இராட்சதன் 36
அத்தியாயம் : 36
கையில் அரிவாள் மனையோடு ,"அண்ணே அண்ணே" என கதறி அழைத்தார் காவேரி..வெகு வருடங்களுக்கு பிறகு தன் அண்ணன் வீட்டு வாசல் முன் நிற்கிறார்...அவர் கண்ணில் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டிருந்தது..
ரத்தினம் யாரது என வெளியே வந்து பார்க்க அங்கு காவேரியை காணவும் அவர் அதிர்ந்து விட்டார்..
காவேரியின் கோலமே அவருக்கு ஏதோ தவறு நடந்து இருப்பதை அவருக்கு உணர்த்த, அவரை கண்டதும் காவேரி ஓடி வந்து தன் அண்ணனின் காலில் விழுந்து ,"அண்ணே என்னை மன்னிச்சிடு என்னோட சுயநலத்துக்காக நான் ஆரம்பிச்சு வச்ச இந்த பிரச்சனை இதுவரை தொடர்ந்து இருக்கு நான் எவ்வளவு சுயநலமாக இருந்திருக்கேன்னு இப்போ ஒவ்வொரு நாளும் நான் உணர்ந்து கொண்டு இருக்கிறேன் நித்யா அவ சாகும்போது எனக்கு அவ்வளவு வலிச்சது..என்னால ஏத்துக்கவே முடியல ஒரு பொம்பளை பிள்ளையை பெத்த அம்மாவா எனக்கு அதை தாங்கிக்க முடியலை..ஆனால் இவங்கள மீறி என்னால எதுவும் செய்ய முடியல..
இவன் பண்ணுனதெல்லாம் தப்புன்னு தெரிஞ்சும் நான் இவன் கூட இருந்ததுக்கு காரணம் நான் வச்ச நேசம் ஆனால் அதெல்லாம் பொய்யா போனதுன்னு நித்யா செத்தப்போ எனக்கு தோணுச்சு அப்ப இருந்தே இவனுங்க மேல இருந்த மரியாதை சுத்தமா போயிடுச்சு ஆனால் எப்போ என் பொண்ணு இப்படி அசிங்கப்பட்டு நின்னாலோ அப்போ இவனுங்க இவனுக்கு பதவி வெறியும் பணமும் தான் முக்கியம்னு என் பொண்ணை அசிங்கப்படுத்தினார்களோ அப்பவே முடிவு பண்ணிட்டேன் அண்ணே நான் எவ்வளவு பெரிய தப்பு செஞ்சிருக்கேன்னு
யார் சொன்னதையும் கேட்காம நான் நடந்து கிட்டதுக்கு நம்ம குடும்பமே இப்போ சிதைஞ்சு போச்சு அதுக்கெல்லாம் காரணம் இவன் தான் அண்ணே நீ என்கூட பேச வேண்டாம் அண்ணே நான் தான் யார் பேச்சையும் கேட்கலையே இப்பவும் கேக்கல இத்தனை நாள் இவன் பேச்சைக் கேட்டதுக்கு எனக்கு நல்ல தண்டனை கிடைச்சிடுச்சு இதோ என்ன பாக்குற கையில என்ன அரிவாள் மனைனா அப்பனே மகனையும் சரமாரியா வெட்டி இருக்கேன்..
அவ்வளவு ஆத்திரம் இருந்துச்சு என்னோட மக இங்கே அசிங்கப்பட்டது பத்தாதுன்னு அவளை இங்க இழுத்துட்டு வந்து கொன்னு இவனுங்க மானத்தை காப்பாத்திக்க போறானுங்களாம் பாவி பயலுங்க..அவ இருக்கிற இடம் வேற அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு அவளை சும்மா விட மாட்டாங்க..
எனக்கு பயமா இருக்கு அவங்களை அப்படியே விட சொல்றீங்களா உங்களுக்கு ஒன்னு தெரியுமா என் பொண்ணு சுத்தமா தான் இருக்கா அவளுக்கு எதுவும் ஆகல அவளே தான் சொன்னா அண்ணே" என்று கலங்கி அவர் சிறு குழந்தை போல கூற ஒரு தமையனாய் அவருக்கு துடித்தது...
தங்கை மீது அவ்வளவு ஆத்திரம் இருந்தாலும் பேசக்கூடாது என்று இருந்தாலும் அவள் தன் வீடு தேடி வந்து நின்று தன்னிடம் அழுது கதறும் போது லேசாக துடித்தது என்னவோ உண்மைதான் அவர் மனம் பதறியது என்னவோ உண்மைதான் இருந்தும் அமைதி காத்தார்..
"என்னால தானே அவன் எல்லாம் வாழ்ந்துட்டு இருக்கான் அவனை அப்படி எல்லாம் விட்டு விட மாட்டேன் சாகலாம் இல்ல உசுரோட தான் இருக்காங்க என்னோட சொத்து அத்தனையும் வந்தாகணும்னு சொல்லிட்டு வந்து இருக்கேன்..அவனை அசிங்க படுத்தாமல் விட மாட்டேன்..அப்பா கிட்ட சொல்லி எப்படி எல்லாம் அடிச்சு புடுங்கினானோ அந்த சொத்து அவன் கையில இருக்கக் கூடாது..
எதுக்கு விட்டு வைக்கணும் சொல்லுங்க அதை வைச்சு இன்னும் எத்தனை அக்கிரமம் செய்ய இருக்காங்களோ?? எனக்கு இது எல்லாம் வேணும் அண்ணே எல்லாம் தப்புக்கு துணை போனதால் வந்தது" என்று அவர் கூற தன் தங்கை திருந்தியதை எண்ணி ரத்தினத்திற்கு உள்ளுக்குள் சந்தோஷம்தான் வந்தது..
காலம் கடந்து புத்தி வந்திருக்குது ,"அண்ணே இனி என்னோட வாழ்க்கை என் பொண்ணு கூட தான் இப்பவே அவனை விவாகரத்து பண்ண போறேன் இல்லேன்னா அவன் என் பொண்ணையும் கொன்னுடுவான் கழுத்துல இருக்குற தாலியெல்லாம் எரிஞ்சிட்டு தான் வந்து இருக்கேன் இதுக்கே அவன் தூக்குல தொங்கணும்" என்று வெறி பிடித்தவர் போல பேசினார் என்னதான் கிராமத்தில் வளர்ந்திருந்தவர்கள் அடக்கம் ஒடுக்கமாக இருப்பார்கள் என்று நினைத்தாலும் கிராமத்துப் பெண்களுக்கு இருக்கும் வீரம் சொல்லி மாளாது..
அப்படி இருக்க ஆக்ரோஷத்தோடு தான் காவேரி இருந்தார் இந்த விஷயத்தை நான் எப்பவோ பண்ணி இருக்கணும் இப்பதான் பண்றேன் என்னை ஏத்துப்பியா அண்ணே..உன் தங்கச்சியா வந்து இருக்கேன் அண்ணே அனாதையாக நிற்கிறேன் அண்ணே" என்று கூற அதை கேட்டவர் அதிர்ந்தார்..
மேலும் காவேரி,"நீ என்கிட்ட பேச மாட்டேன்னு எனக்கு தெரியும் நீ பேச வேண்டாம் உன் வீட்டு நாய்க்கு போடுற சோத்தை போடு நான் சாப்பிட்டு இங்கேயே காலம் முழுசும் வேலை செஞ்சு கிடந்துக்கிறேன் எனக்கு அதுல எல்லாம் அசிங்கம் இல்லை நான் செஞ்சதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் அப்படின்னு நினைச்சு வாழ்ந்து இருப்பேன் கண்ட நாய்கிட்ட எல்லாம் அடி வாங்கி சாகறதுக்கு உன் கையால ஒரு துளி விஷத்தை சாப்பிட்டு செத்துப் போயிடுவேன் அந்த அளவுக்கு நொந்து போயிட்டேன் இவர்களை இப்படியே விடக்கூடாது அண்ணே.. தயவு செய்து என் பொண்ணை காப்பாத்து அண்ணே அவளை ஏதாவது அவனுங்க பண்ணிடுவாங்களோ ன்னு பயமா இருக்கு அண்ணே..நான் பண்ணின எதையும் மனசில் வைச்சுக்காதே அண்ணே" என்று கெஞ்சி கூற அதைக் கேட்டவர் அதற்கு மேலும் தன் தங்கையை வருத்தப்பட வைக்க நினைக்கவில்லை..
தன் தங்கை அருகே சென்றவர் கைகளை விரிக்க பாந்தமாக அந்த தங்கை தன் அண்ணனின் மார்பில் சரிந்து கதறி அழுதார் அவர் கண்ணிலும் கண்ணீர் வந்தது.. பிறகு தன் தங்கையாக மட்டும் வந்திருக்கும் காவிரியை தன் வீட்டிற்குள் அழைத்து சென்றார் ரத்தினம்...
அதே நேரம் ஆங்காங்கே வெட்டு குத்து பட்டவர்கள் ஊரார் உதவியோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அங்கு அவர்களுக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்தது பெரிதாக அடிப்பட வில்லை என்றாலும் ஆங்காங்கே வெட்டுக்குத்துகள் இருந்தது என்னவோ உண்மைதான் அதற்கெல்லாம் சிகிச்சை மேற்கொண்டு இருக்க உலகநாதன் மற்றும் மகனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை ..ஊரார் முன்னிலையில் மேலும் அசிங்கபட்டனர் அதை அவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை..
கண்மணியும் அவர்களை அசிங்கப்படுத்தி சென்று விட்டால் போதாது என்று காவேரி இத்தனை நாள் அமைதியாக இருந்துவிட்டு இன்று கொதித்து எழுந்து ஊரார் முன்னிலையில் தங்களை அசிங்கப்படுத்தி விட்டாரே இதற்கு மேலும் என்னதான் நடக்க இருக்கிறது என்று உலக நாதனை நினைக்க வைத்து விட்டார் காவேரி..
ஆனால் என்னதான் நடந்தாலும் இன்னும் திருந்தும் எண்ணம் மட்டும் அப்பா மகனுக்கு இல்லை என்று தான் கூற வேண்டும் மேலும் பழிவாங்க வேண்டும் இவர்கள் யாரும் உயிரோடு இருக்கக் கூடாது என்ற எண்ணம் மட்டும் தெள்ளத் தெளிவாக இருவர் மனதுக்குள்ளும் இருந்தது..
அதன் வெளிப்பாட்டில் போனை எடுத்த தினகரன் நேராக தன் தங்கையின் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த அந்த ரௌடி கும்பலுக்கு அவளை எங்கு பார்த்தாலும் சரமாரியாக வெட்டி போட கூறிவிட்டான்...
பிறகு தன் தந்தையை பார்த்தவன் ,"அப்பா ஆம்பள முன்னாடி பொம்பள ஜெயிச்சானு ஒரு சரித்திரம் இருக்க கூடாது நான் அவளை கொன்னுட்டு அடுத்த நிமிஷம் அம்மாவையும் போட்டு தள்ளிடுவேன் அப்போ தான் என்னோட வெறி அடங்கும்" என்று கூற உலகநாதன் எதுவுமே பேசாமல் ,"அதை செய்" என்று கூறினார்..
