இராட்சதன் 47
அத்தியாயம் : 47
அவளால் நடந்து முடிந்த விசயத்தில் இருந்து மீளவே முடியவில்லை..ஒரே நேரத்தில் இருவரும் தாக்கப்பட்டு இருந்தார்கள் இருவரும் உயிர் பிழைக்க மாட்டார்கள் என்பது அவளுக்கு தெளிவாக தெரிந்து போனது...இன்னும் அவர்கள் மரணபடவில்லை அந்தக்கொடுமையை பார்க்கும் திறன் அவளுக்கு இல்லை..அவள் தாயிடம் அந்த கோயிலில் வைத்து கூற அதைக் கேட்டவரின் முகம் இறுகியது..
அவரோ அவள் கூறிய பின்னும் அமைதியாக இருக்க," என்னமா ஒன்னும் சொல்லாமல் இருக்கீங்க..எனக்கு அதை பார்த்ததும் உயிரே போயிடுச்சு" என அவள் கேட்க,
"என்ன சொல்ல சொல்ற நான் எப்போ தாலியை கழட்டி உன்னோட அப்பா முகத்தில் தூக்கி வீசிட்டு வந்தேனோ அப்பவே மனசளவில் அந்த மனுஷன் இறந்துட்டான் அப்படின்னு தான் நினைச்சுட்டு வந்தேன் இனி அவர் உயிரோடு இருந்தா என்ன இல்லைன்னா என்ன உயிரோடு இருந்தா உன்னை நிம்மதியாக விடுவார் என்று நினைத்து இருக்கியா இல்லை என்னைத்தான் நிம்மதியா வாழ விடுவாரு நினைச்சுட்டு இருக்கியா ரெண்டுமே செய்ய மாட்டார் அவரும் என் வயித்துல பிறந்த தினகரனும் சாகிறது தான் உண்மையான தண்டனை அது தான் என் மருமகள் நித்யாவுக்கும் நான் செய்யற கைமாறு" இதை கூறும்போதே அவருடைய கண்ணில் கண்ணில் வர மேலும் தன்னை தேற்றிக்கொண்டு ,"இதே மாதிரி தானே நித்யாவையும் பாசமா வளர்த்து இருப்பாங்க இதை எல்லாம் அன்னைக்கே நான் தட்டி கேட்டு இருக்கணும் ஆனால் உன் அப்பா மேல இருந்த பயத்துல வாயை திறக்காமல் விட்டுவிட்டேன் இப்போ ஒன்னு நடந்திருக்கு நல்லதுக்கு தான் விட்டுடு எனக்கு இதில் வருத்தம் நான் அன்னிக்கே என் கழுத்தில் உள்ள தாலியை கழட்டி எறிந்து இருந்தால் இந்த நிலைமை வந்து இருக்காது"என்று கூறியவர் அடுத்த கட்ட வேளையில் ஈடுபட துவங்கி விட்டார்..
தாய் தைரியமாக பேசுவதை பார்த்த அவளுக்கு சற்று மனதுக்குள் ஆறுதல் ஏற்பட்டது என்னவோ உண்மைதான்..
அனைவருக்கும் அனைத்தும் தெரிந்து விட்டது இருவரும் மரணப்பட்டு இருப்பார்கள் என அனைவரும் எண்ணிக் கொண்டனர் ஆனால் யாரும் யாரிடமும் எதைப்பற்றியும் விசாரித்துக் கொள்ளவில்லை இந்த மாதிரி கயவர்களுக்கு இந்த தண்டனை தேவைதான் என்று அமைதியாக இருந்து கொண்டனர் அடுத்த இரு நாட்களில் திருமணம் அமோகமாக நடந்தது.. அவனோ எதுவும் நடந்த போல காட்டி கொள்ளவில்லை...நிதானமாக கல்யாணத்தின் ஒவ்வொரு நொடியையும் எண்ணி அவன் மகிழ்ந்தான்..அவன் மனம் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையில் சாந்தி அடைந்தது என்று தான் கூற வேண்டும்..
எந்த ஊரில் வைத்து அவளை அவமானப்படுத்தினானோ அதே ஊரில் வைத்து அவள் கழுத்தில் மீண்டும் ஒருமுறை தாலி கட்டி தன் மனைவியாக மனதார ஏற்றுக்கொண்டான் சூரிய பிரகாஷ்..
தாலி கட்டும் பொழுது அவள் கண்ணில் கண்ணீர் வர அதை பார்த்தவன் அவளின் கண்ணீரை துடைத்து கூடி நின்றிருக்கும் சபையினர் முன்னே ,"எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க அன்னைக்கு நான் சொன்னது எல்லாம் பொய் என்னை நேசித்ததை தவிர கண்மணி எந்த தப்பும் செய்யல இதை எல்லாம் நான் உங்களுக்கெல்லாம் விளக்கணும்னு எந்த அவசியமும் இல்லை ஆனால் என் பொண்டாட்டி பெயருக்கு எந்த கலங்கமும் வரக்கூடாது அப்படின்னு பார்க்கிறேன் அதுக்காக மட்டும்தான் உங்க கிட்ட சொல்றேன் என் பொண்டாட்டி எந்த தப்பும் செய்யாதவ" என்று கூற
அதைக் கேட்டதும் ,"அப்பவும் நினைச்சேன் இது எல்லாம் மாப்பிள்ளை பண்ண வேலை தானா அந்த புள்ள நல்ல பிள்ளையே இப்படி பண்ணிடுச்சே என்று நினைத்தேன்" என்று ஊரார் பேச ,
அதைக் கேட்ட அவனும் அவளைப் பார்த்து ,"இப்போ சந்தோசமா.. இதை இந்த ஊர் மக்கள் முன்னாடி சொல்லாமல் என்னால கூட நிம்மதியா வாழ முடியாது" என கூற, அவள் கண்கள் இலேசான சந்தோசத்தில் மிளிர்ந்தது...இப்போது தான் அவள் மனம் நிம்மதி அடைந்தது..
அவளுக்கு அவனிடம் எல்லா விசயமும் பிடிக்கும் ஆனால் இது ஒன்றை தவிர அப்படி இருக்க அவனே எந்த இடத்தில் வைத்து அவளை அவமானப்படுத்தினானோ அதே இடத்தில் வைத்து கலங்கி போயிருந்த அவளுடைய பெயரை திரும்ப பெரும் முயற்சியில் ஈடுபட அது அவளின் மனதை தொட்டது...
அவன் செய்தது தவறு என்றாலும் அவன் பக்கம் இருந்த நியாயத்தை அவள் உணர்ந்து கொண்டாள் தன் அக்காவுக்காக தான் அவபெயரை சுமந்தேன் என தன் மனதை அவளை தேற்றிக்கொண்டாள்..
பிறகு என்ன தன் தந்தை செய்த அதர்மத்துக்கும் தன் தமையன் செய்த விஷயத்திற்கும் அவர்களுக்கு நடந்தது எல்லாம் நன்மைக்கே என நினைத்துக் கொண்டாள் கலகம் பிறந்தால் தான் நன்மை பிறக்கும் என்பதற்கு போல நடந்த கலகத்தில் நன்மையே இறுதியில் நடந்து முடிந்திருக்கிறது என தன் மனதை சாந்தி படுத்திக் கொண்டு எப்பொழுது முறையாக அவன் அவளுக்கு தாலி கட்டினானோ அப்போது இருந்து அவளும் தன் கணவனை மீண்டும் மனதில் காதலிக்க துவங்கி இருந்தாள்..
அன்று இரவு அவளை தயார் செய்து அவளுடைய அறைக்கு அவளை அனுப்பி வைக்க அவனோ அவளை பார்த்து ,"நீ போய் தூங்கிக்கொள்" என்று கூற அதைக் கேட்டு அவளோ அதிர்ந்தாள்..
ஏனெனில் திருமணத்திற்கு முன்னே நடந்த விசயங்கள் எல்லாம் அவள் மனதை கண்டிப்பாக பாதித்து இருக்கும் அதிலிருந்து அவள் வெளியே வரட்டும் என்று தான் அவன் அன்றைய இரவை அமைதியாக கடந்தான்..
அவளுக்கோ ஒரே அதிர்ச்சி அவள் அருகே நிற்கும் போதெல்லாம் அவளை அவள் முத்தமிட்டு இருக்கிறான் அப்படி இருக்க அவள் இபொழுது முழுதாக அவனுடைய சொத்தாக இருக்கும் போது அவளை தொடாமல் அவன் இருக்கவும் அவளுக்கு ஒரே குழப்பமாக இருக்க, அவனோ அதை கண்டவன் அவளின் முகத்தை கைகளில் ஏந்தி உன்னோட மனசு ,"பல குழப்பத்திலும் சங்கடத்திலையும் இருக்கும் அதிலிருந்து வெளில வா அதுக்கப்புறம் பார்த்துக்கலாம்... என்னால உன்னோட உணர்வுகள் எப்படி இருக்கும்னு புரிஞ்சுக்க முடியும்" என்று கூற அவள் மனதில் இலேசாக சந்தோஷ கண்ணீர் வந்தது..
தன்னை அவன் புரிந்து கொள்கிறான் என்பதை உணர்ந்தவள்," நான் பல தடவை நினைச்சு இருக்கேன் நான் காதலிச்சவன் தப்பா போயிட்டானோ அந்த கண்ணுல காதலை பார்த்தேனே ஆனால் அது எல்லாம் பொய்யா அப்படின்னு நெனைச்சு இருக்கேன் ஆனால் அது எல்லாம் பொய்யில்லன்னு நீங்க நிரூபிச்சுட்டு இருக்கீங்க" என கூற
"எனக்கும் பல இடத்தில் நீங்க பண்ணினது தப்புதான்னு நான் நினைச்சுட்டு இருந்தேன் ஆனால் இவங்க முகத்திரையை கிழிக்க தான் நீங்க இப்படி என்னை உபயோகிச்சீங்க அப்படின்னு நினைக்கும் போது நான் பட்ட வலி எல்லாம் எனக்கு மறந்தது போல இருக்கு" என கூற
அதை கேட்ட அவனோ ,"நான் அந்த அளவுக்கு நல்லவன் எல்லாம் கிடையாது.. நான் காதலிச்ச போது பொய்யா தான் உன்னை காதலிச்சிட்டு இருக்கேன்னு நெனச்சிட்டு இருந்தேன் ஆனால் அப்படி இல்லை உண்மையாவே நீ என்னுடைய மனசுல இருந்திருக்க
உன்னை கூட்டிட்டு வந்து இங்கே விட்டு ஊர் மக்கள் மத்தியில் உன்னை அசிங்கப்படுத்த போது கூட எனக்கு உண்மையா வலிக்கல தாலி கட்டினால் பொய் சொல்ல கூடாதுன்னு சொல்லுவாங்க உண்மையா இருக்கணும்னு சொல்லுவாங்க அதனால உண்மையை சொல்றேன் அதுக்கு அப்புறம் உன்னை விட்டுட்டு போனதுக்கு அப்புறம் தான் என்னமோ எனக்கு குத்திட்டே இருந்துச்சு ஒரு பொண்ணுக்காக இன்னொரு பெண்ணை அசிங்கப்படுத்திவிட்டேன் என்று நினைத்து கொண்டே இருந்தேன் இருந்தும் உன்னோட அப்பா அண்ணன் மேல இருந்த கோபத்துல இது உனக்கு கிடைத்த தண்டனை தான் அப்படின்னு என் மனசை நானே தேத்திகிட்டேன்..
ஆனால் கடவுள் உன்னை என் கண்ணு முன்னாடி திரும்ப கூட்டிட்டு வருவார் என்று நினைக்கல நீ நான் எவ்வளவோ செஞ்சும் வயித்துல குழந்தை இருக்கு அந்த குழந்தையை பாதுகாக்க உன் உயிரை பணயம் வச்சிட்டு ஓடி வந்த நான் குழந்தை இல்லை என்று சொன்னதும் நீ அழுது அழுகை எனக்கு இப்போ நினைவு இருக்கு அதுக்கப்புறம் தான் உன்னை என்ன ஆனாலும் விடக்கூடாது என முடிவு பண்ணினேன்" என்று அவன் கூறினான்...
அதைக் கேட்டு அவளோ அமைதியாக இருக்க அவனும் அவனுடைய கைகளை விரிக்க அவளும் பாந்தமாக அவனது மார்புக் கூட்டுக்குள் புகுந்து கொண்டாள்..
மறுநாள் காலை காவேரியிடம் அவன் தங்களுடன் வரும் படி கூற அவரோ மறுத்து விட அவனோ ,"தனியாக இருந்து என்ன பண்ண போறீங்க??" என கேட்க
"இது நான் வாழ்ந்த மண்ணு தம்பி இங்கே இருந்து நான் வர மாட்டேன்" என்க
அவனோ ,"இன்னும் எத்தனை நாளைக்கு இதே சொல்லிட்டு இருக்க போறிங்க தனியா இருங்க என்ன பண்ண போறீங்க இங்கேயே இருந்தது நடந்ததெல்லாம் நினைச்சுட்டு உட்கார்ந்துட்டு இருக்க போறீங்களா நீங்க இப்போ தைரியமா இருக்கிற மாதிரி நடிச்சிட்டு இருக்கீங்க உண்மையா நீங்க அப்படி இல்ல நீங்க அப்படி என்ன ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்துட்டீங்க விவரம் அறிவதற்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிட்டீங்க இரண்டு குழந்தையும் பிறந்திருச்சு அவ்வளவு தானே நடந்து இருக்கு மத்தபடி உங்க வாழ்க்கையில் வேற எதுவும் நடக்கலையே வெளியே வந்து பாருங்க வாழ்க்கை ரொம்ப அழகா இருக்கும் இன்னும் நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது பார்க்காதது நிறைய இருக்கு" என்று அவன் கூறினான்...
அதைக் கேட்ட அவரோ ,"அதெல்லாம் சரி தான் மாப்பிள்ளை நடந்ததை எல்லாம் நான் என்னோட விதி என்று நினைத்துக்கொள்கிறேன்" என கூறி தயங்க,
அவனோ," நீங்க என்னை உங்க மகனா நினைச்சுக்கோங்க மத்தது எதுவும் பேசாதீங்க வாங்க போலாம்.. இனி நான் தான் உங்களுக்கு மகன், மருமகன் எல்லாமே" என்று அழைத்துவிட்டு அவனுடைய அம்மாவை பார்த்து ,"அம்மா நீங்க எவ்வளவோ குரூப்ஸ் போறீங்க எத்தனையோ கிளப்ல சேர்ந்து இருக்கீங்க அங்க எல்லாம் இன்னொரு மெம்பர்ஷிப் எடுத்துக்கோங்க அத்தையும் கூட்டிட்டு போங்க அத்தையை உங்க பொறுப்பில் நான் விடுகிறேன்" என்று கூற,
" அதுனால என்ன எனக்கு ஒரு மாசம் டைம் கொடு காவிரியை நான் எப்படி மாத்துறேன்னு பாரு" என்று சந்தோஷமாக சூரிய பிரகாஷின் அம்மா கூறினார் பிறகு ரத்தினம் மற்றும் அவர் மனைவியிடம் கூறிவிட்டு அனைவரும் காவிரியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றனர்...
நான் போன பிறகு தான் அம்மா என்ன செய்வாரோ என்று எண்ணிக் கொண்டிருந்த கண்மணிக்கு அம்மா தன்னுடனே இருக்கப் போகிறார் என்ற எண்ணம் மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது..
அப்படியே அவர்கள் சென்னை நோக்கி யாத்திரை செய்ய தொடங்கினார்கள் சென்னை மிகவும் அன்போடு அவர்களை வரவேற்றது வந்தாரை வாழவைக்கும் சென்னை கண்மணி மற்றும் அவளுடைய அம்மாவை வாழ வைக்காதா என்ன??? சிறப்பாக வாழ வைத்தது என்று தான் கூற வேண்டும்..
எப்போதும் அவளுடைய அம்மாவை வலுக்கட்டாயமாக சூரிய பிரகாஷின் அம்மா அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் செல்ல அவளோ வீட்டில் உள்ள வேலைகளை எல்லாம் சிறப்பாக செய்தபடி அவனுக்காக காத்திருப்பாள் இதுதான் தினசரி அவளுடைய வேலையாக இருக்க கிட்டத்தட்ட சென்னை வந்து ஒரு வாரத்துக்கு பிறகு ஒரு நாள் மாலை வேளையில் அங்கு இருந்த மல்லிகை பந்தலில் இருந்து பூக்களை எல்லாம் பறித்துக் கொண்டிருந்தவள் பின்னால் வந்து இறுக அணைத்துக்கொண்டு அவளின் கழுத்து வளைவில் தன் இதழ்களை பதிய வைக்க அவளோ அதிர்ந்து போய் திரும்பி பார்க்க அவனோ அணைத்து கொண்டு அவளின் கழுத்து வளைவில் அவனின் முகத்தை பதிய விட்டு ,"என்ன பயந்திட்டியா??" என்க
அவளோ பதறி சுற்றும் முற்றும் பார்த்து," யாராவது பார்த்திட போறாங்க கொஞ்சம் தள்ளி நில்லுங்க" என சிணுங்க
"யார் பார்க்க போறாங்க என் பொண்டாட்டியை நான் கட்டி பிடிச்சு இருக்கேன் என்னை கேள்வி கேட்க யாராவது வந்துடுவாங்களா???" என்க அவளோ அவன் கூறியதை கேட்டு சிரித்து ,"ஆமாம் நீங்க தைரியசாலி தான் கொஞ்சம் தள்ளி நில்லுங்க" என்றாள்.. அவனோ அவள் கூறியதை கேட்காமல் மேலும் ஒட்டி கொண்டான்..
