இராட்சதன் 1
எதிர்மறை நாயகன் : சூர்ய பிரகாஷ்
நாயகி : கண்மணி
அத்தியாயம் : 1
காலை வேளையில் அந்த அழகான கிராமத்தில் செய்யோன் தன் வேலையை செவ்வனே செய்ய ஆனால் அந்த கிராமத்தில் அந்த கிராமமே போற்றும் அந்த பெரிய வீட்டின் முற்றத்தில் அமர்ந்து காவேரி ஒப்பாரி வைத்து கொண்டிருக்க, அந்த வீட்டின் கூடத்தில் போடப்பட்டு இருந்த அந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து இருந்த உலக நாதன் முகம் இறுகி போய் இருந்தது.. அவர் முகத்தில் பதட்டம் தென்பட்டது.. சற்று படபடப்பாகவும் அவர் காணப்பட்டார்...அதற்கு காரணம் காலை வேளையில் ஃபோன் எனும் ஆயுதத்தில் வந்த செய்தி தான் அவரின் பதட்டத்துக்கு முக்கிய காரணம் ஆகும்..
அப்படி என்ன தான் அந்த ஃபோனில் வந்த செய்தி என்றால் அந்த ஊரே மதிக்கும் ஒருவரான உலகநாதன் அவரின் மகளை காணவில்லை என்ற செய்தி வந்து இருக்க, நாளைக்கு ஊர் மக்கள் அவரை என்ன பேசுவார்கள் என்ற பதட்டம் அவருக்கும் இருக்கும் அல்லவா??? எத்தனையோ குடும்பத்தில் பஞ்சாயத்து என்று வரும் பொழுது ,"பொம்பள புள்ளையை அடக்க ஒடுக்கமா வளர்க்கணும் இப்படி வெளியூரு அங்கே இங்கே அனுப்பி வச்சா இப்படித்தான் இருக்கும்" என இவரே பஞ்சாயத்து செய்து இருக்கிறார்..
அப்படி இருக்க இன்று அவரின் மகளைக் காணவில்லை என்றதும் அவருடைய மூளை போன இடமோ அந்த ஊர் பொதுமக்கள் தான்...அவருக்கு எல்லாமே அவருடைய கௌரவம் மற்றும் மரியாதை தான்..
அதற்கு தகுந்தது போல அவர் காதில் ,"ஐயா நான் விசாரித்ததில் நம்ம பாப்பாவை காணவில்லை...உங்களுக்கு வந்த ஃபோன் உண்மை தான்" என அவருடைய குமாஸ்தா கண்ணாயிரம் தன்னிடம் விசாரிக்க சொன்ன விசயத்தை பற்றி கூற அவர் முகமோ அதிர்ச்சியில் கொந்தளித்தது..
அவருக்கு அருகே நின்று கொண்டு இருந்த அவருடைய மகன் தினகரன் ,"என்ன அண்ணே இப்படி அசால்ட்டா சொல்றீங்க??? கண்மணியை தூக்குற தைரியம் இந்த எட்டுபட்டியில் யாருக்கு தைரியம் இருக்கு??? எல்லோர்க்கும் நம்ம மேல பயம் இருக்கு.. எனக்கு என்னமோ இந்த காலேஜ் கார நாய்ங்க மேல தான் சந்தேகமா இருக்கு.. டூர் கூட்டிட்டு போறேன் அங்கே கூட்டிட்டு போறேன் இங்க கூட்டிட்டு போறேன்னு சொல்லி பொம்பள பிள்ளைகளை எல்லாம் கூட்டிட்டு போயிட்டு இப்படி தொலைச்சிட்டு வரானுங்க மரியாதையா நல்லா தேடி பார்க்க சொல்லுங்க இல்லை அவனுகள உண்டு இல்லைன்னு பண்ண போறேன் பாருங்க அப்பா நீங்க கவலைபடாதீங்க நான் பார்த்துக்கிறேன்" என்று அவன் கொந்தளித்து கூறினான்...
உலகநாதன் தன்மகனை பார்த்து ,"என்ன பண்ணுவ ஏது பண்ணுவன்னு எனக்கு தெரியாது என் பொண்ணு எனக்கு இன்னைக்கு ராத்திரிக்குள்ள வீட்டுக்கு வந்து இருக்கணும்..ஊருக்குள்ள தெரிஞ்சா என் மானம் போயிடும்" என்று அவர் கட்டளையிட்டார்...அவரின் முகத்தில் தெரியும் வீரியத்தை புரிந்து கொண்ட மகனும் சரியென்பது போல தலை அசைத்தான்...
கண்ணாயிரம் அவர்கள் இருவரையும் பார்த்து,"நான் ஒன்னு சொல்லணும்" என்று கூற,
தினகரன்," நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம் சொன்ன வரைக்கும் போதும் இதுவே பத்திட்டு இருக்கு.. நாங்களே காலேஜ்ல இருந்து வந்த போன் உண்மையா பொய்யா தெரியாம குழம்பி போய் நின்னா நீங்க அது உண்மைதான்னு சொல்லி எங்களை மேலும் குழப்பி விட்டு இருக்கீங்க அண்ணே" என்று கோபமாக கூறினான் தினகரன்..அவனின் ஒரே தங்கையை காணவில்லை என்ற ஆதங்கம் அவன் முகத்தில் தென்பட்டது..
உலகநாதனும் கண்ணாயிரத்தைப் பார்த்து ,"என்ன???" என கேட்டார்.. கண்ணாயிரம் படித்தவர் எந்த விஷயத்தையும் நன்கு ஆலோசித்து தான் கூறுவார்.. உலகநாதனின் அத்தனை சொத்து கணக்கு வழக்குகளை அவர்தான் பார்த்து கொள்கிறார் அப்படி இருக்க அவர் ஒரு விஷயத்தை கூறினால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்று கருதி உலகநாதன் என்ன என கேட்க ,"அந்த வெறும் பயலும் ரெண்டு நாளா ஊர்ல இல்லைன்னு சொல்லிக்கிறாங்க.. நம்ம பாப்பாவை கடத்திட்டு போன கார் கலர் கருப்பு கலர் ன்னு சொல்றாங்க .. ஏதோ மகேந்திரா தார்ன்னு சொல்றாங்க அது பார்க்க ஜீப் மாதிரி இருக்கும் இந்த வெறும் பயலும் அந்த கருப்பு கலர்ல ஜீப் மாதிரி இருக்கிற கார்ல தான் அடிக்கடி அந்த பக்கம் இந்த பக்கம் போயிட்டு வருவான்....அது தான் சந்தேகமா இருக்கு.. அவன் வேற எப்ப பார்த்தாலும் நம்மளை பார்த்தால் முறைச்சுக்கிட்டே இருக்கான் அதுதான் யோசனையா இருக்கு" அது தான் என இழுத்தவர் மேலும் உலகநாதனை பார்த்து,"அவன் தான் அன்னிக்கு உங்க மூஞ்சிக்கு நேரா சவால் விட்டானே அது தான் கொஞ்சம் யோசனையாக இருக்கு" என்று கூற அதைக் கேட்ட உலகநாதன் கண்கள் இடுங்கியது...
உண்மை தான்!!! கண்ணாயிரம் சொல்வது ஆயிரம் மடங்கு உண்மையான விசயம் தான் இதை எப்படி நான் மறந்தேன் என உலக நாதன் யோசித்தார்..
அதே நேரம் அந்த நாள் ஞாபகமும் அவருக்கு வந்து போனது..ஆம் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன் அன்றைய நாள் அந்த ஊர் திருவிழாவில் அவருக்கு முதல் மரியாதை செய்து முடித்து விட்டு அவர் கோயிலை விட்டு வெளியே வரும் போது கூடி இருக்கும் அத்தனை பேர் முன்னிலையில் யாரோ ஒருவன் இதுவரை அவனை இந்த ஊரில் அவர் பார்த்தது கூட இல்லை...அவன் யார் அவனுடைய பெயர் என்ன ??? என எதுவுமே தெரியாது!!
அவனை பார்த்தால் இந்த ஊர் போல இல்லை ஏதோ வெளிநாட்டில் இருந்து வந்தவன் போல உலகநாதனுக்கு தெரிந்தார்...
அவன் வேட்டி சட்டை அணிந்திருந்தாலும் அவனுடைய நிறமும், உயரமும், அவனுடைய உருவமும் அவன் வேட்டி சட்டைக்கு உரித்தானவன் அல்ல என்பதை அவருக்கு உரித்தாலும் அவனை பார்த்து அவர் குழம்பி பார்க்க, அந்த ஒருவன் அவரை பார்த்து மிகவும் மிடுக்குடன் அவன் முன்னே நின்று தன் கண்ணில் தெரியும் ஆக்ரோஷத்தையும் பழி உணர்வையும் அடக்கி ஊரே அவரை போற்றினாலும் துச்சமாக அவரை நினைத்து பார்வையாலேயே அவரை பொசுக்கி விட முயல்பவன் போல அவரைக் கண்டு எடுத்த எடுப்பிலேயே," என்ன முதல் மரியாதையா??? அதுவும் உனக்கா??? இன்னியோட உன்னோட மானம் மரியாதை எல்லாம் போக போகுது எழுதி வைச்சுக்கோ!!! அதுக்கு காரணம் நானாக தான் இருப்பேன்...உனக்கு என்னை பத்தி தெரியாது ஆனால் எனக்கு உன்னை பத்தி நல்லா தெரியும்!!! உனக்கும் எனக்கும் ஒரு பழைய கணக்கு இருக்கு அதை முடிக்க தான் நான் வந்து இருக்கேன்..
அந்த கணக்குகாக இனி நான் அடிக்கிற ஒவ்வொரு அடியும் உனக்கு இடி போல இருக்கும் மறந்துடாத உன் சாவு என் கையில தான்.. இது நாள் உன்னை எதிர்க்க ஆள் இல்லைன்னு தானே நீ உன் இஷ்டத்துக்கு எல்லாம் செஞ்சிட்டு இருந்த!! இனி நான் வந்துட்டேன்..நான் ஆம்பிளை டா முகத்துக்கு நேரா பேசுவேன்.. உன்னையும், உன் மகனையும் மாதிரி பொட்டை பயல் இல்லை... இதுவரை மத்தவங்கள தானே அடிச்சிருப்ப யாரும் உன்னை திருப்பி அடித்திருக்க மாட்டாங்க இல்ல இனி அடிக்கிற காலம் வந்துடுச்சு உன்னோட காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோ கூடிய சீக்கிரம் உன்னோட மொத்த குடும்பம் எப்படி எப்படி மொத்த குடும்பமும் அழிய நான் தான் காரணமா இருப்பேன் அதை சொல்லிட்டு போலாம் தான் வந்தேன்... வரட்டா" என்று அவன் இறுகி போய் உலகநாதனை பார்த்து சவால் விட்டு கூற, அவனுடைய வார்த்தையை கேட்ட உலகநாதன் அதிர்ந்தார் யார் இவன் வந்தான் முகத்திற்கு நேரே நின்றான் படபடவென பொரிந்து தள்ளுகிறான் என அவர் அசையாமல் அவனை பார்த்து யோசித்தார்...
