இராட்சதன் 3
அத்தியாயம் : 3
கல்லூரி சுற்றுலா சென்றவள் காணவில்லை என்ற அழைப்பு உலகநாதனுக்கு வந்தது..அதை கேட்டதில் இருந்து அவர் பதறி கொண்டு இருக்கும் போது தான் கண்ணாயிரம் இந்த விஷயத்தை கூறினார். அதைக் கேட்டு அவருக்கு மேலும் குழம்பியது.. ஏனெனில் அப்படி ஒரு விஷயம் நடக்கவே கூடாது என்ற எண்ணம் அந்த குடும்பத்துக்கு உண்டு. ஏனெனில் இவர்களை எதிர்க்கும் அவன் அப்பேற்பட்டவன் என்று தான் கூற வேண்டும்..
மகள் சென்னையில் உள்ள ஒரு பெரிய கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறாள்.. மகள் என்றால் அவருக்கு உயிர்... அந்த மகளுக்காக தான் அவர் அந்த கிராமத்தில் ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கி குவித்து இருக்கிறார்..மகளை பெரிய இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் அவள் ராணி மாதிரி வாழ வேண்டும் என்ற எண்ணம் உலகநாதனுக்கு உண்டு தன் மகளை கண்ணின் மணி போல அவர் பார்த்து வருகிறார்...
ஊரில் பெரிய மனிதரான அவருடைய மகளை காணவில்லை என்றால் அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடாதா என்ற நெருடலும் அவருக்கு உண்டு...பெயருக்கும் புகழுக்கும் வேண்டி அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பது வேறு விஷயம்..அப்படி இருக்க இப்போதே ஒவ்வொருவராக காவேரி போடும் சத்தத்துக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்...
மகள் எங்கே சென்று விட்டாள் யார் மகளை கடத்தி இருக்கிறார்கள் என எதுவுமே தெரியாமல் குழப்பத்தில் இருந்தார் உலகநாதன்... அந்த நெடியவன் கடத்தி இருப்பானோ என்ற சந்தேகம் தான் அவர்கள் அனைவருக்கும் உறுதியாக அவன் தான் கடத்தினால் என அவர்களால் கூற முடியாது ஏனெனில் வெறும் கல்லூரியில் இருந்து அழைப்பு மட்டும்தான் வந்திருக்கிறது மகளை காணவில்லை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்ற செய்தி மட்டும் தான் உலகநாதனுக்கு கிடைத்திருக்கிறதே தவிர வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை கண்ணாயிரத்தின் சந்தேகத்தை பொருட்டு அவன் மீது இது அவன் செய்திருப்பான் என்ற சந்தேகம் வருகிறதே ஒழிய அவன் தான் செய்திருப்பான் என உலகநாதனால் யோசிக்கவும் முடியவில்லை...
ஆனால் அவருடைய மனைவி காவேரி வீட்டு முற்றத்தில் இருக்கும் திண்ணையில் அமர்ந்து கொண்டு ஊரே கேள். நாடே கேள் என காவேரி மகள் காணாமல் போன விஷயத்தை டேப் ரெக்கார்டர் போல அனைவருக்கும் மைக் இல்லாத குறையாக தன் குரலை வைத்தே அனைவருக்கும் தெரிவித்துக் கொண்டு இருந்தார் காவேரி...
அதை கேட்டதும் உலகநாதன் வெளியே வந்து ,"வாயை மூடிட்டு இரு காவேரி" என கத்தினார்...அதை கேட்டதும் காவேரி வாயை மூடி கொண்டு முனகினார்...
அந்த ஊர் ஒரு கிராமம்.. அந்த கிராமத்தில் மிகவும் பெயர் போனவர் தான் உலகநாதன் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பெரிய தலைக்கட்டு அந்த கிராமத்தில் ஏதாவது பிரச்சனை என்று வந்தால் பஞ்சாயத்து எல்லாம் அவர்தான் செய்வார் அப்பேர்ப்பட்ட அதிகாரத்தோடு இருக்கும் ஒருவர் அவர் வீட்டில் பிரச்சனை என்றால் அவருடைய மானம் போகும் என அவருக்கு நன்றாக தெரியும்..
விஷயம் வெளியே கசிவதற்குள் தன் மகளை கண்டுபிடிக்க வேண்டும் என அவர் நினைக்கிறார்... கண்ணாயிரம் சொல்வது போல அந்த விஷயம் மட்டும் நடந்திருக்கவே கூடாது என்ற கலக்கமும் அவருடைய மனதில் நிறைந்து இருந்தது...ஆனால் இவருடைய நினைப்பை எல்லாம் அவன் கண்டிப்பாக பொய்யாக்கி விடுவான் என்பதில் ஒரு துளி சந்தேகமும் வேண்டாம்....
இவர்களை எல்லாம் கட்டம் கட்டி தூக்க தானே அவன் இதை எல்லாம் செய்கிறான்.. அவ்வளவு பழி வெறியை அவன் மனதுக்குள் சுமந்து இருக்கிறான்... அப்படியெல்லாம் அவன் சும்மா விட்டு விடுவானா??? என்ன??? ஆம் அவன் சூர்ய பிரகாஷ்...
அந்த ஊரில் உலகநாதனை எதிர்க்கும் ஒருவன் இந்த ஊரில் இருக்கிறான் என்றால் அது சூர்ய பிரகாஷ் மட்டும் தான்... சமீபமாக அவன் இந்த ஊருக்கு அடிக்கடி வந்து போகிறான்...
இவருடைய எதிரியான ரத்தினத்தின் வீட்டில் தான் தங்கியிருக்கிறான்... ரத்தினத்துக்கும், உலகநாதனுக்கும் ஏற்கனவே ஆகாது அப்படி இருக்கையில் ரத்தினத்துடன் தான் இந்த சூர்ய பிரகாஷ் இருக்கிறான் என்றும் ரத்தினத்தின் தூரத்து உறவினன் என்றும் ஊர் பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள் அவ்வளவுதான் சூர்ய பிரகாஷ் பற்றி உலகநாதனுக்கு தெரிய வந்த விஷயங்கள் மற்றபடி அவன் என்ன செய்கிறான் என்ன தொழில் என்ன வேலை செய்கிறான் என்ன படித்திருக்கிறான் என எதுவும் தெரியாது...எங்கேயோ போவான் என்றும் பிறகு ரத்தினத்தின் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பான் என்றும் ஊர்மக்கள் பேசிக் கொள்கிறார்கள் அதுவும் கண்ணாயிரம் மூலமாக உலகநாதனுக்கு விஷயம் வந்தடைந்திருந்தது...
அப்படி இருக்க ரத்தினம் உலகநாதனின் பரம எதிரி ரத்தினத்தின் உறவினன் சூரிய பிரகாஷ்.. சூரிய பிரகாஷ் இந்த மண்ணில் காலை வைத்ததுமே முதலில் உலகநாதனுடன் பிரச்சனை செய்து விட்டான்... தினகரனையும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் அடித்தும் விட்டான்... ஏன் செய்தான் எதற்கு செய்தான் என எதுவும் தெரியாது... முதன்முறையாக சந்திக்கும்போதே அனல் பரந்த அவனுடைய வார்த்தைகளும் ஆக்ரோஷமும் உலகநாதனை அசைத்து தான் பார்த்தது... யார் அவன் என்று புரியவில்லை என்றாலும் இவன் ஆபத்தானவன் என்று மட்டும் அவருக்கு புரிந்திருந்தது...
தான் பெற்ற மகனை காணவில்லை என்றாலும் கண்ணாயிரம் கூறிய விஷயத்தை கேட்டு அவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார் உலகநாதன்...
அப்படி இருக்கையில் அவன் தான் அவர்களுடைய மகளை சூர்ய பிரகாஷ் தான் கடத்தி இருப்பானோ என்று சந்தேகம்தான் உலகநாதனுக்கு வந்திருக்கவே வேண்டாம்.. சாக்ஷாத் அவனேதான் அவர்களுடைய மகளை கடத்தி இருக்கிறான் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.. ஆம் அவனே தான் இந்த நாளுக்காக அவன் வெகு நாட்களாக காத்து இருக்கிறான்..
யார் இவன் எதற்காக இப்படி தங்களை எதிர்க்கிறான் என்று தெரியாமல் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்காத உலகநாதனுக்கு இந்த அடி பேரடியாகத்தான் இருக்கும்.. அவனைப் பற்றி தெளிவாக அவர்களுக்கு விளங்கவில்லை தெரியும் பக்ஷத்தில் அவர்கள் அனுபவிக்க போகும் கொடுமை அவ்வளவு ரணமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் வேண்டாம்...
அவனை பொறுத்த வரை காத்து இருப்பின் பலன் கை கூடி வந்து விட்டது என கூறலாம் இல்லையென்றாலும் அவனுக்குத் தேவையானதை தேவைப்படும் விதத்தில் தேவையான அளவுக்கு அவன் மனம் போதும் என்று கூறும் வரையில் அவன் இவர்களை பழி வாங்கி விட்டே செல்வான் அந்த அளவுக்கு என்ன பிரச்சனை என அவனுக்கு மட்டும் தான் தெரியும் இவ்வளவு ஏன் உலகநாதன் மற்றும் தினகரனுக்கு கூட தெரியாது என்பதுதான் முக்கியமான விஷயம்..
அப்படி இருக்க காணாமல் போன அவரின் ஆயிருர் மகளோ கைகள் அந்த கருப்பு மகேந்திரா தாரில் கைகள் கட்டப்பட்ட நிலையில் வாயில் ஒரு பிளாஸ்திரி ஒட்டப்பட்டு இருக்க, அவள் கண்ணில் மட்டும் தாரை தாரையாக கண்ணீர் வந்து கொண்டு இருக்க, தன் அருகே இருப்பவன் மீது மிதம் மிஞ்சிய பயத்தில் பேசாமல் மூச்சை அடக்கி பிடித்து செத்து விடலாமா என்று கூட யோசித்து கொண்டு இருக்கிறாள்..
ஆனால் அவள் அருகில் அமர்ந்து காரை ஓட்டி வருபவனோ அது எல்லாம் எனக்கு கவலையே இல்லை என்பது போல சூர்ய பிரகாஷ் அவளோடு பயணம் செய்து கொண்டு இருந்தான்..அவளை எங்கு அழைத்து செல்கிறான்??? யாரிவன்??? அப்படி என்ன தான் பிரச்சினை அவனுக்கு??? ஏன் இப்படி எல்லாம் செல்கிறான்??? என எதுவும் தெரியவில்லை...
இதுவரை வாழ்க்கையிலேயே சந்தித்துக் கொள்ளாத நபர்கள் மத்தியில் நடக்கும் பகைமைக்கு என்ன காரணம்????
அவன் கண்களில் நிறைந்து இருக்கும் பழி வெறி ஒரு பெண்ணின் கண்ணீரை கண்டு உருகி போய் விடவில்லை!!.. அவனுக்கு அவள் குடும்பத்தை பழி வாங்க வேண்டும் அவ்வளவு தான் அதில் இவளுடைய கண்ணீரெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை அவனுள் இருக்கும் நெருப்பு மேலும் கொதித்து எழுந்ததே தவிர சற்றும் குறையவில்லை...
யாரிந்த சூர்ய பிரகாஷ்??????.....
