Share:
Notifications
Clear all

இராட்சதன் 39

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

அத்தியாயம் : 39

        ஆம் நன்றாக பயந்து போய் இருந்தாள்..சூர்யா பேசியதை கேட்டு விக்னேஷ் முகம் பல கேள்வியில் உறைந்து நின்றது..அவளை வீட்டுக்கு அழைத்து சென்றவன் அவளை பார்த்து ,"அறிவில்லை" என கேட்க

"இல்லை எனக்கு தெரியல.. மன்னிச்சிடுங்க" என கூற

"என்ன தெரியல அது தான் யாரைப் பார்த்தாலும் நம்பிட்டு பின்னாடி போயிடுவியா?? யாரை அசிங்கப்படுத்தணும்னு இப்படி பண்ணிட்டு இருக்க என்னையா??? பெருசா தைரியம் இருக்கிற மாதிரி காட்டிக்கிட்டா மட்டும் போதாது எதிர்த்து நிற்க தெரியணும்" என்க

அவளோ அமைதியாக இருக்க அவனோ ,"இது உன்னோட அண்ணன் அப்பா அனுப்பின ஆளுங்க உன்னை போட்டு தள்ள முடிவு பண்ணி இருக்காங்க" என்று கூற

அவளோ அதிர்ந்து,"நீங்க முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல" என்க

"எங்க சொல்ல விட்ட??? அது தான் சொல்ல வரதுகுள்ள அவன் கூட போய் தான் ஆவேன்னு ஒரே காலில் நிற்கறியே?? என்னை எதிர்த்து நின்னே ஆகணும் அப்படித்தானே நான் வரலைனா என்ன ஆகி இருக்கணும் நீயே யோசிச்சு பாரு.. அவங்க அங்க பாடையில் கிடக்கிற மாதிரி படுத்து இருக்கறதுனால நீ தப்பிச்ச" என்க அவளோ ,"என்னை மன்னிச்சிடுங்க" என்றாள் அவளுக்கு அவள் செய்தது தவறு என்று பட்டது...

அவனோ அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லாமல் சற்று தண்ணீர் குடித்த தன்னை நிதானப்படுத்திக் கொண்டு காரில் பயணம் செய்து கொண்டே அவளுக்கும் தண்ணீரை கொடுத்தவன் அவளும் நிதானப்படுத்தி கொள்கிறாள் என்பதை உறுதி செய்துகொண்டு அவன் நடந்த விஷயத்தை எல்லாம் கூற அதைக் கேட்டவளோ அதிர்ந்து ,"எனக்கு என்னோட அம்மாவை பார்க்கணும்" என்க,

அவனோ ,"இப்போ சொல்லு" என்றவன் காரை சீராக ஓட்டினான்.. வயிற்றில் பேனா முனை கத்தியை வைத்து கிழித்ததும் அவள் கண்ணில் கண்ணீர் வர அவனுக்கு இருதயமே நின்று போனது ஒரு நொடி விட்டிருந்தாலோ இல்லை அவன் வராமல் இருந்திருந்தாலோ இவள் நிலைமை என்ன ஆகி இருக்கும் என்று யோசிக்கும் போதே அவனுக்கு அவ்வளவு ஆத்திரமாக இருந்தது அவனுடைய முகமே கூறியது இன்னும் அவனது கோபம் சற்றும் குறையவில்லை என்று அவளை பார்க்க அவளோ மாலை நடந்த சம்பவத்திலிருந்து மீளாமல் இன்னும் அதிர்ச்சியோடு இருக்க அவளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி எனக்கு விஷயங்கள் அவள் கேட்கவும் அவள் கண்ணீர் முனுக்கென்று வர அதை பார்த்த அவனும் என்னை எண்ணினானோ காரை நிறுத்தி விட்டு வெளியே வந்தவன் அவள் பக்க கதவை திறந்து அவளை இறங்கு என்று கூற அவளும் இறங்கினாள் அவள் அருகே வந்தவன் அவளை இறுக்கமாக அணைத்தான்..

காற்று போக இடம் இல்லாமல் அவ்வளவு நெருக்கமாகவும் அழுத்தமாகவும் அவளை அணைத்தவன் அவள் அதிரும் முன்னே அவள் நெற்றியில் தன் இதழ்களை பதித்தும் விட்டான்..அவளோ அவனுடைய அணைப்பில் ஆறுதல் அடைந்தாலும் இதற்கெல்லாம் காரணம் இவன்தானே என எண்ணி அவனது மார்பில் கை வைத்து தள்ளி விட்டவள் ,"இதோ பாருங்க உதவி செஞ்சீங்கன்னு சொல்லி ரொம்ப அட்வான்டேஜ் எடுக்காதீங்க நீங்க யாரோ நான் யாரோ" என்று கூற

அதைக் கேட்டு அவனும் அவளருகே நெருங்கி நின்று அவள் காதில் ,"இதே அணைப்புக்காக முதல் முத்தத்துக்காக என் கண் பார்வைக்காகவும் நீ காத்திருந்தது மறந்து போச்சா?? அப்படி நான் உன்னை கிஸ் பண்ணினா நீ என்ன பண்ண போற??? " என்றான்..

ஆம் அவன் தொடர்ந்து யோசனை செய்ததில் இனி என்ன ஆனாலும் அவளை விடக்கூடாது என்று முடிவே செய்து விட்டான் சூரிய பிரகாஷ்..அதற்காக அவன் சமயம் எடுத்து கொள்ள அவளோ அவள் பாதைக்கு செல்ல அதை தாங்கி கொள்ள முடியாதவன் இனியும் ஏதாவது பிரச்சனை வருவதற்கு முன் அவளை தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்து விட்டான் சற்று முன் தான் அவனுடைய மனமே அவனுக்கு அவள் அவனுடைய மனதில் எத்தகைய இடத்தை பிடித்து இருக்கிறாள் என்பதை அவனுக்கே உணர்த்தியது... அப்படி இருக்க மெல்ல அவளிடம் அத்துமீற துவங்கி விட்டான் சூரிய பிரகாஷ் இனியும் காலம் கடத்த அவன் தயாராக இல்லை..

ஆனால் அது விளங்காத அவளோ நடந்த விஷயத்தை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு,"அவ்ளோ தான் சொல்லிட்டேன்" என அவன் பேசிய பேச்சில் இருந்த படபடப்பை மறைக்க அவள் கூற ,"ரொம்ப பதட்டமா இருந்தா சொல்லு கட்டி புடிச்சு சாந்தமா நின்னுக்கிறேன்.. நேத்து எல்லாம் பக்கம் பக்கமா டயலாக் பேசின என்னை ஏமாத்திட்ட காதல்னு சொல்லி ஏமாத்திட்ட நான் உன்னை நிஜமாகத்தான் காதலிக்கிறேன் என்று சொன்ன அப்புறம் ஏன் இப்படி நடுங்கற நான் காதலிக்கினாலும் நீ என்னை காதலிக்க தானே செய்த??"  என கூறியவன் மனதில் சற்றுமுன் நடந்த நிகழ்ச்சியை மனதில் வந்து போனது அதனால் தான் அவனையும் மீறியவன் அணைத்து விட்டான் அதில் அவனுக்கு தவறு என்று தோன்றவில்லை..

அவனுக்கு தான் இவளை பற்றி நன்றாகத் தெரியுமே உண்மையில் இவன் தான் ஏமாற்றி இருக்கிறான் என்றும் அவன் ஒப்புக்கொள்கிறானே அவள் செய்த ஒரே தவறு இவனை காதலித்தது மட்டும் தான் என்பதும் சூரிய பிரகாஷுக்கு நன்றாக தெரியும் அப்படிப்பட்ட மாசு மருவற்ற அந்த காதலை இழக்க அவன் விரும்பவில்லை...

அவன் ஒன்றும் நித்யாவை நினைத்து கொண்டு வாழ்க்கையை ஒட்ட போவதும் இல்லை..அதே நேரம் தன்னை மட்டுமே நினைத்து கொண்டு தன்னுடைய துரோகத்தை ஏற்று கொள்ள முடியாமல் தவித்து கொண்டு இருக்கும் இவளையும் அவனால் விட்டு வைக்க முடியாது..அவன் மனதை அவன் நேற்று தான் புரிந்து கொண்டான் என்று தான் கூற வேண்டும்..

ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் திகழ்ந்து கொண்டிருக்கும் அவனுக்கு அவள் மீண்டும் மீண்டும் அதை நினைவு கூறுவது போல ஏதாவது ஒரு தருணத்தில் அவள் அவர்கள் இருவரும் காதலித்த தருணங்களை நினைவு கூர்ந்து விடுகிறாள்.. அது எல்லாம் அவனை கொல்கிறது என்று தான் கூற வேண்டும்..

அவன் கூற்றுப்படி நித்யாவுக்காக இவர்களை பழிவாங்க வேண்டும் என எண்ணியிருந்தாலும் முக்கியமாக அவனை நோக்கமே அந்த ஊரார் மத்தியில் உலகநாதன் மற்றும் தினகரனை அவமானப்படுத்த வேண்டும் அதற்கு பகடை காயாக அவளை உபயோகித்தான் ஆனால் எள்ளளவும் அவளை அவளோடு அவன் இருக்கும் தருணங்களில் தரம் இறக்கிப் பார்த்ததில்லை ..

அப்படி இருக்க அவளின் வருத்தமும் வார்த்தைகளும் அவனை தாக்கின...அவளை விட கூடாது என முடிவு எடுத்தான்..அதற்கு அவளுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் தினகரன் மற்றும் உலகநாதன் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டான்.. இதுவரை அவர்களை கொலை செய்ய வேண்டும் என அவன் எண்ணியதில்லை அவர்கள் குணத்தை மக்கள் முன்னிலையில் திரையிட்டு காட்ட வேண்டும் என்றுதான் நினைத்திருந்தான்..

அதற்காக மட்டும் தான் அவளை உபயோகித்து இருந்தான் ஆனால் இனி இவள் மீது அவர்கள் கையை வைத்தால் அவர்கள் கையை மட்டுமல்ல உயிரையே வாங்கி விடுவது என முடிவு செய்து விட்டான்..

அதற்கு தகுந்தது போல அவளை அணைத்து விட்டவன்," நாளைக்கு காலைல இங்கிருந்து உன்னோட ஊருக்கு போ எங்க இருக்க வேண்டாம் கிளம்பிடு" என்க அவளுக்கும் அது தான் சரி என தோன்றியதோ என்னவோ அவளும் தலையாட்டினாள்..

அவளுக்கு இனி இங்கு இருப்பதில் அர்த்தமில்லை என்றும் அவளுக்கு தோன்றியது மேலும் அவளுடைய அம்மா அங்கு தனியாக இருக்கிறாள்...

அவருக்கு துணையாக இருக்க வேண்டும் என எண்ணி கொண்டாள் கண்மணி.. தன் அப்பா மற்றும் சகோதரனிடமிருந்து தன் அம்மாவை காப்பாற்றி எங்கேயாவது அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முடிவோடு அவள் இருந்தாள்...ஆனால் காலம் அவர்களுக்கு என்ன விதித்து இருக்கிறதோ என்னவோ???



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top