Share:
Notifications
Clear all

இராட்சதன் 43

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

அத்தியாயம் : 43

ரத்தினத்தின் முகத்தை பார்த்து ,"அண்ணே என்ன அண்ணே???" என்று காவேரி வினவ," எல்லாம் சூரிய பிரகாஷ் பார்த்துப்பான் சூர்யாவை பத்தி உனக்கு தெரியாது மா அவன் ஒன்னு நினைச்சா அதை சிறப்பா செஞ்சிருவான் உன்னுடைய பொண்ணுக்கு ஏத்த ஜோடி அவன்தான் நான் நித்யாவை அவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன்.. ஆனால் நம்ம வீட்டில் இருந்து அவனை கல்யாணம் பண்ணிக்க போற யோகம் நம்ம கண்மணிக்குத் தான் அமைஞ்சிருக்கு அவன் பார்க்கத்தான் கரடு முரடாக இருப்பான் ஆனால் ரொம்ப நல்லவன் பெண்களுக்கு மரியாதை கொடுக்க தெரிந்தவன் தான் ஏனோ அது நம்ம பொண்ணு விஷயத்துல தவறா முடியல எல்லாம் அப்படித்தான் நடக்கணும்னு விதி இருந்திருக்கு" என்று கூறி முடிக்க,

அண்ணன் கூறியதால் மனம் தெளிந்து காவேரி அனைத்தையும் இன்பத்துடன் பார்க்க சூரிய பிரகாஷின் தந்தை," கவலைப்படாதீங்க மா எல்லா விஷயமும் எங்களுக்கும் தெரியும் என்னுடைய மகன் அப்படிப்பட்ட குணத்தை கொண்டவன் இல்லை" என ஆறுதல் அளிக்க,

" ஐயோ அண்ணே தப்பா நினைச்சுக்காதீங்க நான் என்னுடைய மகளை நினைத்து தான் வருத்தப்படுறேன் தம்பியை பத்தி என்னுடைய அண்ணன் சொல்லி எனக்கு நல்ல அபிப்பிராயம் தான் அண்ணே" என்று கூற,

அதைக் கேட்ட அவரோ," சரிமா நீங்க வருத்தப்படாமல் இருங்க எல்லாம் உங்க மருமகன் பார்த்துப்பான்" என்று கூறிக் கொண்டார்..பாட்டி மட்டும் என்னிடம் விஷயத்தையே கூறாமல் இருந்து விட்டான் என்ற கடுப்போடு அமர்ந்திருந்தார்..

அவருக்கு கண்மணியே பார்த்த போது ரொம்ப பிடித்திருந்தது ஆனால் தன் பேரனுக்கு மணமுடிக்க வேண்டும் என்றெல்லாம் அவள் அவர் நினைக்கவில்லை என்றாலும் கண்மணி நல்ல குணம் கொண்டவள் என்று மட்டும் அவர் நினைத்திருந்தார் ஆனால் ரெண்டு திருடர்களும் சேர்ந்து தன்னை ஏமாற்றி விட்டார்களே என்ற கடுப்பு அவர் முகத்தில் தெளிவாக தெரிந்தது..

அவளை அறைக்கு இழுத்து சென்றவன் கதவை தாழிட்டு அவளை ஒரு பார்வை பார்த்து ,"என்ன சொன்ன???" என்று கேட்டான்..

" எதுக்கு நீங்க கதவை சாத்தறிங்க ஏன் உங்களுக்கு காது கேட்காதா கதவை திறங்க முதல்ல எனக்கு உங்களை சுத்தமா பிடிக்கல எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்.. அதைத்தான் வெளியேவே நான் சொல்லிட்டேனே அப்புறம் எதுக்கு வந்து டிஸ்டர்ப் பண்றீங்க???" என்று கூற அதைக் கேட்ட அவனும் அவளை ஒரு மார்க்கமாக பார்த்து," என்னை கல்யாணம் பண்ணிக்காம வேற யாரை கல்யாணம் பண்ணிக்க போற??" என்று கேட்க ,"நான் யாரை வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணிப்பேன் ஆனால் உங்களை மட்டும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" என்று அவள் கூற

"கல்யாணம் பண்ணிக்காமல் வேற என்ன செய்ய போற?? அப்போ உன் மனசுல நான் தான் இருக்கேன்" என நக்கலாக கேட்டு கொண்டே தன் சட்டையின் கையை மடக்கி விட்டபடியே அவள் அருகே ஒவ்வொரு அடியாக நெருங்கி கேட்டான்..

அவன் நெருங்கி வரவும் அவள் கால்கள் பின்னோக்கி சென்று," நான் என்னமோ செய்யரேன் உங்களுக்கு என்ன?? என் மனசில் நீங்க இல்ல" என கூற,

"எனக்கு என்னவா??? எனக்கு இந்த கல்யாணம் நடக்கணும் அவ்ளோ தான் உன்கிட்ட எல்லாம் பெர்மிஷன் கேட்டு அதுக்கு நீ பந்தா பண்ணி இதெல்லாம் தேவையா என்ன உனக்கு எல்லாம் மறந்து போச்சா??? ஆல்ரெடி நான் ஒரு தாலி கட்டி இருக்கேன்" என கூற

"நீங்க தேவை இல்லாமல் பேசிட்டு இருக்கீங்க தயவு செய்து வெளியே போங்க" என அவள் கூற

"போக முடியாது டி" என்றவன் ,"நான் உள்ளே வந்ததே வேற விசயம்" என கூறியவன் அதற்குள் அவளை நெருங்கி இருந்தான்..அவள் ஒரு அடி பயந்து எடுத்து வைக்கவும் அவன் வாரி அவளை அணைக்கவும்  சரியாக இருந்தது..

அவன் அணைக்கவும் அவளோ பதறி விலக அவனோ அவளை மேலும் இறுக்கி ,"உனக்கு என்ன இந்த கல்யாணம் வேண்டாமா???" என ஹஸ்கி வாய்ஸில் அவளின் காதோரம் இருந்த முடிகளை விளக்கிக் கொண்டு அவன் கேட்க அவளோ அவளுடைய உணர்ச்சிகளை மறைக்க அரும்பாடு பட அவனின் அருகாமை அவளை ஏதேதோ செய்தது அவனும் அதையெல்லாம் கவனித்துக் கொண்டு மேலும் குனிந்து அவளின் காதோரத்தில் அவனது மூச்சுக்காற்றுப்படும் தூரத்தில் இருந்தவன் ,"சும்மா வீம்புக்காக கல்யாணம் வேண்டாம் என்று சொல்லாதே உன்னால நான் இல்லாம இருக்கவே முடியாது அதை என்னால அடிச்சு சொல்ல முடியும் கோபம் வந்தாலும் சரி துரோகம் பண்ணாலும் சரி நான் தான் உனக்கு என்னைத் தவிர உன்கிட்ட யாராலும் நெருங்க முடியாது சோ" என்று கூறி கொண்டே அதிர்ந்து இருக்கும் அவளின் விழிகளை பார்த்து கொண்டே அவ்விதழ்களில் தன்னுடைய தடித்த பருமனான இதழை சூடான மூச்சு காற்றோடு கலந்து அவன் பதிய வைக்க அவளின் தேகமே சூடாகிப் போனது..

அவள் மனம் அவன் வேண்டாம் என்று கூறினாலும் அவள் உடல் அமைதியாக இருக்க அவனும் அவள் மனதை அறிந்தவன் போல இரு கண்களிலும் மாறி மாறி தன் இதழ்களை பதித்தவன் அடுத்து அவளுடைய கன்னங்களில் தன் இதழ்களை பதித்து," எதுக்கும் நான் மன்னிப்பு கேட்க போவதில்லை தெரிஞ்சே செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கிடையாது ஆனால் இனியும் உன்னை விடப் போவது கிடையாது எனக்கு நீ வேணும் உனக்கு நான் மட்டும்தான் வேணும்னு எனக்கு நல்லா தெரியும் அதனால தான் நம்ம கல்யாணம் பண்ணிக்க போறோம்" என்று கூறிக் கொண்டே அவளின் இதழ்களின் சுவையை அறிந்தான்.. அவன் பேசியதை கேட்டதும் அவள் கண்களில் கண்ணீர் வர,

அவனோ,"உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன் தெரியும் இனி கஷ்டப்படுத்த மாட்டேன்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன் சில சமயம் சண்டை போடுவேன் சில சமயம் இதோ இப்படி கட்டிப்பிடித்து நினைப்பேன் ஆனால் யார்கிட்டயும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன் அது மட்டும் உன்கிட்ட சொல்லிக்கிறேன்" என்று மேலும் அவளுடைய இதழ்களில் அவனின் இதழ்களை பதிய வைத்து மேலும் கவி பாடினான்..

அவளின் நாடி நரம்புகளை எல்லாமே அவளின் இதழ் வழியாக உறிஞ்சி எடுப்பது போல வன்மையாக அவனின் முத்தத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் அவள் துவள அவனோ வெளியே அவனுடைய வீட்டார் அவளுடைய வீட்டாரும் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் அவளை விட்டவன் ,"மிச்சத்தை கல்யாணத்துக்கு அப்புறம் வெச்சுக்கலாம் ஓகே கல்யாணம் பண்ணிக்கலாமா??" என்று கேட்க அவளோ சிலை போல நின்றாள்..

"வெளியே வந்து மரியாதையா கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு இல்ல எல்லாரும் முன்னாடியும் கிஸ் பண்ணிடுவேன் யோசிக்கவே மாட்டேன் அதுக்கு மேலயும் பண்ணிடுவேன்" என்று அவளின் இதழ்களை வருடிக் கொண்டே கூட அவ்வளவு திகைத்தாள்..

அதைப் பார்த்தவன் நமட்டு சிரிப்போடு அவளின் கையை பிடித்துக் கொண்டு கதவை திறந்து வெளியே வந்தவன் ,"இப்ப கேளுங்க கல்யாணத்துக்கு சம்மதமான்னு" என அனைவரையும் பார்த்து கூற சூரிய பிரகாஷ் அப்பா," என்னம்மா கல்யாணத்துக்கு சம்மதமா" என கேட்க அவளோ ஏதோ ஒன்றைப் பார்த்து பயந்தவள் போல சிலை போல நின்றவள் தலையை மட்டும் சம்மதம் என்பது போல ஆட்டினாள்.. அவளுக்கு சற்று முன் என்ன நடந்தது என்று நினைவில்லை அவளின் நாடி நரம்புகள் எல்லாம் இன்னும் அவன் செய்த வேலையின் தாக்கத்தில் உணர்வுகளின் சதிராட்டமாய் அவள் நின்று கொண்டிருந்தாள் அதை பார்த்து அவன் மென்மையாக சிரித்து கொண்டு இருந்தான்…



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top