இராட்சதன் 37
அத்தியாயம் : 37
கஷ்டப்பட்டு வாங்கிய சொத்துக்களை எல்லாம் அப்படியே தூக்கி தாரை வார்த்து கொடுக்க உலகநாதன் ஒன்றும் அவ்வளவு நல்லவன் அல்லவே பிறகு அவர் வளர்த்த மகன் மட்டும் எப்படி இருப்பான் பெற்ற தாயையே கொல்லும் அளவுக்கு நல்ல மனசு உடைய மகனாகத்தானே இருப்பான்!!!
அப்படி இருக்க ரத்தினம் மூலம் விசயத்தை எல்லாம் அறிந்து சூர்ய பிரகாஷ் மனம் மேலும் கனத்தது.. அவளுடைய அம்மாவை நினைத்து உள்ளுக்குள் சிறு வருத்தம் அவனுக்கு எட்டி பார்த்தது என்னவோ உண்மை தான்..
இவர்கள் ஏதாவது வேண்டாத வேலை செய்வார்கள் என எண்ணி கொண்டான்..மேலும் அவள் இருக்கும் இடம் தெரிந்து இருப்பதால் அவளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதை கணித்தும் வைத்து இருந்தான்..
ஏனோ தெரியவில்லை.. அவளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது..ரத்தினம் கூறிய வார்த்தைகளை கேட்ட அவன் மேலும் அவளை வருத்த கூடாது என எண்ணினான்..
மேலும் காலையிலிருந்து விக்னேஷ் மற்றும் கண்மணி இருவரும் சேர்ந்து இருப்பது ஏனோ மனதுக்குள் உலற்றிக்கொண்டே இருந்தது அவனுடைய ஜாக்கெட்டை அணிந்தபடி அவள் சுற்றி வருவது அவனுக்கு பிடிக்கவில்லை..
அதற்குக் காரணம் நேற்று அவள் அழுத அழுகை தான் காரணமோ என்னமோ தெரியவில்லை.. இல்லை இப்போது அவள் வீட்டில் நடந்து இருக்கும் பிரச்சனையா என தெரியவில்லை..அதனின் தாக்கமாக அவனின் உள்ளுணர்வு அவள் மீது சாய்கிறதோ தெரியவில்லை..
என்னதான் பழிவாங்க வேண்டி அவளை காதலிப்பது போல நடித்திருந்தாலும் இரண்டு வருடம் அவளோடு அவன் பயணம் செய்திருக்கிறான் அவள் எத்தகைய குணத்தை உடையவள் அவளுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என அனைத்துமே அவனுக்கு தெரியும் பல தருணங்களில் அவளின் குழந்தைத்தனத்தை கூட அவன் ரசித்து இருக்கிறான் என்று தான் கூற வேண்டும்..
அப்படி இருக்கையில் பல தருணங்களில் அவள் பக்கம் சாயும் தன் மனதை அடக்க அவன் மீண்டும் மீண்டும் நடந்த சம்பவங்களையே அசைபோட்டு அவள் மீது கோபத்தையும் அவள் குடும்பத்தை பழிவாங்க அவளை உபயோகிக்க மட்டும் தான் அவளோடு பழக வேண்டும் என்ற எண்ணத்தையும் அவன் விதைத்துக் கொண்டான்..
அப்படி இருக்கையில் அது எல்லாம் நினைவு வந்து அவனை தொல்லை செய்தது.. மேலும் அவர்கள் இவளை எதுவும் செய்யாமல் பாதுகாக்க வேண்டும் என எண்ணினான்..
நேற்று அவள் அழுது அழுகை தான் அவனால் அவ்வளவு எளிமையாக கடந்து போக முடியாமல் இருந்தது இன்று இந்த பிரச்சனை வேறு இதை அவளுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ள அவன் எண்ணினான்..இருந்தாலும் அவள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற விஷயத்தை அவளிடம் கூறி விட வேண்டும் என எண்ணினான்..
அப்படி இருக்கையில் மாலையில் அவளை அழைத்தான்..அவளோ வந்து இருக்க அவளிடம் ,"லூக் இது ஆஃபீஸ் காபி ஷாப் கிடையாது.. உட்கார்ந்து ஜோடி ஜோடியா பேசிட்டு இருக்க இது ஒன்னும் காபி ஷாப் கிடையாதுன்னு சொல்றேன் புரியுதா!! " என்று அழுத்தி கூற அவள் முகம் கருத்தது.." அண்ட் இனிமேல் நீ என்னோட பெர்மிஷன் இல்லாமல் நீ எங்கேயும் போக கூடாது காட் இட்???" என்க
அதை கேட்ட அவளுக்கு கோபம் வந்தது..இவன் என்ன தன்னை நினைத்து கொண்டு இருக்கிறான் என எண்ணி," இதோ பாருங்க நான் நேத்தே சொல்லிட்டேன் உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு அதனால நான் எங்கே போகணும் எங்கே போகக்கூடாது அப்படின்னு நீங்க எனக்கு ரூல்ஸ் போடாதீங்க உங்க பர்மிஷன் கேட்டு நான் போகணும்னு அவசியம் எனக்கு இல்லை என்னை வேலைக்கு வெச்சது உங்க பாட்டி நீங்க கிடையாது உங்க பாட்டி சொல்லட்டும் நான் இங்கே போகணும் போகக்கூடாது நீங்க அதை சொல்லாதீங்க புரியுதா" என்று கூற அவனுக்கு கடுப்பு ஆகியது..
அவனோ முறைக்க அவளோ திரும்பி செல்லும் போது," என்னை மீறி போய் பார்" என்றான்..
அதற்கு அவளோ," நீங்க யாரு எனக்கு?? நான் எதுக்கு உங்க பர்மிஷன் வாங்கணும் உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு எதுவும் கிடையாது நீங்க யாரோ நான் யாரோ உங்க பேச்சுக்கு கட்டுப்படணும்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது நீங்க சொல்ற வேலையை செய்யணும் அப்படிங்கறது மட்டும்தான் என்னுடைய வேலை மத்தபடி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்காதீங்க இதுவரை நீங்கள் பார்த்த கண்மணி வேற இப்போ நீங்க பாக்க போற கண்மணி வேற.. நீங்க சொன்னதுக்கு நான் இன்னைக்கு போவேன் உங்களால என்ன பண்ண முடியும்???" என்றவள் அவனுடைய அடுத்த கேள்விக்கு இடம் கொடுக்காமல் சென்று விட அவனுக்கோ அவளின் உதாசீனம் கோபத்தை கொடுக்க அவன் கையில் இருந்த கோப்பையை தூக்கி சுவற்றில் அடித்தான் சூர்ய பிரகாஷ்..
மாலை ஆனது எப்போதும் அவளுக்காக சூர்ய பிரகாஷ் காத்திருக்க விக்னேஷ் உடன் சிரித்து பேசி கொண்டு வந்த அவளை பார்த்தவன் விழிகள் கோபத்தில் சூடானாலும் அவளுக்காக காத்திருக்க அவனின் காரை கண்டதும் விக்னேஷ்," சூர்யா நீ கிளம்பிடு நான் இவங்களை ட்ராப் பண்றேன்" என்று கூற அதை கேட்டதும் சூர்யாவின் விழிகள் அவளை பார்க்க அவளோ அதை கண்டாலும் தன் பார்வையை திருப்பி கொண்டாள்.. வேண்டும் என்று தான் இன்று விக்னேஷ் உடன் அவள் செல்கிறாள்..அவன் பேச்சை கேட்கவே கூடாது என்று முடிவு அவள் செய்துவிட்டாள்..
அவளுக்கு சூரிய பிரகாஷை சுத்தமாக பிடிக்கவில்லை அவளைப் பொறுத்தவரை அவள் வேலை செய்யும் இடத்தின் முதலாளி அவன் அவ்வளவுதான் மற்றபடி நடந்த விஷயத்தையோ இல்லை அவர்களுக்குள் நடந்த விஷயத்தையும் எதையும் அவள் அசை போட்டு பார்க்க விரும்பவில்லை..
நேற்றோடு எல்லாம் முடிந்து விட்டது இன்று அவள் புது மனுஷியாக நடமாட முடிவு செய்து இருக்கிறாள்..அவளுக்கு விக்னேஷ் உடன் பேசிக் கொண்டிருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது அவனும் இனிமையாக பேசுகிறான் அதற்கு காரணம் காதல் என்று கூறி விட முடியாது இருவருக்கும் ஒரு நல்ல நட்பு இழையோடி கொண்டிருக்கிறது..அத அவளுக்கு பிடித்து இருக்கிறது..
மேலும் அவனை காணவே பிடிக்காத அவளுக்கு அவனோடு பயணம் செய்ய வேப்பங்காயாக கசந்தது..மேலும் அவன் அழைத்து அவளை எச்சரித்தது அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை..
விக்னேஷ் கூறியதை கேட்டும் அவளை முறைத்து பார்த்துக் கொண்டிருந்த சூரிய பிரகாஷ் முகத்தைப் பார்த்து ,"கண்மணிக்கு கொஞ்சம் பொருள் எல்லாம் வாங்கணும்ன்னு சொன்னாங்க அதுக்காக தான் அழைச்சிட்டு போறேன் சீக்கிரம் கொண்டு வந்து விட்டுறேன்" என்று கூறினான் விக்னேஷ்..
அதன் பிறகு அவளை முறைத்து விட்டு என்னை மீறி போகிறாயா என விழிகளாலே அவளை கேள்வி கேட்டுக் கொண்டு அவள் மீதி இருக்கு ஆத்திரத்தில் தன் காரை வேகமாக செலுத்தினான் சூர்ய பிரகாஷ்..
அதை கவனித்த அவளிடம் அவன் ,"சூர்யாவுக்கு நாம ரெண்டு பேரும் வெளியே போறது பிடிக்கல போல அதனால தான் அவன் கோபமா போறான்" என்று கூற அதைக் கேட்டு அவளும் எதுவும் பதில் கூறவில்லை…
