இராட்சதன் 34
அத்தியாயம் : 34
"ஃபோன்ல யாரு??" என உலகநாதன் கேட்டு கொண்டு போனின் ரிசிவரை பிடுங்கி காதில் வைக்க அவரோ அதிர்ந்து விட்டார்..அதற்குள் தன் தந்தையின் குரலை கேட்ட அவளோ அடுத்த நொடி போனை வைத்து விட்டாள்..
அவர் ஹலோ என்க மறுமுனையில் அவருடைய சத்தத்தை கேட்டவுடன் ஃபோன் துண்டிக்கப்பட்டு இருந்தது...காவேரி மனம் முழுவதும் தன் மகள் இறக்கவில்லை என்பதிலேயே குறியாக இருக்க அவசரமாக இருந்தாலும் தன் மகள் கடைசியாக கூறிய ஒரு வார்த்தையில் ஒரு தாயாக தன் மகளை எண்ணி பெருமிதம் கொண்டார்..
அந்தப் பெண்ணின் உடலையும் கற்பையும் வைத்து என்னென்ன பேச்சுகள் எல்லாம் பேசினார்கள் பெற்ற தந்தை என்று கூட பாராமல் என்னென்ன வார்த்தை எல்லாம் விட்டார்கள் அதுமட்டுமா என்ன அவள் சென்ற பின் காவேரியை நிதம் நிதம் அடித்து துன்புறுத்தி இப்பொழுது கூட ஒரு பக்கமாக அவருடைய முகம் வீங்கித்தான் இருக்கிறது இந்த அடி எல்லாம் எதற்காக காவேரி பொறுத்துக் கொண்டார் எல்லாம் அவருடைய மகளுக்காக இன்று அந்த மகள் தான் தூய்மையாக தான் இருக்கிறேன் தன் வயிற்றில் எந்த குழந்தையும் இல்லை என்று கூறியதும் அவர் அடைந்த சந்தோஷத்திற்கும் நிம்மதிக்கும் அளவே இல்லை ஆனால் இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் தன் கணவனையும் தன் மகனையும் எண்ணி ஆத்திரம் கொண்டார் காவேரி..
இவர்களின் ஆணவத்திற்கும் அகம்பாவத்திற்கும் தொடக்க புள்ளி குறித்தது என்னவோ காவேரி தானே!! காவேரி அன்று காதல் என்ற வலையில் விழாமல் இருந்திருந்தால் இப்பொழுது எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்காதே தன் அண்ணன் மகள் உயிரை மாய்த்து கொண்டிருக்க மாட்டாள் தன் மகளை உயிரோடு இவர்கள் கொண்டு இருக்க மாட்டார்கள் எல்லாம் நான் செய்த தவறு தான் காரணம் திருமணத்திற்கு பிறகு இவன் இப்படிப்பட்டவன் தான் தெரிந்தும் இவனோடு வாழ்க்கை வாழ்ந்த என்னை தான் சொல்ல வேண்டும் என கண்ணை கட்டிய பிறகு அவர் சூரிய நமஸ்காரத்திற்கு துணிந்தார் காவேரி.
ஆம் இப்பொழுதுதான் அவருக்கு சுய உணர்வு வந்திருக்கிறது காலம் கடந்து வந்த உணர்வு அது இருந்தாலும் பரவாயில்லை மகள் இனியாவது நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் வேரூன்றி இருக்கிறது..
"என்ன மலைச்சு போய் நின்னுட்டு இருக்க யார் பேசினா ஃபோன்ல???" என அழுத்தி அவர் கேட்டார் ஏனெனில் ஃபோனில் இவர்கள் உரையாடி கொண்டு இருக்கும் போதே அவர் நுழைந்து இருந்தார்... அதை கேட்டுக் கொண்டே தான் உலகநாதன் வந்தார் போனை பிடுங்கவும் செய்தார் அதற்குள் போன் துண்டிக்கப்பட கோபம் எல்லாம் மீண்டும் தன் மனைவி மீது போனது..
"என்னடி நான் கேட்டுகிட்டே இருக்கேன் சிலை மாதிரி நின்னுகிட்டு இருக்க அப்போ நான் நெனச்சது தான் சரி அப்படித்தானே அந்த எழவெடுத்த சிறுக்கியை நீதான் இந்த வீட்டை விட்டு அனுப்பி வைத்திருக்க ஆத்தாளும் மகளும் சேர்ந்துக்கிட்டு நடத்துன நாடகம் தான் இது அப்படித்தானே" என்று ஆவேசமாக கேட்டார் அவர்..
அதைக் கேட்ட காவேரியோ," ஆமாம் நான் தான் அனுப்பி வைச்சேன் அதுக்கு என்ன இப்போ??? இப்போ பேசினது கூட அவ தான் உன்னால என்ன பண்ண முடியும்" என்றார் காவேரி
"என்ன தைரியம் இருந்தா நீ இந்த வேலைய பார்த்திருப்ப அப்போ உனக்கு உன்னை கட்டின புருஷன் மானம் பெருசில்ல அந்த ஈனச் சிறுக்கியை காப்பாத்தணும் அதுதான் உனக்கு முக்கியமான விஷயம் அப்படித்தானடி" என்று கொந்தளித்து அவரின் சிகையை பிடித்து இழுத்து கேட்க காவேரிக்கு வலித்தது இருந்தாலும் திடமாக அவர் இருந்தார்..
"அது எல்லாம் மானம் ரோஷம் இருக்கிறவன் பேச வேண்டிய பேச்சு நீ பேசக்கூடாது சொத்துக்குக்காக தானே என்னை கட்டிக்கிட்ட அது தெரியாத மடச்சி மாதிரி தானே நானும் உன் கூட வாழ்ந்தேன் நீ செஞ்சதெல்லாம் பொறுத்து போனேன்.. ஆனால் இனி பொறுத்துப் போக வேண்டிய அவசியம் எனக்கில்லை யா நான் அடி வாங்கிட்டு இருக்க மாதிரி என் பொண்ணையும் இத நரகத்தில் இருக்க சொல்றியா?? அதனாலதான் அனுப்பி வச்சேன்" என்று கூற அதைக் கேட்ட உலகநாதன் தன் மனைவி தனக்கு எதிராக திரும்புவதை விரும்பாத அவரோ ஓங்கி அடிக்க
"இனி என் மேல கையை வச்ச சும்மா இருக்க மாட்டேன் பார்த்துக்கோ" என்று கொந்தளித்து கூறினார்..அவருக்கு தன் மகள் உத்தமி என்ற வார்த்தையே போதுமானதாக இருந்தது..
"என்னடி பண்ணுவ என்ன பண்ணுவ உன் பொண்ணு கண்டவன் கூட படுத்துட்டு வருவா அதை வேடிக்கை பார்த்துட்டு இருக்க சொல்றியா? நீ அவளுக்கு துணையா இருந்து அவளை வழி அனுப்பி வைப்பியா? இப்ப எவன் கூட டி இருக்கா அவ??? இதனால தான் இந்த ஊருக்குள்ள என்னை ஒரு பையன் மதிக்கல இதுக்கெல்லாம் காரணம் யாரு நீ தானே" என்று கூற
அதுவரை இழுத்து பிடித்து வைத்து இருந்த பொறுமை காற்றில் பறக்க,"உன் மானம் போனது உன்னோட நடத்தை தான் காரணம் என் பொண்ணு காரணம் இல்லை டா மட பயலே.. உன்னை மாதிரியும் கேடுகெட்ட உன்னோட மகன் மாதிரி கிடையாதுடா என் பொண்ணு.. அவ உத்தமி டா சுத்தமானவ.. பத்திர மாற்று தங்கம் டா அவ...உனக்கு என்ன தெரியும் அவளை பத்தி???
சும்மா தான் கேட்கிறேன் அவ நீ பெத்த மக தானே ஒரு சின்ன அக்கறை கூட அவகிட்ட இல்லையே என்னமோ கெட்டு போய்ட்டு வந்துட்டான்னு சொல்லி அவளை அடிக்கிற மிதிக்கிற உதைக்கிற என்னென்னமோ பண்ணி கொடுமைப்படுத்தினாயே என் பொண்ணு நல்லவ அப்படின்னு நீ யோசிக்கவே இல்லையே ஏன்னா உன்னோட குணம் அப்படி.. கேடுகெட்ட குணம் நான் மட்டும் நல்லா இருக்கணும் அப்படிங்கிற சுயநலமான குணம் தான் உன்னுடையது..
நானும் உன் மேல ஆசைப்பட்டு நீ காதலிக்கிறேனு நினைச்சுத்தான் உன் கூட நான் அப்படி இருந்தேன்.. அதுக்காக என் குடும்பத்தை இழந்தேன் அப்போ எல்லாம் நான் கவலைப்படல... உன் மேல நான் வெச்ச ஆசை என் கண்ணை மறைச்சிடுச்சு...
ஆனா இப்போ கவலைப்பட்டுட்டு இருக்கேன்.. நான் ஏன் அப்படி பண்ணினேன்னு இப்போ கவலைப்படுறேன் என்னோட நிலைமை என் பொண்ணுக்கு வரக்கூடாது அதுக்காகத்தான் நான் அவளை அனுப்பி வச்சேன் என்ன சொன்ன என் பொண்ணு இப்போ யார் கூட படுத்துட்டு இருக்கானா கேட்ட???
அவ சுத்தமான சொக்கத்தங்கம் டா அவளுக்கு எதுவும் நடக்கல உன்னை அசிங்கப்படுத்த தான் அவன் வந்து ஊர் முன்னாடி உன்னை அசிங்கப்படுத்திட்டு போயிருக்கான் அந்த சூர்ய பிரகாஷ்..அவளுக்கும் அவனுக்கும் இடையில் ஒன்னும் நடக்கல..
அவளுடைய உடல்ல அவன் கை கூட படல என் பொண்ணு இப்போ வரைக்கும் சுத்தமா தான் இருக்கா எனக்கே இப்பதான் தெரியும் என் மனசு இப்ப நிறைஞ்சு போச்சு நான் தப்பான வழியில் வந்து இருந்தாலும் என் பொண்ணு தப்பா போகல என் பொண்ணு நல்லாத்தான் இருக்கா நீ சொன்ன மாதிரி கேடுகெட்டு போகலடா..
இப்போ உன்னோட முகர கட்டையை எங்க கொண்டு வைக்கப் போற சொல்லு பெத்த பொண்ணு தப்பே நடந்திருந்தாலும் என் பொண்ணை நாசம் பண்ணிட்டாங்க அவளுக்கு ஆதரவா நான் இருப்பேன் போனா போகட்டும் நான் இருக்கேனு சொல்ல அந்தப் புள்ள ஊருகாரவங்க மத்தியில எப்படி கதறி துடிச்சா அதையெல்லாம் வேடிக்கை தானே பார்த்துட்டு இருந்த...அப்போ உனக்கு கேட்க துப்பில்லை நீ எல்லாம் பேச வந்துட்ட??
அது எப்படி உனக்கும் உன்னோட மகனுக்கும் எந்த சமயம் பார்த்தாலும் படுக்கிற நினைப்பு தானே இருக்கும் பார்க்கிற பொண்ணுங்களை எல்லாம் கையைப் பிடித்து இழுக்கணும் தானே தோன்றும் அதை வைத்து மிரட்டி அவங்க சொத்தை ஆட்டைய போடலாம் தானே தோணும்.. இப்போ உங்க டெக்னிக்கை வச்சு ஒருத்தன் உங்க கண்ணுல விரலை விட்டு ஆட்டிட்டு போயிட்டான்..
நான் கூட நினைச்சேன் இது எல்லாம் நான் செஞ்ச பாவமோ அதனால் தான் என்னால என் வீட்டு பொம்பளப் பிள்ளைகள் எல்லாம் நாசமா போறாங்களோ நெனச்சேன் ஆனால் அப்படி இல்ல என் பொண்ணு நல்லா இருக்கா என்னோட பொண்ணோட மானத்தை வச்சு இங்க கூறு போட்டாங்க தான் ஆனால் இப்போ அவ சுத்தமா இருக்கா டா நான் நெஞ்சை நிமிர்த்திட்டு கர்வமா நிற்பேன் உன்னால ஒன்னும் பண்ண முடியாது" என கூற
அவரின் ஒவ்வொரு வார்த்தையும் உலகநாதன் நெஞ்சில் ஈட்டி போல குத்த, மகள் மேல் தவறு இல்லை என்று நினைக்க அவருக்கு சந்தோஷம் எல்லாம் வரவில்லை மாறாக அந்த சூரிய பிரகாஷ் மீது ஆத்திரம் தான் வந்தது அவன் தன்னை வேண்டுமென்றே பிளான் செய்து தன்னை ஊரார் மத்தியில் அவமானப்படுத்தி விட்டான் இதற்கு தன் மகளும் உடந்தை என்று எண்ணி கொண்டார்..அந்த கோபமும் தன் மனைவி மீது திரும்பியது..
