Share:
Notifications
Clear all

இராட்சதன் 42

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

அத்தியாயம் : 42

பெண் பார்க்கும் படலம் துவங்கியது.. அவளோ வேண்டா வெறுப்பாக தயாராகி இருந்தாள்.. அவளுக்கு எதுவுமே பிடிக்கவில்லை என்னதான் அவனை விட்டு தன் அம்மாவை தேடி வந்தாலும் அவன் நினைப்பு வராமல் இல்லை..அவன் எண்ணமாகத்தான் இருந்தது..அதில் வேறு இந்த பெண் பார்க்கும் படலத்தை அவன் எதிர்பார்க்கவே இல்லை..

எல்லாம் அவளுடைய அம்மாவின் நிபந்தனைக்கு அடி பணிந்து தான்  அவள் தயாராக இருக்க ரத்தினம் இந்த எதிலுமே கலந்து கொள்ளவில்லை அவருக்கு மருமகள் வாழ்க்கையும் சரி தன்னுடைய தங்கையின் வாழ்க்கையும் சரி மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அவர் நினைத்துக் கொண்டார் அவ்வளவுதான் மற்ற எந்த பேச்சிலும் அவர் கலந்து கொள்ளவில்லை...

அவளுக்கு வருகின்ற மாப்பிள்ளை யார் என்று தெரியாது மனதில் பல வித குழப்பங்களோடு அவ்வளவு டென்ஷனாக அமர்ந்திருந்தாள்.. அவளின் டென்ஷனை அதிகப்படுத்த வேண்டும் என்று மாப்பிள்ளை ஆக வந்து நின்றான் சூர்ய பிரகாஷ்...

ஆம் அவனும் அவனுடைய குடும்பமும் ரத்தினத்தின் வீட்டுக்கு வர அவர்கள் அனைவரையும் சந்தோஷமாக ரத்தினம் ரத்தினத்தின் மனைவி மற்றும் காவேரி வரவேற்றனர்..ஆனால் அவளுக்கு மட்டும் எதுவும் தெரியவில்லை...

அவர்களும் சிரித்த முகமாக அவனை வரவேற்க அவனும் அவனுடைய குடும்பத்தாரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.. ரத்தினம் கூறிய விஷயத்தை கேட்டதிலிருந்து காவிரிக்கு அவன் மீது கோபம் எல்லாம் வரவில்லை தன் மகளை ஊரார் முன்னிலையில் அவமானப்படுத்தியது சற்று வருத்தத்தை கொடுத்திருந்தாலும் ஆனால் அதிலிருந்து தானே மாற்றம் அந்த கிராமத்தில் ஏற்பட்டது கிராமத்தில் மட்டுமல்ல அவள் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்பட காரணமாக இருந்தது அந்த தருணம் தானே என எண்ணி தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டு தன் மகளையும் சூரிய பிரகாஷின் கரங்களில் ஒப்படைக்க முடிவு செய்துவிட்டார் காவேரி..

மேலும் மகள் கூறியதிலிருந்து தன் கணவன் அவளை கொலை செய்ய பார்த்தான் என்றும் அதில் காப்பாற்றியது அவன் தான் என்றதும் தன் கணவன் மற்றும் மகனை எதிர்க்க இவன் ஒருவனால் மட்டும் தான் முடியும் என அவர் ஆணித்தரமாக நம்பினார் அதனால் அவனுடைய கைகளிலேயே தன் மகளை ஒப்படைக்க முடிவு செய்தார்...

அப்படி இருக்க அனைவரும் வரவேற்று அமர வைத்துவிட்டு நேராக காவேரி ஓடி சென்று தன்மகளிடம் ,"மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க வா" என்று கூறி தன்மகள் சரியாக அலங்காரத்தோடு இருக்கிறாளா என சரி பார்த்து விட்டு மகளை அழைத்து செல்ல முனைய அவளோ படபடப்போடு ,"அம்மா ப்ளீஸ் வேண்டாம்" என அவள் கெஞ்சி கூற அவரோ அதை கேட்கவில்லை..

"இந்த கல்யாணம் மட்டும் நடக்கலைன்னா என்னை உயிரோடு நீ பார்க்க முடியாது" என்று அவர் தீர்மானமாக கூறிவிட அதற்கு மேல் அவளால் எந்த பேச்சும் பேச முடியாமல் போக நேராக அவளை காவேரி அழைத்துச் செல்ல அங்கு சூர்ய பிரகாஷ் குடும்பத்தில் பாட்டியை தவிர அனைவரும் முதன் முறையாக அவளை பார்க்கின்றனர்..

அவளோ இன்னும் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை அவனோ அவளை துளைத்து பார்த்து கொண்டு இருந்தான்..

அவளோ யாரோ ஊசி போல துளைத்து பார்ப்பது போல அவளுக்கு இருக்க ரத்தினம் தன் மருமகளிடம்," மாப்பிள்ளையை நிமிர்ந்து பாருமா" என்று கூற அவளோ நிமிர்ந்து பார்க்கும் பொழுது அங்கு சூரிய பிரகாஷின் மொத்த குடும்பமும் இருந்தது..

அவனைக் கண்டதும் ஏனோ அவளுக்குள் அத்தனை நேரம் இருந்த டென்ஷன் போய் மனம் சாந்தி அடைவதை அவள் உணர்ந்தாள் இருந்தாலும் அவள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை அது வேறு விஷயம்...

அவனை பார்த்த அவளோ அதிர அவனும் வெகு இயல்பாக அமைந்திருந்தான்.. முகத்தில் எதையும் அவன் காட்டவில்லை.. அப்போ இவன் தான் மாப்பிள்ளையா? என சட்டென்று தன் பார்வையை திருப்பி தன் அம்மாவை பார்க்க அம்மாவோ சிரித்த முகத்தோடு ,"நீ ஆசைப்பட்ட ஒரு வாழ்க்கையை தான் நான் உனக்கு கொடுக்கணும்னு நினைச்சேன் தம்பிகிட்ட பேசினேன் அன்னைக்கு நடந்ததெல்லாம் தப்புதான் இருந்தாலும் அதனாலதான் தப்பு வெளிச்சத்துக்கு வந்துச்சு அது ஒரு வகையில் நமக்கு நல்லதை தான் பண்ணி இருக்கு அதுனால நாங்க உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சிடலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்.. தம்பி தான் நான் அவளை வந்து பார்க்கும் வரை நான் தான் மாப்பிளை என்று சொல்லாதீங்கன்னு சொன்னாரு அதனாலதான் சொல்லல இப்போ உனக்கு சந்தோஷமா???" என்று கூற அதைக் கேட்டு அவனும் அமைதியாக  அவளை பார்த்து கொண்டு இருக்க ஏனோ அவளுக்கு அதை எளிமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அப்போது அவளின் அதிர்ச்சி கலந்த முகத்தில் அனைவரையும் பார்த்தவள் கண் முன்னால் பாட்டி இருந்தாலும் அனைவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டு ,"எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை.. என்னோட அம்மாவோ இல்லை இவரோ அவர் செய்ததை மறந்திருக்கலாம் ஆனால் என்னால் அவ்வளவு எளிதாக மறக்க முடியல வீடு தேடி வந்த உங்களை அவமானப் படுத்துகிறேன் என்று நினைக்காதீங்க எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை" என்று அவள் பட்டென்று கூறினாள்.

இதை யாருமே எதிர்பார்க்கவில்லை..அவளுடைய அம்மாவோ,"உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு"என அதிர்ச்சியோடு கேட்டார்..

"அம்மா நீங்க எல்லாத்தையும் மறந்துடலாம் என்னால மறக்க முடியாது இவர்தான் மாப்பிள்ளைனு தெரிஞ்சிருந்தா நான் இதுக்கு ஒத்து இருக்கவே மாட்டேன்"  என்று அவள் கூற,

அதைக் கேட்ட அவனும் இறுகிய முகத்தோடு ,"நெனச்சேன்  நீ இதைத்தான் சொல்வ அப்படின்னு" என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டு அமைதியாக இருக்க அவள் கூறியதை கேட்டு அனைவரும் சூரிய பிரகாஷ் பார்க்க அவனும் எழுந்து நின்று தன் கைகளை தூக்கி சோம்பல் முறிப்பவன் போல சோம்பல் முறித்தவன் அனைவரையும் பார்த்து ,"மேற்கொண்டு கல்யாண விஷயம் பேசிட்டு இருங்க எனக்கு கொஞ்சம் இவ கிட்ட பேச வேண்டியது இருக்கு பேசிட்டு வரேன்...கல்யாணம் இந்த பத்து நாள் உள்ளே இருக்கணும் அதை மட்டும் மறந்துடாதீங்க" என்று கூறியவன் அனைவரின் பதிலுக்கு காத்திராமல் தன்னை வேண்டாம் என்று கூறியவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு அவ்விடம் நகர்ந்தான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top