இராட்சதன் 4
அத்தியாயம் : 4
கண்மணியின் கண்கள் அழுது அழுது சோர்ந்து போய் இருந்தது...பதட்டத்தில் நிலை குலைந்து போய் இருந்தாள்... அவள் வாழ்க்கை கடந்து முடிந்த ஒரு மணி நேரம் நிகழாமல் போயிருக்கக் கூடாதா என அவள் நினைத்தாள்....
அவள் மனமோ குமைந்தது..ஏன், எதற்கு, எதனால் என எதுவுமே தெரியவில்லை...அவளால் இந்த நொடி வரை நம்ப முடியவில்லை...
அவளுடைய மாறன் தானா இப்படி எல்லாம் செய்வது...அவளை காண அவள் சுற்றுலாவிற்கு வந்து இருக்கும் இடத்துக்கே அவன் வந்ததும் அவள் கண்டு ஆசையாக ,"எனக்காக என்னுடன் வருவியா??? இனி நீ இல்லாமல் என்னால இருக்க முடியும்னு தோணல உன்னோட படிப்பு முடிஞ்சது நீ இல்லாமல் என்னால இருக்க முடியாது எனக்கு பெங்களூரில் வேலை கிடைச்சு இருக்கு வா போகலாம்.. உன் வீட்டு வசதிக்கு என்னால உன்னை வச்சு வாழ முடியலை அப்படின்னாலும் எனக்கு இருக்கும் வசதிக்கு ஏற்ப உன்னை ராணி மாதிரி பார்த்துக்க என்னால முடியும் என்னால உன்னுடைய வீட்டு ஆளுக கூட சண்டை போட முடியாது.. எனக்குன்னு யாரும் இல்லை நான் ஒரு அனாதை என்னால உன் வீட்ல எப்படி பேசி உன்னை அழைத்து வர முடியும் இந்த அனாதைக்கின்னு யாரு கூட வருவா???" என அழைத்தான்.. எப்போதும் தான் ஒரு அனாதை என்ற பேச்சு அவளுடைய மாறனிடம் இருக்கும்...
அதைக் கேட்டாலே அவளுடைய மனது பாகாய் உருகி போகும்.. அவளுக்கு அவனை ரொம்ப பிடிக்கும் எப்படி இருந்தாலும் அவன் சொல்வது போல அவளுடைய வீட்டில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் அது அவளுக்கு தெரிந்த விடயம் தான்... சுற்றுலா சென்ற இடத்தில் அவன் திடீரென வந்து அவளை அவனோடு அழைப்பான் என அவளும் எதிர்பார்க்கவில்லை.. அவனின் அந்த விழிகளால் அவளைப் பார்த்து கேட்டால் அவளால் மறுக்க முடியாது அந்த அளவுக்கு கிட்டத்தட்ட இரண்டு வருடமாக அவனை அவள் நேசிக்கிறாள்...மடத்தனம் என்பார்களே அது போல அவன் மீது அவள் மடத்தனமான அன்பை வைத்து இருக்கிறாள் என்று தான் கூற வேண்டும்..
அவளுடைய அவன் மீதான நேசத்திற்கு அவளால் எல்லை வகுக்கவே முடியாது.. அவன் மீது நேசம் கொண்ட அன்றே அவள் அவனோடு வந்து இருப்பாள் ஆனால் அவன் தான் படிப்பு முக்கியம் படித்து முடி எனக்கும் வேலை முக்கியம் அப்பொழுதுதான் உன்னை ராணியாக பார்த்துக் கொள்ள முடியும் என காதலோடும் கண்ணியத்தோடும் இருவருட காதலில் அவனின் விரல் நகம் கூட அவள் மீது பட்டது இல்லை என அவளால் பெருமையாக மார்தட்டி கூற முடியும் அந்த அளவுக்கு ஒழுக்கம் உடையவன் தான் அவளுடைய மாறன்..
என்ன அவனிடம் பணம் இல்லை ஆனால் ஒழுக்கம் இருக்கிறது நாளை பெரிய ஆள் ஆகிவிடுவான் என்ற நம்பிக்கை அவனிடம் இருக்கிறது அதை வைத்து அவர்களால் வாழ்ந்து கொள்ள முடியும்..
அவளுக்கு அவளுடைய வீட்டாரை ரொம்ப பிடிக்கும் ஆனால் ஏனோ தெரியவில்லை இரண்டு வருடமாக மாறன் அவள் மனதில் நிறைந்து இருக்கிறான் யாருமில்லாமல் தனியாக வாழ்வது எவ்வளவு கொடுமை என மாறனின் பேச்சுகளிலிருந்து அவளால் புரிந்து கொள்ள முடியும் அவன் அனாதை என்று கூறினால் அவளால் அதை தாங்கிக் கொள்ளவே முடியாது அந்த வார்த்தை அவளை ரொம்ப காயப்படுத்தும்...
அப்படி இருக்க இன்று அவன் திடுதிப்பென்று வர சொல்லவும் அவளுக்கு என்ன செய்வது என தெரியவில்லை...
அவள் தயங்கினாள்...ஆனால் அதை கண்டு அவனுக்கு கோபம் வந்தது.." நான் எனக்கு வேலை கிடைச்சதும் உன்னை அழைச்சிட்டு போவேனு உனக்கு சத்தியம் பண்ணி இருந்தேன் அதை நிறைவேத்த தான் ஓடோடி வந்தேன் ஆனால் நீ தயங்குற நீயும் மத்த பெண்கள் மாதிரி ஒரு டைம் பாசுக்கு தான் என்கிட்ட பழகுனியா???.. என்னை விட யாராவது உயர்ந்தவன் உனக்கு கிடைத்துவிட்டானா இல்லை பணக்காரன் கிடைத்துவிட்டானா அப்படின்னா சொல்லிடு நான் போயிடுறேன் நான் யாருமில்லாத அனாதை தானே" என்றான்.. எமோஷனலி பிளாக்மெயில் அவளை பார்த்து நன்றாக பிளாக்மெயில் செய்தாள்...
இரு வருடமாக கைத்தேர்ந்து நடிக்கும் நடிகனுக்கு அவளை அந்த இடத்திலிருந்து எப்படி அழைத்துச் செல்ல வேண்டும் என தெரியாதா என்ன???
அவன் செய்த பிளாக்மெயிலில் அவள் விழுந்தாள் என்று தான் கூற வேண்டும்...
அவன் அப்படி ஒரு வார்த்தையை கூறியதும் இனி அங்கு இருக்க அவளுக்கு விருப்பமில்லை அவள் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை காரில் ஏறி அமர்ந்துவிட்டாள்...
அவனை நம்பி அவள் வந்ததற்கு அவனோ அவளை வைத்து செய்து விட்டான் என்று தான் கூற வேண்டும்..
ஆம் அதை யோசிக்கும் அந்த சமயம் அவளின் நிலைகண்டு கண்மணியின் கண்களில் கண்ணீர் வர அதை கண்டு சூர்ய பிரகாஷ் முகத்தில் ஒரு எள்ளி நகையாடும் ஆணவம் எழுந்தது..
காதலித்தவன் உயிராய் இருப்பான் என கூறியவன் நான் உன்னையும் உன் குடும்பத்தையும் பழி வாங்க தான் உன்னை அழைத்து செல்கிறேன் என கூறினால் அவள் மனம் என்ன பாடு படும்?? என்பதை அவன் கவனிக்க மறந்தானோ??
அவனுக்கு ஈவு, இரக்கம் எல்லாம் இருந்தால் அவன் இதை எல்லாம் யோசிப்பான்..அவனுக்கு தான் அப்படி எல்லாம் எதுவுமே இல்லையே?? எப்படி அவன் யோசிப்பான் என அவள் யோசிக்க மறந்தாள்!!
இன்னும் அவளின் ஆருயிர் காதலன் மாறன் என நினைத்து கொண்டு இருக்கிறாள் அவன் சூர்ய பிரகாஷ் என்பதை மறந்தாள்!! மாறன் என்பது அவளை வீழ்த்த அவனிட்ட பெயர் என்பதை அவள் கழுத்தில் காரில் வைத்து தாலி கட்டிய பின் கூறினான் சூர்ய பிரகாஷ்..அதை கேட்டவள் அதிர்ந்தாள்..
அவன் தான் சற்று முன் அவளை காரில் ஏற்றியதும் அவளுடைய கழுத்தில் அவளுடைய அனுமதி கேட்காமலேயே தாலியை கட்டியவன் முகம் அடுத்த நொடி மாறியது..
அவளோ நிமிடத்துக்குள் அவளை அவனவளாக்கி கொண்டானே என்ற அதிர்ச்சியில் இருக்கும் பொழுது அவனுடைய முகபாவனை நொடியில் மாறியது..
அதை கூட புரிந்து கொள்ளமால் அவள் அவனை காதலாக பார்க்க அவனோ அவளை பார்த்து,"வெல்கம் டு தி ஹெல் மிஸ்ஸஸ் கண்மணி சூர்ய பிரகாஷ் என்றான்..
