இராட்சதன் 33
அத்தியாயம் : 33
என்ன இவன் எனக்கு என்னமோ இவன் தொடாததால் ஏக்கம் போல பேசிக் கொண்டிருக்கிறான் என்று அவள் திகைத்து அவனைப் பார்த்து ,"எனக்கு ஒன்னும் அப்படி எல்லாம் இல்ல" என்று கூற ,"பார்த்தா அப்படி தெரியல இவ்வளவு நாள் உன்னை சும்மா விட்டுடலாம் அப்படி தான் நினைச்சேன் ஆனா இனி உன்னை விடுற ஐடியா இல்ல அதுனால இடத்தை காலி பண்ணிட்டு தூங்கற வழியை பார்" என்றவன் பேச்சு முடிந்தது இடத்தை காலி செய் என்பது போல நிற்க அவளோ அதிர்ந்த நிலையிலேயே இருந்தவள் விட்டால் போதும் என பதறி அவ்விடத்தை விட்டு காலி செய்தாள்..
மனம் பாரமாக இருந்ததால் படுக்கைக்கு வந்த பின்பும் அவள் மனம் பல விசயங்களை யோசித்து கொண்டு இருந்தாள் அப்படியே எப்போது உறங்கி போனாள் என அவளுக்கு தெரியவில்லை..
காலையில் கண் விழித்து பார்த்தவள் சமயத்தை பார்க்க மணி எட்டை காட்ட இவ்வளவு நேரம் தூங்கிட்டேனா ஐயோ என வேகமாக எழுந்தாள்..
தன் கடமைகளை எல்லாம் செய்தவள் ரெடியாகி வரும் போது அவளை அழைத்து செல்லும் கார் இல்லை என்பதை விட அவன் இல்லை என்று தான் கூற வேண்டும்..
எப்படி செல்வது என தெரியாமல் அவள் தடுமாறி முழிக்க அதற்குள் ஒரு கார் வந்து நின்றது..காரோட்டி தான் வந்து இருக்க அவளை கண்டதும்," நீங்க ரெடி ஆகிட்டிங்கன்னா உங்களை சார் சைட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னார்" என கூற அவளோ சரி என கூறி அந்த காரில் ஏறி சென்று விட்டாள்..
அங்கு செல்லும் வழி எல்லாம் மழையாக இருக்க அவள் மனம் ஏனோ இங்கு வந்த இத்தனை நாள்களுக்கு பிறகு அவளுடைய அம்மாவின் குரலை கேட்க வேண்டும் என அவளுக்கு தோன்றியது..
அவரிடம் பேச வேண்டும் என அவளுக்கு தோன்றியது.. அதை நினைத்து கொண்டே அவள் வர மிக சரியாக சைட் வந்ததும் அவளும் இறங்கி கொள்ளவும் மழை வெளுத்து வாங்கியது..அவளோ சைட்டுக்குள் ஓடி வருவதற்குள் நனைந்து விட்டாள்..
நடுங்கிய படியே அவள் நடந்து வர அவளுக்கு எதிரே விக்னேஷ் நின்று கொண்டு இருந்தான்.. அவளை கிண்டலாக பார்த்து சிரித்தான்..
அவளோ அவன் எதுக்கு சிரிக்கிறான் என புரியாமல் ஓடி வர,
அவளை எதிர் பார்த்து காத்திருந்தவன் போல அவன் நின்று கொண்டிருக்க அவளை பார்த்ததும்," என்ன நனைஞ்சிட்டியா???" என நக்கலாக கேட்க
அவளோ ,"ஆமாம் செம்ம மழை காலையில் இருந்து எல்லாமே சொதப்பலா இருக்கு" என பற்கள் நடுங்க அவள் கூற
அதை பார்த்தவன் மேலும் சிரித்து,"நீ இருக்கிற ஊர் ஊட்டி எப்போ மழை வரும் குளிர் வரும் வெயில் வரும்னு சொல்ல முடியாது..ஊருக்குத் தகுந்த மாதிரி உடை அணிய வேண்டாமா???" என்று கூறியவன் அவன் அணிந்திருந்த ஜாக்கெட்டை அவிழ்த்து அவளிடம் கொடுக்க அவளோ அவனை ஒரு மாதிரியாக பார்த்தாள்..
"அதுதான் நடுங்கிட்டு இருக்கியே இந்த உடையை போட்டுக்கோ..ஒன்னும் தப்பு இல்லை புதிய ஜாக்கெட் தான்" என்று கூற அவளோ ,"வேண்டாம். அப்போ உங்களுக்கு???" என்று மறுத்தாள்..
அவளுக்கு கண்டிப்பாக ஜாக்கெட் வேண்டும் என்று இருந்தது வரும் அவசரத்தில் அவள் தான் மறந்துவிட்டு வந்துவிட்டாள் இப்போது அனுபவிக்கிறாள் அப்படி இருக்க," ஹே லூசு எனக்கு இங்க வேறொரு ஜாக்கெட் இருக்கு நான் அதை போட்டுக்கிறேன் நீ இதை போட்டுக்கோ" என்று உண்மையான அக்கறையோடு கூற அவளோ மறக்காமல் அதை வாங்கி அணிந்து கொண்டாள்..
இருந்தும் அவளுடைய நடுக்கம் குறைவது போல இல்லை உடனே விக்னேஷ் அங்கு இருந்த காபி போடும் மெஷினில் இருந்து ஒரு சூடான காபி தயாரித்து அவள் கையில் கொடுத்து," என்னோட காபி கொஞ்சம் சுமாரான தான் இருக்கும்.. இதை சூடா குடிச்சிட்டு வேலையை பாரு நான் ஒர்க்கர்ஸ் என்ன பண்றாங்கன்னு பார்த்துட்டு வந்துடுறேன்..சூர்யா அந்த பக்கமா தான் இருக்கான் நான் அவனை மேனேஜ் பண்ணுகிறேன் நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வேலையை பார்" என்று சிரித்தபடி கூற அவளுக்கு ஏனோ அவனின் சிறு செயல் கண்ணீரை வரவழைத்தது..
ஏனெனில் நேற்றில் இருந்து அவள் அவளாகவே இல்லை அவள் மனம் உழன்று கொண்டே இருந்தது வயிற்றில் குழந்தை இல்லை என்று அறிந்ததுமே அவள் உடைந்து போய்விட்டாள் அப்படி இருக்க, அவள் குடும்பம் முதல் அவன் வரை எல்லோரும் அவளை ஒரு மனுஷியாக மதிக்கவில்லை அப்படி இருக்க இவன் சிறு புன்னகையோடு ஆறுதலாக பேசவும் அவளுக்கு கண்ணீர் வந்தது அதை அவன் கவனிக்காமல் அவள் மறைத்து வைத்து கொண்டாள்.. ஆனால் இதை எல்லாம் தூரத்தில் இருந்து சூர்ய பிரகாஷ் பார்த்து கொண்டு இருந்தான் என்று தான் கூற வேண்டும்..
பிறகு அவன் தந்த காபியை குடித்து கொண்டே இருந்தவள் மனதில் மெல்ல புத்துணர்ச்சி வர உடனே அங்கு இருந்த லேண்ட் லைன் போனை எடுத்து தன் அம்மாவிடம் தான் இருக்கும் விஷயத்தை கூறலாம் என எண்ணி அவள் வீட்டுக்கு எண்ணுக்கு முதன் முறையாக அழைத்தாள்..
அவள் மனம் எல்லாம் படபடப்பாக தான் இருந்தது.. அம்மா அல்லமால் வேறு யாராவது போனை எடுத்து விடுவார்களோ என பயந்து கொண்டே இருந்தாள்..
சமயம் பார்க்கும்பொழுது அவளுடைய தந்தையும் தமையனும் இல்லாத நேரம்தான் ஏதோ ஒரு தைரியத்தில் போனை செய்து விட்டாள் அவர்களின் குரல் கேட்டால் போனை வைத்துவிடலாம் என்ற முடிவில் தான் அவள் இருந்தாள்..
ஆனால் நல்ல வேளையாக அவளுடைய அம்மா காய்கறி நறுக்கி கொண்டு இருந்தவர் ஃபோன் சத்தம் கேட்டு போனை எடுக்க அவர் ஹலோ என்கவும் அவருடைய குரலை கேட்டதும் அவளுக்கு அழுகை வந்தது..
அதற்குள் காவேரி ஹலோ என இரண்டு மூன்று முறை கூறிவிட்டார்..அவர் மனதிலும் ஏதாவது ஓர் முறை தன்னை மகள் அழைத்து விட மாட்டாளா என்று தான் அவர் வேதனையோடு இருக்க, "அம்மா நான் தான் கண்மணி பேசுறேன்" என்று கூற கண்மணியின் குரலை கேட்டதும் காவேரி உடைந்து விட்டார்..
சுற்று முற்றும் திரும்பி பார்த்து ,"நான் பெத்த சாமி எப்படி கண்ணு இருக்க நல்லா இருக்கியா எங்க இருக்க எனக்கு எல்லாம் மனசே இல்ல நீ எங்கே போனயோ என்ன ஆனயோன்னு தவிச்சுக்கிட்டே இருந்தேன் ஏதோ ஒரு தைரியத்துல உன்னை அனுப்பிட்டேன் ஆனால் மனசு கடந்து அடிச்சுகிட்டே இருந்தது" என்று அவர் கண்ணீரோடு கூற
அதைக் கேட்டு அவள் மேலும் அழ ,"குழந்தை எப்படி இருக்கு நீ எப்படி இருக்க நல்லா இருக்கியா பாதுகாப்பா இருக்கியா??? எங்கே இருக்க???" என அவர் கேள்விகளை அடுக்கி கொண்டே போக
"அம்மா நான் நல்லா இருக்கேன்..பாதுகாப்பா இருக்கேன்..எனக்கு ஒரு வேலை கிடைச்சு இருக்கு நீ எப்படி இருக்க அவங்க உன்னை கொடுமைப்படுத்துறாங்களா???" என்க
அதைக் கேட்ட காவேரி ,"அவங்க எப்ப மனுஷங்களா இருந்திருக்காங்க அதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீ கவலையை விடு உன்னோட வயித்துல வளர குழந்தை எப்படி இருக்கு ஹாஸ்பிடல் போனியா அன்னைக்கு அவசரத்துல எதுவுமே செய்ய முடியாமல் போயிடுச்சு" என்று அவர் கூற
அதை கேட்ட அவளோ மேலும் உடைந்து ,"அம்மா உன் நான் கெட்டுப் போகல மா என் வயித்தில் எந்த குழந்தையும் இல்லை எதுவும் இல்லை..அன்னிக்கு வந்தது சாப்பிட்டது ஒத்துக்காமல் வந்த வாந்தி.." என கூற,
" என்ன சொல்ற??? உனக்கு எப்படி டி தெரியும்??? அப்போ அன்னிக்கு அந்த சூர்ய பிரகாஷ் பேசினது எல்லாம்??" என அதிர்ந்து கேட்க
" அது எல்லாம் பொய் மா..நான் நம்ம குடும்ப மானத்தை கெடுக்கல" என விம்பி அவள் கூற அதை கேட்டு காவேரி அதிர்ந்து கேட்கவும் மிக சரியாக அந்த நொடி காவேரியின் ஃபோன் பின்னால் இருந்து பறிக்கப்பட்டது...பின்னால் ருத்ர மூர்த்தியாக உலகநாதன் நின்று கொண்டு இருந்தார்..
