இராட்சதன் 2
அத்தியாயம் : 2
அவனுடைய பேச்சு சுத்தமாக அவருக்கு பிடிக்கவில்லை இதுநாள் வரை யாரும் அவரை எதிர்த்து பேசியது கூட இல்லை அவருடைய வார்த்தைக்கு மறுவார்த்தை பேசியதில்லை அப்படி இருக்கும் இடத்தில் ஒட்டுமொத்த அந்த கிராமமே கூடியிருக்கும் இடத்தில் அவரைப் பார்த்து யாரோ ஒருவன் எதிர்த்து பேசுகிறான் என்ற ஆத்திரம் இல்லாமல் இல்லை ஆனால் சூழ்நிலை கருதி அவர் அமைதியாக இருந்தார்...
அதை கேட்ட தினகரன் அவனுடைய சட்டையை பிடித்து," யாருகிட்ட என்ன பேசுற யாரு டா நீ யாரு டா என் அப்பா முகத்துக்கு நேரா பேசுற தைரியம் உனக்கு எப்படி வந்துச்சு??? இந்த ஊர்ல எவனும் அப்படி நடக்க மாட்டான்??? யார் டா நீ எங்க இருந்து வந்து இருக்க???" என கொதித்து கேட்டான்...
அவனை கண்டதும் அந்த நெடியவன் பேச கூடவில்லை...அவ்வளவு ஆத்திரம் தான் அவன் முகத்தில் தெரிந்தது... அத்தனை பேர் முன்னிலையில் தினகரன் முகத்தில் ஓங்கி அவன் குத்து விட அவனோ அவன் அடித்த அடியில் கீழே வேறு விழுந்தான்..அதை கண்டு அனைவருமே அதிர்ந்தனர்...ஆம் ஊரிலேயே ரவுடி ஆன தினகரனை எவனோ ஒருவர் அடித்து சாய்த்து விட்டானே யார் இவன் என அனைவருமே அன்று பேசிக்கொண்டனர் அது வேறு விசயம்..
ஊர் மக்கள் கூடி இருக்கும் இடம் என்பதாலும் இவன் யாரிவன் என அவருக்கு தெரியாததாலும் இங்கே வைத்து எதுவும் வேண்டாம் என கருதி உலகநாதன் பிரச்சனை வேண்டாம் என தினகரனை சமாதானம் செய்தும் கூட்டி சென்றார் உலகநாதன்... அவர் மனதுக்குள்ளும் நடந்த சம்பவம் வன்மமாக நிறைந்திருந்தது என்பது வேறு விஷயம்...
அன்று அந்த நெடியவனின் பேச்சு அத்தனை திமிராகவும் கம்பீரமாகவும், அதே நேரம் துடிப்பாகவும், அவன் முகத்தில் தெரிந்த கோபக்கனல் உன்னை வெட்டி சாய்த்து விடுவேன் என்பது போல இருக்க அதை இப்போது நினைத்தாலும் உலகநாதன் மனம் சற்று அதிர தான் செய்யும்..
அவனை கண்டது முதல் இதோ இந்த நொடி வரை அவன் அவருக்கு குடைச்சல் கொடுத்து கொண்டே தான் இருக்கிறான் என்பது கூடுதலான விசயம்..
அப்படி இருக்க கண்ணாயிரம் கூறவும் அந்த கோணத்தில் உலகநாதன் யோசிக்கவும் செய்தார் ஏனெனில் ஒரு வேலை அப்படி இருக்குமோ என்று எண்ணம் அவர் மனதில் தோன்றும் துவங்கியது...
தினகரனும் ஆத்திரத்தில்,"என்ன சொல்றீங்க இதை ஏன் முன்னாடி சொல்லல அவன் கழுத்தை அன்னிக்கே சீவி இருக்கணும் அப்பா தான் தடுத்துட்டார்.. இப்ப பாருங்க என்ன பிரச்சனை பண்ணிட்டு இருக்கான்னு பார்த்தீங்களா அப்பா" என்று கூற,
"அதற்குத்தான் நான் சொல்ல வந்தேன் தம்பி நீங்க தான் என்னை தடுத்துட்டீங்க" என்று கண்ணாயிரம் தன்னிடம் தவறு இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்த அது எதுவும் அப்பா மகன் இருவர் காதிலும் விழவில்லை..
அந்த வெறும் பயல் இந்த ஊரில் இல்லை என்பது மட்டும்தான் அவர்களுடைய காதில் ஓடிக் கொண்டிருந்தது.. பழி வாங்க துவங்கி விட்டானா என்று கூட நினைத்தனர்..ஆனால் ஏன், எதற்கு என அவர்களுக்கும் புரியவில்லை...
கூடவே அன்று தினகரனில் மனதில் அவன் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு வேட்டியை மடித்து கட்டி மீசையை முறுக்கி திமிராக அவர்களிடம் பேசியதும் ஞாபகத்துக்கு வந்து போனது.. அது வேறு அந்த நொடி அவர்களுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது என்று தான் கூற வேண்டும்...
"அப்படி மட்டும் ஏதாவது நடந்திருந்தால் அவன் கழுத்தை துண்டாக்கி விடுவேன் அண்ணே" என்று தினகரன் குதித்துக் கொண்டிருந்தான்... ஏனெனில் மூன்று மாதத்திற்கு முன் அவன் கையில் வாங்கிய அடியை திருப்பி கொடுத்தே ஆக வேண்டும் என்ற ஆத்திரமும் தினகரனுக்கு இருந்தது.. அதற்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை என்றுதான் கூற வேண்டும்...
ஆனால் தினகரன் அறியாத விஷயம் என்னுடைய கொதிப்பு எல்லாம் அவனிடம் வேலைக்காகாது என அவனுக்கு அந்த நேரம் புரியவில்லை என்றுதான் கூற வேண்டும்...
ஆம் இந்த நொடி அவர்களுக்கு இந்த வீட்டுப் பெண் பற்றிய எண்ணம் தான் முக்கியமாக இருந்தது.. ஆம் அவள் எவ்வளவு சீக்கிரமானாலும் கிடைக்க வேண்டும் கல்லூரியில் இருந்து தகவல் வந்தது முதல் வீட்டில் ஒரே களேபரமாக இருந்தது...
ஆம் உலகநாதன் மற்றும் காவேரியின் குடும்பம் அந்த சுற்றுவட்டார கிராமங்களில் கொஞ்சம் பேர் உள்ள குடும்பம் அவர்களுக்கு இரு பிள்ளைகள்.. மூத்தவன் தினகரன் படிக்காதவன் ஆனால் ரவுடி தனம் மட்டும் செய்து வருகிறான் இரண்டாவது கண்மணி அவரின் செல்ல மகள் நன்றாக படிக்கவும் அவளை சென்னையில் தங்க வைத்து படிக்க வைத்து வருகிறார்...
கண்மணி இந்த குடும்பத்தின் குலவிளக்கு...வயதோ 21 மூன்றாம் ஆண்டு கல்லூரியில் படித்து வருகிறாள்... மூன்றாம் ஆண்டு நிறைவடைந்து விட்டது பரீட்சை எல்லாம் எழுதி விட்டார்கள் அதனால் அவர்களுடைய கல்லூரியில் இறுதி வருடம் என்பதால் அனைவரும் கேட்டதின் பொருட்டு இன்பச் சுற்றுலா ஏற்பாடு செய்திருக்கிறார்கள் அதற்கு அவளும் சென்று இருக்கிறாள் ஆனால் இப்பொழுது அவளைத்தான் காணவில்லை...
கல்லூரி நிர்வாகத்தினர் அவளை காணவில்லை என்றதும் தகவல் வீட்டாருக்கு தெரிவிக்க அவர்களோ அதிர்ந்த நிலையில் இருக்கிறார்கள் ..
