Share:
Notifications
Clear all

இராட்சதன் 45

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

அத்தியாயம் : 45

  " அப்பா அங்கே கல்யாண வேலைகள் எல்லாம் நல்ல படியா நடந்திட்டு இருக்கு...நீங்க இப்படி சும்மா இருக்கீங்க என்னமோ சொன்னிங்க அம்மா நீங்க அழுதா அப்படியே உருகி போயிடுவாங்கன்னு இப்போ என்ன ஆச்சு???" என கொந்தளித்து கூறினான் தினகரன்..

அதற்கு அவரோ அமைதியாக இருக்க ,"என்ன அப்பா அமைதியா இருக்கீங்க  நம்ம கிட்ட இருந்த எல்லாம் போச்சு நம்ம வீட்ல ஒரு விஷேசம் நடக்க போகுது அதை நம்மகிட்ட கூட சொல்லாமல் பண்றாங்க நீங்க என்னடான்னா அமைதியா இருக்கீங்க" என கூற

"அவங்களை எப்படி போட்டு தள்ளலாம்ன்னு யோசிச்சிட்டு இருக்கேன் நம்மளை அசிங்கப்படுத்தவே இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்காங்க எப்படி இருந்தாலும் அவங்க நம்ம குலதெய்வ கோயில்ல பொங்கல் வைக்காமல் கல்யாணம் நடக்காது பொங்கல் வைக்க வருவாங்க அந்த சமயத்தை நாம சரியா பயன்படுத்திக்கணும் ஒருத்தன் கூட உயிரோட விடக்கூடாது.. உன் அம்மா கிட்ட கூட நெருங்க முடியல அவன் சுத்தி ஆட்களை போட்டு வச்சிருக்கான் அதனால இந்த பொங்கல் வைக்க போற நாளை நாம உபயோகப்படுத்திக்கணும் ஒருத்தனையும் விடக்கூடாது ஆனால் நாம தான் இதை செய்தோம்னு யாருக்கும் துளியும் சந்தேகம் வர கூடாது.." என கூற தந்தையின் தெளிவாக தினகரனுக்கு புரிந்தது..

அதே போல சூரிய பிரகாஷ் மற்றும் காவேரி ரத்தினம் அனைவரும் சேர்ந்து அந்த ஊர் முழுக்க பத்திரிக்கை கொடுத்தனர் அனைவரும் அதிசயமாக வாயைப் பிளந்து ,"நீ தான அன்னைக்கு இந்த பிள்ளையை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்ன??" என்று ஒரு சிலர் கேட்க ,"ஆமாம் அப்ப வேணாம்னு சொன்னேன் இப்ப கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலையே இப்ப பண்ணிக்க போறேன்" என்று கூற

அதைக் கேட்டு அந்த பெரியவரோ ,"அது சரிதான் என்னென்னமோ நடக்குது ஒன்னும் விளங்கல நம்ம ஊருக்கு ஏதோ பேய் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன் பேய் ஓட்டுனா தான் சரி வரும் நல்லா இருந்த உலகநாதன் என்னென்னமோ செய்யறான் .. அவன் மகனும் ஒன்றுக்கும் விளங்காதவனா போயிட்டான் அமைதியா இருந்த காவேரி புருசனையே அடிச்சிட்டா இந்த வீட்டு குடும்பத்தில் என்னென்ன நடக்குதுன்னே தெரியல ரத்தினம்..எல்லாம் கலி  காலமாய் ஆகிடுச்சு" என்று ரத்தினத்திடம் அந்த பெரியவர் குறிப்பிட ,

"மாமா இப்பதான் எல்லாம் சரியா நடந்துட்டு இருக்கு கவலைப்படாதீங்க நம்ம ஊருக்கு தேவையில்லாத ஆளுங்க தான் அவங்க ரெண்டு பேரும் அவங்களை ஊரை விட்டு துரத்திட்டா நம்ம ஊரு சந்தோஷமா பழையபடி மாறிடும்" என்று கூற ,"என்னமோ நீ சொல்ற நான் கேட்கிறேன் உங்க அப்பா இருக்கும்போது இருந்த ஊர் மாதிரியே இல்லை பொண்ணுங்களுக்கெல்லாம் பாதுகாப்பில்லாமல் ஆகிடுச்சு எல்லாத்துக்கும் அந்த பாவி பய தான் காரணம்" என்று அவர் குறிப்பிட அவர் எதைப் பற்றி கூறுகிறார் என புரிந்ததும் ரத்தினம் ,"அதெல்லாம் சரி ஆகிடும்  மாமா கவலைப்படாதீங்க" என்று கூறினார்..

அவரும் சரி என்று கூற அனைவர் முகமும் அதை கேட்டு சுறுங்கினாலும் யாரும் எதை பற்றியும் மேலும் விவரிக்க முயலவில்லை..

இன்னும் திருமணத்துக்கு இரு தினங்கள் உள்ள நிலையில் அவர்களின் குல தெய்வக் கோவிலில் பொங்கல் வைக்க அனைவரும் சென்றனர்..

இரு கார்களில் மொத்த குடும்பத்தினரும் சென்று கொண்டு இருக்கும் போது தான் அவர்களை பின் தொடர்ந்து வந்த ஒரு லாரி அவர்களை பின்னால் இடிப்பது போல வர அவர்கள் எவ்வளவு வழி விட்டும் அந்த லாரி இடித்து கொண்டே வந்தது..

அதே நேரம் யாரிவன் இப்படி தொல்லை செய்கிறான் என அனைவரும் பார்க்க சூர்ய பிரகாஷ் கடுப்பாகி காரை ஓரத்தில் நிறுத்தி முன்னால் அவனுடைய அப்பாவின் கார் செல்ல வழி கொடுத்து விட்டு பின்னால் அவனும் அவளும் பயணம் செய்ய அவளுக்கோ பயம் தொற்றிக் கொண்டது..

அந்த லாரிக்காரனுக்கும் இந்த கார் தான் வேண்டுமோ என்னமோ சூரிய பிரகாஷின் காரை இடிக்க வர  இதற்கு மேல் பொறுமை இல்லை என்பது போல டேஷ் போர்டில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தான்.. கார் கண்ணாடியை திறந்தவன் பின்னோக்கி மிகச் சரியாக அந்த லாரியின் டயரை நோக்கி சுட்டான் டயர் இவன் சுட்டதும் லாரி நிலை தடுமாறியது..

அதற்குள் மற்றொரு டயரையும் சுட அந்த லாரி நின்றே விட துப்பாக்கியை கண்டதும் அதிர்ந்து இருப்பவளுக்கு இவன் சுடவும் பயம் மேலும் தொற்றிக் கொண்டது.. அவனோ," பயந்துட்டியா பயப்படாதே லாரி ஓட்டிட்டு வர்றது உன்னோட அண்ணன் அதான் பாசமா உன்ன கொலை பண்ண ட்ரை பண்றான்..அவனை என்னன்னு கேட்டுட்டு வந்துடுறேன் ஓகே இனி அவனுக்கு இங்கே வேலை இருக்காது.." என்று கூறிவிட்டு காரை நிறுத்தி அவன் இறங்க அதற்குள் லாரி நிலைத்தடுமாறியதில் சிக்கி கொள்வோமா என பயந்து போய் வேகமாக லாரியில் இருந்து இறங்கியவன் அவனை அடித்தாவது சாகடித்து விடலாம் என்ற கோபத்தோடு இறங்க அதே அளவு கடும் கோபத்தோடு வந்த சூரிய பிரகாஷ் அவனைப் பார்த்ததும் சரமாரியாக தாக்கினான்..

ஒரு அடிகள் தினகரன் சூரிய பிரகாஷை அடித்தாலும் பல அடிகள் சூரிய பிரகாஷிடம் இருந்து கிடைத்தது..," அன்னைக்கே உன்னை அடிச்சேன் அப்பவாச்சும் திருந்தி இருக்கலாம் செஞ்ச தப்பை நினைத்து வருந்தி வாழ்க்கையை ஓட்டி இருக்கலாம் ஆனால் திரும்பத் திரும்ப ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கியே, இனி பூமிக்கு பாரமா நீ இருக்காத உன்னோட அப்பன் அங்க இருக்கான்ல அவன் வேலையை நான் பார்த்துக்கிறேன் நீ கிளம்பு...உன் பின்னாடியே அவனும் வருவான்.. உன்னை உயிரோடு விட்டு எந்த பிரயோஜனமும் இல்லை நீ திருந்தவும் போறதில்ல இப்படியே தான் இருப்ப பேசாம செத்துடு" என்று கூறி கையில் உள்ள போனை எடுத்து யாருக்கோ அழைக்க வேகமாக ஒரு வண்டி வந்தது..

அதுவரை தினகரனை அடித்துக் கொண்டே இருந்தான் தன் அண்ணன் அடி வாங்குகிறான் என்ற துளி சங்கடம் அவள் மனதில் வரவில்லை ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்த அவன் தண்டிக்கப்பட வேண்டியவன் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு மிகப்பெரிய வேன் ஒன்று வந்தது அந்த வேனின் பின் பக்க கதவு திறக்கப்பட மாஸ்க் அணிந்த ஒருவன் வந்தான்..

அவன் இவனை இழுத்து கொண்டு அந்த வேனின் பின்பக்க கதவில் அவனை தூக்கி போட முதலிலேயே சூரிய பிரகாஷ் இடம் அடி வாங்கியதில் மயங்கி இருந்த தினகரன் எங்கு இருக்கிறோம் என்று தெரியாமல் இருக்க அவனை ஏற்றியதும் அந்த வேன் பறந்தது..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top