வர்ணம் 28
அத்தியாயம் - 28
"ஓ அது தான் விசயமா?" என மார்பில் கையை கட்டி, "அப்போ அவன் ராத்திரி உன்னை ஃபோனில் கூப்பிடுவான்.. உனக்கு முத்தம் கொடுக்கணும்னு மெசேஜ் அனுப்புவான்..உன்னை படுக்க வா டின்னு கூப்பிடுவான்..கட்டி பிடிக்கணும்னு சொல்வான்.. அவனோட படுக்கை நீ வர காத்துகிட்டு இருக்காம் போறியா? நேத்து என்னமோ முத்தம் கொடுக்க காத்துகிட்டு இருந்தானாம் சொல்றான் இதை எல்லாம் என்னை வேடிக்கை பார்த்துட்டு இருக்க சொல்றியா டி? அந்த போன் இருக்கு அதனால தானே எல்லா விஷயமும் நடக்குது அதான் ஒடைச்சேன்" என கூற அதை கேட்டவளுக்கு கிஷோரின் மீது ஆத்திரம் வந்தது.. எத்தனை ஆபாசமான வார்த்தைகளை அவன் பேசி இருக்கிறான் என நினைத்தாள்..அதிலும் நிரஞ்சன் வாய் வழியாக கேட்க அவளுக்கே ஒரு மாதிரியாக இருந்தது..
கிஷோர் எதற்கு அத்துமீறி மெசேஜ் அனுப்புகிறான் என்று எண்ணினாலும் நிரஞ்சனை பார்த்து, "இதோ பாருங்க சார் நான் நேத்து பண்ணினது தப்புதான் தப்பு இல்லைன்னு சொல்ல வரல.. அவன் அனுப்பின மெசேஜும் தப்புதான் நான் இல்லைன்னு சொல்லல.. ஆனால் என்னுடைய போனை நீங்கள் உடைத்தது ரொம்ப தப்பு என்னுடைய பொருளை உடைக்க நீங்க யார்? நாங்க எல்லாம் உங்களை மாதிரி கிடையாது நினைச்சதும் ஒவ்வொரு பொருளை வாங்க? இதுவே எவ்வளவு கஷ்டப்பட்டு எங்க அம்மா வாங்கி கொடுத்தாங்கன்னு தெரியுமா? யாரை கேட்டு என் போனை உடைச்சீங்க அப்படி என்னை அடக்கும் அளவுக்கு உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு தான் என்ன? நீங்க ரொம்ப அதிகமா என்னோட வாழ்க்கைக்குள்ள நுழைஞ்சிட்டு வரீங்க நீங்க முன்னாடி சொன்னது ஒன்னு இப்ப செய்யறது ஒன்னு யார் சார் நீங்க எனக்கு?? நான் என்ன பண்ணினா உங்களுக்கு என்ன? என அவள் கோபமாக அவனை சீண்ட கேட்டாள்...
அவனுக்கே அது விடையில்லா கேள்வி தான் என்றாலும் அவளிடம் விட்டு கொடுக்காமல் ஒரு அடி அவள் பக்கமாக நெருங்கி நின்றவன் அவள் அருகே வந்து அவள் கழுத்தில் அவன் கட்டிய தாலியை தூக்கி அவள் கண் முன்னால் காட்டியவன், "நான் உன்னோட புருஷன் தாலி கட்டின புருஷன்" என அழுத்தமாக அவளை பார்த்து கூறினான்..
அதை கேட்ட அவளுக்கு திக்கென அந்த பதில் இருந்தாலும் அவன் முன்னே தோற்று விட கூடாது என்ற எண்ணத்தில், "அப்படித்தானே நீங்க என்னோட புருஷன் அப்படின்னா நான் உங்க பொண்டாட்டி தானே.. அப்போ இனிமேல் புருஷன் பொண்டாட்டியாகவே இருப்போம் ஓகே..எனக்கு இனி கிஷோர் வேண்டாம் நீங்க போதும் எனக்கு.. என்னோட போன் உடைஞ்சு போச்சு மை டியர் புருஷா ஒரு போன் நீங்க வாங்கி தந்தே ஆகணும் ஓகே" என்றவள் கீழே கிடந்த அந்த தலையணையை தூக்கிக் கொண்டு வந்து கட்டிலில் போட்டவள் கட்டிலின் மறுபக்கம் படுத்துக் கொண்டாள்..
அவள் பேசியதை கேட்டு அதிர்ந்த அவனோ, "ஏய் கீழே படுடி என்னால கீழே படுக்க முடியாது எனக்கு பேக் பெயின் வரும் மரியாதையா சொல்றேன் கீழே வா" என்க
அவளோ, "நான் தான் உங்க பொண்டாட்டி ஆச்சே பொண்டாட்டி பக்கத்துல படுக்க உங்களுக்கு என்ன கசக்குதா? வாங்க சார் வந்து படுங்க என் பிராண நாதா" என வேண்டும் என்று அவனை வெறுப்பேற்ற அவனும் அவள் நினைத்தது போல கடும் கோபத்தில் இருந்தவன், "வேணும்னே பிரச்சனை பண்ணாத அப்புறம் விபரீதமாக இருக்கும் சொல்லிட்டேன்" என எச்சரிக்கை செய்தான்..
"எனக்கு என்ன ஆனாலும் எனக்கு கவலை இல்லை என்னை பார்த்துக்க எனக்கு தாலி கட்டுன புருஷன் இதோ மலமாடு மாதிரி நின்னுட்டு இருக்கார்.. அவர் பார்த்துப் பார்.. பொண்டாட்டி மேல என்ன அக்கறை அவருக்கு இருக்கு தெரியுமா? பொண்டாட்டி வேண்டாம் பொண்டாட்டிக்கு ஒரு வாழ்க்கை கிடைக்கனும் ஆனால் பொண்டாட்டி யார்கிட்டேயும் பேச கூடாது.. பொண்டாட்டியோட காதலன் கூப்பிடக்கூடாது.. காதலன் பேசிடுவானோன்னு சொல்லி போனை உடைத்த மகான் அவர் அதனால என்னோட புருஷன் பார்த்துப்பார். நீங்க ஒன்னும் கவலைப்பட தேவையில்லை புரியுதா பிராண நாதா" என வேண்டுமென்றே சீண்டியவள் கண்களை மூடிக் கொண்டாள்..
அவளையும் அவளுடைய பேச்சையும் பார்த்து நிரஞ்சன் கடுப்பு ஆகி சரியான இம்சை என எண்ணியவன் நான் ஏன் கீழே படுக்கணும் என எண்ணி அவளுக்கு மறுபக்கம் வந்து படுத்து கொள்ள அவனை வெறுப்பேற்ற அவள் செய்ய அவன் வந்து அருகில் படுப்பான் என எதிர்பார்க்காத அவளுக்கு உடல் எல்லாம் நடுங்க துவங்கியது..
ஆனால் அதை அவனிடம் காட்டிக் கொள்ளாமல் படுக்கையில் இருந்த தலையணைகளை எல்லாம் எடுத்து அவர்கள் இருவருக்கும் நடுவே வைத்து அவனை பார்த்து, "எப்படியும் உங்க பாட்டி விட மாட்டாங்க அதனால இங்கேயேதான் படுத்து ஆகணும்..இது என்னோட இடம்.. அது உங்களுடைய இடம்.. இதைத் தாண்டி நீங்களும் வரக்கூடாது.. நானும் வரமாட்டேன்" என்று கயல் கூற,
அதைக் கேட்டு அவன் அவளை முறைத்து, "சரியான இம்சடி நீ பண்ணினதுக்கு எல்லாம் கண்டிப்பா நீ அனுபவிப்ப கவலைப்படாதே நீ எங்கே போனாலும் என் கண்ணு முன்னாடி வந்து தான் ஆகணும்" என்று கூற,
அவளோ, "போங்க சார் எனக்கு ஒரு போனை வாங்கி கொடுங்க சார் அதுக்கு அப்புறம் தான் நீங்க சொன்னதை நான் கேட்பேன் சொல்லிட்டேன் இல்லாட்டி பொண்டாட்டிக்கான உரிமை எல்லாம் நான் எடுப்பேன் பார்த்துக்கோங்க" என்று அவனை மிரட்ட அவனுக்கோ எரிச்சலாக இருந்தது...
அவனின் கோபத்தை பார்த்து அவளுக்கு சிரிப்பாக வர அவனுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டவள் மனதில் இனி கிஷோர் உடனான நட்பு சரி வராது அறவே துண்டிக்க வேண்டும் அவனால் மட்டும்தான் தனக்கு இத்தனை பிரச்சினை எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது இதைப் பற்றி அவனிடம் நாளை பேசியே ஆக வேண்டும் என நினைத்து படுத்துக் கொண்டாள்..
என்னதான் ஏட்டிக்கு போட்டியாக இருவரும் ஒரே கட்டில் படுத்தாலும் இருவருக்குமே உறக்கம் வர மறுத்தது.. எப்படியோ இருவரும் உறங்கி போக, மறு நாள் காலை அவள் எழும்பொழுது அவன் இல்லை அதுவே அவளுக்கு நிம்மதியாக இருக்க வேகமாக அவளும் தயாராகி வரவும் அன்றைய தினம் ஏனோ கருணை அம்மாளே எல்லாம் தயார் செய்து வைத்திருந்தார்..
அவளோ அவரிடம் சென்று, "தேங்க்ஸ் பாட்டி" என்று கூற அவரோ அவளைப் பார்த்து முறைத்து, "காலேஜுக்கு போறதுனால நான் செஞ்சேன் சாயந்திரம் வந்து நீ தான் செய்யணும் புரியுதா?" என்று கூற அவளோ தலையாட்டி விட்டு கல்லூரிக்கு சென்றாள்...
அங்கு அவளுக்காக கிஷோர் நின்று கொண்டு இருக்க அவளை கண்டதும் அவன் அவள் அருகே வர அவளோ அவனை கண்டும் காணாதது போல சென்றாள்..
அதை கண்டவன் கடுப்பு ஆகி, "ஏய் நில்லு கயல் எதுக்காக என்னை அவாய்ட் பண்ற? நேத்து எவ்வளவு கால் பண்ணினேன்? எவ்வளவு மெசேஜ் பண்ணினேன் எதுக்காவது ரிப்ளை பண்ணுனியா? உனக்கு என்ன அவ்வளவு திமிர்? உன்னோட போன் ஏண்டி சுவிட்ச் ஆப்ல இருக்கு? என்னோட பிறந்தநாளுக்கு நீ என் கூட இருக்கணும்னு ஆசைப்பட்டேன் அதுல என்ன தப்பு?" என்று அவன் வெகு சாதாரணமாக கேட்டான்..
அவளோ அதை கேட்டு, "போதும் கிஷோர் இனி நமக்குள்ள எதுவும் ஒத்து வராது உங்களுக்கு நடந்ததெல்லாம் சாதாரணமா இருக்கலாம். டிவி, நியூஸ் எல்லா இடத்திலும் நம்ம ரெண்டு பேரும் முகத்தைத்தான் போட்டு நாரடிச்சு வச்சிருக்காங்க.. இதனால எங்க வீட்ல பெரிய பிரச்சனை ஆயிடுச்சு இது இனி கண்டினியூ செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை சோ இதோட நிறுத்திக்கலாம்" என்று அவள் கூறினாள்..
"எதை கண்டினியூ பண்றதுல?" என அவன் எடுத்துக் கேட்க,
"அதுதான் நாம காதலிக்கிறது எனக்கு இதுல எல்லாம் துளியும் விருப்பம் கிடையாது தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க இனி உங்களுக்கும் எனக்கும் செட் ஆகாது.. எனக்கு படிப்பு தான் முக்கியம்" என்று கூறினாள்..
அதை கேட்ட அவனுக்கு ஆத்திரம் வந்தது..உடனே அவளுடைய கையை பிடித்து முறுக்கி, "என்னடி நானும் பார்த்துகிட்டே இருக்கேன் ஓவரா பண்ற? என் பின்னாடி எத்தனை பொண்ணுங்க நான் விரலை சொடக்குனா வருவாங்க தெரியுமா? போயும் போயும் உன் பின்னாடி வந்தேன் பார் என்னை சொல்லணும் என்னை என்ன நெனச்சுட்ட?" என்று அவன் கேட்க
இதை எதிர்பாராத அவளோ, "கிஷோர் கையை விடுங்க எனக்கு ஹர்ட் ஆகுது.." என்க
"ஆகட்டும் டி நானும் தான் உன்னால ஹர்ட் ஆகிட்டு இருக்கேன் அப்படி எல்லாம் உன்னை விட முடியாது டி.. நான் நீ தான் வேணும்னு உன் பின்னாடியே சுத்துவேன்.. நீ என்னடான்னா என் மனசை புரிஞ்சக்காமல் எல்லாத்தையும் நிறுத்தலாம்ன்னு சொல்றியா..நானும் பார்த்துட்டே இருக்கேன் என்னை ரொம்ப அவாய்ட் பண்ற நானும் பார்த்துட்டே இருக்கேன் ஊருக்கு போயிட்டு வந்ததுல இருந்தும் நீ ரொம்பவே மாறி இருக்க, அப்படி என்ன டி என்னை வேண்டாம்னு சொல்ற அளவுக்கு நீ என்ன ரதியா? உனக்கு எல்லாம் என்னை காதலிக்க கசக்குதா?" என கையை விடாமல் கேட்க இந்த காட்சி நிரஞ்சன் கண்களுக்கு தெளிவாக பட்டது..
எப்போதும் இது போல காட்சிகள் அவனின் கண்களுக்கு பட்டால் அவர்களை தவறாக எண்ணி கோபம் கொள்வான்.. ஆனால் இந்த முறை ஏனோ கிஷோர், கயலை பிடித்த பிடியில் அவள் வலியால் துடித்து கொண்டு இருப்பது தெரிய அவன் கால்கள் தாமாக அவ்விடம் நோக்கி சென்றது..
அவளோ அவன் பேச்சை கண்டு அதிர்ந்து, "தயவு செய்து என்னை விடு.. அப்போ உன்னை பத்தி மட்டும் தான் நீ யோசிக்கிற என்னை பத்தி யோசிக்கவே மாட்டேங்கிற அப்படி தானே?" என கூறியவாறே இதற்கு மேல் இவனிடம் இருந்து தப்பிக்க வேண்டும் எனில் உண்மையை கூறி விடுவது தான் நல்லது என எண்ணி, "எனக்கு இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் வேண்டாம் படிப்பு தான் முக்கியம் என்னால உன்னை காதலிக்க முடியாது" என்க
அவனோ பொறுமை இல்லாமல், "எனக்கு ஏன்னு காரணம் தெரிஞ்சு ஆகணும் இத்தனை நாள் காதலிச்சிட்டு இருந்துட்டு இப்ப மட்டும் நீ விலக காரணம் என்ன எனக்கு தெரிஞ்சே ஆகணும் சொன்னாதான் இன்னும் விடுவேன்" என அவனும் நின்றான்..
அதற்கு அவளோ பொறுமை இழந்து, "ஏன்னா எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு" என அவள் கத்தி கூற, அதை கேட்ட அவன் அதிர, அவனின் அதிர்ச்சியை பார்த்து, "போதுமா இப்போ என்னை மொத்தமா விடு.. உங்க ஆட்டத்துக்கு எல்லாம் என்னால ஆட முடியாது.. சொன்னா புரிஞ்சுக்கோங்க இத்தனை நாள் இதை சொல்ல கூடாதுன்னு நெனைச்சேன்.. எனக்கு ஊருக்கு போன அப்போ என்னோட கல்யாணம் திடீர்னு நடந்துடுச்சு.. அன்னிக்கு நடந்த கல்யாணம் என்னோடது தான்" என அவள் வெகுண்டு கிஷோரை பார்த்து கூற,
அதை கேட்டு அவன், "என்ன சொல்ற பொய் சொல்லாத" என கூறும் போது இவன் என்ன சொன்னாலும் நம்பலையே என எண்ணி அவளின் உடைக்குள் மறைத்து வைத்திருந்த தாலியை எடுத்து வெளியே காட்டி, "இது போதுமா இப்போவவாது நம்புவியா?" என கேட்க அவள் தூக்கி காட்டிய தாலிக்கு அருகே நிரஞ்சன் வந்து நின்றான்…
Currently viewing this thread 1 guest.
