வர்ணம் 25

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 10 months ago
Messages: 56
Thread starter  

அத்தியாயம் : 25

     அவனிடம் பொய் கூறி சென்றதும் மட்டுமின்றி அந்த பொய்யை அவள் அவனிடம் நிலை நாட்ட அவனுக்கு கோபம் வந்து விட்டது.. அதனால் அவன் அவளை கை நீட்டி விட்டான்..அவனும் அவளிடம் நல்ல விதமாக நடக்க நினைக்கிறான் ஆனால் இவள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவனை கோபத்தில் தள்ளுகிறது..

இவள் தன் வாழ்க்கைக்கு வேண்டாம் தனக்கும் அவளுக்கும் இடையே வயது வித்தியாசம் இருக்கிறது அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என நினைப்பவனுக்கு அவள் என்ன செய்தால் என்ன? ஏன் அவளை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.. அவளை அவள் போக்கில் விட வேண்டியதுதானே? அவள் யாருடன் வேண்டுமானாலும் சென்று இருக்கட்டும் இவனுக்கு என்ன வந்தது என அவனுடைய மனசாட்சி அவனையே கேள்வி கேட்க அந்த கேள்விக்கு அவனுக்கே விடை தெரியவில்லை என்று தான் கூற வேண்டும்.. தான் ஏன் இவளிடம் இவ்வளவு ஆத்திரம் அடைகிறோம் என அவனுக்கே விளங்கவில்லை..

அதேநேரம் அவளுடைய அறையில் அழுது கொண்டிருந்த கயலுக்கு எல்லோரும் அவளை குற்றப்படுத்தியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அவள் தவறு செய்யவில்லை அது அவளுக்கு தெரியும்.. ஆனால் மற்றவர்களின் காட்சிக்கு அவள் குற்றம் செய்தவள் தான் அப்படி இருக்க, அவளால் அவளை நிரூபிக்க முடியாதபடி அவள் செய்த செயல் அனைவரின் மனதிலும் வடுவை ஆக்கிவிட்டது..

இதற்கெல்லாம் காரணம் கிஷோர் தான் இனி கிஷோரிடம் பேச்சே வைத்துக் கொள்ளக் கூடாது.. தன்னை இந்த அளவுக்கு அவன் செய்து விட்டான்..இவனால் அனைவரிடத்திலும் அவளுக்கு கெட்ட பெயர் கிடைத்தது தான் மிச்சம்..தான் என்ன சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள் அவளும் வீட்டுக்கு வந்து பொய் தானே இருக்கிறாள் பிறகு எப்படி நம்புவார் என யோசித்து அழுதழுது கண்கள் வீங்கி எப்போது உறங்கிப் போனால் என அவளுக்கே தெரியாது..

கருணை அம்மாள், பாக்கியம் மற்றும் கலையரசன் அனைவரும் அந்த வீடியோவை செய்தியில் காண, பாக்கியம் மற்றும் கலையரசன் இருவரும் இங்கு இருப்பதால் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. ஆனால் கருணை அம்மாள், "இது அந்த கயல் புள்ள தானே?" என கேட்க,

"ஆமா மா பிரெண்ட்ஸ் கூட பர்த்டே பார்ட்டி கொண்டாடி இருப்பா போல.. இவனுங்க சும்மா பெரிசா போட்டு இருக்காங்க" என்று பாக்கியம் சாதாரணமாக கூற,

அவரோ தன் கழுத்தை வெட்டி, "அவளோட தோள் மேல ஏதோ ஒரு ஆம்பள பையன் கையை போட்டு இருக்கான் நீ என்ன டி இப்படி பேசுற" என்க

"அம்மா இங்கே எல்லாம் இது சாதாரணம். அதை போய் பெரிசா பேசிட்டு இருக்க? நானே என்னோட மகன் என் போனை அட்டென்ட் பண்ண மாட்டேங்குறான் அப்படிங்கிற டென்ஷன்ல இருக்கேன்! அவங்க ரெண்டு பேரும் எப்படி வாழ்ந்துட்டு இருக்காங்களோ? என்ன செய்யறாங்களோ? எதுவும் தெரியல அவன் மூஞ்சில முழிக்க கூட முடியாம நான் தவிச்சிட்டு இருக்கேன் இதுல நீங்க வேற" என்று புலம்பினார்..

ஆனால் கருணை அம்மாள் விடவில்லை.. அந்த செய்தியை மீண்டும் மீண்டும் பார்த்து அதில் என்னென்ன செய்கிறார்கள் என்பதை தெளிவாக மனதில் ஏற்று விட்டு தன் மகளை பார்த்து, "நீ இப்படி புலம்பிட்டே இருந்தா அவங்க எப்படி வாழ்றாங்கன்னு தெரியாது அதனால நான் கொஞ்ச நாளைக்கு என்னோட பேரன் வீட்டில் இருக்கப் போறேன்" என்று அடுத்து ஒரு குண்டை தூக்கி அலுங்காமல் போட்டார்..

கலையரசன் உடனே பயந்து, "அத்தை அதெல்லாம் வேண்டாம்.. அங்கே மாமா தனியாகத்தான் இருக்கார்.. நீங்கள் ஊருக்கு போங்க.. நான் வேணா கொண்டு போய் விடுறேன்.. அவங்க என்னமோ பண்ணிக்கட்டும்" என்று மீண்டும் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என எண்ணி அவர் கூற,

"என்ன மாப்ள என்னோட பேரன் வீட்ல இருக்க எனக்கு உரிமை இல்லையா? அதை போய் தடை செய்யறீங்க? இதெல்லாம் நல்லா இல்ல மாப்பிள்ளை உங்களுக்காக தான் நான் இங்கே வந்து உட்கார்ந்திட்டு இருக்கேன். எனக்கு என்ன சோத்துக்கு வழி இல்லாம இங்க வந்து இருக்கேனா?" என்று அவர் கேட்டார்..

"ஐயோ அத்தை நான் அப்படி சொல்வேனா எதுக்கு தேவையில்லாம அவங்களுக்கு இடையில போய் பிரச்சனை பண்ணனும்? ஏற்கனவே பிரச்சனையா போய்ட்டு இருக்கு அதனால சொல்றேன் நீங்க போறது அவனுக்கு பிடிக்குமா இல்லையானு தெரியல" என்று அவர் கூற,

"அவனுக்கு பிடிக்குமா? பிடிக்காதா என்பது எனக்கு முக்கியம் இல்ல மாப்ள அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீங்க கவலையை விடுங்க.. அவன் அவள் கூட வாழ்ந்தே ஆகணும்.. அதுதான் எனக்கு வேணும்.. அப்படியெல்லாம் அவனை விடமாட்டேன்" என்று விடாப்பிடியாக தான் நினைத்ததை நடத்தியே ஆக வேண்டும் என்ற முனைப்போடு நின்றார் கருணை அம்மாள்.. கலையரசன் மற்றும் பாக்கியம் என்ன எல்லாம் ஆகப்போகிறது என ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்...

அதனால் இதோ இன்று காலையே தன் பேரனின் பிளாட்டின் காலிங் பெல்லை அழுத்திக் கொண்டிருந்தார் கருணை அம்மாள்...

நேற்று இரவு நடந்த சம்பவத்தில், கயல் லேட்டாக உறங்கி இருக்க, அவளை உறக்கத்திலிருந்து எழுப்புவது போல காலிங் பெல்லின் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.. அவளும் இந்த நேரத்தில் யாரது என எண்ணி கண்ணை கசக்கி கொண்டே எழுந்து வந்து கதவை திறந்தாள்...

அங்கு கருணை அம்மாளை சட்டென்று பார்த்ததும் அவளுக்கு திக்கென்று இருக்க, அவரோ அவளை பார்த்து முறைத்து, "ஏன் டி வந்தவங்களை வாங்கன்னு சொல்ல மாட்டியா இப்படி பேய் பார்த்த மாதிரி நிக்கிற?" என்று கூற, அவளோ அவரின் வரவை எதிர்பாராத அவள் கொஞ்சம் மிரண்டு, "வாங்க பாட்டி" என தயங்கி கூறினாள்..

அவளின் உடல் மொழியை பார்த்து, "ரொம்பதான் இழுக்குற நகரு என் பேரன் வீட்டுக்கு வர உன்னோட அழைப்பு வேற எனக்கு வேணுமா?" என கூறியவர் உள்ளே வந்து, "ஏண்டி கல்யாணமான புள்ள இவ்வளவு நேரமா தூங்கிட்டு இருக்கியா? அறிவில்ல? வாசல்ல தண்ணீ தெளிக்கல கோலம் போடல" என கேட்டார் ..

அவளோ அமைதியாக நின்றவள், "நேத்து தூங்க கொஞ்சம் லேட்டாயிடுச்சு அதனாலதான் பாட்டி இங்கே பிளாட் அதுல வாசல் எல்லாம் தெளிக்க மாட்டாங்க பாட்டி" என இழுக்க,

"என்கிட்ட மட்டும் வக்கணையா பேசு..அதுதான் பார்த்தேன்ல டிவில நீ அடிச்ச கூத்தை.. ஏண்டி யாருடி அவன் கல்யாணமான புள்ள தோளில் கையை போடுறான் விவஸ்தை இல்லாதவன்" என அவளின் வீடியோவை டிவியில் பார்த்து விட்டேன் என அவர் கூற, "அது வந்து பாட்டி பிரண்டு" என இழுக்க,

அவரோ அவளை ஆழமாக பார்க்க, அவளோ இவரும் அவளை திட்ட தான் போகிறாரோ என எண்ணி பதட்டத்தில் அழும் நிலைக்கு அவள் ஆளாக அவர் என்ன நினைத்தாரோ, "என்ன பிரண்டு இனி ஒரு தடவை இந்த மாதிரி நடந்துச்சு காலை வெட்டி அடுப்புல போட்டு விடுவேன் பார்த்துக்கோ.. படிக்கப் போனாமா வந்தோமான்னு இருக்கணும் இப்படி கூத்தடிச்சிட்டு எல்லாம் இருக்க கூடாது புரியுதா?" என கூறியவர், "என்னடி மசமசன்னு நிக்கிற வந்தவளுக்கு ஒரு வாய் காபி தண்ணி குடுக்கணும்னு தெரியாதா?" என்று அவர் மீண்டும் சாட அவளோ திருத்திருவென முழித்தாள்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top