வர்ணம் 21

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 10 months ago
Messages: 56
Thread starter  

அத்தியாயம் : 21

கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு பிறகு,

அன்றைய பிரச்சனைக்கு பிறகு அவளும் சரி நிரஞ்சனும் சரி தேவையில்லாமல் எந்த விதமான வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொள்வதில்லை..

அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என வாழ்ந்து வந்தாலும், சார் இப்படி சொல்லிவிட்டாரே என அவளும் பேசுவதையெல்லாம் பேசிவிட்டு என் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை வந்து விட்டதே என அவனும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க முடியாமல் தவித்து வந்தனர்.. இதை எப்படியாவது முடிக்க வேண்டும் என நிரஞ்சன் நினைத்தான்..

அவளோ கல்லூரியில் கொஞ்சம் கிஷோரிடம் பேசுவதை குறைத்து கொண்டாள் என்று தான் கூற வேண்டும்.. அதையும் அவன் நோட் செய்து கொண்டு தான் இருக்கிறான்..எப்போது அவளை கொத்தாக கிஷோர் தூக்க போகிறான் என்று தான் தெரியவில்லை..

அப்படியே சென்று கொண்டு இருந்த சூழலில் ஒரு நாள் மாலை அவர் கல்லூரி விட்டு வந்ததும் அவளுக்காக காத்திருக்க துவங்கினான் நிரஞ்சன்..

அவளும் வர அவள் எப்பொழுதும் போல அவளுடைய அறைக்கு செல்ல போக, "ஒரு நிமிஷம்" என்றான்..

அவள் நிற்கவும், "வீகென்ட் என்னோட குழந்தையை பார்க்க போலாம்னு லாஸ்ட் வீக் சொன்னேனே மறந்துட்டியா?" என கேட்டான்

"இல்ல சார் மறக்கல எப்ப கிளம்புறோம்?"

"இப்பவே ரெடி ஆயிட்டு வா போகலாம்" என்று அவன் கூற அவளும் வேகமாக அவனுடைய குழந்தையை பார்க்கும் ஆவலில் வேகமாக தயாராகினாள்...

இருவரும் சேர்ந்து வெங்கட்ராமன் மற்றும் சீதா தம்பதியரின் இல்லத்துக்கு செல்ல, அங்கு சீதா மட்டும் தான் இருக்க, இவர்களை கண்டதும், "வாங்க.." என வரவேற்றனர்..

அவனோ இலேசான இறுகிய முகத்தோடு அவரிடம், "இது கயல்விழி" என்க

"தெரியும் வாங்க மா" என அவரையும் வரவேற்றார் ஜானகியின் அம்மா..

கயல் விழிக்கும், "இது ஜானகியின் அம்மா" என கூற கயல் அவருக்கு வணக்கம் தெரிவிக்க, அவர் உள்ளே அழைத்து இவர்களை அமர வைத்தாலும் அனைவரின் மனதும் ஒரு மாதிரியான அழுத்தத்தில் இருக்க, அவனுக்கு குழந்தையை பார்க்க வேண்டும் என இருந்தாலும் தன் கை மற்றும் வாயை அடக்கி கொண்டு அமைதியாக இருக்க, எங்கு பார்த்தாலும் ஜானகி மற்றும் குழந்தை ஆதிராவின் புகைப்படம் தான் நிறைந்து இருந்தது..அது எல்லாம் கயலின் கண்களுக்கு பட அவள் அனைத்து புகைப்படத்தையும் பார்த்தவள் ஜானகி அழகாக இருப்பது போல தோன்றியது..

அனைவரும் பேசாமல் அமைதியாக இருக்க, "யாருக்கு என்ன பேசுவது?" என தெரியவில்லை..

சீதா தான், "அவரும், ஆதிராவும் வாக்கிங் போய் இருக்காங்க வர நேரம் தான்" என கூற அதை கேட்ட நிரஞ்சன்,

"உங்க புருசனுக்கு இப்போ சந்தோஷமா நான் இரண்டாவது கல்யாணம் பண்ணிட்டேன்..இபோவாவது என்னோட மகளை என்கிட்ட கொடுப்பாரா இல்லையா?" என கோபமாக கேட்டான் நிரஞ்சன்..

அதை கேட்டவர், "இதோ பாருங்க தம்பி அவர் செய்யறது தப்பு தான் நான் இல்லைன்னு சொல்லல.. நீங்களா இருக்கறதுனால இவ்வளவு தூரம் பொறுமையா போறீங்க..வேற யாரும் இப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க.. அவர் செய்வதிலும் ஒரு நியாயம் இருக்குதானே இந்த வயசுல தனியா நீங்க வாழ வேண்டாம் அப்படின்னு நினைச்சு தானே செய்யறாரு.. அதையும் நீங்க புரிஞ்சுக்கணும்.. உங்களை அவரு மருமகனா மட்டும் நினைக்கல ஒரு மகனாவும் தான் நினைக்கிறார் என சீதா கூறி கொண்டு இருக்கும் போதே வெங்கட்ராமன் ஆதிராவை அழைத்து கொண்டு வந்தார்.. அவர் காதுகளுக்கு செய்தி விழுந்தது என்றாலும், "என்ன சீதா மாப்பிள்ளை கிட்ட மன்னிப்பு படலம் செய்து கொண்டு இருப்ப போல" என்றார்..

அதை கேட்டு நிரஞ்சன் கடுப்போடு அமர்ந்திருப்பதை பார்த்து, "வாங்க எப்ப வந்தீங்க" என்று கேட்டுக்கொண்டே சீதாவிடம் குழந்தையை கொடுக்க, குழந்தையை கண்டதும் ஒரு தந்தையாய் அவனுக்கு ஆதிராவின் மீது அவ்வளவு பாசம் பொங்கியது.. போட்டோக்களை மட்டும் தான் பார்த்திருக்கிறான் நேரில் பார்த்ததில்லை பிறந்த போது பார்த்ததோடு சரி ஜானகியின் இறப்பு கொஞ்ச காலம் அவனை ஆதிராவிடமிருந்து ஒதுக்கி வைத்தது என்றால் பிறகு வெங்கடராமன் முழுமையாக அவனை ஆதிராவிடமிருந்து ஒதுக்கி வைத்து விட்டார் என்று தான் கூற வேண்டும்..

அருகே இருந்தும் குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்து வைத்திருக்கிறார்களே என வருந்தி குழந்தையை எடுக்க விரைந்தான்.. என்ன தான் சொன்னாலும் தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பது போல அவன் குழந்தை அருகே செல்ல,

அவளோ புதிதாக வந்திருக்கும் ஆட்களை பார்த்து மருண்டு விழித்து அவனிடம் செல்லாமல் சீதாவை கட்டிக் கொண்டு, "அம்மா அங்கிள்.." என்று ஒவ்வொரு வார்த்தையாக மழலை மொழியில் ஒரு வயது குழந்தை ஆதிரா கூற,

ஏற்கனவே குழந்தை பார்க்க முடியவில்லை குழந்தையை கொஞ்ச முடியவில்லை.. குழந்தையை தன்னோடு வைத்திருக்க முடியவில்லை என்ற துக்கத்தில் இருப்பவனுக்கு குழந்தை வந்தது முதல் குழந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு தன்னை பார்த்து குழந்தை அங்கிள் எனவும் அவன் அப்படியே இடிந்து போய் உட்கார்ந்து விட்டான்..

அவளுக்கும் அதை பார்த்ததும் வருத்தமாகத்தான் இருந்தது ஆனால் அவர்கள் பேசட்டும் என அமைதியாக இருக்க, அவளோ குழந்தையை கண்டதும், "ஓடி சென்று வாங்க வாங்க அம்மு குட்டி வாங்க..உங்களுக்கு என்ன கொண்டு வந்திருக்கேன் பாருங்க" என விளையாட்டு காட்டவும் குழந்தை சிரிக்க ஆரம்பித்தது..

குழந்தை தன்னிடம் வராததை கண்டும் தன்னை அங்கிள் என கூறியதை கேட்டு, "பார்த்தீங்களா பெத்த அப்பனையே அங்கிள்னு சொல்லுது இதுக்கெல்லாம் காரணம் நீங்க தானே?" என அவன் வெகுண்டு கேட்டான்..

அதற்கு அவரோ, "என்ன மொத்தமா என்னை மட்டும் சொல்றீங்க உங்க பொண்டாட்டி சொன்னதை தானே நான் செய்தேன் என்னமோ எல்லாம் என் தப்பு மாதிரி பேசிட்டு இருக்கீங்க" என கேட்டார் அவர்..

அதை கேட்டவன் மேலும் கடுப்பாகி, "என் பொண்டாட்டி உங்களுக்கு மகள் தானே.. நீங்க இரண்டு பேரும் தான் இதுக்கு எல்லாம் காரணம்..இப்போ திருப்தியா நான் கல்யாணம் பண்ணிட்டேன் இதோ இவதான் என்னுடைய பொண்டாட்டி பெயர் கயல்விழி.. இனி நான் என்னுடைய குழந்தையை இங்கே வெச்சி இருக்க மாட்டேன் நான் கூட்டிட்டு போறேன் போதும் உங்களுக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்திற்காக நான் சொன்ன வார்த்தைக்காக  என்னுடைய வாக்கை நான் காப்பாத்த பண்ணினதெல்லாம் போதும் இதுக்கு மேல என்னால எதுவும் பண்ண முடியாது எனக்கு இப்பவே என்னுடைய குழந்தை வேணும்" என கூற,

அதைக் கேட்ட அவரோ, "உங்க பிள்ளைதான் யார் இல்லைன்னு சொன்னா? அவள் வந்தா கூட்டிட்டு போங்க.. ஆனால் எனக்குன்னு பொறுப்பு இருக்கே.. என்னோட மகள் எனக்கு ஒரு பொறுப்பை ஒப்படைச்சு கொடுத்துட்டு போயிருக்காளே அதை நான் சரியா செய்ய வேண்டாமா? எது ஒரு பொம்மை கல்யாணம் பண்ணி இருக்கீங்களே இதுதான் கல்யாணமா? கேள்விப்பட்டேன் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன்" என அவர் கேட்டார்..

அதை கேட்டவன், எ"ன்ன சார் சொல்றீங்க இது பொம்மை கல்யாணமா நான் தாலி கட்டி முறையா கல்யாணம் பண்ணி இருக்கேன்" என எங்கோ பார்த்து கூற

"தம்பி நானும் கேள்விப்பட்டேன் நீங்க கல்யாணம் பண்ணின விதத்தை எல்லாம் அதுனால பொய் சொல்ல முயற்சி செய்யாதீங்க.. வீட்ல கூட பிரச்சனை பண்ணி வந்ததா கேள்வி பட்டேன்.. இப்படி இருக்கும் சூழலில் நீங்க வந்ததும் இதுதான் என்னுடைய மனைவின்னு சொல்லி மகளை கொடுக்க சொன்னா எப்படி கொடுக்க முடியும் முதலில் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ ஆரம்பிங்க அதுக்கப்புறம் குழந்தையை கொடுக்கிறோம்" என்றார் வெங்கட் ராமன்... அதை கேட்டு கயல் மற்றும் நிரஞ்சன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.. அப்படியே அருகே இருந்து பார்த்தது போல புட்டு புட்டென விசயத்தை எல்லாம் கூறுகிறார் என நினைத்தாள் கயல் அதே நேரம் நிரஞ்சன் இதெல்லாம் அந்த கிழவி வேலையா தான் இருக்கும் என நினைத்து கொண்டான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top