இராட்சதன் 44
அத்தியாயம் : 42
ஒரு வாரத்துக்குள் திருமணம் என்ற நிலையில் கல்யாண வேலைகள் ஜருராக நடந்து கொண்டிருந்தது.. ஆம் ஒரு வாரத்துக்குள் அவளை திருமணம் செய்துவிட்டு அவளையும் அவள் அம்மாவையும் அழைத்துக் கொண்டு இந்த ஊரை விட்டு செல்ல வேண்டும் என்ற முடிவில் தான் அவன் இருந்தான்..
திருமண வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன அனைவரும் அந்த ஊருக்கே சிறப்பாக பத்திரிக்கை வைத்து அனைவரையும் விழாவிற்கு வரும்படி அழைத்துக் கொண்டு இருந்தார்கள்.. அவனோ அவர்கள் என்ன செய்கிறார்கள் ஏது செய்கிறார்கள் என கவனித்து கொண்டு தான் இருந்தான்...
ஒரு பக்கம் நகை எடுத்தல், புடவை எடுத்தல் என ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டு இருந்தது..காவேரி தன் மகள் வாழ போகும் வீட்டாரிடம் அன்பாக பழகினார் அதே போல தான் அவர்களும் எந்த விதமான ஈகோவும் இல்லாமல் தான் பழக அவர்கள் இரு குடும்பத்துக்கும் நல்ல இணக்கம் வெகு சீக்கிரத்தில் வந்து இருந்தது..
ஆனால் அவள் மட்டும் தான் குழப்ப நிலையிலேயே இருந்தாள்..அவளுக்கு இந்த திருமணம் சுத்தமாக பிடிக்கவில்லை.. அவளைத் தவிர அனைவருக்கும் அந்த திருமணம் பிடித்து இருக்கிறது.. திருமணம் வேண்டாம் என்று கூறினால் யாரும் கேட்பதாக இல்லை அதைவிட அவனும் அவளை சீண்டி தீண்டியே அவளின் வாயை அடக்கி விடுகிறான் அதனால் அவளுக்கு எதிலும் நாட்டம் இல்லாமலேயே சுற்றிக்கொண்டு இருந்தாள்...
அவளால் அவ்வளவு எளிதாக அவன் செய்ததை எல்லாம் மறக்க முடியவில்லை ஆனால் ஏதாவது கூற வந்தால் அவன் அவளை அணைக்கவும் முத்தமிடவோ செய்து அவளின் வாயை அடைத்து விடுகிறான் அவனுக்கு உறுதுணையாக அவளது உடலும் வளைந்து கொடுக்கிறது அப்படி இருக்க எதையும் மறக்க முடியாமல் தவித்து வந்தாள் அவள்..
அந்த தருணத்தில் அவள் மனதில் அவனிடம் எல்லாம் கேட்டு விட வேண்டும் என எண்ணி இருக்கும் போது, அவளுடைய அம்மா கையில் இளநீர் எடுத்து கொண்டு வந்து ,"இதை கொண்டு போய் மாப்பிள்ளைக்கு கொடு மா" என்க
அவளுக்கோ ஆத்திரமாக வந்தது..ஆம் அவனுக்கான எல்லா வேலைகளையும் அவள் அம்மா அவளிடமே கொடுக்க ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட பத்து முறையாவது அவனை காணும் நிலைக்கு செல்ல இருக்கிறது..
அந்த தருணத்தில் அவள் ஏதாவது பேச அவனோ அவளின் இதழ்களை சுவைத்து அவளின் வாயை அடக்கி விடுகிறான்..அவளோ வாயே திறக்க முடியாத நிலை ஏற்படுகிறது..
அவளை பார்க்கும் போதே அவனுடைய பார்வையும் அவனுடைய செய்கையும் அவளுக்குள் ஒரு பீதியை கொடுத்து இருந்தது என்னவோ உண்மை தான்..
அவளின் உள்மனமோ ,"இப்போவே இப்படின்னா கல்யாணத்துக்கு பின்னாடி அவனை எதிர்க்க கூட முடியாம போய்டும்" என யோசித்து குழம்பி கொண்டே அவளுடைய அம்மா கொடுத்த இளநீரை எடுத்து கொண்டு அவன் அவனுக்காக ஒதுக்கப்பட்டு இருக்கும் அறையில் இருக்க அவளோ தயங்கி தயங்கி சென்றாள்..
அவளை பார்த்தவனோ அவளை கண்களால் அளந்து கொண்டே ஃபோனில் இருக்க அவளோ இந்த சமயம் பார்த்து விட்டு இதை வைத்து விட்டு ஓடி விடலாமா என யோசித்து கொண்டே இளநீரை மேசை மீது வைக்க அவனோ அவளை கை நீட்டி நிற்க சொன்னவன் அதற்குள் ஃபோனை முடித்துக் கொண்டு எழுந்து நின்று அவளை மேலும் கீழும் ஆக பார்க்க அவளுக்கோ அவனுடைய பார்வை கூசச் செய்தது..
என்ன இப்படி பார்க்கிறான் பார்வையே சரியில்லையே இந்த இடத்தை விட்டு போறதுதான் நல்லது என்று எண்ணிக் கொண்டு அவள் நழுவ பார்க்க அவனும் ஒரே எட்டில் அவளுடைய கையை பிடித்து இழுக்க பூமாலை போல அவன் மீது அவள் விழுந்தாள்...
"விடுங்க எப்போ பார் கட்டி பிடிச்சிட்டு" என அவள் சலித்து கொண்டு அவனிடம் விலக பார்க்க
அவனோ," சரி கட்டி பிடிக்கல" என கூறி கொண்டே அவள் முகத்தை கையில் ஏந்தி நிமிடத்தில் அவள் இதழ்களில் தன் இதழை பதித்தவன் ,"இது ஓகே தானே" என கேட்க
அவளோ அவன் கொடுத்த முத்தத்தில் திளைத்து போனவள் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள மேலும் ஒரு நொடி எடுக்க அவளும் நமட்டு சிரிப்போடு அவளை பார்க்க
அவளோ ,"இப்படி கட்டிப்புடிச்சு முத்தம் கொடுக்கிறதுனால எதுவும் மாறப்போவதில்லை..என்னால நீங்க பண்ணின எதையும் மறக்க முடியல எனக்கு இந்த கல்யாணத்துல சுத்தமா இஷ்டம் இல்ல" என்று அவள் கூறினாள்...அவள் கண்ணில் அதை கூறியதும் கண்ணீர் வந்தது..
"சரி கல்யாணத்துல தான இஷ்டம் இல்ல இந்த கட்டி பிடிக்கறது முத்தம் கொடுக்கிறது அதுல எல்லாம் கஷ்டம் இருக்கிற மாதிரி எனக்கு தோணல நீ சந்தோஷமா தான் இருக்க" என்று அவன் கூறினான்..
அதை கேட்டதும் அவள் முகம் சிவந்து," உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா எப்ப பாரு இப்படி என்னை பிசிகல்லா டச் பண்ணிட்டு இருக்கீங்க??? அதை பத்தியே பேசிட்டு இருக்கீங்க நான் என்ன சொல்றேன் நீங்க என்ன சொல்லிட்டு இருக்கீங்க?? நான் சொல்றது உங்களுக்கு விளங்குதா இல்லையா???" எங்க
"ஆமாம் நல்லாவே விளங்குது டி...அதுனால இப்படி நான் பேசிட்டு இருக்கேன்..உன்னை பேச விட்டா நீ பேசிட்டே இருப்ப அது கேட்கிற அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை அதனால் தான் உன்னை பேச விடாம பண்றது மத்தபடி எதுவும் இல்லை.. என்னாலயும் நீ இல்லாம வாழ முடியாது உன்னாலயும் நான் இல்லாமல் வாழ முடியாது இதை நீ ஏத்துக்காமல் இருப்பது தான் உன்னோட பிரச்சனை மத்தபடி உனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது" என்று அவன் கூற அதை கேட்ட அவளோ," உங்களுக்கு என்னை பார்த்தா எப்படி தெரியுது ??!" என கேட்டாள்...
அவனும் மேலும் கீழும் அவளை ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு," உன்னை அப்படியே தூக்கி போட்டு உன் மேல விழுந்து அப்படியே இந்த கை இருக்கே அது உன்னோட உடல் அத்துமீறி" என கூறி படுக்கையை ஒரு பார்வை பார்த்து பேச்சை நிறுத்தி," நான் சொல்லிடுவேன் அப்புறம் நீ வருத்தப்படுவ" என்று அவன் கூற
அவனுடைய பார்வையும் அவனுடைய பேச்சும் அவளுக்கு எதைக் கூறுகிறான் என்பதை தெளிவாக புரிய எப்படி பேசினாலும் அதற்கு இந்த அர்த்தத்திலேயே பதில் கூறுகிறானே என எண்ணி ,"நடந்ததெல்லாம் நான் மறக்கல" என்று அவள் கூற
"நானும் தான் மறக்கல ரெண்டு பேரும் ரெண்டு வருஷம் சுத்தி சுத்தி காதலிச்சது எல்லாம் நான்தான் மறக்கல " என்றான் அவன்.. அவன் மனதில் எப்படியாவது பழையதெல்லாம் மறந்து அவள் முன்பு போல அவனிடம் இருக்க வேண்டும் என்று இருந்தது..அதற்காக இறங்கி அவன் பேசி கொண்டு இருந்தான்..
" நான் சொன்னது நீங்க ஏமாத்துனத பத்தி .. காதல் அது பொய் நீங்க என்னை அந்த பெயரை சொல்லி ஏமாத்திட்டு இருந்தீங்க " என்க
அவனோ,"உனக்கு அப்படி தோணுச்சா???" என்று அவன் கேட்டான் ..
அவளோ அதிர்ந்து அவனை பார்க்க," என்னோட தேவைக்காக நான் உன்னையும் சரி காதலையும் சரி யூஸ் பண்ணிக்கிட்டேன் ஆனால் என்னோட காதல் பொய்யின்னு உன்னால சொல்ல முடியுமா???" என்று அவன் கேட்க அவளிடம் பதில் இல்லை அவளால் இப்பொழுது வரை மறுக்க முடியாத விஷயம் அது ஒன்றுதானே எப்படி இவனால் இப்படி எல்லாம் நடந்து கொள்ள முடிந்தது என்பது மட்டும்தான் அவளுடைய பிரச்சனையாக இருந்தது..
அப்படி இருக்க அவள் அமைதியாக இருக்கவும் அவனும்," இப்பவும் சொல்றேன் நடந்த தப்புக்கு நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் தெரிந்து பண்ணுன தப்புக்கு மன்னிப்பு கிடையாது ஆனால் உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. " என கூற மேற்கொண்டு அவனிடம் பேச எதுவும் இல்லை என்பது போல அவள் பார்க்க,
"ஓகே உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னா நீயே நேரடியா போய் கல்யாணத்தை நிறுத்திடு" என்று கூற அவளோ," என்னால் முடியவில்லை என்று தான் உங்ககிட்ட சொல்றேன்" என்று கூற,
அவனும் மேலும் அவள் அருகே நெருங்கி அவளை தொட போக அவளோ ஒரு அடி விலகி நிற்க, "நீ எவ்ளோ விலகிப் போனாலும் நான் உன்னை தேடி வருவேன் அப்படின்னு உனக்கு தெரியாதா???" என கேட்டுக்கொண்டே அவளின் கழுத்தில் தன் இதழ்களை பதிக்க அவனின் ஒவ்வொரு தொடுகையும் அவளுள் ஒவ்வொரு உணர்வையும் கொடுத்து கொண்டு இருக்க அவளின் காதோரமாய் இருந்த முடியை இலேசாக விலக்கி விட்டவன், "உன்னால என்னை அவ்வளவு சீக்கிரம் உன்னோட வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாது எனக்கு நீ இரண்டாவது காதலாக இருக்கலாம் ஆனால் உன்னோட முதல் காதலும் கடைசி காதலும் நான் தான் இருப்பேன் ஒரு கர்வமாகவே நான் சொல்றேன் என்னை மறந்துட்டு உன்னால ஒரு வாழ்க்கை வாழ முடியாது.. என் மேல இருக்கிற கோபத்துனால நீ இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்ற ஆனால் என்னைத் தவிர உன்னுடைய கழுத்தில் யாராலும் தாலி கட்ட முடியாது" என்று அவன் கூற அவனின் ஆணித்தரமான பேச்சை கேட்டதும் அவளின் கண்களின் ஓரம் இலேசாக கரித்து கொண்டது..
அவன் கூறியது உண்மை தானே அவளால் அவன் சொல்வது போல எதுவுமே முடியாதே ஆனாலும் அவளால் எதையும் ஏற்று கொள்ள முடியவில்லையே!!
அவனோ அவளின் விழி நீரை துடைத்தவன்," உன்னால மன்னிக்க முடியாத தவறை நான் செய்து இருக்கேன் அதை நான் மறுக்கல..ஆனால் என்னால இனி உனக்கு இது போல ஒன்றும் நடக்காது அப்படின்னு என்னால வாக்கு கொடுக்க முடியும் ரொம்ப உன்னை குழப்பிட்டு இருக்காதே!!
ஐ க்நோ உன் அப்பா, உன் அண்ணா பண்ணின தப்புக்கு நீ என்ன பண்ணினன்னு எனக்கு நல்லா தெரியும்.. ஆனால் முள்ளை முள்ளாலதான் எடுக்கணும் அப்படின்னு சொல்லித்தான் நான் இதை செய்தேன்..
நான் உனக்கு தாலி கட்டினேன் உனக்கு ஞாபகம் இருக்கா? உன்னை ஒரு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனேன் தப்பு பண்ணின மாதிரி காட்ட ஆனால் நான் நேசித்த பெண் மீது என்னால அத்து மீறி நடக்க எனக்கு தோணல அப்புறம் ஏன்டா எல்லாரும் முன்னாடியும் என்னை தப்பா பேசினேன் என்று கேட்கலாம் ஆனால் எனக்கு வேற வழி தெரியல உன்னை வச்சு தான் எனக்கு அந்த இடத்தில் பேசி ஆகணும் அதுக்கு காட்சிகளும் சந்தர்ப்பங்களும் தத்ரூபமா இருந்தே ஆகணும் இப்பவும் உன்னோட அப்பா அண்ணா திருந்தி இருக்காங்கன்னு நீ நினைச்சுட்டு இருக்கியா கண்டிப்பா கிடையாது அவங்க ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது குடைச்சல் கொடுக்க முயற்சி செய்வாங்க..
நீ உன்னை பற்றி மட்டும் யோசிக்கிற அப்போ நித்யாவுக்கு நடந்த கொடுமை பற்றி யோசித்து பாரு அவளுடைய சாவுக்கு ஒரு நியாயம் வேண்டாமா???
அதுக்காக தான் செய்தேன் அப்போதும் சரி இப்போதும் சரி எனக்கு அது தப்பா தெரியல..
நான் உன்னை விட்டு விலகனும்னு தான் நினைச்சேன் ஆனால் நிஜமா முடியல என்ன மிராக்கல் என்று தெரியல நீ திரும்பவும் என் கண்ணு முன்னாடி வந்து நின்ன. இனி உன்னை விடவே கூடாதுன்னு அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன்..
நீ சம்மதித்தாலும் சரி சம்மதிக்கலேன்னாலும் சரி உன்னை ஒருபோதும் நான் விடமாட்டேன் என்னை மட்டும் நான் யாருன்னு தெரியாம நேசித்த ஒரு பெண்ணை கை கழுவிட்டு போகணும்னு நான் எதிர்பார்க்கல பழிவாங்க தான் வந்தேன் இல்லை என்று சொல்லவில்லை. உன்னோட கண்ண பார்த்து என்னால பழிவாங்க முடியல அவங்க பண்ணனும் தப்புக்கு நீ என்ன பண்ணுவ அவனுக்கு இந்த தண்டனை தேவைதான் ஆனால் நீ தண்டிக்க பட வேண்டியவள் கிடையாது இதுக்கு மேல இதை பத்தி எக்ஸ்பிளைன் எப்படி பண்ணனும்னு எனக்கு தெரியல இதுக்கு மேலயும் உனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்று தோணுச்சுன்னா நீ சொல்லு நானே டிராப் பண்றேன்" என கூறி விட அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை..
அவள் மனமும் அவன் பேச்சில் கனத்தது..அவன் பக்க நியாயத்தை கேட்கும் பொழுது இதுவும் நியாயம் தானோ என யோசிக்கவும் வைத்தது சரி அவளுக்கு இப்படி ஒரு சூழ்நிலை ஆகி விட்டது அவன் கூறுவது போல நித்யாவை நினைத்துப் பார்த்தால் அவளுக்கு நடந்தது ஒன்றுமே இல்லையே என்பது போல அவள் மனம் யோசிக்க துவங்கியது.. விரைவில் அவள் மனதில் இருக்கும் காயமும் ஒரு நாள் ஆறி போகும் அதுவரை காத்து இருப்போம் என்ற முடிவோடு அவளும் திருமணத்திற்கு தயாராகி விட்டாள்…
