இராட்சதன் 38
அத்தியாயம் : 38
அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை அவள் விக்னேஷ் உடன் சென்று இருந்தாலும் ஏதாவது ஆகி விடுமோ என்ற நெருடல் அவனுக்கு இருந்து கொண்டே இருந்தது..
அவன் வீட்டுக்கு செல்ல நினைத்தாலும் அவர்களுக்கு பின்னே அவர்களை பின் தொடர எண்ணினான்..அப்போது அவர்கள் இருவரும் கடை வீதிக்கு சென்றனர்..இவனும் ஓரமாக காரை நிறுத்தி விட்டு வேடிக்கை பார்க்க அவர்கள் இருவரும் ஒரு துணி கடைக்கு சென்றனர்..
விக்னேஷ் அவளிடம் ,"ஒரு நல்ல டிரஸ் செலக்ட் பண்ணு எனக்கு இதெல்லாம் கொஞ்சம் கஷ்டமான விஷயம் அதுனால தான் உன் கிட்ட ஹெல்ப் கேட்டேன்...இந்த டிரஸை பார்த்ததும் அவ இம்ப்ரெஸ் ஆகிடனும்" என தன்னுடைய காதலிக்கு உடை எடுக்க அவளிடம் கூறி இருக்க அவளோ சிரித்த முகத்தோடு," அதுனால என்ன நான் செலக்ட் பண்றேன்" என கூறும் போதே விக்னேஷ்க்கு போன் வர அவளை பார்த்து சைகையில் போனை காட்ட அவளோ சிரித்து கொண்டே அவனை அனுப்பி வைத்தாள்.. ஃபோனில் அவன் காதலிக்கும் பெண் இருக்க அவன் பேச கடையை விட்டு வெளியேறி விட அவளோ சிரித்து கொண்டே தன் நண்பனுக்காக உடை எடுக்க துவங்கி விட்டாள்..
அந்த சமயம் பார்த்து தினகரனுக்கு அழைத்த அந்த ரவுடி கும்பல்," உன்னோட தங்கச்சி இங்கதான் இருக்கா என்ன பண்றது ஆனா வேற ஒரு பையன் கூட இருக்கா நீ சொன்ன ஆள் கூட இல்லை" என்று கூற அதைக் கேட்ட தினகரன் தன் தந்தையிடம் ,"அவ கண்டவன் கூட எல்லாம் சுத்திட்டு இருக்கா நம்ம குடும்ப மானத்தையே வாங்கிட்டு இருக்கா அந்த சூரிய பிரகாஷ் கூட இல்ல வேறொருவன் கூட சுத்திகிட்டு இருக்கா...இன்னும் எத்தனை பேர் கூட சுத்த போறான்னு எனக்கு தெரியல" என்று கூற அதைக் கேட்ட உலகநாதன் கோபத்தின் உச்சிக்கு செல்ல அதை கண்ட அவனோ,"இப்ப சொல்லுங்க அவள முடிச்சுட்டு சொல்லட்டுமா???" என்று கேட்டான் ..
அவரும் ஏற்கனவே காவிரி மீது கோபத்தில் இருந்தவர் இதற்கெல்லாம் காரணம் தன் மகள் தான் ஊமைப்போல தன்னிடம் பயந்து நடுங்கி கொண்டு இருந்தவள் இப்பொழுது தன்னை எதிர்த்து நிற்கிறாள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத உலகநாதன் தன்னை மீறி தன் வீட்டுப் பெண்கள் நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவர் அவர்களுக்கு தண்டனை தரும் பொருட்டு, சரி என்பது போல தலையாட்ட தினகரனும் ,"அவ கூட இருக்கிறவனையும் சேர்த்து முடித்துவிடு. நீ கேட்கிற பணத்தை நான் அனுப்பி வைக்கிறேன்.. முக்கியமா நான் அனுப்புன போட்டோல இருக்குற அவனை மட்டும் உயிரோட விடாதே நீ எவ்வளவு கேட்டாலும் நான் தரேன்" என்று கூற அதை கேட்ட ரவுடி கும்பல் சரி என்று கூறிவிட்டனர்..
சூர்யாவும் காரை நிறுத்தி விட்டு ஒருவருக்கு அழைத்து சில முக்கியமான விஷயங்களை எல்லாம் கூறியவன் பின் அவனும் உள்ளே செல்ல போக அதற்குள் போனை எடுத்து கொண்டு விக்னேஷ் வெளியே வந்தான்.. இவன் எங்கே செல்கிறான் என யோசித்து கொண்டே சூர்ய பிரகாஷ் வந்தாலும் அவனை கண்டு கொள்ளவில்லை..
ஆம் அவனுக்கு அழைப்பு வந்து இருக்கிறது என்பதை சூர்யா புரிந்து கொள்ள அவனோ விக்னேஷ் கண்ணில் படாமல் நேராக கடைக்குள் உள்ளே செல்ல அவளோ பெண்கள் துணி எடுக்கும் பகுதியில் நின்று அவளுக்கு தேவையான துணிகளை தேடி கொண்டு இருந்தாள் அந்த சமயம் பார்த்து ஒரு ரவுடி கும்பல் பார்க்க ரவுடி போல தெரியாது...ஆனாலும் அவர்கள் கயவர்கள்..
அப்படி இருக்க அவர்கள் மக்களோடு மக்களாக கலந்து தினகரன் கொடுத்த பணியை முடிக்க அவள் பின்னால் அவர்கள் அவளை கொலை செய்யும் நோக்கோடு நின்று கொண்டு இருக்க, சூர்யா யாருக்கும் தெரியாமல் ஓரத்தில் நின்று கொண்டான்..
அந்த சமயம் பார்த்து அவள் துணியை தேடி கொண்டு இருக்க,அந்த ரவுடிகள் மெல்ல உடை பார்ப்பது போல அவள் அருகே நெருங்கி நிற்க ஒரு நொடியில் அவளை தங்கள் வளையத்துக்குள் சுற்றி வளைத்தது போல அவனுக்கு தோன்ற அவளால் அவர்களின் வட்டத்தில் இருந்து வெளியே போக முடியாதபடி அடைத்து அவர்கள் நிற்க சூர்ய பிரகாஷ் கண்கள் அழுத்தத்துடன் அவளை ஆராய்ந்தது ஏனோ அவன் மனம் ஏதோ சரியில்லை என தோன்றியது..இவர்கள் ஏன் அவளை சுற்றி வளைத்தது போல நிற்கிறார்கள் என யோசித்தான்..
அப்போது அவள் பின்னால் இருந்தவன் மெல்ல அவள் காதருகே குனிந்து, "இங்கே இருந்து ஒரு நொடி நீ நகர்ந்தேனா வெளியே போனவன் உசுரோட வரமாட்டான்.. கத்தின அவ்ளோ தான்" என்று விக்னேஷை காட்டி அவர்கள் மெல்ல மிரட்டினார்கள்..அவளோ பதட்டத்தோடு யார் இவர்கள் என முழித்து கொண்டு அவர்களை பார்க்க அவர்களோ கொஞ்சம் ஒரு மாதிரியாக அவளுக்கு தோன்ற," என்னை விடுங்க யார் நீங்க நான் கத்திடுவேன்" என கத்த வாயை திறக்க போக அதற்குள் பேனா போன்ற கத்தியை யாரும் அறியாமல் திறந்தவன் அவளின் இடை நோக்கி கையை கொண்டு போக கண்மணி சட்டென திரும்பி பார்க்கும் பொழுது ஆண்கள் சூழ நிற்கவும் சட்டென்று அவள் நகர முற்பட அதற்குள் பேனா முனை கத்தியை வைத்து அவள் உடலில் கீறல் போட்டான்.. அவளோ வலியால் கதற அடுத்த கீறல் போடும் முன் அவளோ அதிர்ந்து திரும்பி பார்க்க அந்த சமயத்தில் அந்த ரவுடியின் கையை பிடித்திருந்தான் சூர்யா..ஆம் அவன் அவர்களை கவனிக்கும்பொழுது பேனா முனை கத்தியை ஒருவன் எடுத்த போதே கண்காணித்து விட்டான் அவன் அருகே வருவதற்குள் அவள் வயிற்றில் கீரலும் போட்டுவிட அவ்வளவுதான் அவனுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை புஜங்கள் இறுகி அந்த ரவுடியின் கையைப் பிடித்து இருந்தவன் ஓங்கி அவனது முகத்திலேயே ஒரு குத்து விட்டான்...
பிறகு அவன் பார்வை அவளுடைய இடையை பார்க்க அவள் ஜாக்கெட் அணிந்திருந்ததால் லேசான கீரலோடு தப்பித்தாள் அதுவே அவளுக்கு வலியை கொடுத்தது.. இன்னும் என்ன நடக்கிறது என்ன நடந்து கொண்டிருக்கிறது என புரியாமல் அதிர்ந்து அவள் விழிகள் சூரிய பிரகாஷை பார்க்க அவனோ அவளை முறைத்து பார்த்தவன் ஐந்து நிமிடத்தில் அந்த இடத்தில் இருந்தவர்களை எல்லாம் துவம்சம் செய்தான்...
அவளோ அரண்டு விட்டாள்..அவளுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.. அவளின் கை கால்கள் நடுங்க துவங்கி விட்டது..அவனோ அவளை பார்த்து கொண்டே துவம்சம் செய்தவன் நேராக போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை பிடித்துக் கொடுத்துவிட்டான்..
ஒரு சில நேரத்துக்குள் அந்த இடம் பரபரப்பாக காட்சியளிக்கப்பட, அந்த கடையின் முதலாளியோ அவனின் குடும்பத்தாருக்கு நீண்ட பழக்கம் உடையவர் அதனால் வேகமாக போலீசுக்கு தகவல் கொடுத்து அவர்களுக்கு பாதுகாப்பும் கொடுத்து விட்டார்..
ஒரு சில நேரத்துக்குள் அந்த இடம் பரபரப்பாக காட்சியளிக்கப்பட அவளோ கைகள் நடுங்கிய நிலையில் நின்று கொண்டு இருக்க அவள் அருகே வந்தவன் அவளின் அதிர்ச்சியை கூட பொருட்படுத்தாமல் நேராக அவளின் ஜாக்கெட்டை கழட்டி அவளுக்கு காயம் பட்டு இருக்கிறதா என பார்க்க இலேசாக காயம் தான் என்றாலும் இலேசாக அந்த இடத்தை வருட அவளோ பயத்தின் காரணமாகவும் அவனின் தொடுகையின் காரணமாகவும் சற்று விலகி கொண்டே," யார் அவங்க எனக்கு ஒன்னும் இல்லை!! நான் நல்லா இருக்கேன் விக்னேஷ் எங்கே? நீங்க எப்படி இங்க???" என கூற
"வாயை ஒடைச்சிடுவேன் நான் தான் சொன்னேன்ல தனியா போகாதேன்னு" என அவன் கடுப்பாக கூற,
அதை கேட்டவளோ அரண்டு போய் ,"அது வந்து .. நான் விக்னேஷ் கூடத்தான் வந்தேன்" என வார்த்தைகளை முழுங்க," என்னடி பெரிய இவ மாதிரி பேசிட்டு போன என்னை பார்த்துட்டு எனக்கு தெரியும்னு இப்ப என்ன நடந்துச்சு பார்த்ததில இதுக்குத்தானே சொன்னேன் தனியா போகாதன்னு கேட்டா தானே?? நீ என்ன ஊர் சுத்தி பார்க்க வந்திருக்கியா இல்ல உன்னோட அப்பா அண்ணன் பெரிய நியாயவாதிகளா உன்னை பாதுகாப்பாக அனுப்பி வெச்சிருக்காங்களா ஊரை விட்டு ஓடி வந்து இருக்கேன்னு நினைப்பு இருக்கா??? நான்தான் மரியாதையா சொல்றேன்ல சொல்றத கேட்காம போற பெரிய இவ மாதிரி எல்லாத்தையும் பார்த்து கிழிச்சிடுவியா இந்நேரம் கழுத்த அறுத்து போட்டுட்டு போயிருப்பாங்க.. அவங்களுக்கு இதெல்லாம் புதுசு இல்ல ஊர் மக்களை பயங்காட்டவே பட்டப்பகல்ல எல்லாரும் முன்னாடியும் கொலை பண்ணிட்டு போயிடுவாங்க" என கூற அதற்குள் விக்னேஷ் உள்ளே வர அங்கு இருவரையும் பார்த்து அதிர்ந்து போய் நின்று கொண்டு இருக்க,
"என்னாச்சு சூர்யா" என விக்னேஷ் கோபத்தை பார்த்து பதறி கூற,
அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு ,"இது தான் நீ பாதுகாப்பாக அழைச்சிட்டு போறதா?? இந்நேரம் அவளோட குடலை உருவி அவளுக்கு மாலையாக போட்டு பாடையில் ஏத்தி இருப்பாங்க" என்க
"இல்லை சூர்யா அது வந்து ஃபோன் வந்துச்சு பேச போனேன் அதுக்குள்ள இரண்டு பேர் வந்து பிரச்சனை பண்ணினாங்க.? அவங்களை சமாளிச்சுட்டு இருக்குறதுக்குள்ள அவங்க கை வச்சாங்க நானும் திருப்பி கை வைக்க வேண்டியதா போயிடுச்சு அதுக்குள்ள தான் போலீஸ் வந்தாங்க என்ன பிரச்சனை என்ன ஆச்சு" என கூற அதை கேட்டு அவனோ," இடியட் இது பக்கா பிளான் உனக்கு தான் இதை பத்தி எதுவும் தெரியாது ஆனால் இவளுக்கு எல்லாமே நல்லா தெரியும்.. இவ யாரு இவ எதுக்காக வந்திருக்கான்னு உனக்கு வேணா தெரியாம இருக்கலாம் அவளுக்கு நல்லாவே தெரியும் அதுனால இனி இவளை கூட்டிட்டு வர வேலை வைசுக்காதே.. இதோட ஸ்டாப் பண்ணிடு அதுதான் உனக்கும் நல்லது இவளுக்கும் நல்லது" என அவன் எச்சரித்து விட்டு அவளின் கையை பிடித்து இழுத்து கொண்டே அவன் செல்ல அவளும் பயந்து நடுங்கி அவனுடன் சென்றாள்.. அவன் பேசும்போது ஒரு வார்த்தை பேசவில்லை ஏனெனில் வயிற்றில் போட்ட கீறல் அவளை பேசவிடாமல் செய்தது..
