வர்ணம் 9
அத்தியாயம் : 9
நிரஞ்சன் அப்படித்தான் அவனுடைய கோபம் எல்லை மீறும் பொழுது அவன் என்ன பேசுகிறான் என அவனுக்கே தெரியாது அதைவிட அவன் ஒரு பேராசிரியராக இருந்தாலும் அவன் கொஞ்சம் வேற மாதிரி.. அப்படியே அடங்கி ஒடுங்கி போகும் ரகம் எல்லாம் இல்லை அன்பாக கூறும் இடத்தில் அன்பாக கூறுவான் அடாவடி செய்யும் இடத்தில் அடாவடியும் இருக்கும் எல்லா உணர்வுகளையும் முகத்துக்கு நேராக பிரதிபலிக்கும் ஒருவன் அவ்வளவுதான் நிரஞ்சன்..
அவனின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு நடுவே அவன் கொஞ்சம் வேறு விதமாக மாறி இருக்கிறான்..
நிரஞ்சன் யாரையும் மதிக்காமல் சென்றது அனைவருக்கும் வருத்தத்தை கொடுக்க, சாந்தி கருணை அம்மாள் அருகே சென்று, "என்னம்மா தம்பி அவங்க பாட்டுக்கு போய்ட்டாங்க அப்போ என் பொண்ணோட கதி?" என இந்த கல்யாண குளறுபடியில் தானும் ஒரு அங்கம் வகித்து தன் மகளின் வாழ்க்கையை கெடுத்து விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியில் அவர் கேட்க,
கலையரசன் இங்கு நடக்கும் கூத்தை எல்லாம் பார்த்து, "உண்மையை சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்தி இருக்கலாம் பாவம் அந்த அம்மாவும் நிம்மதியா இருந்து இருப்பாங்க இப்ப பாரு பொண்ணை கொடுத்துட்டு அந்த அம்மா வருத்தப்படுவதை" என பாக்கியத்தை பார்த்து கடிய, அவரோ என்ன சொல்வது ஏது சொல்வது என தெரியாமல் கையை பிசைந்து கொண்டு இருந்தார்..
"மாப்பிள்ளை ஏன் அவளை திட்றீங்க? நான் தானே சாந்தியை கேட்டது நான் பேசிக்கிறேன் மாப்பிள்ளை" என்றவர் கருணை அம்மாள் சாந்தியை பார்த்து, "சாந்தி நான் உன்கிட்ட எந்த பொய்யும் சொல்லல தானே உண்மையை சொல்லி தானே கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன் அவனுக்கு இதுல கொஞ்சம் விருப்பம் இல்ல ஆனால் எல்லாம் சரியாகிவிடும் என்னை மட்டும் நம்பு நீ எதை நினைத்து பயப்படாதே என் உயிரை விட மேலாக நான் உன் பொண்ணை பார்த்துக்கிறேன்" என்று கருணை அம்மாள் கூறினார்..
அதை கேட்டு சிறு தயக்கமாக இருந்தாலும், "சரி மா உங்களை நம்பி என் பொண்ணை ஒப்படைக்கிறேன்..இனி நான் அவளை பத்தி கவலைப்பட மாட்டேன்" என்று கூறி விட்டார்..
பாக்கியத்துக்கு மிகவும் வருத்தமாக இருந்தது சுயநலமாக இருந்து விட்டோமோ என அவர் வருந்தினார்.. வீட்டின் பெரிய மனிதனாக முத்தையன், "இதெல்லாம் சரியா வருமான்னு எனக்கு தெரியல கருணை அம்மா" என்க
அவரோ, "சரியாக வரும்ங்க அந்த ஜோசியக்காரர் சொன்னதை மறந்துட்டீங்களா?"
"ஜோசியர் ஆயிரம் சொல்லுவார் அதெல்லாம் நடக்கவா போகுது இவன் எப்போ மனம் திருந்தி இந்த பொண்ணு கூட வாழறது எனக்கு எதுவும் விளங்கல? நீ உன் பேரனை பத்தி மட்டும் யோசனை பண்ணிகிட்டு இருக்க நான் இந்த பொண்ணை பத்தியும் யோசனை பண்ணிட்டு இருக்க" என்று கூற அதை கேட்ட கருணை அம்மாள் தலைகுனிய, தன்னை பற்றி யோசிக்க இங்கு ஒரு ஜீவன் உள்ளதே என எண்ணிய கயல் இவர்களின் ஆதங்கத்தை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கயலுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது..
எதிர்பாரா இந்த திருமணமும் அவன் அணிவித்த தாலி வேறு அவள் கழுத்தில் மிகவும் பாரமாக இருப்பது போல தோன்றியது.. தன் அம்மாவுக்காக அவள் செய்த காரியம் என்றாலும் தனக்கு ஆறுதலுக்காக தன் அம்மாவையே கட்டி அணைத்து தனக்கான ஆறுதலை தேடி கொண்டாள் கயல்..அது வேறு சாந்திக்கு மேலும் கஷ்டத்தை கொடுத்தது..
கயல் ஒரு ஐந்து நிமிடம் தன் தாயை அணைத்துக் கொண்டு அழுக, "நீயேன் அழுதுட்டு இருக்க கயல்? நீ எந்த தப்பும் பண்ணல நான் தான் உன்னை இழுத்து விட்டேன் நான் தான் உண்மையில் அழனும்" என கூற, அதைக் கேட்ட பாக்கியம், "இதோ பாருங்க சாந்தி நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க நான் பார்த்துக்கிறேன் உங்க பொண்ணையும் என் பொண்ணு மாதிரி நான் பார்த்துப்பேன்" என்று கூற அதன் பிறகு அனைவரும் ஒரு வழியாக சமாதானம் ஆகினர்.
பிறகு கயல் தன் அம்மாவை பார்த்து, "அம்மா இங்கே இருந்தா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு நான் ஹாஸ்டல் போறேன்" என்று கூற,
பாக்கியம் அதிர்ந்து, "என்னது ஹாஸ்டல் போறியா? வீட்டுக்கு வா மா வீட்டிலிருந்து படிக்கப் போ" என்று கூற, "இல்லைங்க நான் ஹாஸ்டல் இருந்தே படிச்சுக்குறேன் வீட்டுக்கு வந்தா சரி வராது" என்று கூற அதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்தனர்..
அதைக் கேட்ட கருணை அம்மாள் ஆளுக்கு ஒரு திசையில் இருந்தால் சரி வராது என எண்ணி, "கல்யாணம் பண்ணிட்டு நீ ஹாஸ்டல்ல இருக்கிறத ஒத்துக்க முடியாது இரண்டு பேருக்கும் பிடிக்காத கல்யாணமாக இருக்கலாம்..ஆனால் நீ வீட்டில் இருந்து தான் காலேஜ் போகணும் அது தான் சரி..உன் அம்மாவுக்கு வாக்கு நான் கொடுத்து இருக்கேன் உன் வாழ்க்கை நல்லா இருக்கும்னு அதுனால நீ நான் சொல்றதை தான் நீ செய்யணும்" என அவர் உறுதியாக கூற கயலுக்கு இலேசாக கோபம் எட்டி பார்த்தது..
செய்தது தவறான செயல் இதில் வேறு நியாயம் பேசி கொண்டு இருக்கிறார்கள் என எண்ணி தன் அம்மாவை பார்க்க அவரோ பெரியவர்களை எதிர்த்து பேசவும் முடியாமல் மகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமோ இறைவா பாதிக்காமல் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு அவர் தன் மகளிடம், "அவங்க சொல்றதை செய் மா" என்க.. அவளுக்கு வேறு வழி இல்லாமல் போக பாக்கியத்துடன் கருணை அம்மாளும் கூடவே வந்தார்..
பாக்கியமும் தன் அம்மாவை பார்த்து,"நீங்களும் கொஞ்ச நாள் என்கூட இருங்க மா" என அழைத்தார்..அவர் அவருடைய அம்மாவின் தைரியத்தில் இதை எல்லாம் செய்து விட்டார் ஆனால் நிலைமை சரியாகும் வரை அவருடைய அம்மா அவருக்கு தேவையாக இருந்தது..
அதனால் அனைவரும் குடும்பமாக தான் சென்னை சென்றனர்..சாந்தி தனக்கு மனம் சரியில்லை பிறகு வருவதாக கூறி மறுத்து விட முத்தையன் இங்கு கொஞ்சம் வேலைகள் இருப்பதாக கூறி அவரும் வரவில்லை கருணை அம்மாள், பாக்கியம், கயல், கலையரசன் இவர்கள் மட்டும் சென்னை நோக்கி பயணம் ஆகினர்...
சாந்திக்கு மகளை பிரிவது வருத்தத்தை கொடுத்தாலும் மகள் ஹாஸ்டலில் உள்ளது போல நினைத்துக் கொள்ளலாம் போகப் போக பழகிவிடும் என நினைத்து கொண்டார்.. முத்தையனும் சாந்தியிடம், "நாங்க எல்லாம் இருக்கோம்ல நாங்க பாத்துக்குறோம் நீ பண்ணது பெரிய உதவிமா உன்னுடைய மனசு நோகுற மாதிரி எதுவும் நடக்காது" என வாக்கும் கொடுத்தார் அதனால் அதில் கொஞ்சம் சமாதானமானார் சாந்தி...
சென்னை சென்றவன் நேராக அவனுடைய பிளாட்டுக்கு சென்றான்.. ஆம் அவனும், ஜானகியும் ஆசையாக ஒரு வருடம் வாழ்ந்த பிளாட் அவளின் நினைவாக அதை அப்படியே அவன் வைத்திருந்தான்..அங்கு நுழையும் இப்போதே அவளின் நினைவுகள் அவனை தாக்கிக் கொண்டிருக்க அவளின் புகைப்படத்தை பார்த்தவன், "ஏண்டி போனவ என்னையும் சேர்த்து கொண்டு போலாம் இல்ல.. தேவையில்லாமல் ஒரு சத்தியத்தையும் என் பிள்ளையை பார்க்க முடியாமல் தவிச்சுக்கிட்டு இருக்கேன்.. உன் மேல எவ்வளவு ஆசையா இருந்தேனோ அதே அளவு என்னை வெறுக்க வச்சிட்டு இருக்க ஜானகி.. இப்போ என்னுடைய தேவைக்காக விருப்பமே இல்லாம ஒருத்தவங்க வாழ்க்கையை வேற கெடுத்து இருக்கேன்.. அவங்க ஏற்கனவே வாழ்க்கையை இழந்துட்டு இரண்டாவது வாழ்க்கையாவது நல்லபடியா கிடைக்கும் அப்படிங்கிற நம்பிக்கையில் வந்து இருப்பாங்க.. அந்த வாழ்க்கையும் நான் கெடுத்து இருக்கேன் இதுக்கெல்லாம் காரணம் நீ தான் டி ஏன் டி என்னை கொல்ற?" என கூறியவன் அப்படியே படுத்து உறங்கி விட்டான்..
