இராட்சதன் 40
அத்தியாயம் : 40
" அப்பா கண்மணி தப்பிசுட்டா" என கொதித்து தினகரன் கூற அதை கேட்ட உலகநாதன் எதுவும் பேசவில்லை அமைதியாக இருந்தார்..அவருடைய எல்லாம் அவரை விட்டு இழந்து போவது போல அவருக்கு இருந்தது..அந்த சமயம் பார்த்து தினகரனுக்கு ஒரு அழைப்பு வந்தது..
ஃபோன் செய்தது வேறு யாருமில்லை சூர்ய பிரகாஷ் தான்..ஆம் தினகரன் அங்கு என்ன நடந்ததோ என்ன கோபத்தோடு அமர்ந்திருக்க அவனுக்கு ஒரு அழைப்பு வர அந்த போனை எடுத்தான் ,"என்னடா உன்னோட தங்கச்சி சாகலயேன்னு பாக்குறியா நான் இருக்கிற வரைக்கும் அவ சாக மாட்டா கவலைப்படாதே ஆனால் நீங்க சாவிங்க அதை உன் தங்கச்சி அவ கண்ணால பார்ப்பா" என்று சூர்ய பிரகாஷ் கூற
அதை கேட்ட அவனோ ,"நீ மட்டும் என் கையில கெடச்ச அவ்வளவுதான் உன்னால தான் இப்போ நானும் என்னோட அப்பாவும் இவ்வளவு அசிங்கப்பட்டு நிற்கிறோம்..நீ அந்த சிறுக்கியை வச்சு வைச்சு எங்களை போட்டு தள்ள போறியா??? அதையும் பார்ப்போம் அந்த சிறுக்கி என் கையில கிடைக்கத்தான் நான் காத்துட்டு இருக்கேன் கூடப்பிறந்த பாவத்துக்கு நானா போட்டுக்கொள்ள கூடாதுன்னு நினைச்சேன் ஆனால் அது நடக்காது போல"என தினகரன் கூற
அதை கேட்ட சூரிய பிரகாஷ்,"இவ்வளவு நடந்தும் உனக்கெல்லாம் கொஞ்சம் கூட வெட்கம் மானம் இல்ல இல்லையா??? நடுத்தெருவுல நின்னும் கொழுப்பு அடங்கல???இனியும் நிற்பிங்க உங்க ரெண்டு பேரையும் உயிரோடு விட்டது ரொம்ப தப்பா போச்சு போல சும்மா இருக்க முடியல இல்லையா??? அடுத்தவங்களை குடைஞ்சு கொண்டே இருக்கீங்க??? பரவாயில்லை இப்பதான் உன்னோட அம்மா கைல வெட்டு வாங்கி ஹாஸ்பிடல்ல படுத்து கிடந்தும் புத்தி வரல போல பார்த்துக்கலாம்..
இனி கூடிய சீக்கிரத்தில் எல்லாம் சரியாகிடும்..பார்த்துக்கிறேன் இதுவரை எப்படியோ ஆனால் இனி அவ மேல ஒரு துரும்பு கூட பட விடமாட்டேன்" என கூறினான்..அதை கேட்ட தினகரன் கொதித்து," ஏய் என்னை பத்தி உனக்கு தெரியாது" என கத்த
"ஹே மூடிட்டு வை டா என்னை நேரில் பார்க்கும் போது இதை சொல்லு நான் கேட்கிறேன்" என்றவன் ,"எண்ணி பத்து நாள்ல என்ன நடக்கப் போகுது மட்டும் பார்.. அவ வாழ கூடாதுன்னு தானே இதெல்லாம் செஞ்சிட்டு இருக்க உன்னோட ஊர்ல வச்சு அவ கழுத்துல நான் தாலி கட்டுறேன்.. நீ ஒரு ஆம்பளையா இருந்தா இந்த பத்து நாளும் அவ அந்த ஊர்ல தான் இருப்பா முடிஞ்சா அவ மேல கையை வைத்து பார் அப்ப தெரியும் நான் யாருன்னு" என்று கூறி ,"ஸ்பீக்கர்ல போடு உங்க அப்பன் கிட்ட ஒரு வார்த்தை பேசுகிறேன்" என்று கூற தினகரன் அதிர்ந்து ஸ்பீக்கரில் போனை போட,
"என்ன உலக நாதா பேர்ல மட்டும் உலகத்தை வச்சுக்கிட்டு உலக அறிவு கொஞ்சம் கூட இல்லாம அந்த கிராமத்துக்குள்ளேயே காலத்தை ஓட்டணும்னு சுத்திட்டு இருப்ப போல ஆசையா கட்டுன பொண்டாட்டி நார் அடிச்சது உனக்கு பத்தல இன்னும் மகளை கொலை பண்ணி அதுல உன்னோட வீரத்தை காட்டணும்னு நினைக்கிற?? இல்ல தெரியாம தான் கேக்குறேன் நீ என்ன பைத்தியமா??? உன்னோட மகன்தான் கிறுக்கன்னு நினைச்சுட்டு இருந்தேன் நீ அதைவிட கிறுக்கனா இருக்க உன்னால அவளோட ஒத்த முடிய கூட புடுங்க முடியாது அவளுக்கு நான் இருக்கேன் உன்னால எதுவும் பண்ண முடியாது நீ என்ன வேணா பண்ணிக்கோ .." அதை கேட்டவர் கொதித்தார்..அவன் தான் அவருடைய தன் மானத்தை வாங்கி விட்டானே??? அவர் சும்மா இருப்பாரா???
"ஏய் அவள ஊரு முன்னாடி அசிங்கப்படுத்தி என் குடும்பத்தை அசிங்கப்படுத்தி என்னை அசிங்கப்படுத்தி என்னெல்லாம் வேலை பார்த்து இருக்க இப்போ நீ அவளை கல்யாணம் பண்ணிக்க போறியா அது நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் நடக்காது நான் அவளை உனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க மாட்டேன் கொன்னு போட்டாலும் போடுவேன் ஒழிய உனக்கு கட்டி கொடுக்க மாட்டேன்" என உலகநாதன் கூற
"ஆமாம் நான்தான் அவளை ஊர் முன்னாடி அசிங்கமா பேசினேன் இனியும் தேவை வந்தால் நான் பேசுவேன் அது நானாச்சு அவளாச்சு அதுக்கிடையில நீ யாரு பெத்த பொண்ணு கூட பாக்காம கொலை பண்ண பார்த்தவன் தானே நீ அப்புறம் உன் கிட்ட யார் பர்மிஷன் கேட்க நின்னாங்க உன்கிட்ட யாரும் கேட்க கிடையாது கல்யாணத்தை பார்க்க நீ உயிரோடு இருப்பியா இல்லையான்னு முதல்ல அதைப் பற்றி யோசி..
நீ வேணா ஒன்னு யோசிச்சு பாரேன் உன்னோட ஊரிலேயே உன்ன அசிங்கப்படுத்தி உன் பொண்ண அந்த ஊர் மக்கள் முன்னாடி கல்யாணம் பண்ணி அத நீ வேடிக்கை பார்த்து சும்மா தகதகன்னு இருக்காது..
ஒன்னு இல்ல ரெண்டு இல்ல உன்னோட பொண்ணையும் சேர்த்து மூன்று பொண்ணுங்க வாழ்க்கையில நீயும் உன்னோட மகனும் விளையாடி இருக்கீங்க பெண்பாவம் பொல்லாது அது உனக்கு தெரியுமா??? இப்படித்தான் ஏதாவது ஒரு வகையில் குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கும் நீயும் உன்னோட மகனும் ஜோரா என்ஜாய் பண்ணுங்க..
மீட் பண்ணுவோம் கூடிய சீக்கிரமே அப்புறம் இந்த ஆளை செட் பண்றது கொலை பண்ண பார்க்கிறது இதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வை.. எப்படி என்கிட்ட இருந்து தப்பிச்சு போகலாம் அப்படின்னு யோசிக்கிற வழியை பாருங்க அப்புறம் என்னோட ட்ரீட்மென்ட் வேற மாதிரி இருக்கும்"என்று அவன் கூறினான்...
அதை கேட்ட உலகநாதன்," டேய் நான் யாருன்னு தெரியாம நீ பேசிட்டு இருக்க உன்னை சும்மா விட மாட்டேன்" என்று கொந்தளிக்க ,"டேய் முடிஞ்சதை பாருடா விளக்கெண்ணெ பேச வந்துட்டான் இத்தனை நாள் வயசுக்கு மரியாதை குடுத்துட்டு இருந்தேன் இனி அதெல்லாம் என்கிட்ட கிடைக்காது வேலை என்னவோ அதை பாரு.. நான் வரதுக்குள்ள மருந்து மாத்திரையை சாப்பிட்டு உடம்ப தேத்தி வை அப்பத்தான் உன்னை போட்டு தள்ள முடியும்" என்று கூறிய சூர்ய பிரகாஷ் போனை வைத்து விட்டான்...
அதே நேரம் அவளோ இரவெல்லாம் உறக்கம் வராமல் தவித்தாள்.. எங்கு சென்றாலும் அவளுக்கு நிம்மதி என்பது இல்லை என்ற நிலைக்கு அவள் சென்று விட்டாளோ இனி அவளுடைய வாழ்க்கையே இப்படி தானோ என அவள் தவித்தாள்..
அதே நேரம் இவன் சொல்வது உண்மையாக இருந்தால் இப்படிப்பட்ட ஒரு காரியத்தை செய்ய அவளுடைய அம்மாவுக்கு எப்படி தைரியம் வந்தது? அம்மாவை உடனே பார்த்தே ஆக வேண்டும் இனியும் அம்மாவை அங்கு விட்டு வைத்திருக்க முடியாது மேலும் அவர்கள் ஏதாவது செய்ய மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் என்றெல்லாம் அவள் யோசித்து குழம்பினாள் இனி அவருடைய வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதோ என்று வருத்தமும் அவளுக்கு வந்தது..
