்டாள் என்று தான் கூற வேண்டும்..
அவன் இருப்பதோ ஆறு அடி அவள் ஓடவும் நாலு அடி கூட ஓடி இருக்க மாட்டாள் அவள் அவனிடம் தப்பிக்கவும் தாவி அவளுடைய கையை பிடித்து விட்டான் சூர்ய பிரகாஷ்..
அவளுடைய கையை அழுத்ததோடு பிடித்தவன் அதே அழுத்ததோடு அவளின் கால்களில் தன்னுடைய பூட் ஷூவால் மிதித்தான்..
அவ்வளவு அழுத்தத்தோடு மிதிக்கவும் அவளுடைய கண்களில் கண்ணீர் வந்தது கால்களை ஒரு இன்ச் கூட அவளால் அகற்ற முடியவில்லை சுற்றி இருப்பவர்களுக்கு அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கிறார்கள் என்பது மட்டும்தான் தெரியும் ஆனால் என்ன நடக்கிறது என யாருக்குமே தெரியவில்லை... அவன் நக்கலான பார்வையோடு அவளை கால்களில் நன்றாக மிதிக்க அவளின் கால்களின் சதை கிழிந்து ரத்தம் வர துவங்கியது...அப்போதும் அவன் விடவில்லை..
அவளை பார்த்து இறுகிய முகத்தோடு,"தப்பு பண்றியே கண்மணி நான் பொறுமையா போனால் நீ என் கிட்டேயே வேலையை காட்டுறியே???" என்றவன் கோபமாக அவளை பார்த்து ,"என்னை பார்த்தா எப்படிடி இருக்கு இவ்ளோ தூரம் உனக்கு ஸ்கெட்ச் போட்டு உன்னை தூக்கி இருக்கேன் அங்கே உன்னோட வீட்ல உன்னை காணலன்னு தேட துவங்கிட்டாங்க நீ என்கிட்ட இருந்து ஓடி தப்பிச்சிடலாம்னு பாக்குறியா அது நடந்திடும்னு உனக்கு தோணுதா????.. ஏதோ ரெண்டு வருஷமா என்கிட்ட ஏமாந்து இருக்கீயேன்னு பொறுமையா போனா என்கிட்டயே உன்னுடைய வேலையை காட்டுறியா"என்றான்..
அவளோ அவனின் செய்கையின் வலி தாங்க முடியாமல், அவனிடம் கையெடுத்து கும்பிட்டு ,"தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க நான் எந்த தப்பும் செய்யல" என்று கூற அவனோ ,"நீ இனி என்கிட்ட பேசுற தகுதியை கூட இழந்துட்ட" என்றவன் கடுமையான முகத்துடன் அவள் கையை பிடித்த பிடியை விடாமல் அழுத்தமாக பிடித்தான்.. அவளுடைய கால்களை விட்டான்..
