இராட்சதன் 46
அத்தியாயம் : 46
எங்கு அந்த வேன் செல்கிறது என தெரியாது இவனும் கூலாக காரில் ஏற ,"அவங்க எங்க போறாங்க" என அவள் கேட்கவும்," அதுவா உன்னோட அண்ணன் நீ திரும்பி வரமாட்டான் செத்துட்டான் நினைச்சுக்கோ" என்று கூற அவளோ அவனை அதிர்ச்சியாக பார்க்க ,"எவ்வளவு நாள் தான் பூமிக்கு பாரமாக இருப்பான்" என்று கூறிக் கொண்டே காரை எடுத்தான்..
அவளுக்கு பதில் ஒன்றும் கூறுவதற்கில்லை.. அந்த வேனில் எறிய தினகரன் நிலைமை அதோகதியாக்கியது மயக்கத்தில் இருந்த அவனை அந்த வேனுக்குள் இருந்த வெறி நாய்கள் சரமாரியாக தாக்கியது.. அவனை நாய்கள் கடித்து குதற அவனோ வழி தாங்க முடியாமல் கத்தினான்...இனி அவனுடைய உயிர் தாங்காது என்ற நிலையில் அவனை அந்த வேனில் இருந்து இறக்கி விட்டு விட்டு அந்த வேன் சென்றது..
அவன் தேகத்தில் கொஞ்சம் உயிர் இருந்தாலும் இனி அவன் பிழைக்க மாட்டான்..நாய் கடித்து அனாதையாக ஒருவன் சாலையோரத்தில் இறந்து விட்டான் என்ற செய்தி நாளை பேப்பரில் வந்தடையும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்..
அவன் கூறியதை கேட்டு கண்மணி அமைதியாக இருக்க,"என்ன அமைதியா இருக்க??" என அவன் கூலாக இருக்க அவளோ தன் சங்கடத்தை மறைத்து கொண்டு ,"இனி எங்க போறோம் கோயிலுக்கா??" என அமைதியாக அவள் கேட்டு இருக்க
அவனோ ,"அதுக்கு முன்னாடி ஒரு சின்ன வேலை இருக்கு நீயும் நானும் போலாம் ஓகே அவங்க பொங்கல் வைக்கிற வேலையை பார்க்கட்டும்..நமக்கு கொஞ்சம் வேலை இருக்கு" என்று கூறிக்கொண்டு நேராக இவர்களின் பண்ணை விட்டை நோக்கி அவன் சென்றான்..
அங்கு இன்னும் தன் மகன் பக்கத்தில் இருந்து எந்த செய்தியும் வரவில்லையே என ஏங்கி நின்று கொண்டு இருந்த உலகநாதன் முன்னிலையில் போய் நின்றனர் சூரிய பிரகாஷ் மற்றும் கண்மணி...
"என்ன பையனுக்கு வெயிட் பண்றியா அவன் வர மாட்டான் இதோ இவ உன் பொண்ணு தானே இங்க இருக்கா உனக்கு இவளை என்ன பண்ணனும்னு தோணுதோ அதை செய் நான் வேடிக்கை பார்க்கிறேன்" என உலகநாதன் முன் சூர்ய பிரகாஷ் ஆக்ரோஷத்துடன் கூற தன் தந்தையை கண்டதும் பயந்து போய் சூர்ய பிரகாஷ் பின்னால் போய் அவள் ஒளிந்து மறைந்து நின்று கொண்டாள்..
அதை கவனித்த அவனோ ,"பார்த்தியா உன்னை பயந்து என் பின்னாடி நிற்கிறா அந்த அளவுக்கு உன்மேல நீ பெத்த பொண்ணுக்கு நம்பிக்கை இல்லை" என சூர்ய பிரகாஷ் கூற
அதை கேட்ட உலக நாதன்," அதுக்கு காரணமே நீ தான டா உன்னை சும்மா விட மாட்டேன்" என சட்டையை பிடிக்க அதை பார்த்து வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க அவன் ஒன்றும் முட்டாள் இல்லையே ..
உலக நாதனுக்கு அறிவுரை கூறி திருத்த ஒன்றும் அவன் வரவில்லை ஆனால் அறிவுரை கூறினாலும் திருந்தும் ஜென்மம் அவர் இல்லை இது எல்லாம் சைக்கோ புத்தியின் உச்சம்..
ஒன்றுமில்லாமல் அடுத்தவர் பணத்தின் மீது ஆசை அடுத்தவர் வாழ்வும் அடுத்தவரின் புகழும் பதவியின் மீதும் ஆசை பெண் மீது ஆசை அவளை வைத்து அடுத்து ஒரு சொத்தை அபகரிக்க ஆசை அது போதாது என்று மகனுக்கும் தான் கற்ற கல்வியை படிப்பித்து மகனையும் அதே போன்றொரு கயவனாக மாற்றி ஒரு பெண்ணின் மரணத்துக்கு காரணமாக இருக்கும் இவரெல்லாம் திருந்துபவர் அல்ல இப்பொழுதும் தன்னுடைய குட்டு வெளிப்பட்டு விட்டதே என்ற ஆத்திரம் மட்டும் தான் அவர் முகத்தில் இருக்கிறது காவேரி தனக்கு எதிராக திரும்பி விட்டார் என்ற ஆத்திரம் இவர்களை ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆத்திரம் மனதுக்குள் பொங்கி எழுந்தது...
அப்படி இருக்க தன் சட்டையை பிடித்த அவரை பார்த்துக் கொண்டு இருக்க அவன் என்றும் அவ்வளவு பரந்த மனதை கொண்டவன் கிடையாது.. தன் மீது கை வைத்தவன் மூக்கை உடைக்க அவளோ தன் முன்னால் தன் அப்பா அடி வாங்குவதை தாங்கி கொள்ள முடியாமல் ,"அப்பா" என்றவள்,
அவனை பார்த்து," அவரை அடிக்காதீங்க பிளீஸ் " என கீழே விழுந்தவரை தூக்கி பிடிக்க அவளுடைய முடியை கொத்தோடு பிடித்து அவளுடைய கழுத்தை அழுத்தமாக பிடித்து," இதுக்கெல்லாம் காரணமே நீதான்டி கண்டவன் கிட்ட என்ன அடி வாங்க வச்சிட்டு இல்ல எல்லாமே இருந்தும் எதுவுமே இல்லாத மாதிரி இருக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா இந்த சொத்து இந்த பதவி இதுக்கெல்லாம் நான் இவ்வளவு ஆசைப்பட்டு இருக்கேன் தெரியுமா மாடு மேய்ச்சிட்டு இருந்தேன் உன்னோட அம்மா வீட்டுல இப்போ என்னை நாலு பேரு பார்த்து வணக்கம் வைக்கிற அளவுக்கு நான் வந்து இருக்கேன் அந்த மரியாதையை கெடுத்துட்டியேடி இதுக்கெல்லாம் காரணம் நீ தானே அவனை வச்சு என் மானத்தை வாங்கி இப்ப அவனே இந்த ஊர்ல கல்யாணம் பண்ணி என் பெயரை கெடுக்க பாக்குறியா?? எல்லோருக்கும் என் மேல் பயம் இருந்தது அதை எல்லாம் எடுத்து என்னை ஒரு பைத்தியக்காரன் மாதிரி ஆக்கிட்டில" என்று கேட்டார் ..
"அதுக்கு இன்னும் கெட்டுப் போக என்ன இருக்கு மரியாதையா அவளை விடு" என்று சூரிய பிரகாஷ் கூற
"இவ நான் பெத்த பொண்ணு இவளை என்ன செய்யவும் எனக்கு உரிமை இருக்கு" என அவர் வெறி கொண்டு கூற அதை கேட்ட அவனோ ,"முடிஞ்சா செஞ்சு பார்" என கூறினான்..
அதை கேட்ட அவளோ அதிர அவரோ மனதில் இருக்கும் கோபத்தை எல்லாம் சேர்த்து அவளின் கழுத்தை பிடித்து அமுக்கி அவளை கஷ்டபடுத்த அவரோ ,"உன்னோட அம்மாவையும் இதே மாதிரி கொல்வேன் டி முதலில் நீ" என கூற அப்போதும் அவன் வேடிக்கை பார்த்தான்..
அவளோ பயந்து போய் விழிகளால் என்னை காப்பாற்று என பார்க்க அதை பார்த்தவன் அப்போது தான் அவள் அருகே வந்து அவளை தன் பக்கமாக இழுத்தவன் ,"இப்போ சொல்லு உன் அப்பா பாவமா நானும் எதுவும் வேண்டாம்னு ஒதுங்கி போகலாம்னு தான் பார்த்தேன் ஆனால் அதுக்கு தகுதி இல்லாத ஒருத்தன் உன் அப்பா.. இப்போ புரியுதா இந்த ஆளை திருத்த முடியாது அப்படின்னு" என கூற அவளோ தப்பித்த நிம்மதியிலும் அவர் திருந்தவே மாட்டார் என்ற எண்ணமும் அவளுக்கு வேரூன்றி போக அவளோ ,"நீங்க மனுசனே இல்லை.." என அழுது கொண்டே கூற அதற்குள் அவன் அவரை நையப்புடைத்து இருந்தான்..அவரால் எழுந்து கொள்ளவே முடியவில்லை மயங்கி விட்டார்..பின்னும் அவனோ யாருக்கோ அழைக்க ஒரு ஆம்புலன்ஸ் வந்தது வந்தவர்கள் அவனிடம் எந்த வார்த்தையும் கூறாமல் அவரை தூக்கி போட்டுக் கொண்டு சென்று விட்டார்கள்.
அவளோ இது எல்லாம் பார்த்து அதிர்ந்து போய் இருக்க," உன் அப்பன் இன்னும் சாகல ஆனால் செத்துடுவான்" என கோபமாக கூறியவன் அவளுடைய கையை பிடித்து கொண்டு அழைத்து சென்றான்.. அவனுடைய கண்களில் நித்யாவிற்கு இவர்கள் செய்த காரியத்திற்கு பழி தீர்த்த வெறி அவருடைய கண்களில் இருந்தது..அதை கண்டவள் மேலும் அதிர தான் செய்தாள்..
