Share:
Notifications
Clear all

இராட்சதன் 5

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 523
Thread starter  

 

அத்தியாயம் : 5

அவளோ அந்த பெயரை கேட்டு அதிர அதை கண்டவன் அழுத்தமாக அவளை பார்த்து ,"இதுக்கே அதிர்ந்தா எப்படி??? உன்னோட அப்பனையும் உன் குடும்பத்தை பழி வாங்க தான் உன்னை அழைச்சிட்டு போறேன்னு நான் சொன்னா நீ என்ன பண்ணுவ??" என்றான்..

அவளோ அதிர அதை பார்த்தவன் நக்கல் புன்னகையோடு,"எஸ் எல்லாமே டிராமா தான் என்னோட பேருல இருந்து நான் யார் என்பது வரை எல்லாமே டிராமா தான் எனக்கு உன் குடும்பத்தை அழிக்கணும் சிம்பிள் அவ்வளவுதான் வேணும் நரகம் அப்படின்னா என்னன்னு உன்னோட குடும்பத்தார்கள் பார்க்கணும் அதுக்கு நீ என் கூட இருக்கணும் அதுக்காகத்தான் இந்த கயிறை கட்டி உன்னை என்னுடன் அழைச்சிட்டு போறேன்" என்றான்..

அந்த வார்த்தையை கூறும் பொழுது அவள் அதிர அவள் கேட்பது உண்மைதானா என்பது போல அவள் ,"மாறன் என்ன சொல்றீங்க???" என அதிரும் போது,"நான் மாறன் இல்லை சூர்ய பிரகாஷ்.." என்றான் அவன்...

அவன் ஆவேசமாக அந்த வார்த்தையை கூறும் பொழுது அவன் முகத்தில் தெரிந்த கோபக்கனலும் ஆவேசமும் முதன்முறையாக அவளுக்கு பயத்தை கொடுத்தது இந்த முகத்தோடு அவள் அவளுடைய மாறனை இல்லையில்லை அவன் கூறும் சூரிய பிரகாஷை பார்த்தது இல்லை என்று தான் கூற வேண்டும்..

அவளோ அவனின் தீடிர் மாற்றத்தை கேட்டு அதிர்ந்து அவனிடம் இருந்து தப்பிக்க கார் கதவை திறக்க முற்பட அதற்குத்தான் அவளுடைய கைகள் கட்டப்பட்டன..

அவளோ அதற்குள் கத்தவும் அவளுடைய வாயும் பூட்டப்பட்டது என்று தான் கூற வேண்டும் கண்ணில் இருந்து கண்ணீர் மட்டும் தான் கிட்டத்தட்ட அரை மணி நேரமாக சுரந்து கொண்டிருந்தது...

அதை பற்றி கவலை இல்லாமல் அவன் சூர்ய பிரகாஷ் ஆக இருந்தாலும் அவளை பொறுத்தவரையில் மாறன் அவளை பார்த்து," கம் ஆன் கண்மணி எதுக்கு உன்னோட கண்ணீரை இப்போவே இவ்ளோ வேஸ்ட் பண்ற??? இன்னும் அழ எவ்ளோ இருக்கு??? இப்போவே அதுக்கு எல்லாம் அழுது தீர்த்துட்டேன்னா அப்போ அழ என்ன பண்ணுவ??? நீ தப்பிச்சு போக பார்க்கிறன்னு கையை கட்டி போட்டுட்டேனா கண்மணி??? ஃபீல் பண்ணாத!! உன் அழுகையை என்னால கேட்க முடியல அதுனால தான் உன்னோட வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டி விட்டேன் கண்மணி.. இதுக்கு போய் அழலாமா??? என அவன் கேட்டான்..

அதற்கு அவளோ வாய் ஒட்டப்பட்டு இருக்க அவனோடு பேச முடியாத நிலையில் அவள் அவனை பார்க்க கண்ணீர் மேலும் சொரிந்து கொண்டு இருக்க அதை கண்ட அவனோ தன்னுடைய சட்டை செய்யாமல் அவளை அழுத்தமாக பார்த்து,

"என்னோட தேவை நீ கிடையாது நீ வெறும் துருப்பு சீட்டு தான் உன்னை வச்சு தான் எனக்கு தேவையான அனைத்தையும் நான் செஞ்சுக்க முடியும் அது என்னென்ன கேட்கிறயா??? உன் அப்பன், உன்னோட அண்ணனை மட்டும் கொன்னுட்டேன்னு வை என்னோட வேலையே முடிஞ்சிடும் அதுக்காக மட்டும் தான் நான் உன் கழுத்தில் தாலி கட்டி இருக்கேன் உன்னை ரொம்ப தொல்லை பண்ண கூடாதுன்னு நான் நினைக்கிறேன் ஆனால் நீ என்னை அப்படி விட மாட்ட போல???

எல்லாம் சொல்லி தானே தாலி கட்டினேன் நான் ஏதாவது உன்னை டார்ச்சர் பண்ணி தாலி கட்டினேனா??? நீயும் நான் தாலி கட்டினதும் அதிர்ச்சியாகவும் சந்தோஷமாகவும் பார்த்தேன் உனக்கும் நான் தாலி கட்டினது பிடித்து தானே இருந்தது.. அப்புறம் தெளிவா என்ன பண்ண போறேன்னு சொல்லிட்டேன் இதுக்கு மேலயும் நீ அழுதா என்ன பண்றது அதுக்கு தான் வாயை ஒட்டி விட்டேன்" என நக்கலாக அவன் கூறி சிரிக்க அதை கேட்ட அவள் கண்கள் மேலும் கலவரம் ஆனது.. அவளுடைய பொன் மஞ்சள் தாலி அவளை பார்த்து கெக்கிலி போட்டு சிரித்தது..

அவன் பழி வாங்கத்தான் இதையெல்லாம் செய்கிறான் என்பதே அவளுக்கு பாவம் ஒரு அரை மணி நேரம் முன்பு தான் தெரியும்..ஆம் அவன் மீதான காதல் அவள் கண்ணை மறைத்து விட்டதே என தன்னை தானே அவள் நொந்தாள்..

எவ்வளவு பெரிய துரோகம் நம்பிக்கை துரோகம் அவன் செய்து இருக்கிறான் தன் குடும்பத்தை விட அவனை முழுமையாக நம்பிய பாவத்துக்கு அவள் அனுபவிக்கிறாளா என நினைத்தாள்...

அவனுடைய செய்கையும், அவனுடைய கண்களும், அவனுடைய கோபமும், அவனுடைய வெறியும், அவளுக்கு பயத்தை உண்டு பண்ணியது..

மேலும் தன்னை இப்படி இக்கட்டில் மாட்ட வைத்து தன்னை கடத்திக் கொண்டு போகிறானே என்ற பதட்டமும் அவள் முகத்தில் தென்பட்டது.. ஆம் அவள் அவனை திரும்பத் திரும்ப பார்க்கிறாள் அவள் ஆசையாக காதலித்த முகம் இப்பொழுது வேறு ரூபத்தில் இருந்தது

இது அல்லவே அவள் காதலித்த முகம் எவ்வளவு கருணையாக, பாசமாக எவ்வளவு காதல் ஆக அவளிடம் ஆசையோடு பேசிய கண்கள் இப்பொழுது பழி வெறியோடு அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் எள்ளல் துள்ள உன்னை பெற்றவனைக் கொன்றே தீருவேன் என்று தன்னிடமே கூறுகிறானே இப்படி ஒருவனையா காதலித்தோம் இப்படி ஒருவனிடம் இருந்தா பொன்மஞ்சள் தாலியை ஏற்றுக் கொண்டோம் என்று அவள் எண்ணி அழுது கொண்டே அவனுடன் போனாள்...

அவளால் பேசக்கூட முடியவில்லை வாய் ஒட்டப்பட்டு இருக்க கண்கள் மேலும் சிவந்து போனது தான் மிச்சம்..அவனோடு எப்படி எல்லாம் காதல் கொண்டு இருந்தோம்..தன்னுடைய வாழ்க்கை இவனுடன் தானே என எண்ணி இருந்தாள்..ஆனால் அதெல்லாம் பொய்த்து போனதோ??? என யோசிக்கும் போதே அவளுடைய உள்ளத்தில் இரத்தம் கசிவது போன்ற ஒரு உணர்வை அவள் கொண்டாள்..

அதே நேரம் அவனுடைய கார் வேகமாக போய் கொண்டு இருக்க, சூர்ய பிரகாஷ் கண்கள் தீப்பிழம்பு போல இருக்க அவனும் அதே நிலையில் தான் இருந்தான்.. அவன் எதைப்பற்றியும் யோசிக்க தயாராக இல்லை...அழுது கொண்டு இருக்கும் கண்மணி அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை என்பது போல அவன் இருந்தான்..

ஆனால் அவள் மனமோ வெடித்து கொண்டு இருந்தது ..இந்த அரை மணி நேரத்தில் அவளுடைய வாழ்க்கை இப்படி தலைகீழாக மாறும் என கண்மணி நினைக்கவில்லை...

ஆம்.. ஆசையாக காதலித்தவன் அவளை உருகி உருகி காதலித்தவன் அவளுக்கு மதிப்பு கொடுப்பவன்..பெண்களை மதிப்பவன் அவளை பார்க்கும் போதெல்லாம் காதல் ரசம் சொட்ட சொட்ட அவளை திக்குமுக்காட வைப்பவன் ஏன் இப்படி மாறினான்...

கிட்டத்தட்ட அவர்களின் காதலுக்கு வயது இரு வருடம் என்று கூறினால் மிகையாகாது..ஆம் அவ்வளவு நாட்கள் அவளை ஆசையாக காதலித்தான் மாறன்...

ஆம் அவளுக்கு தெரிந்த மாறனுக்கு வேலை இல்லை வீட்டில் யாரும் இல்லை அனாதை இல்லத்தில் வளர்ந்து வந்தவன்...கண்ணியம் ஆனவன்..படித்து முடித்து இருக்கிறான்..தினமும் அவள் பயணம் செய்யும் பஸ்ஸில் பயணம் செய்வான்...அவள் பார்த்து இருக்கிறாள்..பெண்கள் அருகில் கூட நிற்க மாட்டான்..

அப்படி தினமும் பார்த்து கொண்டிருப்பவன் ஒரு நாள் அவள் பயணம் செய்த பஸ் கூட்டமாக இருக்க அவளுக்கு சீட் கிடைக்காமல் நின்று கொண்டு இருக்க ஒருத்தன் வந்து அவள் மீது உரசினான்...

அவளோ சற்று தள்ளி நிற்க முற்பட உரசிய அவனோ விடாமல் அவள் மீது உரசியது மட்டுமில்லாமல் கூட்டத்தில் அவளின் மீது ஆங்காங்கே கையை வைக்க அவளால் அதற்கு மேல் முடியாமல் முதலில் அவள் கன்னத்தில் கண்ணீர் வந்தது ஆம் அவன் அவளுடைய பின்னால் பிடித்து விட்டான் அவளால் அந்த கொடுமையை சகித்து கொள்ள முடியவில்லை அவளால் முன்னேறி செல்லவும் முடியவில்லை அவனோ கையை எடுக்கவும் இல்லை அவளால் திரும்பி நின்று அவனோடு சண்டை போடவும் முடியாமல் அவள் கண்ணில் கண்ணீர் வந்தது..

அப்படி இருக்க, அந்த தருணத்தில் தான் அவளை உரசியவனை அடித்து அவளின் மாறன்(சூர்ய பிரகாஷ்) அடித்து உதைக்க அவளுக்கு அவ்வளவு நிம்மதியாக இருக்க நன்றி என்ற அவளின் ஒரு வார்த்தை அப்படியே இருவருக்குள்ளும் பல ஆயிரம் வார்த்தைகளாக மாறி, பிறகு இருவரும் நட்பை பரிமாறி அது காதலாகி கசிந்துருகி இதோ இந்த இடத்தில் அவளை கொண்டு வந்து சேர்த்து இருக்கிறது என்று அவள் கூறினால் அவன் ஒப்பு கொள்ள மாட்டான்..

ஆம் அவள் அறிந்ததும் ஒன்றும் உண்மை இல்லை..உண்மையில் அவனை பற்றி ஒன்றுமே அவளுக்கு தெரியாது .. ஆம் அவளை இதுவரை வர வைத்தது அவன் என்றால் கிட்டத்தட்ட அவளை சந்திக்கும் முன்னே இரு வருடங்களில் அவளை இப்படி தான் தூக்குவேன் என ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அவன் அவனை பற்றி அவள் இன்னும் அரிச்சுவடி கூட தெரிந்து கொள்ளவில்லை..

அவள் மட்டுமில்லை அவளுடைய மொத்த குடும்பத்துக்கும் தெரியாது..அவன் அவர்களை அடிக்கும் ஒவ்வொரு அடியும் இடி போல இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்!! அது சூர்ய பிரகாஷ்...

அவனை பற்றி அவனாக கூறாமல் நமக்கு யாருக்கும் அவனை பற்றிய சிறு துரும்பு கூட அறிய போவதும் இல்லை என்பது நிதர்சமான உண்மை தான்!!!



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top