இராட்சதன் 41
அத்தியாயம் : 41
அடுத்த நாள் காலை அவளுக்காக வாகனம் காத்து இருக்க அவளோ பாட்டியிடம்," ஊருக்கு போறேன்" என கூற அதை கேட்ட அவரோ சரியென்று மட்டும் கூறினார் மேற்கொண்டு எந்த கேள்வியும் கேட்காமல் அவளை அனுப்பி வைக்க அவளும் ஊருக்கு கிளம்பி சென்றுவிட்டாள்..
அங்கு அவளுடைய வீட்டை அடைந்ததும் அவளுக்கு பூட்டிய வீடு தான் அவளை வரவேற்க அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவளுடைய அம்மா காவேரி ரத்தினத்தின் வீட்டில் இருப்பதாக கூற நேராக ரத்தினத்தின் வீட்டிற்கு சென்றாள்..
அங்கு அவளை கண்டதும் ஓடிவந்த காவேரி அங்கேயே அவளை கட்டி அணைத்துக் கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தார் தாய் அழுவதை பார்த்த அவளுக்கும் அழுகை பீறிட்டு வந்தது...
எப்போதும் போல ஊர் மக்கள் வேடிக்கை பார்க்க ரத்தினம் தான்," உள்ளே வந்து பேசிக்கலாம்" என இருவரையும் அழைத்து சென்றார்..
பிறகு நடந்த விசயத்தை எல்லாம் அவளுடைய அம்மா அவளிடம் கூற அதை கேட்டவளுக்கு வருத்தம் தான் வந்தது.. ஏற்கனவே அவன் விஷயத்தை எல்லாம் கூறி இருப்பதால் கண்மணிக்கு மிகப்பெரிய வருத்தம் எல்லாம் ஏற்படவில்லை ஆனால் அவளுடைய அம்மாவை இனி அவள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவளுக்கு நன்றாக உதித்து இருந்தது..அம்மாவும் மகளும் ஒன்றாக இருந்தார்கள் நெறய அழுதார்கள் நெறய பேசினார்கள்.. அடுத்தது என்ன செய்யலாம் என யோசித்தார்கள்... இனி என்ன ஆனாலும் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என முடிவு செய்தார்கள்.. அவர்கள் இருவருமே அவர்களுக்கு ஆறுதல் கூறி மற்றவர் பயத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தாமல் தைரியமாக இருப்பது போல நடித்தார்கள்....
இப்படியே இரு நாட்கள் செல்ல காவேரி தன் மகளிடம் வந்து," அம்மா என்ன சொன்னாலும் செய்வதான??" என்று காவேரி கேட்க
"கண்டிப்பா அம்மா" என கண்மணி கூற
"அப்போ அம்மா உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து இருக்கேன்" என கூற அதை கேட்ட மகளோ அதிர்ந்தாள்.. அவளுடைய அம்மா கூறியதும் திடீரென்று மனதில் சூரிய பிரகாஷ் ஒரு நொடி வந்து போனான்...
அவளைப் பொறுத்தவரை என்னதான் கெட்டவன் சூர்யா என்றாலும் அவனைத் தவிர வேறு யாரையும் அவளால் கல்யாணம் செய்து கொள்ள முடியாது அப்படி இருக்க அம்மா இதை கூறவும்," அம்மா எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் உங்களுக்கே நடந்ததெல்லாம் தெரியும் கொஞ்ச நாள் போகட்டுமே" என்று அவள் கூற
"அதெல்லாம் முடியாது உனக்கு ஒரு வாழ்க்கை வேண்டாமா .. மாமா தான் மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க நல்ல பையன் நானும் பேசினேன் நீயும் பேசி பாரு உனக்கும் பிடிக்கும் மத்ததை அப்புறம் பாத்துக்கலாம்..
மாமா தான் நமக்காக எல்லாம் செய்யறாங்க உனக்கும் நல்லது தான் செய்வாங்க அந்த பையன் கிட்ட நடந்து விஷயத்தை எல்லாம் பேசிட்டாங்க.. அவரும் அதுக்கு ஓகேன்னு சொல்லிட்டாரு நீ எதுக்கும் கவலைப்படாத யாரும் நடந்து முடிந்த விஷயத்தை பற்றி பேசி உன்னை கஷ்டப்படுத்த மாட்டாங்க நான் உயிரோடு இருக்கும்போதே உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி ஒருத்தன் கையில பிடிச்சு கொடுத்துட்டேன்னா நான் சந்தோஷமா போய் சேர்ந்திடுவேன்..
உன்னோட அப்பன், அண்ணன் இனி என்ன பண்ணுவாங்கன்னு சொல்ல முடியாது நான் அவங்க மேல கேஸ் கொடுக்கப் போறேன் என்னோட அப்பா கிட்ட இருந்து வாங்குன சொத்துக்களை எல்லாம் அவங்க கிட்ட இருந்து திருப்பி வாங்கணும் அவங்க ஆட்டத்தை அடக்கணும் அதுக்கு நீ என் கூட துணையா இருக்கணும்..
பணம் பத்தும் செய்யும்னு சொல்லுவாங்க அந்த பணத்தினால் என்னோட குடும்பமே அழிஞ்சு போச்சு நான் செஞ்ச தப்புனால எவ்வளவோ கஷ்டங்கள் எல்லாருக்கும் ஏற்பட்டு இருக்கு அதிலிருந்து நான் மீளனும்னு ஆசைப்படுறேன் தயவு செஞ்சு அம்மா வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாதே" என்று காவேரி கூறினார் அதற்கு மேல் அவளால் எதுவுமே கூற முடியவில்லை...
அவளால் சூர்யாவை தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய முடியாதுன்னு என தன் தாயிடம் கூற வேண்டும் என்று இருந்தது ஆனால் அந்த வாய்ப்பை அவளுடைய அம்மா அவளுக்கு கொடுக்க வில்லை என்று தான் கூற வேண்டும்..
அதே நேரம் உலகநாதன் மற்றும் தினகரன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப ஆனால் அவர்கள் இருவரையும் வீட்டுக்குள் நுழைய விடாமல் பெரிய பூட்டு போட்டு இருந்தனர்..
"அம்மா செய்த வேலையா தான் பா இருக்கும் நம்மளை அசிங்கப்படுத்துவே இப்படி எல்லாம் பண்ணி இருக்கு" என தினகரன் கொதிக்க
உலகநாதன்," ஆமாம் அதுல எந்த சந்தேகமும் வேண்டாம்" என அவர் கூறினார்..
"அப்பா இவங்களை சும்மா விட கூடாது" என அவன் கூற அதை கேட்ட அவரோ அமைதியாக இருந்தார்..
"என்னப்பா அமைதியா இருக்கீங்க???"
"என்ன பண்ண சொல்ற???" என கேட்டு கொண்டு இருக்கும் போதே வழியில் போன நபர்கள் அவர்களை பார்த்து,"அதெல்லாம் நீங்க இந்த வீட்டுக்குள்ள போக முடியாதாம் அதெல்லாம் காவேரி அக்காவோட அப்பா சொத்து தானே காவேரி அக்கா உங்க மேல கேஸ் போட போறாங்க.. எல்லாம் நீங்க பண்ணின பாவம் எப்படி ஊர ஏமாத்தி இந்த சொத்தை எல்லாம் அனுபவிச்சீங்களோ அதுக்கு எல்லாம் அந்த அக்காவே முடிவுக்கு கட்ட போறாங்க எப்படித்தான் அடுத்தவன் சொத்துக்கு வாழ ஆசைப்பட்டு பதவி வெறி பிடிச்சு இருக்காங்களோ.. இவங்களையெல்லாம் செருப்பால அடிச்சு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊரை விட்டு துரத்தனும் அப்போ தான் புத்தி வரும்" என்று அவர்கள் பேசிக்கொண்டு போக, அதை கேட்ட தினகரன் கொதிக்க
உலகநாதன் முகம் இறுகி போய் ,"அம்மா தங்கச்சி கிட்ட பேசி அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வர வழியைப் பார்ப்போம்" என அவர் கூற
"என்ன அப்பா இப்படி சொல்றீங்க???" என தினகரன் அதிர்ந்து கேட்க
"அவன் பேசுனதை கேட்டில இப்போதைக்கு அவங்க நம்ம கூட இருக்கிறது தான் நமக்கு நல்லது இல்லைனா நாம இதோ இப்ப நிக்கிறோமே அப்படித்தான் நடுத்தெருவில நிக்க வேண்டியது இருக்கும்.. சில சமயம் சிங்கமா கொதித்து எழறத விட நரி மாதிரி தந்திரமா இருக்க கத்துக்கணும்.. அப்படித்தான் உன்னோட அம்மாவை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் இப்போ அவ கத்திட்டு இருக்கிறது எல்லாம் பார்க்காத நான் போய் அழுது நின்னா அவ என் காலை சுத்தி சுத்தி வருவா நரி மாதிரி தந்திரமா அவளை நம்ம கூட அழைச்சிட்டு வந்து தான் ரெண்டு பேரையும் போட்டு தள்ளனும் இதுதான் நான் உங்களுக்கு கொடுக்கிற தண்டனை என்னை அசிங்கப்படுத்துனதுக்கு இதை செய்யாமல் நான் சாக மாட்டேன்" என்று கூறினார்..
அதை கேட்ட அவனோ தன் தந்தையை பார்க்க இருவரும் நேராக அவர்களின் பண்ணை வீட்டுக்கு சென்றனர்.. உலகநாதன் பொறுத்தவரை சொத்து அவரை விட்டுப் போவதை அவர்கள் ஏற்றுக் கொள்ள முடியாது அனைத்துமே போய்விட்டால் அவரால் வாழவே முடியாது என்ற நிலையில் தான் அவர் இருந்தார்..அப்படி இருக்க கூட இருந்து குழி பறிக்க அவர் முயல அதற்கு சூர்ய பிரகாஷ் கண்டிப்பாக ஆப்பு வைப்பான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. எப்போது அவனை முதன்முறையாக அவர் சந்தித்தாரோ அப்போது இருந்து அவருக்கு அழிவு காலம் தொடங்கியது என அவர் இன்னும் உணரவில்லை…
